துப்பு

ஊருக்கெல்லாம் துப்பு சொல்லி திருமணம் நடத்தி வைக்கும் முனியப்ப தாத்தாவின் மனைவி அவருடன் வாழ்ந்தது ஒரு சில வருடங்கள்தான். பெரும் பணக்காரியான அவர் இவரிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு தன் மகனுடன் தனியே வாழ்ந்து வருகிறார். மகன் மீது கொள்ளைப் பாசம் முனியப்ப தாத்தாவுக்கு. அவன் கல்லூரிக்குச் செல்லும் போது எதிரே இவர் வந்தால் தன் தாயின் வளர்ப்பு காரணமாக சிரிக்கக் கூட செய்யாமல் பாராமுகமாகச் சென்றதை ஒருமுறை என்னிடம் கண்கலங்கிச் சொல்லியிருக்கிறார்.

வாசகர் எதிர்வினை

பத்ரியின் கருத்துகள் சிலவற்றில் நான் மாறுபடலாம். மாறுபடும் கருத்துகளைக் கடுமையாகவே நான் முன்வைக்கவும் செய்யலாம். ஆனால் பத்ரி என்கிற தனிமனிதர் மீதும் அவரது ஆளுமை மீதும் எனக்கு மிகுந்த மரியாதைதான் இருக்கிறது. அவர் தமிழ்ப்பதிப்புத்துறையில் செய்து வரும் சாதனைகள் குறித்து எனக்கு என்றைக்குமே வியப்பும் மதிப்பும் உண்டு.

உலக நகரங்கள்

Foreign Policy  இதழ் உலகின் பல்வேறு நகரங்களை தன்னளவில் வரிசைப்படுத்தியுள்ளது. இந்த வரிசையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாமல் போயினும், அதன் புகைப்படங்களுக்காக மட்டுமாவது இந்த வரிசையை ஒரு முறை பார்த்துவிட வேண்டும். அற்புதமான புகைப்படங்கள். வரிசை இங்கே.

மகரந்தம்

மேற்குலகம் தன்னுடைய கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளில் குவித்து வைக்கும். முதலில், குப்பைகள் ஏந்திய கப்பல்கள் வரும். அதைத் தொடர்ந்து வரும் சுகாதாரக் குழு அந்நாட்டு மக்களை சுகாதாரம் குறித்த பிரக்ஞை சிறிதுமில்லாதவர்கள் என்று அடையாளம் கண்டு அறிவிக்கும்.

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 2

எந்த பாகிஸ்தான் மக்களின் நலனுக்காக அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் தானமாக வழங்கி வருகிறதோ, எந்த பாகிஸ்தானின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கி வருகிறதோ, அதே பாகிஸ்தான் ஒருபுறம் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்களை வாங்கி முழுங்கிவிட்டு, யாரைப் பிடிப்பதற்காக அமெரிக்கா அந்த நிதியை வழங்கியதோ அதே பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தானம் கொடுத்த அமெரிக்காவின் அடி மடியிலேயே கை வைக்கிறது என்பதுதான் அமெரிக்க அரசின் பல்வேறு அமைப்புகள் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்த உண்மைகள்.

01. பாப்லோ கசல்ஸ் – இசையாளுமை

யார் மறந்தாலும் மறைத்தாலும் கலைப் படைப்புகள் தகுதியுடையவர்கள் கையில் என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்பது உண்மைதான் போலும். நாதமுனிகள் நாலாயிரப்பிரபந்தத்தைத் தொகுத்தது போல், இச்சிறுவன் தன் கையில் கிடைத்த இக்குறிப்புகளை ஒருங்கிணைக்கத் துவங்கினான். பதிமூன்று வயதில் இக்குறிப்புகளை கொண்டு தன் பயிற்சியைத் தொடங்கினான். அடுத்த பன்னிரண்டு வருடங்களுக்கு வேறெந்த எண்ணமும் குறிக்கிடாமல் செல்லோ பகுதிகளை மனப்பாடமாக இசைக்கக் கற்றுக்கொண்டான்.

செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு

அந்தண இளம்பெண், கைம்மை நோற்பவள், ஞானம் பெற்றாள், பாடல்கள் புனைந்தாள் எனில்- இருநூறோ, நானூறோ ஆண்டுகள் முந்திய சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? கடும் தண்டனையாக ஜாதிப் பிரஷ்டம்.. சற்று யோசித்துப் பாருங்கள், ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட கன்னி கூடக் கழிந்திராத இளம் விதவை எங்கு போவாள், எதை உண்பாள், காமக் கடூரக் கண்களிலிருந்து எவ்விதம் தப்புவாள், எங்ஙனம் உயிர் தரித்திருப்பாள்?

அனிமேஷன் திரைப்பயணம்: 03 – முப்பரிமாண உலகம்

புன்னகைக்கும், சோகத்துக்கும் உள்ள வாயசைவுகள் எப்படி என்று பலர் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார்கள். மனித உணர்ச்சிகள் முகத்தில் உருவாக்குவது கிராபிக்ஸ் துறையின் நீண்டகால குறிக்கோள். எதிர்காலத்தில் ‘தென்பாண்டி சீமையிலே?’ என்று கமலைப் போல ஒரே உணர்ச்சி வசமாக கணினி நடிக்கத்தான் போகிறது. ஒரே பிரச்னைதான். செய்து முடிப்பதற்குள் தாத்தா கமல் போல அனிமேட்டர்களுக்கும் வயசாகிவிடும்!

