வெளிப்பாடுகளின் திரைப்படங்கள்: சைத்தானின் அரசியல்

அறிவியல் மற்றும் நவீனத்துவத்துக்கான ஒரு முக்கியமான எதிர்வினையாக புரோட்டஸ்டண்ட் மதமும் அதன் இறையியலும் இருந்தன. அடிப்படைவாதமும் தூய கிறிஸ்தவ வாதமும் அதன் முதுகெலும்பாக அமைந்தன. அமெரிக்க பூர்விகக் குடிகளின் அழிவை “வாக்களிக்கப்பட்ட பூமியாக” அமெரிக்காவையும் காலனிய குடிகளாக பூர்விகர்களையும் சித்தரித்து அவை நியாயப்படுத்தின அம்மட்டில் இம்மதம் அமெரிக்க பண்பாட்டுக்கு உறுதுணையாக அமைந்தது.

கோமாளி

கோமாளி என்று என்னைக் கூப்பிடுவது சிரமமாக இருக்கிறது கோமு என்று கூப்பிடுகிறேன் என்று ஜெ. ஊர்மிளா என்னிடம் வேண்டிக்கொண்டாள். முதல் ராங் வாங்கும் உஷா என்னை ஒரு நாள் அழைத்து ஊர்மிளா எதாவது சொன்னால் அல்லது அடித்தால் நன்றாகத் திருப்பிக்கொடுத்துவிடு என்று கோபமாகச் சொன்னாள். நான் அவளிடம் இருந்து நோட்டு பென்சில் எதுவும் வாங்கினதேயில்லையே எதை திருப்பிக்கொடுக்கவேண்டும் என்றேன். தலையில் அடித்துக்கொண்டு உனக்கு கோமாளி பெயர் பொருத்தம்தான் என்றாள்.

வெட்டுப்புலி

பலநாட்கள் தயாரித்த, ஆய்வுசெய்த அறிக்கைகளை அன்று மக்கள் முன்பு கொள்கைவிளக்கமாகக் கூட்டங்களில் பேசுவார்கள். மக்களைக் கூட்டம்சேர்க்கும் கழைக்கூத்தாடி டமடமவென்று தொடக்க மேளச்சத்தம் எழுப்புவதுபோல, கலைநிகழ்ச்சி போர்வையில் அரிதாரம் பூசியவர்கள் பின்னர் அரங்கேறலாயினர். நாளடைவில் இவர்கள் இருந்தால்தான் கொள்கையே பேசமுடியும் என்கிற அளவுக்கு மேடைகள் தலைகீழாயின.

சமூக வளர்ச்சி குறித்து ப்ரிட்ஜாப் காப்ரா

ப்ரிட்ஜாப் காப்ரா பிரபல அமெரிக்க எழுத்தாளர். கிழக்கத்திய தத்துவங்களுடனான நவீன அறிவியல் முடிவுகளின் ஒத்திசைவை தன்னுடைய பல நூல்களில் பதிவுசெய்திருக்கிறார். “இயற்பியலின் தாவோ”(Tao of Physics) இவருடைய பிரபல நூல்களில் ஒன்று. மனித சமூகத்தின் இன்றியமையாத கூறான “வளர்ச்சி” குறித்து காப்ரா பேசுகிறார். இயற்கையின் வளர்ச்சி செயல்பாடானது எண்ணிக்கை “சமூக வளர்ச்சி குறித்து ப்ரிட்ஜாப் காப்ரா”

பூச்சி உலகில் மர்ம மரணங்கள் !

தேனீ வளர்ப்பவர்கள் அவ்வப்போது பெட்டியைக் கையில் தூக்கிப் பார்ப்பார்கள். கனமாக இருந்தால் நிறையத் தேன் சேர்ந்துவிட்டது என்று உடனே பூச்சிகளைக் கொன்று தேனை அறுவடை செய்துகொண்டார்கள். பெட்டி லேசாக இருந்தால் இரண்டு மூன்று கூடுகளை ஒன்றாகச் சேர்த்து, இப்போதாவது தேன் சேருகிறதா என்று பார்த்தார்கள். இதன் விளைவு, டார்வினின் மரபீனி விதிகளுக்கு நேர் மாறாக இருந்தது

நியூசிலாந்தும் நிலக்கோட்டையும்

புதியதொரு நகருக்கு அவள் வந்து சேர்ந்தாள். ஊரைச் சுற்றிப் பார்த்தாள். மக்களை நெருக்கமாகக் அவதானித்தாள். அவர்கள்மேல் இன்னதென்று சொல்லமுடியாத ஆனால் அழுத்தமான ஈர்ப்பு உண்டாவதை அவள் உணர்ந்தாள். காதல் வயப்பட்டவர்கள் தங்கள் காதலரைப் பற்றிய விவரங்களை அக்கறையுடன் சேகரிப்பதைப் போல , அவள், அந்த மக்களின் தோற்றம், நடை உடை, பழக்க வழக்கங்களைக் கண்டு மனதில் பதிந்து கொண்டாள்.

