திலீப்குமாரின் கதைகள், சாதாரண மனிதர்களின் ஆசைகளும் ஏமாற்றங்களும் சார்ந்தது. இவரது கதைகள் சென்னையில் வாழும் குஜராத்தி குடும்பங்களின் உலகை நுட்பமாகச் சித்திரிக்கின்றன. அதிலும் முதியவர்கள், பெண்களின் வெளிப்படுத்த முடியாத ஆசைகளும் இயலாமையுமே இவர் கதைகளில் அதிகம் வெளிப்படுகின்றன. திலீப்குமாரின் கதைகள் மெல்லிய நகைச்சுவைத்தன்மை வாய்ந்தவை. அவை சம்பவங்களின் அபத்தத்தை வெளிப்படுத்துபவை.
Category: இதழ்-40
பாகிஸ்தானில் பறந்த கிருஷ்ணப்பருந்து
கிருஷ்ணப் பருந்து நாவலில் ஓர் இடம். ‘ஆரம்பப் பாட மாணவன் 100,99,98 என்று தலைகீழாக எண்ணுவதுபோல’ என்று வரும். இன்று தமிழில் வருடாவருடம் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளியிடப்படுகின்றன. கண்கவரும் அட்டைகளும், நல்ல தாள்களும், அழகான எழுத்துருக்களும் தமிழ் வாசிப்பை இனிய அனுபவமாக மாற்றிவிடுகின்றன. நிறைய இளம் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். இந்தச் சந்தடியில் மூத்த எழுத்தாளர்கள் மறக்கப்பட்டு விடுகிறார்கள். அவர்களுடைய உன்னதமான படைப்புகள் 100,99,98 என்று பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகின்றன.
நினைவுகளின் சுவட்டில்
பரந்த வாசிப்பும், நம்பும் தீவிரமான இலக்கியக் கொள்கைக்கான அர்ப்பணிப்பும், அஞ்சாமையும், கூர்ந்த அவதானிப்பும், நேர்மையான அபிப்பிராயங்களும் வெ.சாவின் பலங்கள் என்பதை அவர் எழுதிய ஒரு நூலையேனும் வாசித்திருப்பவர் உணர இயலும். வெ.சாவுக்கு இந்த பலம் வந்த ஊற்றுக்கண், நாற்றங்கால், உரக்குண்டு எதுவென இந்த நூலை வாசிப்பவர் உணர இயலும். இலக்கிய விமர்சனமாக 12, நாடகம் சார்ந்த 3, ஓவியம் சிற்பம் பற்றி 3, சினிமா சார்ந்து 3, இன்ன பிற 3, என 24 நூல்கள். மொழி பெயர்ப்புகள் 3, தொகை நூல்கள் 4 என்பன தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறைக்கு அவர் கொடை. என் நினைவு சரியாக இருக்குமானால், எனது முதல் கட்டுரையை நான் 1982-ல் எழுதினேன். அது ஒரு மதிப்புரையாக இருந்தது. அதுவும் வெ.சா கேட்டதற்குப் பணிந்து- ஆ.மாதவனின் நாவல், ‘கிருஷ்ணப் பருந்து’ பற்றியது. மதிப்புரை அல்லது கட்டுரை எழுத எனக்கு வரும் என்றே தெரியாது அப்போது.
ஐந்து கவிதைகள்
சோறு வெந்து பதமாயிருக்கிறது.
என்னைத் தவிர யாரும் எஞ்சாத வீடெங்கும்
கொதிக்கும் குழம்பு மணக்கிறது;
பசிக்காகக் காத்திருக்க நாவிலும்
ஊறுகின்றன நினைவுகள்
ஒளி விளையாட்டு
இயற்கை விளையாட்டின் ஒவ்வொரு துளியுமே பிரம்மாண்டம்தான். அந்த துளியின் ஏதோவொரு தெறிப்புதான் மானுடம் என்று கருத இடமுண்டு. Aurora borealis எனப்படும் இயற்கை நிகழ்த்தும் ஒளியின் அற்புத நிகழ்வை நீங்கள் அறிந்திருக்கலாம். மிக நீண்ட தூரத்திற்கு மேகத்தில் ஒளி தன்னுடைய பரப்பை நிகழ்த்திக் காட்டும். சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டில் “ஒளி விளையாட்டு”
மெளனியுடன் கொஞ்ச தூரம்
தத்துவ சார்பில் விலகியுள்ள இரு எழுத்தாளர்களின் படைப்புகளையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது. உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்தும், மதிப்பும், அவர்கள் ஒரே விதமான தத்துவ சார்புகளைக் கொண்டிருந்தவர்கள் என்பதற்காகத்தான் என்று நம்மால் கொள்ளமுடியுமா? உலக இலக்கியத்தின் சிறப்பான தொகுதியை நாம் பார்க்க நேர்ந்தால், கால, தேச, எல்லைகளையும், தத்துவச் சார்புகளையும் மீறி அது நம்மை ஈர்த்துக் கொள்வதைக் காண்போம்.
