சாதாரண வருஷத்துத் தூமகேது – பாரதியார்

1986-ல் comet என்னும் இந்த நட்சத்திரம் பூமிக்கு அருகில் வந்தது. அடுத்து 2061ல் எதிர்பார்க்கலாம். ஆனால், வருடத்திற்கு ஓரிரு முறை அதைப் பார்க்கலாம். அவ்வாறு மே மாதத்தில் தெரிந்ததை இடா அக்வாரிட் விண்கல் பொழிவு (Eta Aquarid meteor shower) என அழைக்கிறார்கள். அதன் படங்களை இங்கே பார்க்கலாம். “சாதாரண வருஷத்துத் தூமகேது – பாரதியார்”

கணினி எழுதிய திரைப்படம்

செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினிகள் சதுரங்கம் விளையாடி கிராண்ட் மாஸ்டர்களை ஜெயிக்கின்றன. நீங்கள் கொங்குத் தமிழில் பேசுவதை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்துக் கொடுக்கின்றன. நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை அனுமானிக்கின்றன. அவற்றை சினிமாவுக்கு திரைக்கதை எழுதச் சொன்னால் எப்படி எழுதும்? அதைப் படமாக எடுத்தால் எவ்வாறு “கணினி எழுதிய திரைப்படம்”

கனவு

தாத்தாவை பிரதியெடுத்தது போல நானும் சம்பாத்தியத்தில் விருப்பமுடையவனாக இருந்தேன். சொல்லப்போனால் என் கனவே அதுதான். மகிழ்ச்சியான கனவு. கனவு என்பதே எண்ணங்களின் தொகுப்புதானே.. எண்ணங்கள் மனதை மையமாக்கி எழுவதால், மனம்தான் கனவாகிறது என்பேன். அப்போதெல்லாம் என் எண்ணங்கள் வண்ணமயமாக இருந்தன. அதையொத்து கனவிலும் நினைவிலும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

தமிழ் சிறுகதைப் போட்டி

தமிழ் மொழி வல்லுனர்கள் குழுவால் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ் ஆக்ஸ்போர்டு வாழும் அகராதியின் இணையத்தளத்தில் 31/7/2018 அன்று வெற்றியாளரின் பெயர் அறிவிக்கப்படும். வெற்றிபெற்ற கதை தமிழ் ஆக்ஸ்போர்டு வாழும் அகராதியின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் வெற்றியாளருக்கு ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு சிறிய வியப்பூட்டும் பரிசு வழங்கப்படும்.

எங்கெங்கு காணினும்…

ஷாரன் குழந்தைகளுடனும், அவளின் அன்பான கணவனுடனும் இந்தியா வந்தாள். அங்கு ‘கண்ணூஞ்சல் ஆடினாள் காஞ்சன மாலை”என்று மாமிகள் பாட ஊஞ்சல் ஆடினாள், மடிசார் புடவையில் திருமாங்கல்யம் கட்டிக் கொண்டாள்.மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குப் போய் குங்குமம் வாங்கி தாலியில் வைத்துக் கொண்டு கண்ணை மூடி சாமி கும்பிட்டாள்.

யாதும் ஊரே, யாவரும் கதை மாந்தர்

“மகா பாரதத்தில் போர்க் காட்சிகளைக் காணவியலா திருதராட்டினனுக்கு சஞ்சயன் போல,” பல நாடுகளுக்கும் போக வாய்ப்பில்லாதவர்களுக்கு, தான் வசித்த நாடுகளில் தாம் கண்டதையும், அனுபவித்ததையும் சுவையான கதைகளாக காட்சிப் படுத்திக் கொண்டே போகிறார். ஒரு கதை சொல்லியாய் இருப்பது மற்ற படைப்புத் தொழில்களை விட சிரமம் வாய்ந்தது. ஒவ்வொரு கதையும் மற்றவர் தொடாத ஒரு விசயமாகவும், புதிய மொழியாகவும் இருக்கவேண்டும். இச்சிரமத்தை வென்று 140-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல கட்டுரைகள், சில நாவல்கள், மற்றும் உலக எழுத்தாளர்களிடம் சுவையான நேர்காணல்கள் என்று 60-ஆண்டுகளில் இவர் தொட்டிருக்கும் தளங்கள் இதுவரை வேறு எவருக்கும் வாய்க்காதது. அவற்றிலிருந்து சிலவற்றை இங்கே சில நிமிடங்களில் சொல்ல முயல்வது…

கவிதைகள் – அன்பழகன் செந்தில்வேல், கமலதேவி

நூல்சுற்றும் உருளை
மொழுமொழுக் கன்னங்களும்
இடையே குருவி வாயும்
மேல்வரிசையின்
இருமுயல் பற்களும்,
அணைத்துக் கொள்ள வசதியான
உயரமும்,
தழுவலின் இயல்பான ஏற்பும்…
அத்தனை உறவுச் சிக்கல்களையும்
ஒற்றை நூலென மாற்றும்.

