சுகாவின் நட்சத்திரம் பார்த்தல் கிளறிய சில நட்சத்திர நினைவுகள்

தினமும் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் போய் தபால்களைக் கொடுத்து விட்டு அடுத்த ப்ளைட்டிலோ ரயிலிலோ கிளம்பி மதுரைக்கு வருவது அவனது வேலை. இன்னிக்கு யார் கூட வந்தா தெரியுமா என்பான், நாங்களும் அந்நாளையப் பிரபலங்களை அடுக்கி முடித்தவுடன் ”இன்னிக்கு என் பக்கத்து சீட்டில பாரதி ராஜா பாத்துக்க” என்பான்.

மான்குட்டியைக் கைவிட்ட பின்

மான்குட்டியைக் கைவிட்ட பின்
கனவுகளின் பிறழ்வுகளுக்குள்
மான்குட்டிகளை ஓடவிட்டபடி
பெருநகரத்துத் தெருவழியே
மேய்ப்பாளன் நடந்தான்

பாரம்பரியங்களும், பகுத்தறிவும்

ஒரு ஆலயத்திற்குள் இன்று தடுமாறும் தட்ப வெப்பத்திற்குரிய அருமருந்தென்று உணரப்பட்ட நந்தவனங்கள், திருவருட்சோலை போன்ற வடிவங்களை கவனிக்கலாம். பழங்காலத்து ஆலயங்கள் மிகப்பெரியவை. கல்விக்கூட வளாகத்தைப் போல் வடிவமைக்கப்பட்டு வைதீக ஆகமங்களும், தேவாரமும், திவ்யபிரபந்தங்களும் கற்பிக்கப்பட்டன. இது ஒரு பகுதி. மண்ணில் வாழும் சகல ஜீவராசிகளம், ஊர்வன, பறப்பன, நடப்பன என்று சிலைகளாகவோ, சித்திரங்களாகவோ ஆலயங்களில் காணலாம். உதாரணமாகப் பசு காமதேனுவானது. காளை நந்தியானது.

விஞ்ஞானிகளும், நகைச்சுவையும்

விஞ்ஞானிகள் பொதுவாக மிகவும் சீரியஸானவர்கள் என்று நாம் நினைக்கிறோம். நம் புத்தகங்களில் கருப்பு வெள்ளையில் அவர்களை சோகமாக தாடியுடன் படம் போட்டு மேலும் இந்த எண்ணத்தை வளர்க்க நம் பாட நூல் வெளியீட்டாளர்கள் தூபம் போடுகிறார்கள். பாடப்புத்தகத்தில் ஏதாவது ஒரு விஞ்ஞானி தன் குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடுவதைப் போல எங்காவது யாரவது பார்த்து ‘சொல்வனத்திற்கு’ அனுப்பினால் ஹமாம் க்ருஹப்ரவேசம் வீடு கொடுப்பதாகக் கூட அறிவிக்கலாம். பல விஞ்ஞானிகள் மிகவும் தேர்ந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்.

மூடிய கதவுகள்

இப்போது குழந்தைகள் தாமே ரயில் விட ஆரம்பித்தன. கோதைதான் எல்லோருக்கும் முதலில் வழக்கம்போல் நின்று கொண்டிருந்தாள். அவள் தெருக் கோடி வரை போய் விட்டு திரும்புகையில் அவள் முன் தாடியும், மீசையும் பரட்டை முடியும் அழுக்குப் பஞ்ச கச்சமுமாக ஒரு கிழவர் தோன்றினார். குழந்தை நிமிர்ந்து பார்த்தது. அவர் அதை வாரி அணைத்துத் தூக்கிக் கொண்டார். கண்களில் நீர் பெருக அதை இறுக்க அணைத்துக் கொண்டார்.