பாச்சி
கடைத் தெரு முழுக்கச் சூன்யமாகக் கிடக்கிறது. இன்னும் நன்றாக விடியவில்லை. தேங்காய் மட்டை ஏற்றிய வண்டிகள்,எறும்புப் பட்டாளம் போல நீளமாக ஊர்ந்து செல்கின்றன சக்கரங்கள், அச்சுக் கோலில் டக்டக்கென்று மோதிக்கொள்ளும் சத்தம் தொலைவரை நீளக் கேட்கிறது. சாலையில் கடைகள் ஒன்றுமே திறக்கவில்லை. அப்புவின் புட்டுக்கடை மட்டும் திறந்து, வாசலில் தண்ணீர் தெளித்துவிட்டுப் போனான், பையன். உள்ளே, சாயரத் தட்டில் கரண்டி மோதுவதும், பாய்லரின் உள்ளே கரி வெடிக்கும் சத்தமும் கேட்கிறது.
உயிர், மாற்று உயிர் – 2
பூமியின் உயிர்களில் சக்கரை வலப்புறம் சுழற்சி, அமினோ அமிலங்கள் இடப்புறம் சுழற்சி. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் தோன்றும் சாத்தியம் இருந்திருக்கையில், உயிர் தோன்றியதே தற்செயல்தான் என்றால், ஏன் ஒரே ஒரு முறை மட்டும் சாதா உயிர்கள் தோன்றியிருக்கவேண்டும். இன்று ஒரு வகை சாதா உயிர், சில வருடங்கள் கழித்து மற்றொரு வகை சாதா உயிர் என்று தோன்றியிருக்கலாமே.
எல்.சுப்பிரமணியத்தின் ஸ்பானிய இசை
பிரபல வயலின் இசைக் கலைஞரான எல்.சுப்பிரமணியம் வழங்கும் ஸ்பானிய இசைக் கோர்வை ஒன்று கீழே :
மகரந்தம்
உலகில் என்னென்னவோ இயற்கை வளங்கள் தீர்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஆழ்கடலில் மீன்கள் பெரிதும் குறைந்து விட்டன. முத்துச் சிப்பிகள் எங்கே போயின? பல நகரங்களில் உலகெங்கும் சிட்டுக் குருவிகளே காணோம். தேனீககள் பல நாடுகளிலும் பெரும் கூட்டங்களாக அழிந்து போகின்றன. பல காட்டு மிருகங்கள் உலகில் இல்லாமல் போய் விட்டன. தவிர எரிபொருள்கள் தீர்ந்து வருகின்றன. வரும் ஐம்பதாண்டுகளில் குடிநீருக்குப் பெரும் பஞ்சம் எழும் என்று நீர் வள ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்தப் பட்டியலில் இன்னொரு பொருளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஹீலியம் வாயு.
வாசகர் எதிர்வினை
சில துயரங்கள் என்ன செய்தாலும் நம்மை அவ்வளவு சுலபமாக கடந்து போவதில்லை என்பது மிக நிதர்சனம். ‘Time will heal’ என்பது சில இடங்களில் பொய்த்து விடுகிறது. ‘அதுவாய் கடந்து போனதில்லை’ என்று கூற கற்பனை போதாது. ஆழ்ந்த அனுபவமோ அல்லது தீர்கமான சிந்தனையோ வேண்டும். அதுவாக கடந்து போகாததால் அதை கடத்த மனிதன் எவ்வளவு பாடு பட வேண்டும் என்ற ஆதங்கமும் இந்த வரியில் சுமையாக தெரிகிறது. இந்த வரிகளுக்கு அப்புறம் ஒரு பெருமூச்சோ அல்லது ஒரு சொட்டு கண்ணீரோ எனக்கு தெரிகிறது.
புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’
காஞ்சனையின் கோர வடிவையும் தாண்டி கதை சொல்லிக்கு அவளது முகத்தில் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி தெரிகிறது. காஞ்சனையின் குரூபம் பார்வையைப் பறிக்கும் கண்களில் இருக்கிறது, ஆவியை உட்கொள்ளும் பற்களில் இருக்கிறது. அவ்வளவே. இந்த தனி அவயங்களைத் தாண்டிய முகத்தின் மொத்த தோற்றத்தைக் காண்கையில் கதை சொல்லிக்கு மோக லாகிரி எழும்புகிறது.
