கசாப்புக்கடையில் குறும்பாட்டுக்குட்டி

மேரி மலோனி கணவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவதற்காக காத்திருந்தாள். அவ்வப்போது, கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள், ஆனால், பதற்றமேதுமின்றி, கடந்து சென்ற ஒவ்வொரு நொடியும் கணவனின் வீட்டு வருகையை இன்னமும் நெருங்கச் செய்தது என்ற திருப்தியுடன். அவளையும், அவள் செய்து கொண்ட அனைத்துக் காரியங்களைச் சுற்றியும் ஒருவிதமான மந்தகாசச் சூழல் நிலவியது. தைத்துக் கொண்டிருக்கையில் அவள் தலையை கீழே சாய்த்த விதம் அசாதாரண அமைதியுடன் காட்சியளித்தது– கருத்தரித்து ஆறு மாதமாகியிருந்த அவளது சருமம் அற்புதமான ஒளியூடுருவும் தன்மையைப் பெற்றிருந்தது. மென்மையான உதடுகள், புதிதாய் கிட்டிய மெல்லமைதியால் முன்னதை விட பெரிதாகவும் மேலும் கருமையாகவும் காட்சியளித்த விழிகளுடன் அவள் காணப்பட்டாள். கடிகாரம் ஐந்து மணி ஆவதற்கு இன்னமும் பத்து நிமிடங்களே இருக்கிறது என்று காட்டிய உடனேயே அவள் செவிமடுக்கத் தொடங்கினாள்.

ஒருவரை தத்துவவாதியாக ஆக்குவது எது?

This entry is part 3 of 6 in the series உலக தத்துவம்

இக்கட்டுரை ‘what makes a philosopher’ என்ற ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையில் வரும் சில கருத்துக்களுக்கும், கலைச்சொற்களுக்கும் கூடுதல் வரையறையும் அறிமுகமும் வேண்டுமென்று கருதியதால் அவை கட்டுரைக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தத்துவவாதியாக ஆக்குவது எது? இது மிக அடிப்படையான கேள்வியாக இருப்பினும் இதன் பதில் நாம் நினைப்பதை “ஒருவரை தத்துவவாதியாக ஆக்குவது எது?”

காகித முகங்கள்

முதலில் தன் இடைமேல் பூச்சிகள் இரண்டு ஊர்வதைப் போலத்தான் அவள் உணர்ந்தாள். இரண்டு அல்ல; கூட்டம் கூட்டமாக பூச்சிகள் அவளின் இடையைச்சுற்றி வளைத்து மேலேறி மார்பை நோக்கிச் சென்றன. அவை பூச்சிக்கூட்டம் அல்ல பெரிய தடித்த நீளமான விரல்களைக் கொண்ட அகன்ற கைகள் என்று புரிந்தபோது, அவை அவளது “காகித முகங்கள்”

மைதானம்

கிழவர் காலையிலேயே தன் ஆடுகளை அங்கு ஓட்டிவந்துவிட்டார். அவர் எப்போதும் தன் ஆடுகளை அங்கு தான் மேய்ப்பார். ஊர் எல்லையிலிருந்து பிரிந்து போகும் ஒரு கிளை சாலையின் வழியே ஒரு மையில் தூரம் உள்ளே சென்றால் அது கடைசியாக சென்று ஒரு சிறிய மேட்டை அடையும். அதன் மீது ஏறி நின்று பார்த்தால் ஒரு சறுவலும் அதனைத் தொடர்ந்து பரந்துவிரிந்த முழுக்க முட்புதர்களால் ஆன ஒரு இடம் கண்முன் விரியும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதுதான் இருக்கும். சில இடங்களில் சமவெளியாகவும், சில இடங்களில் முட்புதராகவும் விட்டுவிட்டு இருக்கும். தரை முழுக்க காய்ந்த புற்களால் நிரம்பி வழியும். அவர் தன் ஆடுகளை எப்போது அங்கு தான் மேயவிடுவார். சறுவலில் இறங்கியதும் கொஞ்ச தூரம் முட்புதரோ அல்லது வளர்ந்த புல்லோ இருக்காது. அது கிரிகெட் விளையாடும் இடம். பையன்கள் கால்மிதி பட்டு அந்த இடம் அப்படியே ஒரே மட்டமாக மாறியிருந்தது.