ரிச்சர்ட் டாக்கின்ஸ் : பரிணாமவியலும் மதமும்

ரிச்சர்ட் டாக்கின்ஸ், பிரபல அறிவியலாளர். மேற்குலகில் பரவிவரும் மத அடிப்படைவாதம், பூமியில் உயிரின் தோற்றத்தை விஞ்ஞானபூர்வமாக விளக்க முயற்சிக்கும் பரிணாமவியலின் குரல்வளையை நெருக்குவதாக இருக்கிறது. இந்த ஆபத்தான சூழலை மாற்ற வேண்டி பரிணாமவியல் குறித்த புரிதல் பரவும்படி பல புத்தகங்களை எழுதியிருக்கிறார் டாக்கின்ஸ். மேற்கில் மதம் கற்பித்த மூடத்தனங்களை “ரிச்சர்ட் டாக்கின்ஸ் : பரிணாமவியலும் மதமும்”

கலர்க் கனவுகள்

அனுமாருக்கு பார்டர் எல்லாம் போட்டு கெட்டி அட்டையில் ஒட்டி அதை பெருமாள் அறையில் மாட்டினேன். பாட்டி ஏதோ வேண்டிக்கொண்டு காலெண்டர் அனுமாருக்கு வடையை மாலைகோத்து சாத்தினாள். வடையை நாங்கள் சாப்பிட்டோம். அதில் இருந்த எண்ணையை அனுமார் சாப்பிட்டார். வடையில் இருந்த எண்ணெய் படத்தில் இறங்கியது. ஒரு சமயம் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் கொடுத்த செந்தூரத்தை அந்த காலெண்டர் அனுமார் மீது தடவ புதிதாக அந்த அனுமாருக்கு ஒரு தேஜஸ் கிடைத்து, ஆஞ்சநேயர் ஆகிவிட்டார். பல வருடங்களாக இருந்த அந்தப் படம் வெள்ளை அடிக்கும் போது எங்கோ போய்விட்டது. ரொம்ப நாள் மலையைச் சுமந்தவருக்கும் ரெஸ்ட் வேண்டாமா?

‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ – நேர்காணல் – பகுதி 2

என்னை அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஆள், அமெரிக்காவுக்கு அடிக்கடிப் போய் வருகிறேன் என்றெல்லாம் 1994-95களிலிருந்தே கூறி வருகின்றனர். கோவை ஞானி மட்டுமே, ”ஏன் இப்படியெல்லாம் ஆதாரமில்லாமல் எழுதுகிறீர்கள்?” என்று கேட்டாராம். அதற்கு இவர்கள், ‘அவர் அமெரிக்கக் கைக்கூலியாக இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படி எழுதியதால் இனிமேல் அமெரிக்காவிலிருந்து பணம் வருவதாக இருந்தால் அது வராமல் தடுத்து விடும் இல்லையா?’ என்றார்களாம்.

எண்ணெய்ச் சிதறல் பற்றி : சில எண்ணச் சிதறல்கள்

முதலில் “இது ரொம்பச் சின்ன விபத்து. கவலையே வேண்டாம்” என்று சாதித்தார்கள். பிறகு கிணற்றிலிருந்து பத்து மைல் நீளம், மூன்று மைல் அகலத்தில் ராட்சச எண்ணை ஊற்று பீச்சி அடிக்க ஆரம்பித்தது. சேற்றையும் சிமெண்ட்டையும் கொட்டித் துளையை அடைக்கப் பார்த்தார்கள். பெரிய டப்பாவைக் கவிழ்த்து மூட முயற்சித்தார்கள். எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டு இரண்டு மாதமாக எண்ணெய் உற்சாகமாகக் கொப்பளிக்கிறது. இனி யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. “அமெரிக்க அரசாங்கம் அங்கே ஒரு அணு குண்டைப் போட்டால் கடலடிப் பாறைகள் உருகிக் கிணறு அடைத்துக் கொள்ளும்” என்று கூட ஒரு ஐடியா வந்தது. அடைத்துக் கொள்வதற்கு பதிலாக ஓட்டை இன்னும் பெரிசாகிவிட்டால்?

