“இன்றைய தமிழ் எழுத்தில் சுஜாதா ஒரு ரஜினிகாந்த். ரஜினி, தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக என்ன செய்கிறாரோ அதையே சுஜாதா தனது வாசகர்களுக்காகச் செய்கிறார்” என்று நான் ஒருமுறை எழுதியிருந்தேன். ‘சுஜாதா – தமிழ் இலக்கியத்தின் சூப்பர் ஸ்டார்’ என்று யாரோ அதை கொட்டை எழுத்தில் எடுத்து பத்திரிகையில் போட்டு விட்டார்கள். இதனால் சுஜாதா மிகவும் காயப்பட்டுவிட்டார் என்பது என் கவனத்திற்கு வந்தது.
Category: இதழ்-29
அடைக்கலம்
சாலைகளற்ற வழியில்
வருங்காலம் தேடினேன்
உயரத் தொங்கும் ஒட்டடை
நூல் பிடித்தேறி உன்னிடம்
அடைக்கலம் புகுந்தேன்
ராகம் தானம் பல்லவி – பாகம் இரண்டு
முன்னர் குறிப்பிட்டபடி வேதவல்லி மத்தியமகால தானத்தில் நிரம்ப அப்பியாசம் பெற்று தேர்ந்தவர், சிறந்தவர். கேட்கையில் நம்மை அறியாமல் கண்ணைமூடியபடி எழுந்து ஆடவைத்துவிடுவார். ராகங்களுக்கு ஏற்றவாறு தானத்தின் வெளிப்பாடு சற்று மாறும். நாட்டை ராகத்தை உடைத்து உடைத்து ஸ்வரத்துண்டுகளாய் தானம் பாடுவது நன்று. எளிது. ஆனால் வராளியை இழுத்து இழுத்துதான் பாடவேண்டும்.
இந்திய இசையில் முதல் சிம்பொனி?
சிறுகதை ஆசிரியன் நாவல் எழுத முயற்சிக்கும்போது சந்திக்கும் தடைகளுடன் இதை ஒப்பிடலாம். மற்ற இசை வடிவங்களை விட சிம்பொனிக்கு விரிவான மற்றும் ஆழமான படைப்புத் திறமை தேவை. இசைக்கோவைகள் எழுதுவதால் மட்டும் சிம்பொனி படைத்துவிட முடியாது. பல கருவிகளைப் பற்றிய அறிவு, அவற்றில் உண்டாகும் ஒலி அமைப்புகள், வாத்தியக்கருவிகள் ஒன்றாக ஒலிக்கும்போது உண்டாகும் ஒத்திசைவு, அரங்கின் ஒலிக்கட்டுப்பாடு (Hall acoustics) என பல்துறை பற்றிய விரிவான அறிவு அவசியமாகிறது. இது தொழில்நுட்பம் சார்ந்த சவால்.
சீர்குலைந்த தேசங்கள்
உலக நாடுகளின் சில அரசாங்கங்கள் மிகப்பெரும் தோல்வியை சந்தித்துள்ளன. தன் எல்லை மீதான அதிகாரமின்மை, மக்களின் வாழ்நிலை சீர்குலைவு, பொருளாதார வீழ்ச்சி, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல காரணிகளை முன்வைத்து ”Foreign Policy” எனும் இதழ் இத்தகைய தேசங்களை பட்டியலிட்டுள்ளது. பட்டியலில் உள்ள தேசங்களில் பெரும்பாலானவை ஆப்பிரிக்கக் கண்டத்தைச் “சீர்குலைந்த தேசங்கள்”
விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை
சடங்குக்காய் திருமதி வித்யா சங்கரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையை அமைக்காமல், அவர் மறைந்த இவ் வேளையில் அவர் எழுதியுள்ள அற்புத புத்தகங்கள் இரண்டினைப் பற்றி பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யக் கூடிய சிறந்த அஞ்சலி என்றெண்ணுகிறேன்.
கண்கள்
கிட்டத்தட்ட 25 வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டதால் ஊடகங்கள் இந்த விஷவாயுக்கசிவை மீண்டும் நினைவு கூர்ந்து பல செய்திப்படங்களையும், ‘இப்போது என்ன செய்ய வேண்டும்?’ என்ற மானுட அக்கறையின் மகத்துவங்களையும் கொட்டிக் கொண்டிருந்தன. அவற்றிலெல்லாம் தவறாமல் இடம்பெற்றிருந்ததொரு புகைப்படம், கழுத்துவரை மூடப்பட்டு, முகம் மட்டும் தெரியும் ஒரு சிறு பெண் குழந்தையின் சடலம்.
கார்ட்டூன் – இதழ் 29
உலகளாவிய ஆங்கிலம்
டேவிட் கிரிஸ்டல் பிரபல மொழியியலாளர். மொழியியல் குறித்த இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. “How Language Works” எனும் இவரது நூல், மொழி குறித்த அடிப்படைகளை விரிவாகப் பேசுகிறது. ஆங்கிலத்தின் உலகளாவிய பரவல் குறித்து கீழே தரப்பட்டுள்ள வீடியோவில் டேவிட் கிரிஸ்டல் பேசுகிறார். கடந்த 400 வருடங்களில் ஆங்கிலம் “உலகளாவிய ஆங்கிலம்”
வித்யா சங்கர் – ஒரு பேட்டி
நான் வீணை கற்றுக் கொள்ள துவங்கியபோது என் வயது எட்டு. ஒரு சுவாரஸியமான சம்பவம் இருக்கிறது. ஒரு முறை, ”எளியேனே” எனும் ஆனய்யாவின் கீர்த்தனையை சபேச ஐயர் பாடப்பாட, என் தந்தை ஸ்வரப்படுத்த முயன்றார். சரணத்தில், ஒரு குறிப்பிட்ட வரியை ஸ்வரப்படுத்துவதில் என் அப்பா சற்று திணறினார். நான் என் உள்ளுணர்வு சொன்னபடி உடனடியாக ஸ்வரப்படுத்தினேன். உடனே சபேச ஐயர் என் தந்தையிடம் நான் பாடிய விதமே ஸ்வரப்படுத்தும்படி சொன்னார்.