வெய்யிலின் மொழி

சென்னைக்குக் கிளம்ப வேண்டும் என்ற நினைப்பே சசியை சுற்றிச்சுற்றி வந்தது. இது எப்பவும் இப்படித்தான். இங்கு வரும் நாளைத் தவிர அடுத்த காலையிலிருந்து அவ்வப்போது நாட்களை மணிக்கணக்காகப் போட்டு உருட்டிக்கொண்டிருக்கும் மனம். சசி சமையலறைக்கு வெளியிலிருந்த தாழ்வாரத்திலிருந்து படுக்கையறையை எட்டிப்பார்த்தாள். சீரான மூச்சுடன் கங்கா படுத்திருந்தான். முன்பிருந்ததைவிட உடல் “வெய்யிலின் மொழி”

இசை வேளாளர்கள்

அரசு நூலகங்களில் இருந்து எதிர்பாராத வகையில் சில பொக்கிஷங்கள் கிடைப்பதுண்டு. அந்த வகையில் சில காலம் முன்பு எனக்குக் கிடைத்தது இசை அறிஞர் தஞ்சாவூர் பி.எம். சுந்தரம் எழுதிய  “மங்கல இசை மன்னர்கள்”. 19 ஆம் நூற்றாண்டின்பிற்பகுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாகஸ்வர மற்றும் தவில் கலைஞர்களைப் பற்றிய “இசை வேளாளர்கள்”

மேசன்களின் உலகம்

இன்று காலை வீட்டை விட்டு வெளியேறி சாலையில் இறங்கியதும் கருப்புக் கண்ணாடியுடன் மோதி விடுவதுபோல் வந்த மேசன் எவர் செய்த புண்ணியமோ, என்று எண்ணும்படி லாவகமாய் வாகனம் திருப்பி நொடிப்பொழுதில் இடிக்காமல் சென்றார். நரை கூடிக் கிழப்பருவம் எய்தி காதிகிராப்ட் கைத்தடியில் வெள்ளை ஜிப்பாவுடன் சந்தனத்தை திருநீறாய் அணிந்து “மேசன்களின் உலகம்”

கணேசன் தாத்தா

விறு விறுவென   நடந்தும்  ஒன்பது  பத்தாகி  விட்டது.இன்று சின்னவன் படுத்திவிட்டான்.எச் .எம் வேற என்ன சொல்லுமோ? வேகமாய் வந்து பிரேயரில் நிற்கிறாள் மீனா. “உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்ததுமே” எச்.எம். நிற்கவில்லை என்பதை கவனிக்கிறாள் அப்பாடா!! உதவித் தலைமை ஆசிரியர் காந்தி சார் தான் அசெம்பிளியில் “கணேசன் தாத்தா”

சுருண்டிருக்கும் உயிர்

காடுகளில் சுற்றித்திரியும் ஆனைகளின் காலடியில் முட்டிமோதும் குட்டியைப்போல் கழிந்திருக்கிறது சிறுபிராயம்… பழகாத துடுப்பால் சுழலும் ஓடமாய் பள்ளி நாட்கள் சுழன்றிருக்கின்றன கல்வி நீரோட்டத்தில் … சகமாணவரின் சூட்டிகை அறைகூவல்களும் வர்க்கத்தின் பாரபட்ச பரிகாசங்களும் உடைந்துபோன மனக்கிளையில் துளிர்த்த அறிவு தளிர்களை வளர்ந்தெழாமலே செய்திருக்கின்றன… வேர்க்கும் வினாக்களை அதிகாரம் எழுப்புகையில் “சுருண்டிருக்கும் உயிர்”

