நந்தலாலா – பின்னணி இசை

‘Ilaiyaraaja musical’ என்று சொல்லத்தக்க வகையில் நந்தலாலா திரைப்படத்தின் பின்னணி இசை, காட்சி உணர்வுகளின் மெலடிக்கேற்ப நடனமாடுவதாக இருக்கிறது. மிஷ்கின் இளையராஜாவின் பின்னணி இசையை விஷுவல் காட்சிகளுக்குப் பின்னணியாக மட்டுமில்லாமல் கதை சொல்லும் ஒரு கருவியாகவே உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார்; வெளிப்படையாகச் சொல்லமுடியும் கதையை விஷுவல் காட்சிப்படுத்தல் மூலம் சொல்லிக்கொண்டே, பின்னணியில் வெவ்வேறு கதை இழைகளை இளையராஜா மூலம் சொல்லியிருக்கிறார்.

நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துகள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல

நாஞ்சில்நாடன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். நாஞ்சில்நாடு என்னும் அந்த ஒரு சின்ன இடத்தைத்தான் எழுதுகிறார். அந்த மண்ணைச் சேர்ந்தவர்களைத்தான் திரும்பத் திரும்ப எங்கு சென்றாலும் பார்க்கிறார். ஆனால், அவர் இன்றைய தமிழ்நாட்டின் சீர்கேட்டையே அந்தச் சின்ன சித்திரத்தில் பார்க்கச் செய்துவிடுகிறார். இது யாருக்கு உவப்பாக இருக்கும்? சாகித்ய அகாடமிக்காரர்களுக்கு இது எப்படி உவப்பாகிப்போனது? அதன் ஆகி வந்த மரபும் பண்பும் என்ன ஆனது? புதிர்தான். விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால், பாரதிதாசனின் கவிதைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு பிசிராந்தையார் என்னும் அவர் நாடகத்துக்கா தமிழ் மேதைகள் உலகம் பரிசு தந்திருக்கும்? பாரதிதாசன் அந்த சமயம் உயிரோடிருப்பாராயின் என்ன வார்த்தைகளால் அவர் அகாடமிக்காரர்களை அர்ச்சித்திருப்பார் என்று நினைத்துப்பார்த்தால், பயங்கரமாக இருக்கும். அந்த வார்த்தைகள் கவிதையாக இருந்திராது என்பது நிச்சயம்.

தாயார் சன்னதி, சிலிக்கான் கடவுள் – சொல்வனம் புத்தக வெளியீடுகள்

இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி ‘சொல்வனம் பதிப்பகம்’ மூலம் இரண்டு புத்தகங்கள் வெளியாகவிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். சொல்வனம் இதழிலும், வார்த்தை சிற்றிதழிலும் சுகா எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘தாயார் சன்னதி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது. சொல்வனம் இதழில் ராமன் ராஜா எழுதிய கட்டுரைகள் ‘சிலிக்கான் கடவுள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது. எங்களுடைய இந்தப் புதிய முயற்சிக்கும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

‘குட்டி ஸ்ராங்க்’ – மலையாளத் திரைப்படம்

ஷாஜியின் வனப்பிரஸ்னம் ஒரு கதகளி சினிமா. ஜெயராஜின் களியாட்டம் ஒரு தெய்யம் ஆட்டம் பற்றிய சினிமா. இந்த சினிமாவில் இந்த சவிட்டு நாடகம் ஐசக் தாமஸ் கொட்டுக்காப் பள்ளியின் அற்புதமான மனம் மயக்கும் இசையுடன் நிகழ்த்தப் படுகிறது. நாடகத்தின் சோகமான காட்சிகள் போலவே பருவ மழையின் நடுவே கதை மாந்தர்களின் போராட்டங்களும், பேராசைகளும், கொலைகளும் நிகழ்ந்து குட்டி ஸ்ராங்க்கின் தோணி மீண்டும் ஒரு சூறாவளிக்குள் தள்ளப் படுகிறது.

03. செல்லோ நடனம்

பாக் இயற்றிய ஆறு செல்லோ தொகுப்புகளும் நடன இசை வகையைச் சார்ந்தவை. இசையை மையமாகக் கொண்ட படங்களில் பிரபலமாக இருந்த பால் ரூம் நடனத்துக்கு நெருக்கனமானவை. கசல்ஸ் அறிமுகம் செய்யும் வரை இவை மேடையில் இசைக்கப்படாமல், சில தனிப்பட்ட இசைக்கலைஞர்களின் ஞாபகத்தில் தேங்கி இருந்தது.

