Category: இதழ்-25
வாழ்க்கையின் அர்த்தம்
நசிக்கு சமீபகாலமாக வாழ்க்கையில் அதிருப்தி. மற்றவர்களின் விருப்பத்திற்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாக எதாவது செய்ய ஆசை. ஆனால், அன்றுகாலை விழித்ததிலிருந்தே அது நடக்கவில்லை. ‘காப்பகத்திற்கு வரும் மற்ற பெண்கள் பார்ப்பதற்குத் தங்களுடைய அம்மாக்களைப்போல இருக்கும்போது நான் ஏன் வித்தியாசமாக இருக்கிறேன்?’ என்று படுக்கையில் படுத்தபடி யோசிப்பதற்குள் அவளப்பா கிளப்பிவிட்டார். பான்கேக் தின்பதற்குமுன் அதற்குக் கண், மூக்கு, வாய் வைத்து அழகுபார்க்க அவளம்மா நேரம்தரவில்லை.
சீனப் பெண் கவிஞர்களின் ஐந்து கவிதைகள்
யாரிடம் சொல்வேன்
இறந்தோருக்கான எனது
நிரந்தர சோகத்தை?
இந்த வேகத்தில்
மலைகளையும் நதிகளையும்
மட்டுமே கண்டேன்.
என் ஆடையிலிருந்த
உதிரத்துடன் சேர்ந்தது என் கண்ணீர்.
ஆடுகளம்
முரளிக்கு பொதுவாகவே விளையாட்டுகளில் ஆர்வமில்லை. சிறுபிள்ளையிலிருந்த அப்படித்தான். நாடே கொண்டாடும் கிரிக்கெட்டைக் கூட அவன் அதிகம் பார்த்ததில்லை; விளையாடியதுமில்லை. இதுவரை அவன் வாழ்க்கையில் மூன்றே முறை தான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறான். மற்ற விஷயங்களில் எல்லாம் சகஜமாக பழகுபவன், விளையாட்டு என்று வரும் போது ஒதுங்கிவிடுவான். சில நேரங்களில் ஒதுக்கிவிடுவார்கள். அப்போது மட்டும் கொஞ்சமாய் வலிக்கும்.
வியட்நாம் போர் – 35 ஆண்டுகளுக்குப் பின்
சென்ற மே நான்காம் தேதியோடு வியட்நாமில் கெண்ட் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வியட்நாம் யுத்தத்தை உச்சத்துக்குக் கொண்டு வந்து நாற்பது வருடங்கள் ஆகின்றன. வியட்நாம் யுத்தமும், அதில் அமெரிக்காவின் தலையீடும் இரண்டாம் உலகப்போருக்குப்பின் மிக அதிக அளவிலான உயிரிழப்புக்குக் காரணமானது. 1955-இலிருந்து 1975 வரை “வியட்நாம் போர் – 35 ஆண்டுகளுக்குப் பின்”
மூன்று கவிதைகள்
பொழுது போகாத நேரத்தில்
அவன் கிறுக்கி வைத்திருந்த ஓவியங்கள்
தாத்தா தன் நிலையிலிருந்து
கைத்தடியுடன் இறங்கி நடந்தார்
அப்பா எப்போதும்போல் ஏதோ யோசனையுடன்
தாத்தாவும் அப்பாவும் பார்த்துக்கொள்ளும்போது
பாட்டி தன் ஓவியத்திலிருந்து கீழிறங்கினாள்
இருப்பு
அண்ணனின் மாமனாருக்கும் அவரது அண்ணனுக்கும் பன்னிரெண்டு வயது வித்தியாசம். இறக்கும் தறுவாயில் தன் அண்ணன் இருக்கும் போது எழுபத்திரண்டு வயது தம்பி சொன்னாராம். ‘நீ தைரியமா முன்னால போ. நான் பின்னாலேயே வாரேன்’ என்று. கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் பெருக சிறிது நேரத்திலேயே காலமாகிவிட்டாராம் பெரியவர்.
செல், பேசாதே!
