சொல்வனம் பிரசுரம் – சுகா, ராமன்ராஜா புத்தகங்கள்

ஏற்கனவே அறிவித்தபடி, இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி ‘சொல்வனம் பதிப்பகம்’ மூலம் இரண்டு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். சென்ற சனிக்கிழமையன்று (08-01-2011) இவ்விரு புத்தகங்களும் ‘உடுமலை.காம்’ அரங்குக்கு வந்தன. ஞாயிற்றுக்கிழமை ஒரு நட்பார்ந்த புத்தகவெளியீடு நடந்தது. சொல்வனம் இதழிலும், வார்த்தை சிற்றிதழிலும் சுகா எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘தாயார் சன்னதி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சொல்வனம் இதழில் ராமன் ராஜா எழுதிய கட்டுரைகள் ‘சிலிக்கான் கடவுள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிருக்கிறது.

நாஞ்சில் நாடன் – ஒரு கனிந்த தமிழ் இதயம்

நாஞ்சில் நாடன் எழுத்தில் உடனே தென்படுபவை: வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையின் முன் முடிவுகள் அற்ற கூர்மை, கொள்கலனின் கொள்ளளவின் பிரம்மாண்டம், எங்கும் தங்காது எந்த முடிவுப் புதரிலும் சிக்காது இயங்கும் நேர்மை, அனாதைகள், அபலைகளின் மேல் (பிரச்சார, தன்னை ‘இன்னார்’ என்று வெளி உலகுக்கு பறைசாற்ற காட்டிக் கொள்கிற நீச புத்தி அற்ற) உண்மையாக உள்ள அக்கறை, சுவாரஸ்யம், பாதகம் செய்பவரைக் கண்டு அஞ்சாத எள்ளல், எல்லாவற்றுக்கும் மேல் வளமும், எளிமையும், குளிர்ச்சியும், செழுமையும் மிளிரும் தமிழ். காலங்கள் தோறும் இவர் கற்றுக் கொண்டேயிருந்திருக்கிறார். இன்னமும் கற்கிறார். ஒரு தமிழ்ப் பேராசிரியன் செய்ய வேண்டிய வேலையை தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து செய்து கொண்டேயிருக்கிறார்.

டிசம்பர் நாற்காலிகள்-2

சஞ்சய் சுப்ரமணியனின் வாய் மட்டுமில்லாமல் மொத்த உடம்பும் பாட்டுப் பாடுகிறது. குன்னக்குடிக்கு அடுத்தபடி சேஷ்டை மன்னர் என்ற பட்டத்துக்குத் தகுதியானவர். கை, அது பாட்டுக்கு ஏதோ மானசீகமான இயந்திரத்தின் knob-களைத் திருகிக்கொண்டே இருக்கிறது. ஆலாபனையின் போது ததரின்னாவைக் கைவிட்டு ‘டுட்டுட்டுடூ’ என்று கூட ஆரம்பித்துவிடுகிறார்.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்- 5

Lianozovo என்பது மாஸ்கோ நகரத்தின் எல்லைப்புறத்தில் அமந்துள்ள ஒரு கிராமம். கலைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்குதான் வசித்தனர். கிராமத்தின் பெயரை தமது குழுவுக்கானதாக அமைத்துக்கொண்டு அவர்கள் மிக வீரியமாகச் செயற்பட்டனர். குழுவில் பலர் அரூபப் பாணி ஓவியங்களைப் படைத்தனர். 1957 இல் அரசின் ‘Thaw’ கொள்கை ருஷ்யாவின் தொன்மையான கலை உத்திகளையும், மேலை நாட்டு புதிய கலைசார்ந்த சோதனைகளையும் பற்றி இளைய தலைமுறை அறிய உதவியது.

