வேற்றிடவேர் படியும் கிரணத்தின் நிறப்பிரிகை

அரட்டையாக ஆரம்பித்த பேச்சு இந்திய கவிஞர்களைப்பற்றி சுற்றி வந்து தமிழ்க் கவிஞர்கள்கள், எழுத்தாளர்கள் பற்றிய உரையாடலாக நிலைபெற்றது. தமிழின் முன்னோடியான எழுத்தாளர்கள் அமெரிக்காவைப்போல பெருவாரியான இதழியல், பதிப்பக வெற்றியின் வழி அறியப்படுபவர்கள் அல்ல என்கிற விஷயம் தமிழ் எழுத்தாளர்களை வேறுபடுத்திக் காட்டுவது. பெரும்பாலோர் வாசிக்கும் பரப்பிலக்கியம் இலக்கிய தகுதிகளுக்கு உரிய செவ்விலக்கியம் என்ற வேறுபாடு அமெரிக்காவில் அநேகமாக இல்லை. ஆனால் தமிழில் அதைப்போன்ற இருமை இருப்பதன் காரணம் என்ன என்ற திசையில் உரையாடல் சென்றது. சிறிய வாசகர் வட்டம் காரணமாக பதிப்பகத்துறை பெரும் ஆற்றலுடன் இயங்கும்படியான சூழல் அமையாதது என்பதுடன் தமிழ் எழுத்தாளர்கள் என்றுமே பதிப்பக வெற்றியை ஒரு பொருட்டாக எண்ணி அதை நோக்கி பாய்பவர்கள் அல்ல, கவிஞனாக எழுத்தாளனாக இருப்பதையே ஒரு வாழ்க்கை முறையாக …

அமெரிக்காவின் கட்டடங்கள்

அந்தப் பக்கம் கனடாவின் எட்மண்டன் நகரத்தில் துவங்கி இந்தப் பக்கம் அமெரிக்காவின் மில்வாக்கி நகரம் வரை ஊர் ஊராகச் சென்று ஒளிப்படம் எடுப்பது பாரி க்ஃபெல்லர் (Barry Gfeller) என்பவரின் பொழுதுபோக்கு. அவர் மறைவிற்குப் பிறகு அவரின் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நகர நிழற்படங்கள் கிடைத்திருக்கின்றன. சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

சமஸ்கிருதம் – சதுரங்கம் – தேசிகன் – டான் கனூத்

ஹாமில்டோனியன் பாதைகள் குறித்து படிக்க இங்கே செல்லலாம்: Donald Knuth: The 2016 Paris C. Kanellakis Memorial Lecture கீழே கேட்கலாம்:

மௌனம் களையட்டும்

முதலில் ஊருக்குப் புறப்பட நான் தயாரான போது எனக்கு இதைப்பற்றி எவ்வித சிந்தனையும் இல்லை. ஒரு நாள் திட்டம் தான் காலையில் சென்று நண்பர்களுக்குப் பத்திரிக்கை வைத்துவிட்டு மாலை அல்லது இரவு புறப்பட்டு வந்துவிட வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். சொந்தங்களுக்கு இரண்டு வாரத்திற்கு முன்பே அப்பவும் அம்மவும் பத்திரிக்கை வைத்துவிட்டார்கள். என் நண்பர்களுக்கு நான் தான் வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். நான் கூப்பிட்டாள் தான் அவர்கள் வருவார்கள் என்ற நிலை உருவாகியிருந்தது. நான் சென்னைக்கு சென்றதும் அவர்களை மறந்துவிட்டதாக அவர்களுக்குள் ஒரு எண்ணம் வந்திருந்தது. விடியகாலையிலேயே எழுந்து குளித்து தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் போது தான் என் அப்பா என்னிடம் வந்து அந்த குண்டைப் போட்டார்.