காலப்பயணம் – 2

எலெக்ட்ரான்களும் ஃபோட்டான்களும் காலப்பிரவாகத்தில் செய்யும் திசை மாற்றங்களை உங்கள் எதிர்வீட்டு பெண்ணும் செய்யமுடியுமா? செய்யமுடியும். உண்மையான கேள்வி – அதற்கான நிகழ்தகவு சாத்தியமாகுமா? உங்கள் கோப்பை தேநீர் தானாக சூடாகுமா? உங்கள் துணையின் கோபம் தானாகக் குளிரடையுமா? வெப்ப இயங்கியலின் இரண்டாம் விதியின் புள்ளியியல் ஓட்டைகளுக்குள்ளாக கால இயந்திரத்தில் நாம் பயணிக்கமுடியுமா?

மருந்து வாங்கப் போனேன், வியாதி வாங்கி வந்தேன்!

சூப்பர் கிருமிகள் வளர்வதற்கு நம் பொறுப்பில்லாத மருந்து சாப்பிடும் பழக்கங்கள் காரணம். ஒவ்வொரு ஆண்ட்டி பயாடிக்காக அளவுக்கு மீறி உபயோகித்து, அதற்கு அடங்காத கிருமிகளை உற்பத்தி செய்து தள்ளிவிட்டோம். நம்ம ஊரில்தான் மெடிக்கல் ஷாப்காரர்களே பாதி டாக்டர்கள் ஆச்சே ? அவர்களே இஷ்டத்துக்கு எடுத்துக் கொடுக்க, நாமும் பல்லி மிட்டாய் மாதிரி பிடிப் பிடியாக விழுங்கி வைக்கிறோம். ரொம்ப தப்பு !

காலம்

ஏன் இன்னும் வரவில்லை? அவனுக்கு ஆயாசமாக இருந்தது. இந்த வாட்டி வயிற்று வலியோடு ஜுரம் வந்துவிட்டது. குளிர் வேறு. பனியன், முழுக்கைச் சட்டை, லுங்கி, மேலே போர்வை. எல்லாவற்றையும் மீறி குளிரியது. கையைச் சட்டைக்குள் விட்டுக் கொள்ளலாம் என்றால் அசைக்கவே முடியவில்லை. நடு நெஞ்சில் என்னவோ உறுத்தியது, நீளமான பல்லி மாதிரி. அது ரொம்ப காலமாக நகராமல் அங்கேயே இருந்த மாதிரி தோன்றியது.

காமன்வெல்த்: கல்மாடி கட்டும் மண்மாடி

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஏற்பாட்டில் தாமதம், பெரும் அளவிலான ஊழல், குளறுபடிகள் என்று கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கும் சுரேஷ் கல்மாடியின் லீலைகளையும் விளையாட்டை வெறும் பொழுதுபோக்கு என்று மட்டும் இல்லாமல் வாழ்க்கை என்று எடுத்துக்கொண்டு உண்மையான அர்ப்பணிப்போடு உழைக்கும் சாந்தி போன்ற ஏழை விளையாட்டு வீரர்களின் நிலையையும் ஒருமுறை நினைத்துப்பாருங்கள். ரத்தக்கண்ணீர் வரும். இத்தனை செலவு செய்து தன் பெருமையை நிலைநாட்டிக்கொள்ளும் இந்திய அரசு, இந்த செலவில் ஒரு சிறு சதவீதத்தை நம் விளையாட்டு வீரர்களின் நலனுக்கு செலவிட்டால் கூடப்போதும். எவ்வளவோ சர்வதேசப் பெருமைகளை நாம் ஈட்டிக்கொள்ள முடியும். மிகப்பெரும் மனிதவளம் உள்ள இந்தியா, ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் என்றாவது முதல் பத்துக்குள் வர முடிந்ததா?

கீதம், சங்கீதம், தேசியகீதம்

சென்றவாரம் கொண்டாடப்பட்ட 64-ஆவது இந்திய சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப்படும் சிறப்புக் கட்டுரை:
“பெரிய ஆகிருதியைக்கொண்டதொரு மனிதருக்குப் பொருத்தமில்லாத மெல்லிய குரலில் பாடத் தொடங்கினார் தாகூர். அந்தப்பாடலின் முதல் பகுதியில் இந்தியாவின் மாநிலப் பகுதிகளைக் குறித்தும், மலைகளை, நதிகளைக் குறித்தும் ஒரு புவியியல் குறிப்பைத் தந்தார். அடுத்த பகுதியில் இந்தியாவின் பல்வேறு மதங்களைக் குறித்துப் பாடினார். அப்பாடலின் முதல் பகுதியின் கோஷம் எங்கள் காதுகளைத் திறந்தது. இரண்டாம் பகுதியின் கோஷம் எங்கள் தொண்டைகளைச் சரிசெய்ய வைத்தது. அவரை மீண்டும் மீண்டும் அப்பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டோம். இறுதியில் நாங்களும் பெருமிதத்தோடு ’ஜயஹே, ஜயஹே!’ என்று வாய்திறந்து பாடினோம்”.

புரை

பள்ளி வாயிற்காவலர் வைத்திருக்கும் வெளியே செல்லும் மாணவர்களைக் குறித்துவைத்துக்கொள்ளும் கோப்பிலும் அவள் பெயர் இல்லை. கவலையாக இருக்கிறது என்றார். உடனே கவனிக்கிறேன் என்று கூறினாலும் இப்போது எனக்கு ஒரு சிறு பதற்றம் வந்துவிட்டது.