எம்.எல் – அத்தியாயம் 20-21

இந்த ஊருக்கு என்ன வயதிருக்கும்? எத்தனை நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கும் இந்த ஊர். சங்க காலத்துக்கு முன்பே, இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த ஊர் இருக்கிறது என்று சொல்கிறார்கள். எத்தனையோ லட்சம் மக்கள் வாழ்ந்து விட்டுச் சென்ற ஊர். கோவலனும், கண்ணகியும் இந்தத் தெருக்களில் நடந்திருப்பார்களா? புரட்சி நடந்த ரஷ்யா மாதிரி, சீனா மாதிரி இந்தியாவும் ஆகி விட்டால், இந்த வீடுகள், கட்டடங்கள் எல்லாம் அரசின் சொத்துக்களாகி விடும். அப்பாவின் கடை, சீதா பவனம் கூட அரசுக்குச் சொந்தமாகி விடும்.

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-12

குருநாதர்கள் எல்லோரும் தியாகராஜ ஸ்வாமிகள் என்று தம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தியாகராஜ ஸ்வாமி லோகாயதமாகப் பணம் சம்பாதிக்காமல் உஞ்சவிருத்தி எடுத்து ஜீவனம் செய்து வந்தவர். சரபோஜி மகாராஜா தனம் சமர்ப்பித்துச் சபையில் வந்து பாட அழைத்த போது ‘நிதி சால சுகமா’ என்று பாடியவர். இவருடைய மேன்மையை இன்றிருக்கும் குருநாதர்களுடன் எந்த வகையில் ஒப்பிட முடியும்? மனமெல்லாம் பணம் புகழ் செல்வாக்கு; வாயில் மட்டும் ஆன்மீகம் தெய்வீகம்! ஜானகி ராமன் எழுதுவாரே ‘நடன் விடன் காயகன்’ என்று அது போல் தான் பெரும்பாலானவர்கள் நடந்து கொள்கிறார்கள். இதனால் தானோ என்னவோ காந்தர்வ வேதம் என்று புகழப் பட்டாலும் சங்கீதத்தை வேத அத்யயனத்துக்கு ஒரு படி தாழ்த்தித் தான் வைத்திருக்கிறார்கள்.

ரோபாட்களுக்கு விருப்பு வருமா?- ஜூடேயா பேர்ல்:நேர்காணல்

பேர்ல்: ரோபோட்டுகள் நிகழ்வுச் சான்றுகளுக்கு மாறாக, “நீ இன்னும் நன்றாகச் செய்திருக்க வேண்டும்,” என்பதுபோல், ஒன்றுடனொன்று தகவல் பரிமாறிக் கொண்டால், அப்போது அது முதல் தடயமாக இருக்கும். கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் ரோபோட் அணி ஒன்று இந்த மொழியில் பேசிக் கொள்ளத் துவங்கினால் அப்போது அவற்றுக்கு சுய இச்சை உணர்வு இருக்கிறது என்பது நமக்குத் தெரிய வரும். “ நீ பந்தை எனக்கு பாஸ் செய்திருக்க வேண்டும்- உனக்காகக் காத்திருந்தேன், ஆனால் நீ பாஸ் செய்யவில்லை!”. “நீ செய்திருக்க வேண்டும்,” என்று சொன்னால், நீ என்ன செய்தாயோ, உன்னை அப்படிச் செய்யச் செய்த உந்துதல் எதுவாக இருந்தாலும் அதை நீ கட்டுப்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று பொருள். ஆனால் நீ கட்டுப்படுத்தத் தவறிவிட்டாய் என்று சொல்வது, எனவே முதல் அறிகுறி உரையாடலாய் இருக்கும்; அடுத்தது, இன்னும் நல்ல கால்பந்தாட்டம்.

