ஐரோப்பாவிலிருந்து அங்காடித்தெரு வரை

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் பல தொழிலாளர் விவரணைகளைப் படிக்கையிலும் இரக்கத்தை விட மேலோங்கி நிற்கும் ஆசிரிய உணர்ச்சியாக இரண்டு விஷயங்களை நம்மால் எளிதாக இனம் காண முடியும்: எரிச்சல் மற்றும் எதிர்பார்ப்பு (”எப்போது புரட்சியாய் வெடிக்கப்போகிறது”) ஆகியவையே அவை. மார்க்ஸும் ஏங்கெல்ஸும் அன்றைய ஐரோப்பிய தொழிலாளர் வாழ்க்கையின் பரிதாபச்சரிவை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கினர் என்பது பலருக்கு வியப்பாக இருக்கலாம்.

நட்சத்திரம் பார்த்தல்

லூஸ் மோகன், குண்டு கல்யாணம், பிந்துகோஷ், ராக்கெட் ராமனாதன் போன்ற நடிகர்களைப் பார்க்க முடிந்தது. வருடாவருடம் விழா நடக்கும். ஒவ்வொரு வருடமும் மேற்குறிப்பிட்ட நடிகர்கள்தான். இத்தனை நட்சந்திரங்களுடன் பழக்கம் உள்ள கர்வம் கொஞ்சமும் இல்லாமல் வேலாயுதம் அண்ணன் நெல்லைவாழ் மக்களுடன் எளிமையாகவே பழகி வந்தார்.

கதைக்களன் – ஓர் உரையாடல்

ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய தண்டனை அவன் வாழும் இடத்திலிருந்து இடம்பெயர்க்கப்படுவதுதான். அப்படி இடம்பெயரும்போது, படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண் திடீரென்று அடைக்கப்பட்டதுபோல் பெரும்பாலான படைப்பாளிகள் உணர்வார்கள். ஒரு எழுத்தாளனை நாடு கடத்துவது அவனைக் கொல்வதை விட சித்திரவதையளிக்கும் தண்டனை.

க.நா.சுப்பிரமணியன் பற்றிய புதிய நூல்

க.நா.சு தொகுத்து வெளியிட்ட நூல்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய விரிவான அறிமுகக் கட்டுரை இருக்கும். இலக்கியக்கட்டுரைகள் என்றால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி இருக்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் ஏற்பட்டுவிட்டது. க.நா.சு இலக்கியவாதிகள் மட்டுமல்லாமல் அனைவரும் அந்த
விவாதத்தில் பங்கு பெறவேண்டும் என்று நினைத்தவர். ஆதலால் எளிய நடையில் அவருடைய கட்டுரைகள் இருக்கும்.

‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ – நேர்காணல்

வெங்கட் சாமிநாதன் எழுத ஆரம்பித்து இந்த வருடத்தோடு ஐம்பது வருடங்களாகின்றன. இத்தருணத்தில் வெ.சா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, தில்லி வாசம், இலக்கிய நண்பர்கள், தமிழக அரசியல், இலக்கியம் எனப் பல விஷயங்களைக் குறித்தும் பேசும் விரிவான பேட்டியை, சொல்வனத்தின் இரண்டாமாண்டு சிறப்பிதழில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்:

“இங்கே தமிழ் வாழ்க்கை பாட்டும், நடனமும் கலந்தது; அதனால்தான் ‘கல்யாணம் கட்டிக் கிட்டு ஓடிப்போலாமா?’ என்று பாட்டும் டான்ஸும் கட்டாயம் சேர்ப்பதாகச் சொல்கிறார்கள் இல்லையா? அதற்குக் காரணம் நம் தமிழ் வாழ்க்கைதான் என்கிறார்கள் இல்லையா? இதே பாட்டும், நடனமும் கலந்த வாழ்க்கைதான் வங்காளிகளினுடைய வாழ்க்கையும். ஆனால் அவர்கள் சினிமாவில் அப்படி மசாலாக்கள் அவர்கள் சேர்ப்பதில்லையே, ஏன்?”

மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து

நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் – அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது

ஆயகலைகள் – கிரேக்கம் முதல் கிரேவிட்டி வரை

கடைசியாக நீங்கள் வானில் நட்சத்திரம் பார்க்கும் பழக்கம் உள்ளவரா? என்றாவது ராத்திரி மேலே பார்க்கும் போது அதிசயமாக ஏதாவது பார்த்தால் கடவுள் வருகிறார் என்று நினைக்க வேண்டாம். அது கழிவாக கூட இருக்கலாம். 2009-ல் வானில் ஒளித்தோற்ற அதிசயம் ஒன்றைப் பார்த்தார்கள். பார்த்தவர்களுக்குத் தெரியாது அது மேலே சென்ற விஞ்ஞானிகளின் சிறு(நீர்த்)துளிகள் என்று!