மகரந்தம்

ஒளி ஊடுருவும் சிமெண்ட், இது இருந்தால் நிறைய இருட்டு வீடுகள் சென்னையிலும், கல்கத்தாவிலும், பம்பாயிலும் ஒளி வீசும் கட்டிடங்களாகி விடும். எத்தனையோ கோடவுன்கள் இருட்டுக் கல்லறைகளாக இல்லாமல் மனிதர் நடமாடி வேலை செய்யும் இடங்களாகும். இந்த சிமெண்ட் சுவர்கள் வழியே காற்றும் வீசுமானால், என்னவொரு சுகமாக இருக்கும்? கொசுக்களையும், தூசியையும் மட்டும் வடிகட்டி அனுப்பும்படி வடிவமைக்கச் சொல்ல வேண்டும்.

கடவுளின் காதுகளுக்கு

‘கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும், நிறைந்த மகிழ்ச்சியும் உங்களுக்கு’என்றேன். அவர் உணர்ச்சி வசப்பட்டு கண்களை மூடி தன் நெஞ்சைத் தொட்டு கைகளை மேலே காட்டி ‘உங்கள் உதட்டில் இருந்து கடவுளின் காதுகளுக்கு’ என்றார். சிறிது நேரத்தில் சமநிலை அடைந்து நன்றி என்றார். கைகளை நீட்டி என் கைகளைப் பிடித்து குலுக்கினார். நான் திரும்பி சில அடி வைத்த பிறகு ஏதோ நினைவுக்கு வந்து முழங்கால்கள் ஒன்றையொன்று இடிக்க வேகமாக ஓடி வந்து மோதி என்னைக் கட்டிப்பிடித்து மீண்டும் நன்றி என்றார். என் நெஞ்சு எலும்பு இரண்டு முறிந்தது போலிருந்தது.

உயிர், மாற்று உயிர் – 4

நம் உயிரணு, மரபணுக்களுக்கும் ஆர்செனிக்கென்றால் ரொம்பப் பிடிக்கும். உடனே பாஸ்பரஸை தூக்கிவிட்டு ஆர்சனிக்கை ஒட்டிக்கொள்வோம். அதனால்தான் அது நமக்கு டாக்சின். விஷம். ஒட்டிக்கொண்ட பிறகுதான் விபரீதம். உயிரணு மரபணு வைத்து அடுத்தடுத்து தன்னிச்சையாக நடக்கவேண்டிய, ஜீவிப்பதற்கு உடலுக்கு தேவையான ஆற்றல் உற்பத்திசெய்யவேண்டிய, அனைத்து ரசாயன மாற்றங்களிலும் ஆர்செனிக் குளறுபடிசெய்துவிடும்.

டிராம் வண்டிகள்

டிராம் வண்டிகள் நவீன யுகத்தின் ஒரு முக்கியமான சின்னம். பல நாடுகளிலும் டிராம் வண்டிகள் பல பத்தாண்டுகளாக உபயோகத்தில் உள்ளன. காலத்தோடு அது பல வடிவங்களை அடைந்திருக்கிறது. பயணங்களின் அனுபவங்கள் நீடித்து நிற்பவை. பயணம் செய்த வாகனமும் அவ்வகையில் முக்கியமானவை. இங்கு பல்வேறு காலகட்டங்களில் பல நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்ட “டிராம் வண்டிகள்”

வாசகர் மறுமொழி

சொல்வனத்தில் சென்ற இதழில் பிராந்து சிறுகதை படித்தேன். ஏற்கனவே படித்ததுதான் என்றாலும் மீண்டுமொரு முறை ரசித்துப் படிக்கும்படி தந்ததற்கு நன்றி. இந்த சிறுகதைத் தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமா? சொல்வனம் ஆரம்பிக்கப்பட்டபோதிருந்ததைக் காட்டிலும் இப்போதெல்லாம் இலக்கியத்துக்கு நிறைய முக்கியத்துவம் தருவதும் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், வெ.சா, ஆ.மாதவன் போன்றவர்களின் படைப்புகளை அடிக்கடி படிக்க முடிவதும் சொல்வனத்தின் தகுதியை வெகுவாக உயர்த்துகிறது.