அகவல், அறிவியல், அக உடல்

அவரின் ‘வினாயகர் அகவல்’ ஒரு யோக நூலாகக் கருதப்படுகிறது. 72 வாக்கியங்களுள்ள அது, உடலின் ஒன்பது வாயில்களைக்(7+2=9) குறிப்பிடுவதாக யோக மரபினர் சொல்கிறார்கள். மயில் அகவும்;குயில் கூவும். ஆனால், யோகியருக்கோ ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், மயில் குயிலாச்சுதடி’எனும் அனுபவம் வாய்க்கிறது. கீழே இணைத்துள்ள பேரா தைராய்டின் அறிவியல் படத்தினை கவனிக்கவும். ‘வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்’. இந்த முகம் காட்டும் குறியீடுகள் பல-கம்பீரம், ஞானம். அதில் சித்தம் கனிந்து செந்தூரமாய்த் திகழ்கிறது.மனிதன் கையால் எடுத்து பின்னர் வாய்க்குள் இட்டு உண்பதைப் போல்,யானையும் தும்பிக்கையால் எடுத்து பின்னர் வாய்க்குள் செலுத்தும்.

விதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி?

ஏன் இவ்வாறு நடந்தது? எப்படி இந்த நிலை உருவானது? உண்மையான ஆதார நிமித்தன் எது? இவ்வாறு நிழந்ததற்கான மூலப் பொறுப்பை எங்ஙனம் கண்டு கொள்வது?
தூண்டு காரணம் என்ன என்பதையும், எப்படி ஒரு வினை நடந்தது என்பதையும் The Book of Why: The New Science of Cause and Effect புத்தகத்தில் ஜூடேயா பெர்ல் என்பவரும் & டானா மாக்கென்ஸி என்பவரும் விரிவாக அலசுகிறார்கள். மனித சிந்தனையில் மூலாதாரத்தை கணினிக்குப் புரியுமாறு விளக்குவது எப்படி என்பதற்கு பாதை போடுகிறார்கள்.

பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்

அடுத்தடுத்த நீதிபதியின் கேள்விகளை வைத்தும், குற்றவ்வாளியின் பதிலைக்கொண்டும் தெரியவந்த செய்திகள் : ஹாலந்து நாட்டவர், பத்திரிகயாளர், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். இந்நிலையில்தான் பாடகி ஒருத்தியுடன் அறிமுகம், கவிதைகளும் எழுதுபவள். அவளின் நட்பில் அவளை முன்னுக்குக்கொண்டுவர ஏராளமாக செலவு, ஒரு நாள் அவர் வெறும் ஆள் என்றவுடன், அப் பெண்மணி இவரை உதறிவிட்டு வெளியேறுகிறாள். பத்து ஆண்டுகளுக்கு மேலாக பெரிய நகைக்கடைகள், ஆயத்தஉடை கடைகள் முதலானவற்றில் விலையுயர்ந்த நகைகள் ஆடைகள் வாங்குவது, நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது. அவற்றிற்குரிய பணத்தை வங்கிகளில் பொய்த் தகவல்களைக்கொண்டு தொடங்கியக் கணக்கில் பெற்ற கடனட்டைகள்,காசோலைகளில் செலுத்துவது, பிடிபடுவது, சிறைசெல்வது.

யுவன் – கதைகளில் அவிழும் மத்ரோஷ்கா பொம்மைகள்

ஒரு சில ஒற்றை வரிகளில், பெரும் மனவெடிப்பை உண்டுபண்ணி விடுகிறார். அது வாசிப்பவரின் மன அலைவரிசையைப் பொறுத்தது என்றாலும், அந்த எளிமையாக ஒரு கனமான விஷயத்தை சொல்லிப்போவது அசோகமித்திரனை நினைவூட்டுகிறது.  உதாரணமாக பாட்டி பேரனிடம் கதைகள் சொல்கிறாள். சில கற்பனைகள். சில வாழ்வின் உண்மைகள். அனுபவங்கள்.  அதில் பாட்டி தான் அந்த காலத்தில் இருந்த கிராமபோனைப் பற்றியும், தான் பாடிய நாட்களிப் பற்றியும் சொல்லும்போது – “அதை விடு.. இதைப் பாடும்போதெல்லாம் எனக்கு என் பெரியண்ணா ஞாபகம் வந்துவிடும். சீர் கொடுப்பதற்காக வந்து செருப்படி வாங்கிக்கொண்டு போனானே.அந்த உத்தமன் முகம் கூட எனக்கு மறந்துட்டதேடா கிருஷ்ணா. எவ்வளவு செல்லமா வச்சிருப்பான் என்னை.பாவி. நான் அன்னிக்கே செத்திருக்க வேணாமா சொல்லு ” என்பாள். இதைப் படித்து விட்டு என்னால் மேலும் படிக்க முடியாமல் மனம் அலைக்கழித்தது. நீர்பட்ட பஞ்சு போலானது மனம்.