எந்தக் கடையில் வாங்கின மூக்கு?

ஒரு பக்கம் செயற்கை உயிர், அது இது என்று உதார் விட்டுக்கொண்டு அந்தப் பதினைந்து நிமிஷப் புகழ் மழையில் செயற்கையாக நனைந்துவிட்டு, ஈரம் உலர்ந்தவுடன் மறக்கப்படுகிற விஞ்ஞான ஆராய்ச்சிகளும் இருக்கின்றன. ஆனால் மருத்துவ இயலில் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான முன்னேற்றங்களும் மற்றொரு பக்கம் ஓசைப்படாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக டிஷ்யூ எஞ்சினியரிங் என்ற இயலைச் சொல்லலாம்.

மரங்கள் இல்லாத நிலம் பயங்கரமானது

ஒவ்வொரு வருடமும் ஜூன் 5-ஆம் தேதி ‘உலக சுற்றுச்சூழல் நாளாக’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்ற வாரம் அனுசரிக்கப்பட்ட இந்த நாளை முன்னிட்டு மரங்கள் பற்றியும், இயற்கையுடனான மனிதர்களின் உறவு பற்றியும் ஜே.கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சுகளில் சிலவற்றை இங்கே திரு.வ.ஸ்ரீனிவாசன் மொழிபெயர்ப்பில் தருவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

கர்ட் வானகட் – இலக்கிய நிகழ்வு

பிரபல எழுத்தாளர் கர்ட் வானகட் எழுதிய அறிவியல்-புனை கதைகள் உலகப் புகழ் பெற்றவை. அவருடைய எழுத்துக்கள் சமூக அவலங்களை எள்ளலுடன் கூடிய கூர்மையோடு விமர்சிப்பவை. இலக்கியம் குறித்தும், தன்னுடைய எழுத்துக்கள் குறித்தும் வானகட் பேசுகிறார். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வானகட் போர் அவர் மீது நிகழ்த்திய பாதிப்பு “கர்ட் வானகட் – இலக்கிய நிகழ்வு”

சுரண்டல்

அம்மாவிடமும், மனைவியிடமும் செருப்புத் தோலைக் காட்டினான். ‘இதை எதுக்கு வாங்கிண்டு வந்தே’ என்றாள் அம்மா. ‘கொடுத்தாங்க. வாங்கிண்டு வந்தேன். எல்லாம் வழக்கமா தரதுதான். அவனவன் ஆயிரம் பண்றான். இது வெறும் செருப்புத்தோல். நூறு இருநூறுதான் இருக்கும். எங்காபீஸ்ல இதெல்லாம் எல்லாருக்கும் கிடைச்சிண்டுதான் இருக்கு’ என்றான்.

பாகிஸ்தானிய ஆங்கில இலக்கியம் – ஒரு பார்வை

தானியால் முயுனுதீன் மேற்கத்திய மீடியாவில் ஆர்.கே.நாராயணனோடு ஒப்பிடப்படுகிறார். இருவரின் கதைகளிலும் எளிய நகைச்சுவை, அறம் சார்ந்த கேள்விகள் இருக்கும். இருவருமே பெரும் அகச்சிக்கல்களையோ, சமூக அரசியல் குறித்தோ பேசுவதில்லை என்பது குறையாகப் பட்டாலும், இத்தகையான எளிய நேர்மையான எழுத்தே பாகிஸ்தானிய ஆங்கில எழுத்தில் படிக்கக் கிடைப்பதில்லை என்பதால் தானியாலின் எழுத்து முக்கியமான ஒன்றாகிறது. அது மட்டுமில்லாமல், பாகிஸ்தானின் நிலப்பரப்புகளைக் குறித்த நுணுக்கமான வர்ணனைகள் தானியாலின் எழுத்துகளில் படிக்கக் கிடைக்கின்றன.

இரண்டாம் ஆண்டில் சொல்வனம்

இந்த ஒருவருடத்தில் நாங்கள் கற்றுக் கொண்டவை ஏராளம். வலை வடிவமைப்புத் தொழில்நுட்பத்தையே கூட முதல் இதழுக்கு வடிவமைக்கும்போதுதான் கற்றுக் கொண்டோம். எந்த குழுப் பின்புலமும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இதழைத் தமிழின் தேர்ந்த எழுத்தாளர்கள் ஆதரித்து உற்சாகப்படுத்தினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக வாசகர்களின் தொடர்ந்த வருகையும், எதிர்வினைகளும் உற்சாகமூட்டுபவையாகவும், வழிநடத்துபவையாகவும் இருந்தன.

