சந்திரஹாசன்

சந்திரஹாஸனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. தன்னை விட அதிகம் படித்த யாரையுமே, அவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும், ‘ஸார்’ என்றே அழைப்பான். அந்த வகையில் எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ் பண்ணியிருந்தவர்களும் அவனுக்கு ஸார்தான்.எப்படியோ தட்டுத் தடுமாறி எஸ்.எஸ்.எல்.ஸி வரை வந்துவிட்ட சந்திரஹாஸன், நாற்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்தும் எஸ்.எஸ்.எல்.ஸியில் தேர்ச்சி பெற முடியாமல் போனது குறித்து பெரிதும் வருந்தினான். ஒரு பாடத்தில் முப்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்தால் பாஸ்தான். ஆனால் மொத்த மதிப்பெண்களும் நாற்பத்தைந்து என்றால் கவர்னரே கையெழுத்திட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை மெதுவாக எடுத்துச் சொல்லி அவனுக்கு புரிய வைத்தோம்.

வெளிச்சம்

அன்று ரொறொன்ரோவில் பனிகொட்டி கால நிலை மோசமாகும் என்று ரேடியோவில் அறிவித்தல் வந்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு அவசரமாகப் போய்ச் சேர்ந்தேன். மருத்துவர் கொடுத்த நேரத்துக்கு அவருடைய வரவேற்பறையில் நிற்கவேண்டும். இன்னும் ஐந்து நிமிடம் மட்டுமே இருந்தது. அந்த ஆஸ்பத்திரியில் கார்கள் நிறுத்துவதற்கு நாலு தளங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள். ஒவ்வொரு கார் தரிக்குமிடத்திலும் ஒவ்வொரு கார் நின்றது. கார்கள் வரிசையாகச் சுற்றிச் சுற்றி தரிப்பதற்கு இடம் தேடின. நானும் பலதடவைகள் சுற்றி இடம் கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் ஓடினேன். அந்த அவசரத்தில் எங்கே காரை நிறுத்தினேன் என்பதை அவதானிக்க தவறிவிட்டேன்.

காப்பிய இமயம்

வழக்கமாக மேடைப் பொழிவாளர்கள் பலரும் தம் கைவசமிருக்கும் நூற்றுக்கும் குறைவான கம்பன் பாடல்களையே எல்லாப் பந்திகளிலும் திரும்பத் திரும்ப விளம்புகிறார்கள். அதாவது கம்பனில், மேடைகளில் புழங்கும் பாடல்கள் ஒரு சதமானத்துக்கும் கீழே. ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு ஒரு புருஷ ஆயுளையும் ஓட்டிவிடலாம். விளைவு திரும்பத் திரும்ப காதில் ஒலிக்கும் அதே நூற்றுக்கும் குறைவான பாடல்கள்.

நின்று பெய்யும் மழை – பிரான்சிஸ் கிருபா

ஈரமேறிய மண்ணில் நின்று கொண்டிருப்பவனின் கால்களை நனைத்துச் செல்லும் ஓடையாக கவிதைகள் இருக்கின்றன. கவிதையின் மீதாக விருப்பம் இருப்பவர்கள் குனிந்து தங்களின் கைகளில் கொஞ்சம் கவிதைகளை அள்ளிக் கொள்கிறார்கள்.அவரவரின் கை வடிவத்திற்கு ஏற்ப அள்ளிய நீர் வடிவம் பெறுவதைப் போலவே, வாசகனின் அனுபவத்திற்கும் மனநிலைக்கும் ஏற்ப கவிதைகள் அவனுக்குள் வடிவம் பெறுகின்றன. தன்னை யாரும் அள்ளி எடுப்பதில்லை என்பதற்காக எந்தக் கவிதையும் நின்றுவிடுவதில்லை.