விட்ட ஷட்ஜம்

ராமன்ராஜா காட்டும் அறிவியல்சூழல், அச்சூழலோடு நேரடித் தொடர்பில்லாத வாசகர்களுக்குப் புதியதான ஒன்று. அரசுகளுக்கிடையே ஆராய்ச்சிச்சூழலில் நடக்கும் போட்டி, அதன் காரணமாக வெளிவரும் அரைகுறை முடிவுகள், பொய்யான வெற்றிகள், மருத்துவத்துறையின் ஆராய்ச்சிச்சூழல், மருந்துக் கம்பெனிக்காரர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்கள் ஏற்படுத்தும் செயற்கையான பதற்றம் – இவையெல்லாம் இதற்கு முன் தமிழில் நமக்குப் படிக்கக் கிடைக்காதவை.

தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் – நூல் வெளியீட்டு விழா

நாள்: 07-01-2011 வெள்ளி
நேரம்: மாலை 6 மணி
இடம்: பாரதிய வித்யா பவன், மினி ஹால்,
கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-4.

வரவேற்புரை: அ. கணேசன், நூலாசிரியர்
தலைமை & நூல் வெளியிடுபவர்: முனைவர் தியாக. சத்தியமூர்த்தி
முன்னாள் இயக்குநர், கேரள மாநில தொல்லியல் துறை

தமிழினி – புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் புத்தகங்கள்

தமிழின் பல முக்கியமான கலை, இலக்கியப் புத்தகங்களை வெளியிட்டு வரும் தமிழினி பதிப்பகம் 2011 புத்தகக் கண்காட்சியில் கீழ்க்கண்ட புத்தகங்களை வெளியிடுகிறது. இவற்றைக் கண்காட்சியில் அரங்க எண்: 354-55, 29 ஆகியவற்றில் வாங்கலாம்.

வாசகர் மறுமொழி

இன்றைய இலக்கியச்சூழலில் வெங்கட் சாமிநாதன் குறித்து ஒருவரால் பாராட்டாக எழுதமுடிகிறது என்றாலே அவர் தமிழில் வடிகட்டி எடுக்கப்பட்ட தேர்ந்த, நேர்மையான இலக்கியவாதி என்றுதான் அர்த்தம். அந்த வகையில் நாஞ்சில்நாடன், வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற அலட்டலில்லாத, தேர்ந்த படைப்பாளிகள் – வெங்கட்சாமிநாதனை நெருங்கமுடியக்கூடியவர்கள் வெகு சிலரே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான நாஞ்சில்நாடனின் கட்டுரை மிகவும் நிறைவாக இருந்தது.

பிராந்து

முப்பிடாரி அம்மன் கோயில் கொடைக்கு கும்பாட்டம் வேண்டாம் என்று சொல்லி, இசைத்தட்டு நடனம் நூலகத் திடலில் ஏற்பாடாகி இருந்தது. திடல் நிறைய இருசனக் கூட்டம். பாட்டும் ஆட்டமும் நெரிபிரியாகப் போய்க் கொண்டிருந்தது. கன்னித்தமிழ் போன்றவளே என்பது போல் ஒரு பாட்டு. தொடையை இறுக்கிய காலாடையும் முலைகளைத் துருத்திய மேலாடையும் அணிந்த ஒருத்தி விரகத்தில் நெளிந்தாள். கண்ணைத் துன்புறுத்தும் நிறங்களில் உடையணிந்து, தொப்பிவைத்து, இரவிலும் கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவன் இடுப்பை புணர்ச்சி விதிகளில் ஒன்றின்படி அசைத்துக் கொண்டிருந்தான்.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்- 4

சூப்பர்மாட்டிஸம் என்னும் புதிய பாணி தொடர்பற்ற ஒரு வழியல்ல. மாறும் உலக ரீதியான கலைத்தளங்களுக்கு ஏற்ப அது தோற்றம் கண்டது. குழுவிலிருந்து பலர் ஊர் மாறிச் சென்றனர். சிலர் வேறுபாணிக்கு மாறினர். எல் லிஸ்சிட்சி, இலியா சாஷ்னிக் போன்றவர் தமது வாழ்நாள் முழுவதும் இந்தப் பாணியை விட்டு விலகாமல் ஓவியங்களைத் தொடர்ந்து படைத்தனர்.

டிசம்பர் நாற்காலிகள்-1

ஒவ்வொரு கீர்த்தனையின் முடிவிலும் சில பல சென்னை ரசிகர்கள் பஞ்ச் பஞ்ச்சாக எழுந்து வெளியேறினார்கள். பாவம், எல்லோருக்கும் ப்ளாடர் வீக் போலிருக்கிறது. இவர்களைப் பிடித்து வைத்துக் கொள்வதற்காகவே இந்த மாதிரி அருமையான இசைக்கலைஞர்கள் மெலடியைக் குறைத்து ஓசையையும் வேகத்தையும் அதிகரிக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் கதிரி டீமுக்கு ஒரு ரிக்வெஸ்ட்: ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் மேற்கத்திய ஸிம்ஃபனி போல் அத்தனை பேரும் சேர்ந்து ஒரு orgasmic crescendo-வுக்குப் பாய்வதைத் தவிர்க்கலாம். தகரப்பாலத்தின் மீது குதிரைப் பட்டாளம் ஓடுவது போல் ஒலிக்கிறது.