இறந்த காலம்

ஜனவரியில் வெளிவரவுள்ள  ‘ இறந்த காலம்’ நாவலிலிருந்து… ஒர் அத்தியாயம் சைகோன், கொஷன்ஷீன் (இந்தோ சீனா) – ஸ்ரீமுக வருடம் தை மாதம் 21ந்தேதி (1934ம் வருடம், ஜனவரிமாதம் 15 ந்தேதி)     சிரஞ்சீவித் தம்பி சதாசிவத்திற்கு, தமக்கை வேதவல்லி எழுதிக்கொண்டது. இவ்விடம் என் கணவரும், பிள்ளைகளும் ஷேமம். “இறந்த காலம்”

பெறப்படாத பிரியம்

அவளுக்கென பிரத்யேகமான மூலக்கூறுகளுடன் துளித்துளியாய் மனதினுள் ஊறி தளும்பும் பிரியத்தை மறுத்தால் என்செய்வது … பிறருக்கு வழங்கலாமெனில் ஏற்கனவே பெறுகிறார்கள் அவரவரின் கொள்கலனுக்கேற்ப .. புதியவருக்கென யோசித்தால் தனித்தன்மையுடையதை எப்படி …. துளிர்க்கும் ஊற்றுக்கண்ணை வெறுப்பின் இருண்மை கொண்டு அடைக்கலாமெனில் அதன் தொழில்நுட்பம் கைவரப் பெறவில்லை…. பிரியத்தை மறுக்காதீர் “பெறப்படாத பிரியம்”

அந்த ஜன்னல்

கடந்த வருடம் மார்ச் மாதம், எனது பத்திரிகை பணியை முடித்துக்கொண்டு நான் வேறொரு மாகாணத்திலிருந்து என் வீட்டிற்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். என் எதிரிலிருந்த இரண்டு நடுத்தரவயது விவசாயிகள் எதுபற்றியோ ஆழ்ந்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் ஜியென் பகுதியில் இறங்கப் போவதையும்,அங்கிருந்து நீண்ட தொலைவிலிருக்கும் ஜியானுக்கு “அந்த ஜன்னல்”

பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா

This entry is part 15 of 45 in the series நூறு நூல்கள்

பல்வேறு காரணங்களினால் தாய் மண்ணை விட்டு விலகி வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களின் மனநிலை, வாழ்வியல் நிதர்சனங்கள்,சொந்தங்களை விட்டு விலகியிருந்துவிட்டு தாய்நாடு திரும்பி தனக்கான புதிய அடையாளத்தை தேடிக் கொள்வதில் இருக்கும் சிரமம் அதன் வலி என பலவகையிலும் இந்த நூல் எனக்கு நெருக்கமாய் இருந்தது.

சித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்

தறிகெட்டு இயங்கும் மரபணுக்களின் அசாதாரண செயல்களை விவரிக்கும் கேன்சரின் கதை அது. நிறைய யோசித்தபின்,   மறுபுறம் மரபணுவின் இயல்பான செயல்பாட்டைப் பேசும் இன்னொரு கதை இருப்பதை உணர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த யிங் (Ying) கதையை பாலன்ஸ் செய்ய வந்திருக்கும் இந்த யாங் (Yang) கதை அதே சுவையுடன் வெகு நன்றாகவே வந்திருக்கிறது. கிரேக்க தத்துவஞானிகளில் துவங்கி கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளின் கதையை இந்தப் புத்தகம் சொல்கிறது. ஆங்காங்கே மன நோய்கள் விரவியிருக்கும் தன் குடும்ப வரலாற்றினூடே முகர்ஜி, மென்டல் மற்றும் டார்வின் போன்ற மகத்தான விஞ்ஞானிகளின் ஆய்வுகளில் துவங்கி மன நோய்களுக்கு மரபணு காரணமாகுமா என்று கேட்டுக் கொண்டு இன்று ஆய்வு செய்யப்படும் CRISPR/Cas-9 வரை வந்துவிடுகிறார்.