பூமி குமாரம்

சஹாரா பாலைவனத்தில் பொழிந்து பின் 2011-லில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் பொழிவுத்துகள் 320 கிராம் எடையுடன் இருந்தது; அதிலிருந்து 44 கிராம் விண்பாறை செதுக்கப்பட்டு 7 துகள்கள் ஜிர்கான் என்ற தனிமம் பெறப்பட்டது. டென்மார்க்கில், அதன் அறிவியல் ஆய்வகத்தில் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த உலோகத்தனிம வகை இரும்பில் கலப்பதற்கு பயன்படுகிறது. வராஹரின் கூற்றின் படி இரும்பும் நீரும் செவ்வாயில் உள்ளது. 4.547 கோடானுகோடி வருடங்களுக்கு முன்னர் செவ்வாயின் வெளி மேலோடு அமைந்தது என்றும், சூரியன் பிறந்து 2 கோடி ஆண்டுகளுக்குப் பிறகே இது நிகழ்ந்தது என்றும் டென்மார்க்கின் ஆய்வு சொல்கிறது. ஆனாலும் இதை முடிந்த முடிபாகக் கொள்ள மேலும் ஆய்வுகள் தேவை. செவ்வாயிலிருந்து நம்மைப் பார்க்கையில் நாம் இங்கிருந்து பார்க்கும் வெள்ளியைப் போல் தெரிகிறோமாம்;கால வெளியின் காட்சி மயக்கங்கள்.

கவிதைகள்- சுசித்ரா மாரன்

வெற்றிலையை
இடித்துக்கொண்டிருக்கும் ..
வாழ்க்கை மென்று
துப்பிய பாட்டிகளின் சரணாலயம்..
திருவையில் அரைத்துக் கொண்டே
இருக்கும் காதலை இல்லாமல் செய்து 
இல்லா காதலுக்கு கரம் சிரம் பொருத்தும்
திரைக்கதை அரசிகள்
பக்கத்துவீட்டுஅத்தைகளின்
நட்சத்திர விடுதி…

பொய் ⇒ புளுகு மூட்டை ⇒ புள்ளிவிவரம்

“அனேகமாக எவ்வளவு முறை இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது?” என வினவுங்கள்: டானியல் கானெமான் சொல்லும் கதையைப் பார்ப்போம். தாங்கள் எழுதும் இந்தப் புத்தகத்தை எழுத எத்தனை நாள் ஆகும் என சக நூலாசிரியர்களிடம் வினாத் தொடுக்கிறார் கானெமான். எல்லோரும் பதினெட்டு மாதங்களிலிருந்து இரண்டரை வருடத்திற்குள் புத்தகத்தை எழுதி முடித்துவிடலாம் என்கிறார்கள். அதன் பிறகு, இதற்கு முன்பு பல்வேறு நூல்களை எழுதிய ஒருவரிடம், “உங்களின் போன புத்தகங்களை எழுத எவ்வளவு நாள் ஆனது?” எனக் கேட்கிறார்.
– பத்தில் நாலு புத்தகம் முற்றுப் பெறவேயில்லை

குடிபுகல் சிக்கல்கள் – சாத்தியமான தீர்வுகள் (குடிபுகல் – பாகம் 1)

குறிப்பிட்ட ஒரு தேசம் அல்லது சமூகத்தில் உள்ள ஒரு சமயக் குழு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, அதனுடன் போட்டியிடும் பிற சமூகக் குழுக்கள் தம்மை அச்சுறுத்துவதாக அவை எளிதில் கருதக்கூடும். அப்படிப்பட்ட அச்சங்கள் நியாயமாய் இருப்பதற்கான போதிய வரலாற்றுச் சான்றுகள் கூட இருக்கவே செய்கின்றன. அமெரிக்காவில் கணிசமான அளவில் வாழும் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட கிறித்துவர்கள் தம் உரிமைகளும் விழுமியங்களும் எப்போதும் ஆபத்தில் இருப்பதாய் உணர்கிறார்கள். நூற்று இருபது லட்சம் பேர் கொண்ட இந்தியாவில் எண்பது சதவிகிதத்தினர் இந்துக்கள். ஆனால் அவர்களில் பலர் தம் சமயம் ஆபத்தில் இருப்பதாய் நினைப்பதோடு எதிர்த்து நின்றுதான் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாய் நம்புகிறார்கள். இது போலவே உலகில் வேறு பகுதிகளில் உள்ள யூதர்கள், முஸ்லிம்கள், மற்றும் பிறர், தம் தேசத்தில் பெரும்பான்மையினராய் இருந்தாலும் பிறரது அச்சுறுத்தலை உணர்கிறார்கள்.

யானை பிழைத்த வேல் – பகுதி இரண்டு

தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் (783)
அந்நிகழ்வு அரிதானது என்பதால் அதன் எந்த ஒரு துளியையும் தவறவிட்டுவிடக் கூடாது என இமைக்காமல் அதனை நோக்கியிருந்தனர். அப்படியிருந்தும் இராமன் கையில் வில்லை எடுத்ததைப் பார்த்தனர். அது முறியும் சத்தத்தை கேட்டனர். இமைப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில்  இராமன் வில்லை முறித்தான்.