காலனி ஆதிக்கமும், கால்டுவெல் திருப்பணியும்

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் காலனியாதிக்கக் கண்ணோட்டத்திற்கு எல்லிஸின் நிர்வாக நடவடிக்கைகள் உகந்தவையாக இல்லை. குறிப்பாக இந்திய நாட்டு மண்ணின் மரபுகள் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதையை நீடிக்கச் செய்கின்ற வகையிலான நடவடிக்கைகளும் கல்விக் கொள்கைகளும் கிழக்கிந்தியக் கும்பினி நிர்வாகத்தின் தலைமை இடமாகிய கல்கத்தாவில் இருந்த இயக்குநர் குழுவுக்கும் எல்லிஸுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தின.

மகரந்தம்

உலகில் ஐந்தில் ஒருவர் மின்சாரம் இல்லாமல் வாழ்கிறார். இதற்கு முக்கியமான காரணங்கள் அரசியலும் வறுமையும். இவர்களுக்கு அரசாங்கத்தைச் சாராத தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் கிடைக்க வைத்தால் அவர்களுக்கு அது வரப்பிரசாதம். மேலும் அசாத்திய சமுதாய மாற்றங்களும் ஏற்படும். இந்த சந்தை பல பரிமாணங்கள் கொண்டது. இதனை சரியாகவே சீனா பிடித்துவிட்டது.

கெளஷிகியின் ‘தும்ரி’

கெளஷிகி சக்ரபர்த்தி வளர்ந்து வரும் ஹிந்துஸ்தானி பாடகி. இவரது தந்தை அஜோய் சக்ரபர்த்தி பிரபல ஹிந்துஸ்தானி கலைஞர். புதாபெஸ்டில்(Budapest) நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சியில் அவர் பாடிய ‘தும்ரி’ வகை செவ்வியல் இசையை கீழே கேட்கலாம். அந்த இனிய குரலை, அதன் துல்லிய, பிசகில்லாத ஏற்ற இறக்கங்களை அனுபவிக்க “கெளஷிகியின் ‘தும்ரி’”

உயிர், மாற்று உயிர் – 3

நேச்சர் என்னும் பிரசித்திபெற்ற ஆராய்ச்சி சஞ்சிகையில் இதுவரை வெளிவந்துள்ள ஒரே விஞ்ஞானப் புனைக்கதை, ஆர்தர் கிளெர்க்கின் கடைசி சிறுகதை. கதை ஒரே பக்கம்தான். நம் ஆகாச கங்கை காலக்ஸியில் வேறு சமுதாயத்தினர் பூமியின் அழிவிற்குப்பிறகு அதைப்பற்றி ”பாவம்பா நல்ல மனுஷன் போயிட்டான், ஆனா தேவைதான் அவனுக்கு” என்கிற ரீதியில் பேசிக்கொள்ளும் சிறு உச்கொட்டல் போல எழுதியிருப்பார். இது எதற்கு இப்பொது என்றால், அந்த சமுதாயத்தினரை ஜெர்மானியம் மூலக்கூறை ஆதாரமாகக்கொண்ட உயிரினமாக சித்தரித்திருப்பார்.

2011 புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

புதிய திறப்பு, புது துவக்கம் குறித்த மானுடத்தின் காதல் அளவற்றது. கடந்த கால நிகழ்வுகளில் பெற்ற பாடங்களிலிருந்து பெற்ற புதிய கண்ணோட்டங்கள், வருங்காலத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வகைசெய்கிறது. அத்தகைய ஒரு புதிய துவக்கத்தை மானுடம் மிக கோலகலமாக கொண்டாடியுள்ளது. அதன் புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம். வாசகர்களுக்கு புத்தாண்டு “2011 புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்”

முன்னோடிகளும், பின்வந்தவர்களும், ஈயடிச்சான்களும்

தாதா மிராஸி, அனந்து, பாலசந்தர் காலங்களை விட இப்போது உலக சினிமா சுலபமாக அனைவருக்கும் கிடைக்கிறது. திரையுலகில் உள்ள பலரும் இவற்றில் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இத்தகைய நகலாக்கங்கள் உடனடியாக வெளிச்சத்துக்கு வந்து விடுகின்றன. பெரிய ஜனரஞ்சக வியாபரப் படங்களிலிருந்து, கலைப் படங்கள் சாயம் பூசி வெளிவருபவை வரை இது நடக்கிறது.