இயற்கையில் இருந்து கலைப் படைப்பை உருவாக்குவது ஆண்டி கோல்ட்ஸ்வொர்தி (Andy Goldsworthy)க்கு உவப்பானது. காலப் போக்கில் அந்த படைப்பு உருமாறுகிறது; சிதைகிறது. அந்தத் தோற்ற மாற்றங்கள் ஒளிப்படங்களில் கண்காட்சியாகின்றன. அவற்றை இங்கே காணலாம். “என்னுடைய ஆக்கங்கள் கலையைக் குறித்து அல்ல; அவை வாழ்க்கையைக் குறித்தவை. நம் வாழ்வின் பெரும்பாலான “இயற்கை என்னும் நிலையாமை”
Category: இதழ்-195
தொழுது உயர் கையினன், துவண்ட மேனியன் (5)
குழுவும் நுண் தொளை வேயினும், குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும், இனிய சொல் கிளியே!
முழுவதும் மலர் விரிந்த நாள் முருக்கு இடை மிடைந்த
பழுவம், வெம் கனல் கதுவியது ஒப்பது பாராய். (2162)
குழலிசையினும் யாழிசையினும் இனிமையானவளே! அடர்ந்த மரங்களில் பூத்திருக்கும் சிவந்த முருக்க மலர்கள் காடு தீ பற்றி எரிவதைப் போல காட்சி தருவதைப் பார்.
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்: ‘பெருங்கடல் வேட்டத்து’
அருள் எழிலன் அவர்களின் ‘பெருங்கடல் வேட்டத்து’ எனும் ஆவணப்படம் சமீபத்தில் பேராசிரியர் வஹீதையா கான்ஸ்டன்டைன் அவர்கள் முன்னிலையில், மாலதி மைத்ரி அவர்கள் முன்னெடுத்த கலந்துரையாடலுக்கான திரையிடலில் காணக் கிடைத்தது. இந்த ஆவணத்தின் தனித்தன்மை என முதன்மையாக ஒன்றை சொல்லவேண்டும் எனில் அது இதிலுள்ள காமம் செப்பாது கண்டது மொழியும் தன்மை. இது மீனவ துயர்களை ஊதிப் பெருக்கியோ, அல்லது பரிதாபத்துக்கு உரியவர்களாக காட்டியோ, அதன் வழியே அன்றைய நாளின் ஆளும் வர்க்கச் செயல்பாட்டின் மெத்தனப் போக்கை, இடர் நீக்கப் பணியின் அலட்சியத்தை, உணர்ச்சிச் சுரண்டலாக …
ஜோஆன் டிடியன்
ஜோஆன் டிடியன் (Joan Didion) என்னும் எழுத்தாளரை, திரைக்கதாசிரியரை, பத்தியாளரை உங்களுக்குத் தெரியுமா? கீழே ஒரு சுருக் அறிமுகம்:
எழுத்தாளன் கவிதை
என்ன வேண்டுமானாலும் எழுதலாம்
உன் எழுத்துக்களை மட்டுமே வாசிக்கிறது இவ்வுலகு
ஒயினை அருந்தியபடியே
புகைமூட்டம் மணக்கும்
கொல்வதற்கு உரிமம்
தினமும் திட்டம் போட வேண்டி இருக்கிறது. கீழே குப்புற விழுந்த நிலை. வாழ்வை அளந்து பார்க்க வேண்டி இருக்கிறது… காஃபி கரண்டிகளால் இல்லை- மாத்திரைகளால். அவற்றை காலைச் சிற்றுண்டியோடு, மதிய உணவோடு, பிறகு இரவுச் சாப்பாட்டோடு வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. மச்சகன்னிகளாவது, மலர்ந்திருக்கிற லைலாக் புதர்களாவது? அந்த இளைஞனுக்கு எதுவும் புரிந்திருக்கவில்லை. அவனுக்கு என்ன வயதிருந்திருக்கும் அப்போது, இருபதுகளில் இருந்தானா? இப்போது எல்லாம் மாத்திரைகள்தான், நான் அறுவை சிகிச்சைத் தலத்துக்கு தொலைபேசியில் பேசி விட்டேனா, எரிவாயுக்குக் கட்டணத்தைக் கட்டினேனா, என்னிடம் வங்கிச் செலவு அட்டை இருக்கிறதா?