மண் உறும் முரசு இனம் மழையின் ஆர்ப்பு உற

இப்பாடலில் கம்பர் கோசல நாட்டின் அமைச்சர்களின் சிறப்பைக் கூறுகிறார். ஒரு நாடு என்பது மன்னனால் மட்டுமே ஆனது அல்ல. ஆக்கபூர்வமாக இயங்கும் ஒரு நாட்டில் அரசு, அமைச்சு, படை, வணிகம், வேளாண்மை ஆகியவை சிறப்பாக இருக்கும். அவ்வாறான நாட்டில் ஓர் அரசின் பணி வாணிகம் செழிக்கவும் குற்றங்களை கட்டுக்குள் வைக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருக்கும். அவ்வாறான நிலையில் அமைச்சுப் பணி அதற்கென சில தன்மைகளைக் கொண்டதாக இருக்கும். கோசல நாட்டின் அமைச்சர்கள் தலைமுறைகளாக அப்பணியைச் செய்து வருபவர்கள். அமைச்சுப் பணியின் அடிப்படைகளை – மனநிலைகளை தந்தையிடமிருந்து பாட்டனிடமிருந்து பெற்றவர்கள். அப்பணியின் நுணுக்கங்களும் விபரங்களும் சிறு வயது முதல் கேட்டு அறிந்தவர்கள்.

குளக்கரை

உங்கள் நாட்டில் சுயாட்சி நடக்கிறது. தன்னாட்சியுடைய சமுதாயத்தில் இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத ஏதோவொன்றின் மீது பிழை கற்பித்து பழி போடுவோம். அதை மூன்று புத்ததகங்கள் கொண்டும், தற்காலத்தில் அல்காரிதம் நிர்ணயிக்கும் முடிவுகளைக் கொண்டும் இந்தக் கட்டுரை ஆராய்கிறது. இயற்கையின் விதி என்றோம்; கடவுள் வகுத்த வழி என்றோம்; வரலாற்றின் சதி என்போம்; ஏதோவொரு காரணத்தைக் கற்பிக்கிறோம். இதே போல் கணினி நிரலியும், தன் முடிவுகளுக்கும் நிர்ணயங்களுக்கும், நம்மால் எழுதப்பட்ட சட்டதிட்டங்களைக் கொண்டு நெறிப்படுத்தி மனிதரின் வாழ்க்கையை திசைதிருப்புகிறது. இந்த மாதிரி வினைச்சரம் அமைத்த நுண்ணறிவுப் பாதை எப்படி இருக்கும்?

மூடிய எல்லைகள் – முடியாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 2)

1970கள் அல்லது 80களில் வெளிவந்த பல இந்திய திரைப்படங்களில் வில்லன்கள் இந்தியாவுக்குள் தங்கம் கடத்திக் கொண்டு வருபவர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள். அந்தப் படங்களைப் பார்த்து வளர்ந்த காலத்தில் நாம் அந்த வில்லன்கள் தேசபக்தியில்லாத குண்டர்கள், அவர்களுக்கு சுயநலம்தான் முக்கியம் என்று நினைத்துக்கொள்வது வழக்கம். அப்போதெல்லாம் இந்தியா ஒரு மாபெரும் லைசன்ஸ் “மூடிய எல்லைகள் – முடியாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 2)”

ஏதிலி வாழ்வது எப்படி?

இப்படிதான் வளர்கிறது வாழ்க்கை. குடும்பங்கள் விரிகின்றன, பிறரது ஆசிகளும் பொறுப்புகளும் நம்மை நாடி வருகின்றன. நமக்கு வசதியான பிரதேசத்தை விட்டு வெளியேறும்போது, நாம் வளர்ந்த காலத்தில் உண்ட ரொட்டிக்கு மாறாய் வேறொன்றை உண்ணும்போது, பகுத்துணரும் மனப்பான்மை வளர்கிறது. சல்லா, சப்பாத்தி, வெந்நீர் கார்ன்பிரெட், பிடா, இன்ஜெரா, பாகெட்- வேறொரு ரொட்டியை, வேறு வகையில் காரம் சேர்ந்த உணவை உண்பது என்பது எவ்வளவு அற்புதமானது. உன் மொழிக்கு மாறாய் வேறொரு மொழியில் கனவு கண்டு கொண்டிருப்பவன் அருகில் உறங்குவது என்பது எவ்வளவு அற்புதமானது. இந்த திருமண நாள் புகைப்படத்தை நினைத்துப் பாருங்கள்