காட்டுத் தீ

இயற்கையின் ஐம்பெரும் சக்திகளில் ஒன்றாக அக்னியை வணங்கிய கலாச்சாரத்தின் ஏதோ ஒரு புள்ளியை தினமும் தொட்டபடி வாழ்பவர்கள் நாம். அதை போற்றிப்பாடிய நாம் அவ்வப்போது அதன் கோர தாண்டவத்தையும் கண்டிருக்கிறோம். உலகம் நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த காட்டுத் தீ விபத்துகளின் புகைப்பட தொகுப்பு ஒன்றை இங்கே காணலாம். “காட்டுத் தீ”

எலெக்ட்ரீஷியன் நவாப்தீன்

உடைந்த ரேடியோக்களை வாங்கி அவற்றை சரிசெய்து மீண்டும் விற்றான். கடிகாரங்களை ரிப்பேர் செய்யும் தொழிலைச் செய்யக் கூட அவன் தயங்கவில்லை. ஆனால் அத்தொழில் அவன் செய்த தொழில்களிலேயே மிகப்பெரிய தோல்வியைக் கண்டது. வாழ்த்துகளைக் காட்டிலும், வசவுகளையே அதிக அளவில் பெற்றுத்தந்தது. ஏனென்றால் அவன் சரி செய்த கடிகாரங்கள் அதன்பின் எப்போதுமே சரியான மணியைக் காட்டியதில்லை.

ஆச்சரியம்

கோப்புகளின் மேல் மட்டையில் ‘அவசரம்’ ‘மிக அவசரம்’ ‘உடனே’ போன்ற ஒட்டுப்பேப்பர் குறிப்புகளை அவரே ஒட்டி அனுப்புவார். அவருடைய கட்டளைகளை ஊழியர்கள் அவர் விதித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டுமானால் அவர்கள் அன்று வீட்டுக்கு போக முடியாது. அடுத்தநாளும் முடியாது. அவர்கள் கோப்புகள் கைகளில் கிடைத்ததுமே ஒட்டுப்பேப்பரை அகற்றிவிடுவார்கள். உடனே அவை சாதாரண கோப்புகளாக மாறிவிடும்.

ரோபோட்கள்: ஞான உச்சமாகவும் விலக்கப்பட்ட கனிகளாகவும்

செயற்கை மனித இயந்திரத்தை உருவாக்குவது மானுட அகங்காரத்தின் வெளிப்பாடாக காணப்பட்டது. …மானுடனை ஆன்மாவுடன் உருவாக்குவதென்பது கடவுளால் மட்டுமே முடிந்த ஒன்று. எனவே மனிதன் உருவாக்கும் செயற்கை மனிதன் ஆத்மா இல்லாத ஒரு வக்கிரமே. எனவே ஒரு செயற்கை மனிதனை உருவாக்குவதே தீமையில் தான் முடியும் ஏனெனில் மனிதன் அறியப்படக்கூடாத இரகசியங்கள் இருக்கின்றன என்பதே மீண்டும் மீண்டும் (புனைவுகள் மூலமாக) உபதேசிக்கப்பட்டன.

கடவுள் நமக்குத் தேவையா?

இஸ்லாமிய நாடுகளில் கல்வித்திட்டத்தின் மீது மத ஆதிக்கம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு அமெரிக்காவிலும் மத ஆதிக்கம் இருக்கிறது. தொழிற்வளம் முன்னேறிய (இஸ்லாமிய) நாடுகளில் நம்மை துருக்கியுடன் ஒப்பிடலாம். சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைவிடவாவது நாம் சில படிகள் மேலே இருக்கிறோம் என்றே நான் நினைக்க விரும்புகிறேன்.

மகரந்தம்

பல ஆசிய நாடுகளில் கிணறுகளில் உள்ள தண்ணீரில் ஆர்ஸெனிக் என்னும் கொடும் விஷம் கலந்த நீர்தான் கிடைக்கிறது. இந்த நீரை அருந்தும் ஆசிய மக்கள் பலவகை நோய்களுக்கு உள்ளாகிறார்கள். இந்தியா, வங்கதேசம், பர்மா போன்ற நாடுகளில் குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இந்தப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. இமயமலை சார்ந்த வெளிகளில் அடிமண்ணில் உள்ள பண்டைக்காலக் கரியடுக்குகளில் இருந்துதான் இந்த நஞ்சு கசிகிறது.