சொல்வனம் தளம் கடந்த சில வாரங்களாக சரிவரச் செயல்படவில்லை என்பதை நண்பர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். அதே போல், இதழ் சீரான இடைவெளியில் பதிப்பிக்கப்படுவதில்லை என்ற குறையையும் தெரிவித்திருந்தனர். இவற்றைச் சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தளத்தில் உள்ள பக்கங்கள் திறப்பதில்லை என்ற மிக முக்கியமான தொழில் நுட்ப “பதிப்பாசிரியர் குறிப்பு”
Category: இதழ்-188
இப்படிக்கு
அதுசரி. . நான் என்னமோ ஆணாதிக்கவாதியா மாறிட்டங்கறது போல எழுதியிருக்க. உன்னோட நெற்றி சுருக்கிய முகம் முன்னாடி வருது. நல்லாவே இல்ல. கொஞ்சம் புன்னகையோட கூட வாசிக்கலாமே.
ஏன். . டீ போட்டு தரமாட்டீங்களா? வீடு பெருக்க மாட்டீங்களா? நானும் செய்யலன்னு சொல்லல. நானே செய்யனுமா?
வேலை சுமை தெரியாம இல்ல. அதே வேலையத்தானே நாங்களும் செய்யறோம். பின்ன தினமும் உங்கள வேற தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஊர்வலம் வரனுமா? என்னை அப்படியா நினைக்கிற? குழந்தையில இருந்து கூடவே இருந்த நீயுமா? ஆச்சரியமா இருக்கு. நீ எப்ப பெண்ணாதிக்கவாதியா மாறினன்னு நானும் கேட்கலாமில்ல? என்ன?
இன்னொரு ஒன்று
மாமனார் மாமியாரை ஊரிலிருந்து ஒரு இரண்டு மாதம் அபுதாபி வரவழைக்க விசிட் விசா எடுக்க வேண்டும். அதற்கு இந்த ‘தௌதீக்’ அவசியம். அப்பா அம்மா என்றால் கொஞ்சம் தள்ளிப்போனாலும் பரவாயில்லை. மாமனார் மாமியார் விஷயம். அப்படியெல்லாம் விட்டு விட முடியாது. அதுவும் நாளை வியாழக்கிழமை. வெள்ளி சனி விடுமுறை. இன்றைக்கு ‘தௌதீக்’ எடுத்துவிட்டால் சாயந்திரமே டைப்பிங் சென்டரில் கொடுத்து விசா மனுவை தயார் செய்து விடலாம். நாளை போய் அர்ஜன்ட் பிரிவில் விண்ணப்பித்து விசாக்களை எடுத்து விடலாம்.
குளக்கரை
கிருமிகள் இத்தனை பயங்கரமானவை என்றால், இத்தனை லட்சம் மக்கள் ஏன் உடனே வீழ்ந்து மடிவதில்லை என்பது ஒரு நியாயமான கேள்வியாக இருக்கும். மடியாவிட்டால் என்ன, எத்தனையோ நோய்களோடு வாழ்ந்து குறை ஆயுளோடு இருந்து போகிறார்கள், அதைத் தவிர்க்கலாமே என்று விளம்பர ஆதரவாளர்கள் சொல்லக் கூடும். மேற்படி நிவாரணிகளால்தான் ஆயுள்காலம் நீட்டிக்கப்படுகிறது என்பதை நிரூபிக்க என்னென்ன சான்றுகள் தேவைப்படும் என்று நாமெல்லாம் யோசிப்பது இல்லை. கிருமிகளே இல்லாத, பாக்டீரியாக்களே இல்லாத, வைரஸ்களே இல்லாத கடும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட வசிப்பிடங்கள், நகரங்கள், வேலை செய்யுமிடங்களை நம்மால் உருவாக்க முடியுமா? அது மேலானதாக இருக்குமா? 25 ஆம் நூற்றாண்டிலாவது அப்படி ஒரு வாழ்க்கை நமக்கு சாத்தியமாகுமா?
மகரந்தம்
21 ஆம் நூற்றாண்டில் உலக சமுதாயம் பெரும் கருத்துக் குழப்பங்களில் சிக்கிக் கொண்டு தள்ளாடி நடை போடுகிறது. ஆனால் மறுபடி மறுபடி கனவு வியாபாரிகள் தம் உதவாக்கரைப் பொருட்களை விற்பதை நிறுத்தவில்லை. ஆய்வுகள், அறிவியல், தொழில் நுட்பம், தத்துவக் கிளர்ச்சி என்று பல பெயர்களில், புதுப்புது உடுப்புகளணிந்து அவர்கள் உலவுகிறார்கள். இங்கே கொடுக்கப்படும் ஒரு செய்தி அத்தகைய வியாபார முயற்சிகளில் ஒன்றா, இல்லை உண்மையான தகவலா என்பதைத் தீர ஆராய்ந்தால்தான் நம்மால் அறிய முடியும். ஆனால் இங்கு இதைக் கொடுக்க ஒரு காரணம், இந்தக் கனவு எப்படியெல்லாம் மறுபடி மறுபடி தளிர்க்கிறது என்பதைக் காட்டத்தான்.
