சூரிய நமஸ்காரம்

ரமணரின் ‘நான் யார்’ என்ற கேள்வி ஒரு வாரமாகவே சடகோபனைக் குடைந்து கொண்டிருந்தது. ஓஷோ வேறு மேத்ஸ், ம்யூசிக், மெடிடேஷன் என்கிறார். முதலிரண்டோடும் சடகோபனுக்கு சுமுக உறவு இருந்ததே இல்லை. மூன்றாவது என்ன என்று புரியவேயில்லை. ‘நான் என்றால் சடகோபன்.’ இதில் வேறு என்ன இருக்கிறது என்று அவருக்குத் தோன்றியது. ஒரு வேளை ரமணர் ‘தான் யார்’ என்று நம்மிடம் கேட்கிறாரோ என்ற சந்தேகம் வேறு வந்தது.

கோட்டி

ஒருமுறை வந்தால் அதற்கு பிறகு அவள் எப்போது வருவாள் என்று சொல்லமுடியாது. அடிக்கடி வருவதில்லையென்பதால், சிலசமயம் ‘எங்கெ அந்த மூதிய ஆளயே காணோம்?’ என்று ஆச்சியே கேட்கும் அளவுக்கு இடைவெளி விட்டுதான் வருவாள். இடைவெளி ஒருமுறை நீண்டு, பிறகு அவள் வரவேயில்லை. ரயில் தண்டவாளத்தையொட்டி பீடி குடித்தபடியே அவள் நடந்து போனதை பார்த்ததாக குருக்களையா தாத்தா சொன்னதுதான் அந்த கோட்டிக்காரி பற்றி நாங்கள் கேட்ட கடைசி தகவல்.

நன்றி அம்மணி

பையனின் முகத்தில் இருந்து வியர்வை கொப்பளித்தது. அவன் நெளிந்தான். திருமதி ஜோன்ஸ் நின்றாள். அவனை முன்பக்கமாக சுண்டியிழுத்தாள். அவன் கழுத்தில் இறுகப் பிடிபோட்டாள். அப்படியே தெருவில் நெட்டித்தள்ளிப் போனாள். தன்வீடு வந்ததும், அவனை அப்படியே உள்ளிழுத்தாள்.

ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாட்டை' முன் வைத்து…

1992 இல் முதற்பதிப்பாக வெளிவந்து அரிதாகவே கைக்குக் கிட்டுவதாகவும், அப்படிக் கிட்டியவர்களிடமும் பல சர்ச்சைகளை எழுப்பக் கூடியதாகவும் இருந்த இப்புத்தகம் அண்மையில் கிழக்குப் பதிப்பக வெளியீடாக மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தீவிர இலக்கியப் பார்வையற்ற மரபு வழி வாசகர்களுக்கு இவ்வாறான கருத்துக்கள் அதிர்ச்சி ஊட்டுவதாகவும், இத்தனை நாளாக அவர்கள் பேணி வந்த பிரமைகளைக் கலைத்துப் போடுவதாகவும் கூட இருக்கலாம்.

இடம்பெயர்க்கப்படும் மாவோவின் பிள்ளைகள்

சீனாவின் அசுர வளர்ச்சி நம் பிரபல ஊடகங்களில் திரும்பத் திரும்ப சிலாகிப்பாக எழுதப்படுகிறது.  வின்னை முட்டும் கட்டடங்களும், அதிவிரைவுச் சாலைகளும் சீனாவின் புதிய முகங்களாகக் காட்டப்படுகின்றன. ஆனால் இந்த அசுர வளர்ச்சிக்கு சீனாவின் நடுத்தர வர்க்க மக்களும், ஏழை மக்களும் தரும் விலை மிக மிக அதிகம். பல “இடம்பெயர்க்கப்படும் மாவோவின் பிள்ளைகள்”

தூணிலும் போஸான், துரும்பிலும் போஸான்!

இந்த ஹிக்ஸ் போஸான் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளுக்குப் பல வருடமாகத் தண்ணீர் காட்டி வரும் சின்னஞ் சிறு பொருள். அதைக் கண்டுபிடிக்கத்தான் 37 நாடுகளில் விஞ்ஞானிகள் பைப் புகைத்துக்கொண்டு பொறுமையில்லாமல் காத்திருக்கிறார்கள். இதில் அமெரிக்காக்காரர்களும் ஐரோப்பியர்களுக்கும் யார் முந்தி என்று போட்டா போட்டி வேறு!

காலப்பயணம் – 1

ஐன்ஸ்டீன் வெற்றிகரமாக நிகழ்த்தியதொரு ஆதார இயற்பியல் கண்டுபிடிப்பை உபயோகித்து, அமெரிக்காவின் பிலடெல்பியாவில் 1943-இல் ஒரு கப்பலை காண முடியாமல் ஆக்கினார்களாம். இதனால் கப்பல் சிப்பந்திகள் சிலர் காலப்பயணத்துக்கு ஆட்படுத்தப்பட்டார்கள் என்றார்கள் என்றும், இதனை வெளியுலகுக்கு சொன்ன மனிதர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சொல்லப்பட்டது.