மழை

மழை ஆனந்தம். காயங்களையும் சூட்டையும் எரிமலைகளையும் ஆதரித்து அரவணைக்கும் அரு மருந்து. மழை தாய். மழையின் நாதம் சுகம். மழையில் எல்லா பயத்தின் கங்குகளும் நனைந்து போய் விடுகின்றன. அப்பாவும் அவனும் எல்லா வீட்டுக்கும் பொதுவான மொட்டை மாடியில் எத்தனையோ தரம் மழையில் ஆடி இருக்கிறார்கள். அந்த வாசனை. அதன் வண்ணம். கண்களை மூடிக் கொண்டு மழையின் வாசனையை அனுபவித்துக் கொண்டு அதன் சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

கந்த கானாமுதம்

ஒவ்வொரு ராகமாகக் கையைப் பிடித்து இழுத்து வந்து “இதோ பார்த்துக்கொள்” என்று காட்டும் அனுபவம் எஸ்.ராஜம் அவர்கள் பாடி ஸ்வாதிசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘கந்த கானாமுதம்’ என்ற இசைத்தொகுப்பைக் கேட்டால் கிடைக்கிறது. மொத்தம் 72 ராகங்களை இத்தொகுப்பில் ஒரு சிறு ஆலாபனையாகவும், ஒரு எளிய கீர்த்தனையாகவும் பாடியிருக்கிறார் எஸ்.ராஜம். தேர்ந்த ஓவியரும், மிகச்சிறந்த பாடகருமான எஸ்.ராஜம், ஒவ்வொரு ராகத்தைக் குறித்தும் ஒரு தெளிவான, அழுத்தமான சித்திரத்தைத் தன்னுடைய ராக வெளிப்பாட்டில் தருகிறார்.

மகரந்தம்

இறந்த உடலில் உயிருக்கான ஏதேனும் அறிகுறி இருக்கிறதா என பார்த்தார்கள். அவளது மூச்சை மீண்டும் கொண்டு வர முடியுமா என முயற்சி கூட செய்து பார்த்தார்கள். அன்றைய இரவு முழுவதும் அவளது மகள் அவள் உடலுடனேயே இருந்தாள். மறுநாள் அவள் உடலை சுத்தம் செய்தாள்….அட ஒரு சாவில் இதெல்லாம் சகஜம் தானே என்கிறீர்களா? ஆப்பிரிக்க சிம்பன்ஸிகளின் சாவு ஒன்றினைத் தொடர்ந்து அவர்களின் நடத்தைகளை ஆவணப்படுத்தியுள்ள ஒரு ஆய்வு சொல்லும் விஷயங்கள் இவை.

முதலாளித்துவத்தின் மூலம் வறுமையை ஒழிக்க நினைத்த இந்திய மனம்

பிரஹலாத் முன்வைத்தது சமுக சேவை செய்வது எப்படி என்ற சிந்தனையை அல்ல. வறுமையை, லாபகரமான வியாபாரம் செய்வதன் மூலம் எப்படி ஒழிப்பது என்பது தான். அவர் உலத்தின் வியாபாரிகளுக்கு அது வரை யாரும் கவனிக்காத ஒரு சந்தையை காட்டினார். அந்த சந்தைக்கு சேவைகளையும் பண்டங்களையும் எப்படி லாபகரமாக தயார் செய்து விநியோகம் செய்யலாம் என்று காட்டினார். உலகின் ஏழை சமுகம் என்பது வேகமாக கீழ் மட்ட நடுத்தர வர்க்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்த உலகத்தின் கடைசி ஏழைக்கும் வாழ்வாதார தேவைகளை எந்த தடையுமின்றி பூர்த்தி செய்து கொள்ளும் காலம் விரைவில் வரும். அதைப் பார்க்க பிரஹலாத் இல்லாது தான் சோகம். இவரது மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல மேலாண்மை சமுகத்திற்கே மிகப்பெரிய பெரிய இழப்பு.