கார் ஓட்டும்போது செல்பேசியை உபயோகித்தால் ஆபத்து என்று சரமாரியாக ஆய்வு முடிவுகள் வர ஆரம்பித்த பிறகு கூட அவர்கள் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை. கன்ஸ்யூமர் பாதுகாப்பு சங்கங்கள், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என்று பல தரப்பினரும் உள் நாக்கு தெரியக் கத்தியதால், பல மாநிலங்கள் காரில் மொபைல் போன்களைத் தடை செய்ய சட்டம் கொண்டு வர முயற்சித்தன. செல்போன் கம்பெனிகள் தங்கள் லாபி இயந்திரம் முழுவதையும் முடுக்கி விட்டு, பணத்தை டாக் டைம் போலச் செலவழித்து சட்டத்தைத் தடுத்து நிறுத்தின.
இறந்து கொண்டிருக்கும் இயற்கையின் அற்புதங்கள்
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்று சங்காலத்தமிழன் இலக்கணம் சொன்னான். மலையைப் பார்த்த ஒரு அமைச்சரின் புதல்வன் நினைப்பது வேறு. குறிஞ்சியாவது உறிஞ்சியாவது இம்மலையை வெடிவைத்துத் தகர்த்தால் எவ்வளவு கல் அறுக்கலாம்? அறுத்த கற்களை ஏற்றுமதி செய்தால் எத்தனை தேறும்? மலை மீது சந்தனம் உண்டு. தேக்கு உண்டு. தான்றி உண்டு. வெட்டி விற்றால் எவ்வளவு லட்சம் தேறும்? நேரிடையாகத் தான் சம்பந்தப்படாமல் மரக்கடையுடன் ஒரு பேரமே முடிந்து விடுகிறது.
எல்லோரும் சந்தன மரத்தைக் கடத்த முடியாது. வேலா மரத்தை வெட்டி விற்றால் கூட சில ஆயிரங்கள் உண்டு. விறகு விலை ஒரு டன் 3000 ரூபாய். மண்ணாசைக்கு மேல் மர ஆசையும் வந்துவிட்டதே. இறைவா?
சிங்கப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்
ஜெயந்தி சங்கரின் கதைகளில் சிங்கப்பூரின் மாறி வரும் சமூக மதிப்புகளையும், வாழ்க்கையின் சலனங்களையும் பார்க்கிறோம். பல சிங்கப்பூரில் வாழ்வதால் தமிழர் எதிர்கொள்ள வேண்டி வருபவை. பல் தமிழகத்திலும் நடக்கக்கூடும் என்றாலும், அவற்றின் ரூபமும் தீவிரமும் சிங்கப்பூரின் சமூக மாற்றத்தால் விளைபவை.
அரை செஞ்சுரி துல்லியம்
இது லேசர் தொழில்நுட்பத்தின் ஐம்பதாவது வருடம். அறிவியல் சமூகம் லேசர் தொழில்நுட்பத்தின் 50 வது பிறந்த நாளை மிகவும் விரிவாக இவ்வாண்டு முழுவதும் கொண்டாடுகின்றது.உலகெங்கிலும் லேசர் தொழில்நுட்பம் குறித்த ஆய்வுக் கருத்தரங்கங்களும், கண்காட்சிகளும் நடைபெறுகின்றன. இதை முன்னிட்டு லேசர் தொழில்நுட்பத்தையும், பயன்பாடுகளையும் விளக்கும் சிறப்புக் கட்டுரையை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.
மகரந்தம்
நாம் நம் அணுசக்தி நிலையங்களின் கழிவுப் பொருட்களை என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எங்கே புதைக்கிறோம்? யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள். தில்லிப் பல்கலைக் கழகத்தின் அணுக் கழிவுகளால் சமீபத்தில் உயிரிழந்த பலரைப் பற்றிய செய்தியைப் படித்திருப்பீர்கள். அது குறித்த ஒரு பகிரங்க விசாரணையோ, அந்த மாதிரி மோசமான முறையில் கதிர்வீச்சு நிறைந்த பொருட்களை விட்டெறிந்த அலுவ்லர்கள், அறிவியலாளர்கள், பொறியியலாளர்களை இந்த மரணங்களுக்குப் பொறுப்பேற்கவைக்க ஏதும் முயற்சி செய்யப்பட்டதா? அல்லது அப்படி கழிவுப் பொருட்களை நிர்வகிக்க அரசு ஏதும் நடைமுறைகளை இன்னமுமே உருவாக்கவில்லையா?