‘விளிம்பில் உலகம்’ கட்டுரைக்கு ஒரு மறுவினை

சொல்வனம் இதழ் 37-இல் திரு.மித்திலன் எழுதிய ‘விளிம்பில் உலகம்’ என்ற கட்டுரையைப் படித்தேன். அவர் நுட்பமாகத் தன் கட்டுரையை வரைந்திருக்கிறார், சொல்வதைச் சுருக்கி எழுதியிருக்கிறார் என்பதால் வேகமான வாசிப்பில் சில அம்சங்கள் கவனிக்கப்படாமல் போகலாம் என்று நினைத்து இதை எழுதுகிறேன். இது விமர்சனமில்லை, கூடுதலான விவாதத்துக்குத் தூண்டுதல்.

வாசகர் மறுவினை

தன்னை முழுதாக தொகுத்துக் கொண்டு சமூகம் முன்னகரும் போது, அதற்கான கோட்பாடுகளை அது உருவாக்கிக் கொள்கிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மனித குலம் தன் இருப்பை நீடித்துக் கொள்ள உதவும் கருவிகளை தேடி அலைகிறது. ஒரு கோட்பாட்டின் மூலம் அந்த கருவிகளை அடைய முடியும் என்று நம்பிக்கை போதும், சமூகத்தில் இந்த கோட்பாடு கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

இணையத்துடன் போராடும் விளம்பரத் தாள்கள்

செய்தித்தாள்களில் உள்ள ஒரு மிகப் பெரிய செளகரியம் அதன் parallel படிக்கும் முறைகள். அதாவது, அரசியல் படித்துவிட்டுத்தான் விளையாட்டைப்பற்றி படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அரசியல் படிக்கும் அப்பாவிடமிருந்து, கிரிக்கெட் பக்கத்தை மகன் உருவி படிக்கும் காட்சி நமக்கு மிகவும் பழக்கமானது. செய்தித்தாளின் முதல் போட்டி ரேடியோ. ஆனால், ரேடியோவில் மிகப் பெரிய குறை அதன் serial கேட்கும் முறைகள்.

மகரந்தம்

கடல் அமிலமாகிறது என்று ஆபத்தறிவிப்புகள் படித்திருப்பீர்கள், அதனாலென்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். அமிலமாகும் கடல் நீரில் உயிரினங்கள் வளர்வது மிகக் குறையும். உயிரினங்கள் இல்லாத கடல் உலக மக்களுக்குப் பெரும் நாசததைக் கொணரும், ஏனெனில் கடலிலிருந்து கிட்டும் உணவு உலக மக்கள் திரளுக்குப் பெரும் பங்கு ஊட்டத்தை அளிப்பது. இங்கு கொணரப்படும் செய்தி சொல்வது வேறு ஒரு விந்தையைப் பற்றியது.

எலெக்ட்ரிக் எறும்பு – 2

என் பேரண்டமே என் விரல்களுக்கு இடையில் உள்ளது, அவன் புரிந்து கொண்டான். இந்த சனியன் பிடித்த நாடா எப்படி வேலை செய்கிறது என்று மட்டும் புரிந்து விட்டால். நான் முதலில் என்ன தேடினேன் என்றால், என் செயல்திட்டத்தை இயக்குகிற சர்க்யூட்களைக் கண்டுபிடித்தால், என் வாழ்க்கையை உண்மையாக ஒரு நிலைப்புள்ளதாக ஆக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் இதைப் பார்த்தால்…

கல்மேடு

சிறிய உருவம் கொண்ட முதியவரான உள்ளூர்ப் பாதிரியார் மலைகளின் மேல் ஏறிச் செல்ல வேண்டும் என்பது வேடிக்கையான யோசனையாக இருந்ததால், அங்கு நீண்ட சிரிப்பலை எழுந்தது. தந்தை இஜியஸ் அனாவசிய கர்வம் இல்லாதவர்தான். ஆனாலும், சிரிப்பலையால் சற்றே மனம் புண்பட்டாரோ என்னவோ, கடைசியில், விறைப்பாகப் பேச ஆரம்பித்தார், “ஐயா, அவர்களுக்கு அவர்களுடைய கடவுளர்கள் உண்டு.”