ஆய்புவன்
அத ஏம்ணே கேக்கிய! குஞ்சண்ணன் கூடல்லாம் ஒரு எடத்துக்கு போலாமா? அங்கெ சாமி சன்னதில உள்ள மாமிங்கள்லாம் டி.வி. பாக்க வந்திருந்தாங்க பாத்துக்கிடுங்க. பந்த பௌலருங்க அங்கெ வச்சு தேய்க்கவும் குஞ்சண்ணன் என்ட்ட ‘எல, எங்கெ தேய்க்கனுவொ பாரு’ன்னு சொல்லிட்டு சத்தம் போட்டு ஒரே சிரிப்பு. நந்தி பட்டர்மாமா காதுல விளுந்துட்டு. எந்திருச்சு வெளியெ போங்கலன்னு ஏசி போட்டாரு. ரொம்ப அசிங்கமா போச்சுண்ணெ.
வாசகர் கடிதம்
இளையராஜா சமீபத்தில் ஒரு மேடையில் சொன்னது நினைவுக்கு வருகிறது – ‘இயக்குனர்களுக்கு உள்ள ஒரே ப்ரச்னை – ஹீரோ போல இமேஜ் பிரச்னை. ஒரு ஃபார்முலா வேலை செய்து விட்டால், அதையே மாற்றி போட்டு, மாற்றி போட்டு கதை சொல்வதையே மறந்து விடுகிறார்கள்”.
மகரந்தம்
ஹோமரின் காப்பியத்திலும் சரி, பல பண்டை இலக்கிய நூல்களிலும் சரி, வண்ணங்கள் பற்றிய விவரணை மிகக் குறைவாக இருப்பதால், மனிதக் கண்ணின் திறன் கடந்த 3000 – 4000 வருடங்களில்தான் வளர்ந்திருக்கிறது என்றும், நவீன காலத்தில்தான் வண்ணங்கள் நிறைய உருவாகி இருக்கின்றன என்றும் நிறைய முட்டாள்தனமான முடிவுகளுக்கெல்லாம் வந்திருக்கிறார்கள்.
மாட்ரிக்ஸ்: இயந்திரம் படைத்த மாயையின் பொன்னுலகு
மாட்ரிக்ஸ் திரையமைப்பில் மற்றொரு பண்பாட்டின் பெண் தெய்வத்தை இயக்குநர் நுட்பமாக உள் நுழைக்கிறார். மேலே சொன்ன ஞானமரபுக் கதையின் வேர்களை நாம் கேனோபநிஷத்தில் காணலாம். அதில் அகந்தை கொள்ளும் தேவர்களுக்கு ஞானம் அளிப்பவள்: உமா. மாட்ரிக்ஸ் கதையில் ஞானம் அளிப்பவளாகச் சித்தரிக்கப்படுபவள் – சதி என்கிற சிறிய இந்தியப் பெண். இந்தியத் தொன்மத்தில் சதியின் மறுபிறவியே ஹிமவானின் சிறிய மகளான உமா.
ஜெயமோகனின் கதைக்களனும், நகுலனின் நாவல் நடையும்
அக்கால சிறுபத்திரிகைகளில் நிறைய உருப்படியான விவாதங்களும், எண்ணப் பரிமாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. நிறைய அக்கப்போர்களும் இருந்திருக்கின்றன. மறுக்கவில்லை. ஆனால் அதையும் மீறி அங்கே பல ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. இன்றைய சிறுபத்திரிகைகளைப் பார்க்கும்போது எங்கே போயின அந்தக் காலங்கள் என்றே ஏங்கத் தோன்றுகிறது. ஜெயமோகனுடனான கலந்துரையாடலும், இரா.முருகனின் எதிர்வினையும் ஒரு சிறு நம்பிக்கையை மெல்ல எழுப்பியிருக்கின்றன.
பனுவல் போற்றுதும்: சங்க இலக்கியத் தாவரங்கள்
பெருஞ்சொல் அகராதி தொகுதி இரண்டும் நான்கும், சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதிகள் ஒன்றும், இரண்டும், நான்கும் வாங்கினேன். விற்பனை செய்யும் ஊழியர் பெருந்தன்மையுடன் இருபத்தைந்து விழுக்காடு கழிவு செய்து பில் கொடுத்தார். மேலதிகம் தகவல் ஒன்றும் சொன்னார். பேரறிஞர், மாமேதை, இன்னாட்டு இங்கர்சால், தென்னாட்டு பெர்னாட் ஷா என்றெல்லாம் அறியப்பட்ட அண்ணாதுரை பிறந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஐம்பது சதமானம் தள்ளுபடி என்று. வேறு எந்தத் தமிழ்க் கொம்பன் பிறந்த மாதமானாலும் இருபத்தைந்து விழுக்காடுதான். வரும் செப்டம்பரில் வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.