எம். எல். – அத்தியாயம் 18
கூத்தியார் குண்டுப் பிள்ளை தன் இரண்டு மகள்களுடனும் மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது ஏழரை மணி இருக்கும். கோவிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. அதனால் சுவாமியையும், அம்மனையும் ஆற அமர நின்று தரிசிக்க முடிந்தது. மீனா சென்ட்ரல் டாக்கீஸைத் தாண்டி, மெத்தைக் கடைகளின் பக்கம் வரும்போதே வீட்டை மறந்துவிட்டாள். சோமு அவர்களுடன் கோவிலுக்கு வரமாட்டேன் என்று சொன்னதெல்லாம் அவளுடைய மனதிலிருந்து காணாமல் போய்விட்டன. மேலக்கோபுர வாசலில் கூத்தியார் குண்டுப் பிள்ளை மீனாவுக்கு, கற்பகத்துக்கும் நிறைய பூ வாங்கிக் கொடுத்தார்.
அறிகுறிகளும் அடையாளங்களும்
திருமணமாகி பல வருடங்கள் கழிந்த பிறகுதான் அவன் பிறந்தான்; பல ஆண் டுகள் கடந்து விட்டதால் வயதாகி அவர்கள் இப்போது தளர்ந்தும் விட்டனர். அவளுடைய பழுப்பு நரைக் கூந்தல் ஒழுங்கின்றி கட்டப்பட்டிருந்தது. மிகச் சாதாரணமான கருப்பு ஆடை அணிந்திருந்தாள். மற்ற தன் வயதுப் பெண் களைப் போலின்றி (பக்கத்து வீட்டு திருமதி. சோலின் முகம் எப்போதும் பவுடரோடும், தொப்பியில் அழகிய பூங்கொத்துகளோடும் இருக்கும்) அவள் முகத்தோற்றம் எப்போதும் வெளிறிப் போனதாக இருக்கும். ஒரு காலத்தில் தொழிலில் கொடி கட்டிப்பறந்த கணவர் இப்போது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலே தங்கி அமெரிக்கவாசியாகிவிட்ட , தன் சகோதரன் ஐசக்கை சார்ந்திருக்கிறார். அவர்கள் அவனுக்கு “ பிரின்ஸ்” என்று செல்லப் பெயர் வைத்திருக்கின்றனர்.
வாலஸ் ஸ்டீவென்ஸின் உன்னதத் தேடல்
சமய உணர்வு மற்றும் சுதந்திர வேட்கை வெளிப்படும் மனநிலையில், அவற்றுக்கு அர்த்தம் இருக்கும் சூழலில், இது போன்ற உன்னத ஏக்கங்கள் இயல்பாகவும் பொருத்தமாகவும் தோன்றுகின்றன. ஆனால் அவ்விதமான பரவசங்கள் இல்லாத நிலையில், நம் காலம் போன்ற வறிய காலத்தில், புலப்பாட்டு எல்லைக்குக் கிட்டாத புலப்படாத் தூண்டுதல்களை நிகழ்த்தும் ‘சப்லிமினல்’ விளம்பரங்கள் மனதை மாற்ற யத்தனிக்கும் யுகத்தில், ஒருவன் உன்னத நாட்டத்தை ஆற்றிக் கொள்வதோ, அதை எதிர்கொள்வதோ எவ்வாறு? ‘நவீன காலத்துக்கான உன்னத நாட்டம்” என்று நான் அழைக்கவிருக்கும் உணர்வு நிலையின் ஒரு சன்னலை மகத்தான அமெரிக்க கவிஞர் வாலஸ் ஸ்டீவென்ஸ் கவிதைகளில் நாம் காண இயல்கிறது.