ஷ்ரோடிங்கரின் பூனை
வீட்டுச் சாப்பாட்டின் ருசி இன்னமும் நாக்கிலிருந்து விலகாத முதல் செமஸ்டரின் ஓர் இரவு. ரூம்மேட் செந்திலுடன் எதைப்பற்றியோ பேசிக்கொண்டு மெஸ்ஸை நோக்கி நடந்து செல்கையில், திடீரென்று எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக் கொண்டான் அவன். வந்தவன் ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்தான். அவனை நான் அப்போது இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். அதற்கு முன்பு, ஏ விங் சீனியர்களின் ராகிங் பொழுதில் நாங்களெல்லாம் இடுப்பால் காற்றில் உயிர் எழுத்துக்களை எழுதிக் கொண்டிருக்க, இவன் மட்டும் கிதார் வாசித்துக் கொண்டிருந்தான்.
காஞ்சனை – ஓர் அனுபவம்
புதுமைப்பித்தன் எழுதிய காஞ்சனை சிறுகதை அக்காலத்துக்கே உரித்தான, வாழ்வின் பிரச்னைகளையும், வறுமையையும் மீறிய விச்ராந்தியான தருணங்களில் ஆரம்பிக்கும் கதை. இத்தகு தருணங்களை சத்யஜித் ராயின்படங்களில், தி.ஜா., கதைகளில் காண்கிறோம். படத்தைப் பார்க்கையில், கதைகளைப் படிக்கையில் ஒரு பறவையின் அழைப்பை, தூரத்து ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும். அதுதான் அடிப்படை. இயல்பு. சகஜம். அதன்மேல் இயக்கங்களும், இயக்கம் பற்றிய மாசு படிந்த கவனிப்புகளும், நினைவுப் பதிப்புகளும், அவற்றில் படியும் தூசிகளும் நிகழ்கின்றன.
ஆயிரம் தெய்வங்கள் – 5
அன்று இலக்கியவாதியாக வாழ்ந்தேன். வரலாறை நேசித்தேன். மக்களை அறிய பூகோளமும் வரலாறும் அறிவது நன்று என்று அவற்றையும் கற்றேன். இன்று இயற்கை விவசாயியாக வாழ்கிறேன். இயற்கை விவசாயத்தில் பள்ளிக்கூடம் கூட நடத்துகிறேன். ”வேதம்” என்ற சொல்லை அடிக்கடி நான் பயன்படுத்துவதைக் கண்டு இயற்கை விவசாயத்தில் என்னை குருவாக ஏற்றுக்கொண்ட ஒரு வேளாள சிஷ்யர், திடீரென்று ”ஐயா நீங்கள் பிராமணரா?” என்று கேட்டார், அதன் பின்னர், ”பட்டையா, நெட்டையா” என்றார்.
துயில், தோள்சீலைக்கலகம் – புத்தக வெளியீடுகள்
திரு.எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய துயில் நாவல், ஆய்வாளர்கள் எஸ்.இராமச்சந்திரன், அ.கணேசன் எழுதியுள்ள தோள்சீலைக்கலகம் என்ற வரலாற்றுநூல் இவற்றின் வெளியீடு குறித்த அறிவிப்புகள்.
மருத்துவத்தின் வரலாறு இன்று வரை நாம் முறையாக தொகுக்கப்படாதது. மதமும் மருத்துவமும் கொண்டுள்ள உறவும் அது சார்ந்த மனித நம்பிக்கைகளும் மிகப் புராதனமானவை, அவ்வகையில் நலமடைதல் என்ற அற்புதத்தின் மீதான விரிவான விசாரணையே இந்த நாவல்.
இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்-3
தொன்மையான கிராமியக் கலைகள், அரங்கம், இலக்கியம் – குறிப்பாக கவிதை – ஓவியம் என்று பல கலைத் தளங்களில் விரைவாகப் பரவிய நவீன சிந்தனைத் தாக்கம் புதிய பாதையில் பயணிக்க உகந்த களமாக அப்போது 20ஆம் நூற்றாண்டின் தொடக்க கால ருஷ்யா அமைந்தது. குறியீட்டு ஓவியர்களுக்குப் பின்னர் (Icon Painters) அங்கு அலுப்பூட்டும் அகடமிக் (Academic) வழிதான் பின்பற்றப்பட்டது. வரவிருக்கும் 1817-இன் புரட்சியை முன்னரே அறிந்தது போல கலையியக்கம் செயற்படத் தொடங்கியது.
திலீப்குமார், ஆ.மாதவன் – சமகால அங்கீகாரங்கள்
தமிழின் தேர்ந்த இலக்கியவாதிகள் விருதுகள் மூலம் அங்கீகரிக்கப்படுவது தமிழ்ச்சூழலில் மிகவும் அரிதானதொரு விஷயமாகவே இருக்கிறது. இக்குறையை ஓரளவு நீக்கும் விதமாக இந்த வருடம் இரண்டு தேர்ந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர் திலீப்குமார் ‘விளக்கு’ அமைப்பால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ இலக்கியவட்டத்தால் இந்த வருடம் கெளரவிக்கப்படுகிறார். திலீப்குமார், ஆ.மாதவன் இருவருக்கும் சொல்வனம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.