மணம்
காலை முதல் இரவு வரை நடக்கும் ஹோட்டல் அது. பலவிதமான பலகாரங்கள் காலை முதல் இரவு வரை செய்யப்படும். இந்த வாசனை முதலில் அவன் ஆடைகளில் மட்டுமே இருந்தது. பிறகு மெல்ல மெல்ல அது அவன் உடலுக்கு நிரந்தரமாக மாறத்துவங்கியது. இரண்டு மூன்று நாள் அவன் வேலைக்குப் போகாமல் இருந்தாலும் அவன் மேல் இந்த வாசனை இருப்பதாகவே வசந்திக்கு தோன்றியது.
யாதும் ஊரே – யாவரும் கேளிர் (குடிபுகல் – பாகம் 4)
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று பல கண்டங்களுக்குள் புகுந்து ஆங்காங்கே நிலவும் சூழல்களை ஆய்ந்ததின் மூலம், எல்லைகள் இல்லாதபோதும்கூட குறிப்பிட்ட ஒரு பகுதியை வெற்றிடமாக்கி இன்னொரு பகுதியை மூச்சுத் திணறச் செய்யும் அளவு பெருந்திரள் குடியேற்றம் நிகழ்வதில்லை என்று முந்தைய பகுதிகளில் நிறுவி விட்டோம். ஆனால் அத்தனை நல்நோக்கங்கள் “யாதும் ஊரே – யாவரும் கேளிர் (குடிபுகல் – பாகம் 4)”
குளக்கரை
கொசுக்கள் குளம், குட்டைகளில் நீரில் முட்டை இடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் லார்வா எனப்படும் இளம் குஞ்சுகள் இந்த மைக்ரோ ப்ளாஸ்டிக் முத்துக்களை உணவோடு சேர்த்து உண்கின்றன. இந்தக் கொசுக்களை உண்ணும் பறவைகள், வௌவால்கள் போன்ற இதர உயிரினங்களை உணவுச் சங்கிலியில் மேல்நிலையில் உள்ள பிராணிகள் உண்ணும்போது அவை படிப்படியாக மேலே உயர்ந்து, மனிதரின் உணவுச் சுழற்சிக்குள் வந்து விடுகின்றன.
தப்பித்தல் நிமித்தம்
முக்கியமான கதையான கன்னியாகுமரி, மனிதனின் ஆழ்மனதுக்கும் மேல்மனத்துக்கு இடையிலான போராட்டத்தை இயல்பு மீறாவண்ணம் காட்டுகிறது. காமமும் மரணமும் தொடர்ந்து ஒன்றை ஒன்று நிரப்பும் இரு வேறு விசைகளாக மனித மனதை அலைக்கழிக்க வைத்தாலும் ஒன்று திரும்பவியலா நிகழ்தகவைக் கொண்டது என்பதால் மற்றொன்றின் அலைகழிப்பு மனிதனின் கீழ்நிலையின் முடிவுறா ஆழத்தைக் காட்டும் படிமமமாக என்றும் அமைந்துவிடுகிறது.
மகரந்தம்
உலகில் உள்ள எண்ணற்ற எண்கள் அத்தனையையும் கூட்டினால் என்ன வரும்? -1/12 என்று விடை வரும். இதைச் சொன்னவர் நம் ஊர் ராமானுஜனாக இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்? இதென்ன கணக்கு என்று விளங்கவில்லை, ஆனால் மார்க் டாட்ஸ் என்பவர் மீடியம் இடுகையொன்றில் “1 + 2 + 3 + ⋯ + ∞ = -1/12” என்ற ராமானுஜன் கூட்டுத்தொகை சமன்பாடு குறித்து விளக்கமாக எழுதியிருக்கிறார்
ஜனநாயகத்தின் வழிகள்
இன்று தமிழகம்தான் இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நடைபெறும் மாநிலம். 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் 20,450 கண்டன ஆர்ப்பாட்டங்களும் அடுத்தபடியாக பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் முறையே 13,059 மற்றும் 10,477 ஆர்ப்பாட்டங்களும் நடந்தது. இவற்றில் கணிசமான அளவிலான போராட்டங்கள், அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்த்தே இங்கு நடத்தப்படுகின்றன. தமிழக அரசும் மத்திய அரசும் தமிழக மக்களை கேட்காமலேயே திட்டங்களை அமல்படுத்திடுகின்றன