கவிதைகள்- லாவண்யா, வான்மதி செந்தில்வாணன்

கையெழுத்து மறையும் நேரம்
கருவேலமுள் மண்டிக்கிடக்கும்
காட்டுப்பாதையில் நடந்துபோகையில்
கால்செருப்பு கைச்செருப்பானால்
ஒருவன் மனதில் என்ன தோன்றும்?

எமிலி வில்ஸன் ‘த ஆடிஸி’யை எப்படி மொழி பெயர்த்தார்?

ரோஜா விரல்கள் கொண்ட வைகறை, மூல நூலில் எவ்வளவு முறை தொன்றுகிறாளோ, அதே அளவு மொழியாக்கத்திலும் தோன்றுகிறாள், எப்போதும் ரோஜாக்கள் அல்லது மலர்கள் அல்லது இளஞ்சிவப்பில், எப்போதும் விரல்களுடன் அல்லது தொடுகையாய், எப்போதும்’ அதிவிரைவில் அல்லது புதுப் பிறப்பாய், அல்லது முதற் பிறப்பாய், ஆனால் இப்படி மீண்டும் மீண்டும் வரும் கூறுகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதை பலவிதமாய் மாற்றியிருக்கிறேன்- இவ்விதமாய் படிமங்களும் உருவகங்களும் வாசகருக்கு எப்போதும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்து இதைச் செய்திருக்கிறேன். இருபது முப்பது முறை இப்படி வந்தாலும் அது அலுக்கக் கூடாது. ஒவ்வொரு முறை ஒரு அதிதி வரவேற்கப்படும்போதும், ஒருவர் உடை மாற்றிக் கொள்ளும்போதும், உணவு உண்ணும்போதும், ஹோமரில் நடக்கும் விஷயங்கள் குறிப்பிட்ட வரிசையில் நடக்கின்றன என்பதை வாசகர்கள் அனுபவமாய்ப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அது உங்களைத் தொட வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள இந்தக் கோலத்தில் சிறு சிறு வடிவ மாற்றங்கள் அமைந்துள்ளன. உருப் பெறாத வெறும் மொத்தைகளாக வைகறையின் விரல்கள் வானில் இருக்கக் கூடது என்று நினைக்கிறேன்; வாசகி அவற்றின் தொடுகையை உணர வேண்டும் என்பது எனக்கு முக்கியம்.

பாலுவிலிருந்து பாபுவிற்கு

இந்த வினோ கேட்டதுதான் பாலுவுக்குப் புரியவில்லை.  கற்றலில் தனியாள் வேறுபாடுகள் வகுப்பு முடிந்து வெளிவருகையில் நடைபாதை தூணுக்கருகில் புத்தகத்தைக் கையில் பிடித்தபடி குனிந்து சேலையில் விசிறியிலை மடிப்புகளை உதறி விட்டுக் கொண்டிருந்தாள்.  வந்து அவனுடன் இணைந்து நடந்தபடி , “இப்படி ஒவ்வொரு குழந்தையும் அதுக்குரிய வேகத்திலயும்,விருப்பத்திலயும், மரபியல் கூறுகளின் அடிப்படையிலதான் கத்துக்குது.  அப்படின்னா.  .  .  நல்லாபடிக்கறவங்களுக்கு, சுமாரா படிக்கறவங்களுக்கு, மெதுவா படிக்கறவங்களுக்கு தனித்தனி கிளாஸ் இருக்கறது தப்பில்லயே?”
“வெறுமனே படிக்க மட்டுமா பள்ளிக்கூடம்” 

நெருப்பொளி

கற்களுக்கு அப்பால் இருந்த நிலப்பரப்பு. அவர் அந்தச் சுவரைப் பார்த்தார் – முதல் முறை அவர் பார்த்த போது, அப்பாலிருந்த இருண்ட சரிவில் மௌனமாக இறங்கி ஓடும் குழந்தையைப் பார்த்தார். இறந்து போயிருந்த அந்த நிலம், நிழல்-நகரங்கள், நகராமல் நின்ற நட்சத்திரங்களின் கீழே, அக்கறை இல்லாமல், ஒருவரை ஒருவர் மௌனமாகக் கடந்து போன நிழல்-மக்கள், அத்தனையையும் அவர் பார்த்திருந்தார். அதெல்லாம் போய் விட்டது. அவர்கள் – ஒரு அரசனும், அடக்கம் பொருந்திய மந்திரக்காரரும், அவர்கள் மேலே வானில் மிதந்து பறந்தபடி, உயிரற்ற வான்வெளிக்குத் தன் உயிருள்ள நெருப்பால் ஒளியூட்டிய ஒரு ட்ராகனுமாகச் சேர்ந்து- அதைக் கொத்திக் கிளறி விட்டிருந்தார்கள், பிளந்திருந்தார்கள், திறந்து விட்டிருந்தார்கள்.