நியாண்டர்தல் யுக மின் புத்தகங்கள்

தமிழ் சூழலின் ஒரு முக்கிய கலாச்சார நிகழ்வாக தற்போது நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியை நாம் கருதமுடியும். புத்தக விற்பனையை மக்களின் நுகர்வு கலாச்சாரம் பெருமளவில் முடிவு செய்கிறது. அரசியல், சமூகம், வரலாறு உள்ளிட்ட புத்தகங்களுடன் ஒப்பிடுகையில் சமையல், சுயமுன்னேற்றம் குறித்த புத்தகங்களே அதிக அளவில் விற்பனையாகின்றன. தீவிர “நியாண்டர்தல் யுக மின் புத்தகங்கள்”

விஞ்ஞானக் கணினி

நியூட்டனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கக்கூடும் என்று கேட்டவுடன் மயான நிசப்தம் – ஆசிரியர்கள் மீண்டும் நன்றியோடு பார்த்தார்கள். ஒரு மாணவன் தைரியமாக ”நியூட்டனுக்கு கூகிள் தேடல் சேவை இல்லை” என்று ஜோக் அடித்தான். சரி, கூகிள் இருப்பதால் மனித குலத்தை நியூட்டனை விட இரு மடங்கு உன்னால் முன்னேறச் செய்ய முடியுமா என்று கேட்டதற்கு வழியத்தான் செய்தான்.

பாஸ்கலின் பந்தயம்

என் அப்பா சரித்திர ஆசிரியர் என்பதால் எனக்கு வரலாறு விருப்பப்பாடம். பாடத்துக்கு அவசியமில்லாத புத்தகங்களையும் படிப்பது வழக்கம். ஆதிகால இடப்பெயர்ச்சிகளில் ஒட்டகவரிசைகள் பயன்படுத்தப்பட்டன என்று பைபிளில் சொல்லப்படுகிறது. முப்பது நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தில் ஒட்டகங்கள் அந்த அளவுக்கு புழக்கத்தில் இல்லை. ஏப்ரஹாம் எகிப்து சென்றதும் அங்கிருந்து திரும்பியதும் கற்பனை என்றால் பைபிளில் வேறெது சரித்திரத்துக்கு முரண்பாடாக இருக்கும் என்று ஆராய ஆரம்பித்தேன்.

புத்தகப் பரிந்துரைகள் – 2011

சென்னையில் வருடந்தோறும் நடைபெறும் புத்தகக்கண்காட்சி இந்தமுறையும் சென்ற வாரம் ஜனவரி 4-ஆம் தேதியிலிருந்து நாளை மறுநாள் 17-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. கண்காட்சியைச் சுற்றியதிலும், நண்பர்களின் பரிந்துரையின் பேரிலும் கிடைத்த சில குறிப்பிடத்தக்க படைப்புகளின் பட்டியல் இது. கடைசி இரு தினங்களில் கண்காட்சிக்குச் செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் மிக மிக நிறைவான விஷயம் தேர்ந்த இலக்கியவாதிகளின் சில புத்தகங்கள் நல்ல முறையில் விற்பது.

உயிரின் கதை – 2

உயிர் என்பது, உருண்டை வடிவில் பச்சை நிறத்தில் ஒரு கிலோ எடையில் உள்ள ஒரு பொருள் அல்ல. கால் பந்துக்குள் இருக்கும் காற்று போன்றதும் அல்ல. ’உயிர்’ என்று நாம் அறிவது உயிரியின் ஒரு தனித்த பண்பு அல்லது பண்புகளின் தொகுப்பையே. பிறப்பிற்கு முன்னும், மரணத்திற்குப் பின்னும் உயிர் இருப்பதில்லை. இது நவீன அறிவியல் தரும் விளக்கம்.