என்றும், அவை தமிழக நலன்களுக்கு எதிரானவை… இப்போது எட்டுவழிச் சாலை, கோவையின் குடிநீர் விநியோகம் தனியார்ப்படுத்துதல் போன்ற திட்டங்கள் மக்களிடம் எந்த கருத்தும் கேட்காமல், மக்களுக்கே தெரியாமல் கொண்டு வரப்படுகின்றன என்றும், இதற்கு முன்கூடங்குளம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெய்ல் குழாய்கள் பதிக்கும் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத் திட்டம், நீட் நுழைவுத் தேர்வு முதலிய பிற திட்டங்களும்…
ஜோசியம் – ஜோலி – சீலம்
இஸ்ரேலின் யூரி கெல்லர் (Uri Geller) தென்பட்டார்; அவர் கரண்டிகளை கண்ணாலே வளைத்தார்; மாற்றுகிரகவாசிகளுடன் உரையாடினார். மேற்கத்தியர்கள் அவரை அபரிமிதமாக நம்பினர். காற்றில் இருந்து பெட்ரோல் கிடைக்கும் இடங்களை கண்டுபிடிக்கலாம் என நம்பி, ஃப்ரெஞ்சு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பல மில்லியன் டாலர்களை எல்ப் அக்விடேன் (Elf Aquitaine) ஆருடத்தில் கரைக்கிறார். புற்று நோய் உருவாகுவதற்கு காரணமாக இருக்கும் “பூமிக் கதிர்”களை, அறிவியல்பூர்வமாக இல்லாமல் முள்கரண்டி குச்சிகளால் நீரோட்ட கணிப்பாளர்களைக் கொண்டு ஜெர்மனியில் தேடுகிறார்கள். ஃபிலிப்பைன்ஸில் ஆவியின் துணை கொண்டு அறுவை சிகிச்சை நடக்கிறது. ராணி எலிசபெத் முதற்கொண்டு கடைநிலை குடிமகன் வரை எல்லோரும் பேய், பிசாசு பைத்தியமாக இங்கிலாந்தில் திரிகிறார்கள்.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எக்கச்சக்கமான மதங்களை ஜப்பான் கண்டுபிடித்திருக்கின்றது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குறி சொல்வோரை ஜப்பான் மட்டுமே தழைக்கவைக்கின்றது.
உண்டியலின் மேல் சிறு இறகு
எப்போதாவது கேட்க
வாய்க்கிற
குயிலின் கூவல்
எதிர்க்குரலின்றி
நுழைவு
என்னோடு வாழும் மனிதர், சமையலறையில் இருந்தார், அவரது கண்களில் வினோதமான உணர்வு தோன்றியது. அவர், “என் கால் சராய் கிழிந்து விட்டது,” என்றார். ஒரு முழங்கால் பகுதி அருகே மெல்லிய கிழிசல் இருந்தது, தோலிலும் ஒரு வெட்டு தெரிந்தது. நான் அந்த உடுப்பை, கடைக்குப் போக உபயோகிக்கும் பையில் இருந்த, கிழிந்திருந்த வேறு உடுப்புகளோடு போட்டேன். அவர், “நிஜமாகவா?” என்றார். நாங்கள் ஸ்காட்ஸ்கேலில் இருந்த மேஸிஸ் கடைக்கு ஓட்டிச் சென்றோம்.
ஏதோ நடக்கிறதே அங்கிருந்து சில தபால் அட்டைகள்
என்னோடு வாழும் ஆண், வீட்டுப் பூனைகள் போய் விடும், பிறகு திரும்பாது என்று கவலைப்படுகிறார், ஏனெனில் ஒருக்கால் அவருமே அதையே செய்யக் கூடியவர்தான். ஒரு நாள் அவர் எனக்கு லிடியா டேவிஸின் கதை ஒன்றைப் படித்துக் காட்டினார். அதில் கதை சொல்பவர், விவாஹ ரத்து ஆனவர், தன் கணவரின் தொண்டையில் சிக்கிக் கொண்ட ஒரு மீன் எலும்பை நினைவு கூர்கிறார். ப்ரெட்டும் தண்ணீரும் கொண்டு அதை அகற்றச் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை, அவர்கள் பாரிஸ் நகரத்தின் தெருக்களில் வெளிப்படுகிறார்கள், அங்கே அவர்கள் ஒரு மருத்துவ மனைக்கு வழி காட்டி அனுப்பப்படுகிறார்கள்.