நெடுஞ்சாலை

படைப்பாளி எதையும் எழுதப் புகுமுன் போருக்குப் போகிறவன் போல்தான். தனது களம், காலம், கரு சார்ந்து தனது உத்தியை அமைத்துக்கொள்கிறான். மொழியைத் தேர்ந்து கொள்கிறான். தற்செயலாக அமைவதும் திட்டமிட்டுக் கொள்வதும் உண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றொரு கூற்றுண்டு வண்டமிழில். இயல்பாக ஒரு மெக்கானிக் சொல்வதில்லையா 24/26 ஸ்பேனர் எடு என அது போல.

விளிம்பில் உலகம்

வாசிப்பு தவறாக இருக்கும் போது, எவ்வளவுக்கெவ்வளவு நம் வாசிப்பு உறுதியாக இருக்கிறதோ, எவ்வளவுக்கெவ்வளவு அதன் நம்பகத்தன்மையில் நாம் முதலீடு செய்திருக்கிறோமா, அவ்வளவுக்கவ்வளவு பேரழிவை சந்திக்க வேண்டி வரும். அரசியல் இயக்கம் குறித்த புரிதலிலும் இதுதான் நடந்தது – ஜெர்மனியில். பொருளாதார கோட்பாடுகளை நிலை நிறுத்தியபோதும் இதுதான் நடந்தது – ரஷ்யாவில். சமூகவியலில் இத்தகைய போக்கைக் கண்மூடித்தனமாக நிகழ்த்தியபோதும் இதுதான் நடந்தது – சீனாவில். இன்று தொழிற்சாலை உற்பத்தியை, அது சார்ந்த அறிவுநுட்ப வளர்ச்சியை மட்டும் அறிவியல் என்று கருதி அந்த இயக்கத்தைப் பேரளவில் வாழ்க்கை முழுதும் நடைமுறைப்படுத்தும் பார்வை சூழியல் அழிவின் விளிம்பில் பூமியைக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது – மேலை நாடுகளின் தயவால்.

ரோந்து

அவன் ஒவ்வொரு ரவையாக வெளியே எடுத்து உள்ளங்கையில் வைப்பான். பிறகு நாயின் நெற்றிப்பொட்டுக்குக் குறிவைப்பான். காலி துப்பாக்கியின் குதிரையை க்ளிக்… ரெண்டடி தூரம். அதன் கண்ணுக்கு இடையேயான குறி. சின்னச் சத்தம், பாதிவழியிலேயே அது தேய்ந்து அடங்கிவிட்டது. வழக்கமில்லாத வழக்கமாய் நாய் மூத்திரம் பெய்துவிட்டது. மற்ற சமயங்களில் அதன் இதயத்தில் அவன் முட்டிவிட்டாப் போல அது நடுங்கும்.

மகரந்தம்

சொரய்யா என்றொரு இரானியப்பெண், அயத்துல்லா கொமேனியின் ஆட்சியின்போது, திருமணத்தை மீறிய தகாத உறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது ஏதோ வெஞ்சினத்தால் செய்யப்பட்ட கொலை அல்ல. அப்பெண் வசித்த கிராமத்து நிர்வாகமே தீர்ப்பாக எழுதிச் செய்த கொலை. அப்பெண்ணின் வயதான தந்தையே தன் மகளைக் கொல்வதற்கான முதல் கல்லை எடுத்து எறியும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். இப்போது அப்பெண்ணின் துயரமான கதை ஒரு விவரணப்படமாக வெளிவந்திருக்கிறது.

Surface – குறும்படம்

சமூகத்தின் நடவடிக்கைகளை நிலத்தடியிலிருந்து மேல் நோக்கி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்? இந்த கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் குறும்படம் ஒன்று :

முகமது அலி

குத்துசண்டை மீதான ஈடுபாடு நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆக்ரோஷமான மோதல்களும், முகத்தில் வழியும் ரத்தமும், வலியில் துடிக்கும் வீரரும் நம்மை எந்தவகையிலும் உறுத்துவதில்லை. மாறாக ஒரு வித கிளர்ச்சியை அது அளிக்கிறது. அதற்கான பரிணாம/உளவியல் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கட்டும். நாம் உலகப் புகழ்பெற்ற குத்துசண்டை வீரர் முகமது அலி “முகமது அலி”

நகரும் வீடுகள்

எங்களின் சிறு வயதிலிருந்து பார்த்த பொறுமையும், அடக்கமும், மரியாதையும் இன்னும் இம்மியும் குறையவில்லை அப்பாவிடம். பகலில் கட்டிலிருக்குக் கீழே அமர்ந்துகொண்டு பாட்டியிடம் சமாச்சாரம் பேசிக் கொண்டிருப்பார் அப்பா. எதுவானாலும் தன் அம்மாவிடம் சொல்லியாக வேண்டும் அவருக்கு. பாட்டியிடம் சொல்லும்போது அம்மா கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

தனிமை- மேடை நாடகம் – அறிவிப்பு

கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் அமைந்துள்ள க்ரியா நாடக் குழுவும், பாரதி தமிழ்ச் சங்கமும் இணைந்து வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி “தனிமை” மேடை நாடகத்தினை அளிக்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் வயதான பெற்றோர்களின் வாழ்க்கையையும் அமெரிக்காவில் புலம் பெயர்ந்து பிரிந்து வாழ நேரும் அவர்கள் பிள்ளைகளின் நிலைகளையும், தவிப்பினையும், குடும்பம், உறவு, பிரிவு ஆகிய நுட்பமான வாழ்க்கைக் கூறுகளையும் மிக அழகாகவும், நகைச்சுவை மிளிரவும் சித்தரிக்கின்ற ஒரு நாடகம் ‘தனிமை’.