நய்பாலும் நோபலும்

அக்காலத்தில் நைபாலை வாசிப்பதன் மாயம் இதுதான். அவரது பார்வைகள் மற்றும் கருத்துகளுடனும் நான் எப்போதும் மாறுபட்டேன்: ஒப்புக்கொள்ள முடியாத அளவு வலிக்கிறது என்று சொல்லத்தக்க உண்மைகளின் அடிப்படையில் அமைந்தவை என்பதால் சில; கண்டனத்துக்குரியவை என்று சில; குறிப்பாய், இஸ்லாமிய உலகு குறித்த அவரது எழுத்தில். ஆனால், வேறு யாரும் பொருட்படுத்தத் தக்கது என்று கருதாத விஷயங்களை அவர் எழுதிக் கொண்டிருந்தார்; அனுபவத்தின் புதிய பரிமாணங்களை அகழ்ந்தெடுப்பதற்கான சொற்களை அவர் கண்டடைந்திருந்தார்.

கமலதேவி – இரு கவிதைகள்

அன்று கவரப்பட்ட
திரௌபதியின் வஸ்திரம்
கிடைக்கவேயில்லை…
கண்ணன் தந்த ஆடையோடு
இதுவரையும் வந்துவிட்டாள்.

மகரந்தம்

அடுத்து என்ன வரப் போகிறது? மனித இனம் தாக்குப் பிடிக்குமா? நம் குடும்பம் எப்படி வரப் போகும் பிரளயத்தில் இருந்து தற்காத்து காப்பாற்றிக் கொள்ளும்? இதுதான் பெரும் பணக்காரர்களின் கவலை + கேள்வி. இதற்கான விடைகளையும் நடக்கவிருக்கும் சாத்தியங்களையும் யுவல் நோவா ஹராரி (Yuval Noah Harari), தன்னுடைய அடுத்த புத்தகமான 21 Lessons for the 21st Century-இல் ஆராய்கிறார். இந்தப் புத்தகம், அவரின் முந்தைய நூல்களான Sapiens: A Brief History of Humankind, மற்றும் Homo Deus: A Brief History of Tomorrow-வின் தொடர்ச்சியாக இருக்கிறது.

மோ வு மோ வு

திரை போல் இருள் கவியக் கவிய ஏரியின் கரையோரங்களில் கேம்ப் ஃபயர் முளைத்தது.வண்ண வண்ண நாடோடிக் கூடாரங்களிலிருந்து வித விதமான இசைக் கருவிகளோடு மனிதர்கள் அந்த செந்தீயைச் சுற்றிக் குதித்து ஆடினார்கள், பாடினார்கள்.மீராவிற்கு இங்கு வீணை இல்லையே என்று ஏக்கமாக இருந்தது.கிரி புல்லாங்குழலை எடுத்து அவளுக்குப் பிரியமான “நீரில் படரும் நிலவின் ஒளி உன் அழகைக் காண ஏறி வந்தது. காட்டுக் கூடாரத்தில் உன்னை ஒளித்தேன். காற்று போய் சொல்லி விட்டது” என்று வாசிக்கையில் இன்பம், முழு இன்பம் இதுதானோ என நினைத்தாள். குழுக்களாகக் கூடி அங்கிருந்தவர்கள் புதிர் விளையாட்டுக்களைத் தொடங்கினர். வார்த்தைகளையும், எழுத்துக்களையும் கலைத்துப் போட்டு ’கநீ, கிரி, கூல், சப, ஸட, நரு, யம், லனி, வல, தவி, தான்… என்று மீரா வேகமாகச் சொல்லிக்கொண்டு போகையில் பேந்தப் பேந்த எல்லோரும் முழித்தார்கள்.