வாசகர் மறுமொழி

பத்து நாள் பயணம் போய் எழுதுகிற டூரிஸ்ட் எழுத்து இல்லை நான் சொல்வது. பால் தொரொ செய்வது அதைத்தான். அவருடைய கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் தில்லி – சென்னை பயணக் கட்டுரையைப் படித்தால் புரியும். தி கிரேட் ரயில்வே பஜார் புத்தகத்தில் உள்ளது. பார்த்ததை நாடகீயத் தன்மையோடு சொல்ல அவர் கற்பனை உரையாடல்களையும் கலப்பார் என்று கேள்விப்பட்டேன். இன்னொரு பயண எழுத்தாளரும் நகைச்சுவையாளரும், அறிவியலாருமான பில் ப்ரைஸன் சொன்னதாக நினைவு.

எழுத்தாளர்கள் என்னும் மனிதர்கள் – ஜோசே சாரமாகோவை முன்வைத்து

தன்னுடைய ‘பார்வையின்மை’ நாவலை, ‘அடக்குமுறையைப் பற்றிய என் விமர்சனம் இந்த நாவல். பல பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைச் சுரண்டி மேலும், மேலும் அவர்களை ஏழ்மையாக்குவதைக் குறித்த என் மன வருத்தத்தை என் நாவல் வழியே முன்வைக்கிறேன்” என்கிறார் சாரமாகோ. அப்படிப்பட்டவர் இரண்டு சர்வாதிகாரங்கள் மறைந்து ஒரு ஜனநாயகம் மலர்ந்த தினத்தை ‘இருண்ட நாளாக’ ஏன் பார்க்கிறார்? தான் அதிகாரத்தில் அமர்ந்த ஒரே ஒரு முறை (பத்திரிகையாசிரியர்), கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை ஏன் நெறித்தார்? தான் நம்பும் கொள்கைகளுக்காக எந்தவிதமான சர்வாதிகாரத்தையும் சகித்துக் கொள்ள ஏன் அவர் தயாராக இருந்தார்?

மனிதனாக விரும்பிய இயந்திரர்கள்

அஸீமோவ்வின் “Robots as pathos” என்பதன் ஒரு உச்சமாகவே இந்த திரைப்படத்தை நாம் கருதலாம். இத்திரைப்படத்தின் ஊடாக ஒரு சிறிய பரிணாம வளர்ச்சியைக் காணலாம். திரைப்படத்தின் தொடக்கத்திலேயேமொரு முக்கிய கேள்வி எழுப்பப்படுகிறது. உணர்ச்சிகளை உள்ளடக்கிய ரோபாட்களை -செயற்கை நுண்ணறிவை – உருவாக்கினால் அத்தகைய உருவாக்க்கங்களுடன் மானுடத்தின் கடப்பாடு என்னவாக இருக்கும்?

விண்வெளி ஒளிப்படக் கலைஞர்

ஜப்பானிய விண்வெளி வல்லுநர் சோய்ச்சி நோகுச்சி ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஒரு விண்கலத்தில் பொறியாளராகப் பணியாற்றி மீண்டும் பூமிக்குத் திரும்பியிருக்கிறார். சிறந்த புகைப்படக்கலைஞராகவும் இருந்த இவர் விண்வெளியிலிருந்து பல அரிய புகைப்படங்களை எடுத்து நேரடியாக விண்வெளியிலிருந்தே இணையம் வழியாக டிவிட்டரில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். இவர் எடுத்த சில அற்புதமான “விண்வெளி ஒளிப்படக் கலைஞர்”

மகரந்தம்

அண்டார்க்டிகா என்ற பகுதியைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள். அங்கு நீர் என்று தனியாகக் கிடையாது, ஏனெனில் உலகின் மிகக் குளிரான சில பகுதிகளில் இது ஒன்று. அங்கு எங்கும் கிட்டுவது பனிக்கட்டி. தரைப்பரப்பு முழுதும் பல மைல் உயர பனிக்கட்டிகளே அடுக்கப்பட்டிருக்கும். அந்தப் பகுதியில் மனிதர் என்ன விளைவித்து எப்படிச் சாப்பிடுகிறார்?