மொழிபெயர்ப்பு என்னும் கலை – இறுதிப்பகுதி

முழு எத்தர்கள், சற்றே மந்த புத்திக்காரர்கள், மலட்டுப் புலவர்கள் ஆகியோரைத் தவிர்த்தால், தோராயமாக, மூன்று விதமான மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளனர். நான் முன்னர் கூறிய மூன்று வகைத் தீங்குகள்- அறியாமை, விட்டு விடுதல், மற்றும் ஒற்றித் திருத்தல்- அவற்றுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்றாலும், இந்த மூன்று வகையினரும் மேற்படி மூவகைப்
பிழைகளையும் செய்யக் கூடும்.

ஆயிரம் தெய்வங்கள் – 4

சூரியனைச் சுற்றியுள்ள எகிப்தியக் கதைகளில் எவ்வாறு தாய்தெய்வமாகிய ஐசிஸ் ஒளிபெற்றால் என்ற விவரம் சூரியனின் சுழற்சியை அறிவுப் பூர்வமாகச் சிந்திக்கும் உருவகமாகத் தோன்றுகிறது. ஐசிஸ் மூவுலகிலும் சக்தி நிரம்பிய தாய்தெய்வம். மாய-மந்திரங்களில் வல்லவள் என்றாலும் ரி, அதாவது சூரியனின் ரகசியத்தை அறியாமலிருந்தாள். ரி ரகசியம் தெரிந்துவிட்டால் அவள் சக்தி மேலும் உயரும். ஒரு புதிய சக்தி பிறக்கவும் வழி ஏற்படும்.

இடப்பெயர்வு

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய, இன்று வரை நில்லாத மனித குலத்தின் இடப்பெயர்வை, அதன் விளைவுகளை வரலாறு மீள மீளப் பேசுகிறது. தன்னைச் சுற்றிய இயற்கையை அதன் நடவடிக்கைகளை, இயற்கையின் பகுதியான பிற உயிரினங்களின் நடவடிக்கைகளை தனது முதல் படியிலிருந்தே மனிதன் கவனித்து வருகிறான். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, “இடப்பெயர்வு”

தனியே எங்கே போகிறாய்? – கேசர்பாய் கேர்கர்

3:38 நிமிடம் பாடக்கூடிய இந்தப் பாடலைப் பாடியவர் கேசர்பாய் கேர்கர். உஸ்தாத் அல்லாடியாகானிடம் பல வருடங்கள் இசை பயின்றவர். 1977-இல் வாயேஜர் ஓடம் வின்வெளிக்கு அனுப்பப்பட்டபோது கூடவே சில பாடல்கள் தொகுத்து அனுப்பப்பட்டன. அத்தொகுப்பில் இந்தியாவிலிருந்து சென்ற பாடல் இது. விக்கிபீடியாவில் கிடைத்த இன்னொரு தகவல்: The recording was recommended for “தனியே எங்கே போகிறாய்? – கேசர்பாய் கேர்கர்”

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்

ரஷ்ய நாட்டின் ஏறக்குறைய அனைத்து கலை இயக்கங்களும் சங்கத்துடன் இணைக்கப்பட்டன. யுக்ரேன் (Ukraine), லாட்வியா (Latvia), அர்மேனியா (Armenia) பகுதி ஓவியர்களும் இயக்கத்தில் இணைந்தனர். சங்கத்தின் வளர்ச்சியும், விரிவாக்கமும் ஆட்சிக்குத் தலைவலி கொடுத்ததால், அதை ஒடுக்கவும் அடக்கவும் ஆட்சி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

புற்றுநோய் சிகிச்சை: கனவு நனவானது

கடந்த சில வருடங்களில், முன்னேறிய நாடுகளில், குழந்தைப் பருவ புற்றுநோயாளிக்கான மருத்துவ வசதிகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் 70 முதல் 90 சதவீத குழந்தைப் பருவ புற்றுநோய்கள் குணப்படுத்தக் கூடியவையே. இந்தியாவில், ஒவ்வொரு வருடமும் 40,000 முதல் 50,000 நபர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 50 முதல் 60 சதவீத புற்றுநோய் பாதித்த குழந்தைகள் இறக்கின்றனர்.