மகரந்தம்

தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா மூலமாக ‘தற்செயலாக’ வந்து இறங்கியிருக்கும் மாவுப்பூச்சி 2,00,000 ஹெக்டேர் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியை அழித்துவிடக் கூடுமென கணிக்கப்படுகிறது. ஒரு வழி இருக்கிறது. அமெரிக்கா வியட்நாம் காடுகளில் செய்த இராசயனப் போரை போல ப்ரோஃபனோபஸ்,அசாடிராக்டின் கெமிக்கல்களைத் தெளித்து புஷ் பாணியில் மாவுப்பூச்சிக்கு எதிரான போரில் இறங்கிவிடலாம். பெருச்சாளிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக மரவள்ளிக் கிழங்கு மாவில் விஷம் ஏறிவிடும்.

செல்லோ இசைக்கலைஞர் யோ-யோ மா

சமீபத்திய சில பத்தாண்டுகளில் சீன மக்கள் அமெரிக்க செவ்வியலில் பெரும் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். ஐரோப்பிய, அமெரிக்க ஆர்வலர்களைக் காட்டிலும் சீனர்கள் தேர்ந்த ஆர்வலர்களாகவும், கலைஞர்களாகவும் முன்னேறி வருகிறார்கள். இது சீனாவில் மட்டும் நிகழும் சூழல் இல்லை. அமெரிக்கா, ஐரோப்பாவில் வசிக்கும் சீனர்களும் மேற்கத்திய செவ்வியலில் பெரும் ஆர்வம் “செல்லோ இசைக்கலைஞர் யோ-யோ மா”

வாசகர் எதிர்வினை

பல புத்தகங்கள், மனிதர்கள் சொல்லாத தகவல்களையும் ஒரு மரம் சொல்லிவிடும் என்பார் என் தாத்தா. என் இளவயது நினைவுகள் கிராமத்து மரங்களையும், செடிகளையுமே சுற்றிவருபவை. பவளமல்லியும், சங்குப்பூவும், தும்பைப்பூவும், அந்தி மந்தாரையும் குறித்து நினைக்கும்போது ஏதோ கனவு காண்பது போல்தான் இருக்கிறது. என் நினைவுகளை மீட்டுத்தந்த நாஞ்சில்நாடனுக்கும், சொல்வனத்துக்கும் நன்றி.

தமிழரும், தாவரமும்

‘தமிழரும், தாவரமும்’ என்றொரு புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. கண்ணில் பட்ட இடம் பொது நூலகம், தற்செயலாக. நூலகர் என் வாசகர், உறவினர், நண்பர். எனவே அவர் பெயரில் பதிவு செய்து எடுத்துக்கொண்டு வந்தேன். அந்தப் படியின் முதல் வாசகன் நான். பெரும்பாலும் இதுபோன்ற நூல்கள், கிராம நூலகங்களில் ஒரு வாசகனால் கூட எடுத்துப் புரட்டிப் பார்க்கப்படும் யோகமற்ற சோகத்தில் வெறிதே உறங்கிக் கிடக்கின்றன. இன்னொரு வாசகரால் படிக்கப்படாமலே போய்விடும் சாத்தியமே அதிகம்.

அனிமேஷன் திரைப்பயணம்: ஒரு பருந்துப்பார்வை

திரைப்படங்களில் அனிமேஷன் தொழில்நுட்பத்தைப் பற்றிய விரிவான அறிமுகம் தரும் கட்டுரைத் தொடரை எழுதுகிறார் ரவி நடராஜன்: மைக்கேல் ஜாக்ஸன் ’Black or White’ என்ற 90-களின் இசை வீடியோவில் மார்ஃபிங் தொழில்நுட்பத்தை மிகவும் பிரபலப்படுத்தினார். தமிழ் சினிமாக்களில் இதை விடாமல் பாடல் காட்சிகளில் காட்டி மைக்கேல் ஜாக்ஸனை சிரத்தையாகப் பின்பற்றியுள்ளார்கள். ‘இந்தியன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘மாயா மச்சீந்திரா’ என்ற மிகவும் இலக்கியத்தரமுள்ள(?) பாடலில் மைக்கேல் அப்பட்டமாய்த் தெரிகிறார்!