எண்ணெய்ச் சிதறல் – என்ன நடக்கிறது?

விபத்து மூலம் வெளியேறி கடலில் கலந்துவிடும் எண்ணெயினால் ஏற்படும் முக்கிய பாதிப்புகளில் ஒன்று: முக்கியமான மீன் வளங்களும், நீர்வாழ் உயிரினங்களும் பெருமளவில் பாதிக்கப்படுதல். குறிப்பாகச் சொல்வதென்றால், மிக நுண்ணிய படிநிலைகளை கொண்ட மீனின் வளர்ச்சிக் காலகட்டங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன. மீனின் முட்டைகளும், லார்வாக்களும் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றன.

ராகம் தானம் பல்லவி – பாகம் ஒன்று

ஜி.என்.பி. காலத்தில் ஷண்முகப்பிரியா ராகத்தில் முக்கால் மணிநேரம் இருந்திருக்கிறது. இன்று இத்தெம்பு இள வித்வான்கள் பலரிடம் இல்லை. அப்படியே ஒரு 15 நிமிடம் உழைத்துப் பாடினாலும் ரசிகர்கள் சிலரிடமே ஒருமுகப்படுத்தி கேட்கும் தெம்பும் இருக்கிறது. தலை ஆடுவது நின்று, கால் ஆடி, பிறகு கை நடுங்கி, வாவ், ஃபுல் ஸெட் மா என்று எஸ்ஸெம்மெஸ்ஸிக் கொள்கிறார்கள். இல்லை தரஸ்தாயியில் ஆசுவாசிக்க பாடகர் சற்று மூச்சுபிடித்து நின்றால், அவசரமாய் கைதட்டி நடுக்கத்தை குறைத்துக்கொள்கிறார்கள்.

ஐரோப்பாவிலிருந்து அங்காடித்தெரு வரை – 2

அநீதியும் சுரண்டலும் எக்காலத்திலும் இல்லாத எந்த சமூகமும் உலகில் இல்லை. ஆனால் அவற்றை எதிர்த்து சமூகத்திலும், சட்டரீதியாகவும் குரல் எழுப்ப முடிகின்ற அரசியல் சூழல் அமைந்து விட்டால், அநீதியும் சுரண்டலும் அதிக காலம் ஓரிடத்தில் நீடிக்கவும் முடிவதில்லை. அப்படிப்பட்ட குரல் எழுப்ப இயலுகின்ற சூழல் உருவாக ஜனநாயகமும், சுதந்திர நீதித்துறையும், ஊடகங்களும் அவசியமானவை, இவை எந்த அளவுக்கு சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் இயங்க முடிகிறதோ அந்த அளவுக்கு ஜனநாயகம் வலுப்பெறுகின்றது.

ராஜ்நீதி, ராவண்: கசக்கியெறிந்த காவியங்கள்

ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக்கதைகளை எடுத்தாள்வதில் ஒரு சௌகரியம் உண்டு. ‘ஓஹோ ‘ ப்ரொடக்ஷன் நாகேஷ் போல் ‘கதை’ க்காக அலையவேண்டியதில்லை. ராமாயணம் என்றால் கதாநாயகியை வில்லன் கடத்துவது, மகாபாரதம் என்றால் குடும்ப-அரசியல் தகராறு என்று ஒரு மெல்லிய கதையை வைத்துக் கொண்டு ஒரு திரைப்படம் எடுத்துவிடலாம். இந்த இருபெரும் காவியங்களில் வரும் ஒவ்வொரு சின்னச்சின்ன பாத்திரமுமே அதற்கென்ற தனித்தன்மையுடனும், ஆழத்துடனும் இருக்கும். ஆனால் உங்கள் திரைவடிவக் கதையில் அதை எவ்வளவு எளிமையும், மலினமும் செய்யமுடியுமோ அவ்வளவு செய்துவிடலாம்.