தோசை

எப்போதும் போல அன்று பள்ளிக்கு சென்றேன். எல்லோரும் ஏதோ பரீட்சைக்கு படித்துக்கொண்டு இருந்தார்கள். ஸ்கூல் மணி அடித்த போது தான் இயற்பியல் வகுப்பு தேர்வு என்று முந்திய வாரம் வாத்தியார் சொன்னது என் மண்டையில் ஒலித்தது. வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்றால் முடியாது. மயக்கம் வந்தால் தான் அனுப்புவார்கள். மயக்கம் வருவதற்குள் தேர்வு ஆரம்பித்துவிடும்!

முதலியத்தை விமர்சிக்கும் மர்ம நாவல்கள்

பல நாடுகளிலும் துப்பறியும் நாவல்கள், மர்மக் கதைகள் சமூக விமர்சனத்துக்குக் கருவியாகப் பயன்பட்டிருக்கின்றன. ஆனால் ஸ்வீடன், நார்வே, ஃபின்லாந்து போன்ற ஸ்காண்டிநேவிய நாடுகளில் சமீபகாலமாக மர்ம நாவல்கள் நிறைய வெளிவருவதோடு, அவை மொழி பெயர்க்கப்பட்டு ஆங்கில மொழி உலகில் பரவலாக விற்பதும், அவை எல்லாமே ஒரு விதமான சமூக விமர்சன நோக்கோடு வெளிவருவதும் கவனிக்கத் தக்கன.

நோலிவுட் – நைஜீரிய திரைப்பட உலகம்

நோலிவுட். அப்படித்தான் நைஜீரிய திரையுலகம் தன்னை அழைத்துக் கொள்கிறது. இந்தியத் திரை உலகத்தைப் பல கோணங்களில் நினைவுப்படுத்தும் நைஜீரியாவின் திரையுலகம். தன்னை குறித்த மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்கள், தன் ஆளுமை மீதான அடிப்படையற்ற மமதை இன்னும் பல. இந்த புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்கு சிரிப்பு வரலாம். இந்திய திரையுலகத்தையும் மேற்குலகம் “நோலிவுட் – நைஜீரிய திரைப்பட உலகம்”

உங்கள் காலடி உலகில்..

தன் வறுமை நிலையையும்,
தன் உடலின் நிலையாமையையும்.
ஆடி மகிழ்ந்தான்,
தன் வாழ்வின் வேதனைகளில்.
இச்சுதந்திரச் சிறகுகள்,
நம்புங்கள்,
ஒரு நூலளித்தப் பரிசு!

சாம்சனின் கதவு

ஒரு சாதாரண மனிதன் இறைவனின் அற்புத வரத்தால் செய்ய முடிந்த சாகசங்களைக் குறித்து எடுத்துக்கூற எங்களிடம் ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. உங்களின் சாம்சனையே எடுத்துக்கொள்வோம். கடவுளால் அருளப்பெற்ற சாம்சன் ஒரு கழுதையின் தாடை எலும்பைக்கொண்டு தன் எதிரிகளைத் துவம்சம் செய்ததாகவும், கோட்டைக் கதவுகளைத் தன் தோளில் சுமந்து சென்றதாகவும் கதைகள் உண்டு. அது இறைவனால் அருளப்பட்ட ஒரு சக்தி என்று போற்றி மகிழ்கிறீர்கள். ஆனால் சாம்சனை, ஹிந்துக்கள் வணங்கும் ஹனுமனுக்கு இணையாக கூற இயலாது.

எல்லாக் கோடையும் ஒரே நாளில்

ஏழு வருடமாக மழை பெய்கிறது; ஆயிரமாயிரம் நாட்களையும் கூட்டிக் குவித்தால் எல்லாம் மழை, ஒரே நீர்த்தாளம், பீறிக் கொண்டு ஓடும் நீரொலி, அவ்வப்போது இனிமையாக மணிமணியாகச் சிதறும், சில நாள் புயலாக மழை பெய்து பெரும் சுவர்களைப் போல எழுந்து அலைகள் அந்தத் தீவுகளை அறையும். ஆயிரம் காடுகள் மழையில் அழிக்கப்பட்டு, ஆயிரம் காடுகள் மறுபடி எழுந்து மறுபடி அழிந்திருக்கின்றன.