யானையைச் சுடுதல்

அங்கு ஐரோப்பியர்களுக்கு எதிரான சல்லித்தனமான காழ்ப்புணர்வு நிலவி இருந்தது. கலவரம் செய்யும் அளவிற்கு எவருக்கும் துணிவில்லை என்றாலும் ஐரோப்பிய பெண்மணியொருவர் தனியே பஜார் வீதிகளில் நடந்து சென்றால் அவர் மீது வெற்றிலைச் சாறு உமிழப்படும் என்பதென்னவோ நிச்சயம். நான் போலீஸ் அதிகாரியாக இருந்ததால் அவர்களது காழ்ப்பிற்கான இலக்காக இருந்தேன் என்பது வெளிப்படை. தங்களுக்கு பாதிப்பில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டபின் அவர்கள் என்னை வம்பிழுத்தார்கள். கால்பந்தாட்ட மைதானத்தில்  சுறுசுறுப்பான பர்மிய குடிம்பனொருவன் என்னை வேண்டுமென்றே தடுக்கிவிழச் செய்தபோது ஆட்ட நடுவர், அதைக் கண்டும் காணாதது போல் வேறுபக்கம் திரும்பிக் கொள்வார். பார்வையிட்டுக் கொண்டிருக்கும் கூட்டமோ கோரமான பலத்த சிரிப்பொலியொன்றை எழுப்பும். ஒற்றை நிகழ்வாக அல்லாது பலமுறை இவ்வாறே நிகழும். இறுதியில் ஏளனத்தோடு ‘மஞ்சள்’ முகத்துடன் என்னை எங்கும் எதிர்கொண்ட இளைஞர்களும், நான் கடந்து சென்றுவிட்டேன் என்பதை அறிந்துகொண்டபின் அவர்கள் என்மீதெரிந்த வசைகளும் என்னை மிகவும் எரிச்சலூட்டின. இவ்விஷயத்தில் இளம் பௌத்த பிட்சுகளே மோசமானவர்கள். ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அவர்களில் ஒருவருக்குக்கூட தெருக்கோடியில் நின்றுகொண்டு ஐரோப்பியர்களை கேலி செய்வதைத் தவிர வேறு வேலையேதும்…

வாசகர் மறுவினை

இசை/ நாட்டியம்/ இலக்கியம்/ நாடகம்/ சினிமா/ விளையாட்டுத் தொழில் (ஸ்பொர்ட்ஸ்) போன்றன எல்லாம் நிகழ்த்தல் துறைகள். இவற்றில் சமத்துவம் என்ற கருத்து மிக மிகப் பெயரளவில்தான் இருக்கும். அது இயங்கு களத்தை எல்லாருக்கும் சமமாக அமைக்க வேண்டும் என்ற நன்னடத்தை பற்றிய மதிப்பீடுகளால் உருவானது. இவற்றில் எல்லாவற்றிலும் மேன்மையான வழிமுறையையும் மனிதக் குரங்கு அவ்வப்போது தேர்ந்தெடுக்கிறது. அதைப் பாராட்டியே இலக்கியம், தர்ம சாஸ்திரங்கள், விவிலிய நூல்கள், ஒழுக்கப் பாடங்கள், வாய்வழிப் போதனைகள், பாட்டி/ தாத்தா கதைகள், உபந்நியாசங்கள், சர்ச்சியப் பிரசங்கங்கள், கல்லூரிகளில்/ பள்ளிகளில் அற போதனைகள், ‘ஆசான்’களின் அறக் கதைகள் எல்லாம் எழுகின்றன. மனிதக் குரங்குக்கு அதன் சிறப்பான நடத்தையை இலக்காகத் தொடர்ந்து முன்வைத்தால் அது ஒரு இலட்சிய புருஷனின் குணங்களை அடைந்து விடும் என்ற உடோப்பிய நோக்கம் இது.

கூகி வா தியோங்கோ -வும், மொழியின் கொடுங்கோலும்

மொழியை, தம் ஆட்சியின் கீழிருந்த நிலப்பகுதி மக்களைப் பிரித்து ஆள்வதற்கு வழி வகுக்கும் சூழ்ச்சிக்கு ஆயுதமாக வளைப்பது யூரோப்பிய அதிகாரச் சக்திகளின் நோக்கமாக இருந்தது; மற்ற யூரோப்பிய சூழ்ச்சிகளில், குழு அடையாளங்களை அரசியலாக்குவது- யூரோப்பிய ‘இன’ நோக்கு அறிவியல் மூலம் இனங்களின் அதிகார அடுக்குகளை உருவாக்குவது- போன்றன  காலனிய ஆட்சி முடிந்து பல பத்தாண்டுகள் தாண்டியும் இன்னமும் கடும் வன்முறை நிறைந்த போராட்டங்களில் ஆஃப்ரிக்கர்களையும் இதர மக்களையும் நிறுத்தி இருக்கின்றன.