உலக செஸ் சாம்பியன்ஷிப் 2010
20-20ல் உலகக்கோப்பை வெல்லுவோமா மாட்டோமான்னு இந்தியா முழுவதும் காலைல காபி குடிச்சதுல இருந்து இரவு படுக்கையை போடற வரை பேசிக்கொண்டிருக்க, சத்தமேயில்லாம நம்மூரு விசுவநாதன் ஆனந்த் வெற்றிகரமா தன்னோட செஸ் உலக சாம்பியன் பட்டத்தை மற்றொரு முறை தக்க வச்சிட்டிருக்கார். இன்னுமொரு இரண்டு வருஷத்துக்கு ஆனந்த்தான் சேம்பியன். ஒரு டோர்னமென்ட்லயும், இரண்டு மேட்சிலயும், அதுவும் இரண்டு பெரிய ஆட்களுக்கு எதிரா விளையாடி ஜெயிச்ச ஆனந்தின் இந்த உலக சேம்பியன் பட்டம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது.
லீனா ஹார்ன் (13.06.1917 – 09.05.2010)
சென்ற ஞாயிற்றுக்கிழமை (மே 09, 2010) தன்னுடைய 92 வயதில் மரணமடைந்த லீனா ஹார்ன் (Lean Horne) ஒரு சிறந்த அமெரிக்க ஜாஸ் இசைப்பாடகி. நிறவெறி உச்சத்தில் இருந்த காலத்தில் அதைத் தகர்த்தெறிந்து தனக்கென தவிர்க்க முடியாதொரு இடத்தை அடைந்தவர் லீனா ஹார்ன். வெள்ளை மேலாண்மையைத் தகர்த்து ஹாலிவுட்டில் “லீனா ஹார்ன் (13.06.1917 – 09.05.2010)”
ஹாலிவுட் பேயோட்டிகளும், உண்மைக் கதைகளும்
எக்ஸார்ஸிட்டுக்குப் பிறகு பல படங்கள் அதன் தொடர்ச்சி என வந்தாலும், உண்மையான அடுத்தப் பகுதி திரைப்படம் எமிலி ரோஸின் எக்ஸார்ஸிஸம் (பேயோட்டல்) என்கிற பெயரில் 2005-இல் வெளியானதுதான். எக்ஸார்ஸிஸ்ட் படத்தை விட இப்படம் ஒரு விதத்தில் முக்கியமானது. உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டதாக இது கூறப்படுகிறது. இத்தகைய பெரும் வெற்றி பெறும் ஹாலிவுட் திரைப்படங்களும், அதனைத் தொடர்ந்து அவற்றை பிரதியெடுக்கும் இந்திய திரைப்படங்களும் ஏற்படுத்தும் விளைவுகள் படுமோசமாக இருக்கும்.
கலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்
கலாப்ரியா பேசத் துவங்கும்போதே தனக்கு இது மகிழ்ச்சியாகவும், சற்று கூச்சமாகவும் இருப்பதாகச் சொன்னார். தனது நேர்காணல்கள் அனைத்தும் ஒரே வடிவத்தில்(Pattern) இருப்பதாகச் சொன்னவர், இந்தக் கூட்டத்தில் சற்று வித்தியாசமான தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறதா என்று முயல்வதாகக் குறிப்பிட்டார். தனது குடும்பத்தில் ஒன்பது பேர்களில் தான் மட்டுமே கல்லூரி வரை சென்றதாகவும் அதில் தனக்குக் கிடைத்த சுதந்திரம் மிக முக்கியமானதாகவும் இருந்ததாகச் சொன்னார். ஆனால் தனக்குள் உள்ளூர இருந்த அறம் சார்ந்த கட்டுப்பாடு அல்லது பயம் காரணமாக தனக்கான ஒரு எல்லைக் கோடு தொடர்ந்து இருந்தது என்றார்.