ஆச்சி – சுபத்ரா ரவிச்சந்திரன் கவிதை
நான் சிரித்துவிட்டதை என் தம்பி பார்த்தான்
அம்மாவைச் சுற்றியமர்ந்து ஒப்பாரி வைத்தனர் ஊர்மக்கள்
ஆச்சிக்காகத் திடுமென முளைத்த
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 10
என் மனைவி அத்துடன் இதை விடுவதாக இல்லை. அவளுக்கு பொங்கிப் பொங்கி வந்தது. அப்போது ஆதித்யாவிற்கு வாய்ப் பாட்டிற்காக ஒரு வித்வாம்ஸினியிடம் ஏற்பாடு செய்திருந்தோம். இசை ஆசிரியை ஓய்வு பெறும் தருவாயில் இருந்தார். ஏற்கெனவே தந்தி வாத்யக்கார தூரத்து உறவினரிடம் கிடார் வகுப்புகளுக்காகச் சென்று கொண்டிருந்தான் ஆதித்யா. அது போதாது என்று வாய்ப்பாட்டிற்கு இந்தப் பெண்மணியிடம் போய்க் கொண்டிருந்தான். நல்ல தாட்டியான உடல்வாகு. பாடிப் பாடிப் பண்பட்ட காத்ரமான குரல். பதவியில் இருந்ததாலும் வித்வத்தாலும் இயல்பில் வந்த அதிகார தோரணை. அவரே சங்கீதத்தில் இரண்டாம் மூன்றாம் பரம்பரையைச் சேர்ந்தவர்.
பன்மொழி உலகுக்கான சால்ஸ்பர்க் அறிக்கை
நம் உலகம் உண்மையாகவே பன்மொழித்தன்மை கொண்டது. எனினும், பல கல்வி மற்றும் பொருளாதார அமைப்புகள், குடியுரிமை நடைமுறைகள், மற்றும் அரசு நிர்வாக அமைப்புகள் பல லட்ச மக்களின் மொழிகள் மற்றும் மொழித் திறன் காரணமாய் அவர்களைக் குறைபட்டவர்கள் ஆக்குகின்றன. “ஏழ்மை ஒழிப்பு, புவிப் பாதுகாப்பு, அனைவரும் வளம் பெற உறுதி பூணுதல்,” என்ற நோக்கத்தில் 193 தேசங்கள் 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை (6) அடைய வேண்டுமென்றால் நாம் இந்தச் சவாலை எதிர்கொண்டாக வேண்டும். வலுவான, நியாயமான மொழிக் கொள்கைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வற்ற கல்வி அமைப்பின் அடிப்படையில்தான் அனைவருக்குமான முன்னேற்றம் நிகழ முடியும்.
யாமறிந்த புலவரிலே
உலகில் எந்த சமூகமாவது தனது மொழியின் மகத்தான ஆக்கம் மேல் பாராமுகமாக இருக்குமா? அரசியல் காரணங்களுக்காக திராவிட பரப்பிய இயக்கம் சமஸ்கிருதத்தையும் அதன் இலக்கியங்களையும் எதிர்த்தது. இந்திய நிலமெங்கும் வாழும் மக்களால் பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்ட இராமாயணத்தை அவ்வியக்கம் தீவிரமாக எதிர்த்தது. தமிழ் இலக்கியத்தின் மகத்தான சாதனை ஆக்கம் மீது சேறு வீசப்பட்டது.
சாய்ராட்- மராத்தி திரைப்படம் பற்றி
மராத்தி மொழி மனதில் பதிய ஆரம்பித்தது. தொலைக்காட்சி சேனல்களின் மராத்தி நாடகங்களும், பென்னின் கார்னிவல் சினிமாவாக புதுப்பிக்கப்பட்ட மோரேஷ்வர் தியேட்டரில் பார்த்த மராத்தி படங்களும் மராத்தியை புரிந்துகொள்ள உதவின. சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி பேச்சுத் தமிழில் இருக்கும் வேறுபாடு போலவே, மராத்தியின் பல்வேறு பேச்சுவழக்குகளின் வித்தியாசம் புரிய ஆரம்பித்தது. உட்கிராமங்களின் பழைய பேச்சு வழக்கிலிருந்து, நகரங்களின் பேச்சு வழக்கு மிகவும் வித்தியாசப்பட்டது. அரசியல் கடைக்கோடி கிராமம் வரை கோலோச்சியது. ஒரே குடும்பத்திற்குள் கலவரத்தை உண்டாக்குமளவுக்கு அரசியல் வேரூன்றியிருந்தது.
நுண்மையில் முடிவிலி – ஆலன் லைட்மான்
இயற்கை அவளுடைய பெரும் மாட்சியைக் கொண்டு நாம் சுவர்க்கத்தை நம்பவேண்டும் என்று, இயற்கையையே தாண்டிய தெய்வீகத்தை, பருண்மையைத் தாண்டிய அரூபத்தை தரிசிக்க வேண்டும் விரும்புகிறார் போலவிருக்கிறது. ஆனால் மறுபடி நோக்கினால், இயற்கை நமக்குப் பெரும் மூளைகளையும் கொடுத்திருக்கிறாள், அதன் உதவியால் நுண்நோக்கிகளையும், தொலைநோக்கிகளையும் கட்டுவதற்கும், இறுதியில் நம்மில் சிலருக்காவது, இதெல்லாம் அணுக்களும், மூலக்கூறுகளும் மட்டுமே என்று முடிவுகட்டுவதையும் சாத்தியமாக்கி இருக்கிறாள்.