உயிரின் கதை: உயிர் என்றால் என்ன?

மனம் என்றால் என்ன, என்ற கேள்வியைப் போன்றதே உயிர் என்றால் என்ன என்ற கேள்வியும். அறிவியல் தத்துவம் இரண்டிலும் ஆழ்ந்து சென்று அடைய வேண்டியவை. அல்லாமல் அனைவருக்குமான பொது வெளியில் சிறு விவாதத்தின் வழி கிடைக்கும் இக்கட்டுரை ஒரு எளிய சித்திரம் மட்டுமே என்பதை கவனமாக நினைவில் கொள்வோம். ஒரு எளிய தத்துவப் பயிற்சியாக ஜாலியாக மூளையைக் கசக்காமல் யோசித்துப் பார்க்கலாம். உயிர் என்றால் என்ன?

இணையத்தில் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், கணிதம்

தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானோருக்கு இப்போது வலைத்தளம் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் வலைப்பக்கத்துக்கென்று பிரத்தியேகமாக எழுதுகிறார்கள். அச்சுப்பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகளையும் இணைய வாசகர்கள் பயன்பெறும் வகையில் தங்கள் வலைப்பதிவுகளில் வெளியிடுகிறார்கள். இவர்களில் சமீபத்திய குறிப்பிடத்தக்க புதிய தளங்கள் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன் இருவருடையதுமாகும்.

இரண்டு கவிதைகள்

இதுநாள் வரை
கடவுளே கடவுளுக்கே மட்டும் தெரிந்த
புதையல் மறைத்துவைக்கப்பட்டிருந்த
புரதான வரைபடம் போல இருந்த
இதயத்தின் சிக்கலான சூட்சுமங்களைக் கண்டுக்கொள்கிறார்
இதய அறுவை சிகிச்சை நிபுணர்

நடனமாடும் நாவலுலகம்

புத்தகத்தில் இல்லாத இன்னொரு விஷயம் விடியோ மற்றும் ஒலித் துண்டுகளை வலைப்பூக்களில் எளிதில் இணைக்க முடியும். செயல் விளக்கம் மற்றும் இசை போன்ற விஷயங்களை விளக்குவதற்கு இது மிகச் சக்தி வாய்ந்த ஊடகம். கிண்டில் போன்ற புத்தகம் படிக்கும் கருவி சில சந்தா உடைய வலைப்பூக்களை படிக்க வழி செய்கிறது! இந்தப் புரட்சியால் நன்றாக எழுதும் பல எழுத்தாளர்கள் நேராக தங்களுக்கு வலைப்பூ அமைத்துக் கொண்டு செளகரியப்பட்ட பொழுது, பிடித்தவற்றை எழுதுகிறார்கள். சில வலைப்பூக்களுக்கு, பத்திரிகைகளைவிட, நாவல்களை விட அதிகம் படிப்போர்கள் உள்ளார்கள்.

மொழிபெயர்ப்பு என்னும் கலை

ஷேக்ஸ்பியரையும், ஃப்ளூபேரையும் ட்யூட்சேவையும், டாந்தேவையும், ஸெர்வண்டெஸையும், காப்காவையும், ரசிக்க ஒரு மனிதனுக்கு ஆறு மொழிகளில் ஆழமான நுண்ணறிவு வேண்டியிருக்கிறது. இவற்றைத் தவிர பிற மொழிகள் இருக்கின்றன. அந்ததந்த மொழிகளில் சிறந்த கவிஞர்கள் இருக்கின்றனர்… லத்தீன் உள்ளதா, கிரேக்கமும் உள்ளதே? பிறகு, மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் என்னதான் செய்வதாம்?

அம்மா

கிணற்று மேடையில்
குடம் வைக்க அமைத்த குழியில்
தேங்கிய தண்ணிரைக் காகம் பருகும்.
துணி காயப் போடும் கம்பிகளில்
சென்ற நிமிடம் என்பது இருந்தது
என்னும் சாட்சியாய் நீர் முத்துகள்.

எலெக்ட்ரிக் எறும்பு

மேல்பரப்பில் பார்த்தால் சாதாரண உடலுறுப்பு போலவே இருந்தது. இயற்கையான தோல், அதன் கீழே இயற்கையான சதை, நிஜமான ரத்தம் தமனி, நாடி, சல்லிக் குழாய்களில் எல்லாம் ஓடியது. ஆனால் அதற்குக் கீழே, எலெக்ட்ரிக் சர்க்யூட்கள், சிறு கம்பிகள், நுண்ணிய அளவில் பொருத்தப்பட்டு… மின்னின…கைக்குள் கூர்ந்து பார்த்தான்…

இசைவழி ஓடும் வாழ்க்கை – 3

சங்கிலிகளில் கட்டப்பட்டிருந்த நிலைகளில் தம்மிடையே அவரவர் மொழிப் பாடல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். உரக்கப் பாடினால் தண்டனை கிட்டும், என்று ஒலி ஒடுங்கிய முனகலிசையும், தாளங்களும், சொல்லொடுங்கிய இசையும் அவர்களிடம் நிறைய பரிமாறிக் கொள்ளப் பட்டிருக்கிறது. சொற்கள் பேசிப் பழக ஒரே பகுதி மக்கள் இல்லாத காரணத்தால் பொருளிழந்து, தலைமுறைக்குத் தலைமுறை மாற்றிக் கொடுக்கப் படாமல் பாஷை ஞானம் அழிந்த பின்னும் எஞ்சுவன தாளங்களும், பாட்டுகளுடைய இசைப் பாணியும் மட்டுமே. இப்படி ஒரு வினோத பண்பாட்டுத் தொடர்ச்சி அமெரிக்கக் கருப்பர் இசையில் நீடிக்கிறது.