யாமறியும் மொழிகள்

அரேபிய மொழியில் சோதனையை செய்யும்போது ஏறத்தாழ எல்லா அரேபியர்களும் நல்லவர்கள், பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் கெட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதே சோதனை ஹீப்ரு மொழியில் நடத்தப்படும்போது அரேபியர்கள்தான் நல்லவர்கள், இஸ்ரேலியர்கள் கெட்டவர்கள் என்ற நிலையை அவ்வளவு தீவிரமாக எடுக்கவில்லையாம். நாம் என்ன மொழி பேசுகிறோம் என்பது நம் விருப்பு வெறுப்புகளையும் மாற்றுவதாக இருக்கிறது!

சிட்டியின் நூற்றாண்டு விழா – அன்பர் வீரராகவனின் முயற்சி

அங்கு வந்திருந்தவர்கள், எல்லோருமே சிட்டியைக் குறித்தும் வீரராகவனனைக் குறித்தும் சிறப்பாகப் பேசினர். திரு சீனிவாசராகவன், வீரராகவன் ஆரம்பத்தில், பொருளாதார ரீதியாக மிக்க சிரமப்பட்டிருந்தாலும் மனம் தளராது, பழைய பத்திரிககைளை விற்பனை செய்து கொண்டு, சென்னையில் வாழ்ந்த விதத்தையும் அப்போதும் அவர் மனம் தளராது மனைவியுடன் கடுமையாக உழைத்து முன்னேறியதையும் விவரித்தார்.

‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ – நேர்காணல் – இறுதிப்பகுதி

தஞ்சாவூரிலும், பாண்டிச்சேரியிலும் உள்ள எழுத்தாளர்கள், பேராசிரியப் பெருமக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டம் கூட்டி, சாமிநாதன், வல்லிக்கண்ணன் எழுத்து அச்சடிக்கப்பட்டுள்ள இந்தத் பக்கங்கள் எல்லாம் மலம் துடைக்கத்தான் லாயக்கு என்று சொல்லி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தை எடுத்து அவ்வாறே செய்து, இந்தியா டுடே அலுவலகத்திற்கு பார்சலில் அனுப்பி வைத்தார்கள். இதில் பிரபல சில பேராசிரியர்களும் அடக்கம். அதில் முக்கியமானவர் அந்தோணி மார்க்ஸ் என்னும் அ.மார்க்ஸ்.

ராகம் தானம் பல்லவி – பாகம் மூன்று

இப்படியாப்பட்ட கர்நாடக சங்கீத கலைஞர்கள் சாதாரணமாய் அப்படி ஆட்டோவில் வந்திறங்கி அலட்டிக்கொள்ளாமல் பாடிவிட்டு கொடுப்பதை வாங்கிகொண்டு போவார்கள். உழைக்கத்தெரிந்த பிழைக்கத் தெரியாதவர்கள். உழைக்கசோம்பும் பிழைக்கத்தெரிந்த பல அல்பசங்கதிகள் அரைமணி (ஏதோ ஒரு) மேடையேற ஆங்கிலத்தில் பேரம்பேசி ஆயிரக்கணக்கில் முன்பணமாய் கேட்கிறது. கொடுக்கிறோம். பாரம்பர்யம்மிக்க ப்ரத்யேகமான கலையின் உண்மையான உன்னதமும், அதை நாம் இன்று போஷிக்கும் விதமும் நிதர்சனமாகுகையில் கண்களில் ஜலமும் மனதில் ஆங்காரமுமே மிச்சம்.

பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமா?

பாகிஸ்தான் ராணுவத்தின் இலக்கு என்ன? இலக்கற்ற இலக்கு அது. இந்தியாமீது வன்மம்; அவ்வளவுதான். ஐ.எஸ்.ஐயின் இலக்கு? இந்தியா பற்றி எரியவேண்டும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களின் நோக்கம் என்ன? இந்தியா உலகில் எந்தவிதத்திலும் முன்னேறிவிடக் கூடாது. மும்பை 26/11 போல மேலும் பல அநியாயங்களை ஜிஹாத் என்ற பெயரில் செய்யவேண்டும். இப்படி எண்ணற்ற இலக்குகள் இருக்கும்போது குரேஷி என்ன செய்வார்? எந்தப் பேச்சுவார்த்தை நடந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாதவகையில் இழுத்தடிப்பது மட்டும்தான் அவர்களது நோக்கமாக இருக்கும்.

ரகு ராய் – பேட்டி

உண்மையில் இது ஒரு நாடே அல்ல. திரும்பிப்பார்த்தால் நீதி வழங்க 25 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இது ஒரு கௌரவமோ அல்லது சுயமரியாதையோ அற்ற நாடு. ஆண்டர்சனை முதலில் தப்ப விட்டுவிட்டு அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் நம்மை சமமாக மதிக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? சரிசமமாக நடத்தத் தகுதியற்றவர் நீங்கள். பிரிட்டிஷ் பெட்ரோலியக் கிணறு கசிவில் இறக்கும் பறவைக்கு இருக்கும் மதிப்பு கூட இந்த விபத்தில் இறந்த மக்களுக்கு இல்லை.