‘கம்பலை’ கட்டுரை சொல்வனம் வெளியிட்ட பிறகு வந்த திரு. தருணாதித்தன் குறிப்புகளை திரு.வ.ஸ்ரீநிவாசன் எனக்கு அறியத் தந்தார். அவற்றின் முக்கியத்துவம் கருதி இந்தப் பிற்சேர்க்கை.
Category: இதழ்-187
எம். எல். – அத்தியாயம் 17
வரவர ஜனங்களுக்கு அரசியலில் அக்கறை இல்லாமல் போய்விட்டது என்று நினைத்தார் கோபால் பிள்ளை. வெறுமனே அரசியலை மட்டும் விஷயத்தோடு பேசுவதைக் கேட்க ஜனங்கள் தயாராக இல்லை. கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு கச்சேரி வைக்க வேண்டும். கட்சிப் பிரச்சாரத்தையே சினிமா பாடல் மெட்டுக்களில் பாடினால்தான் கூட்டம் சேருகிறது. கூட்டத்தில் பேசுகிறவர்களும் நகைச்சுவையாகப் பேச வேண்டும் என்றது ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு காலத்தில் அவர் பேசிய அரசியல் மேடை இப்போது இல்லை. கேளிக்கையோடு கலந்து அரசியல் பேச வேண்டும் என்று ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தி.மு.க.விலும், காங்கிரஸிலும் இதற்கெல்லாம் பாடகர்களும், பேச்சாளர்களும் இருக்கிறார்கள். இடது கம்யூனிஸ்ட் கட்சியில் கூட இருக்கிறார்கள். ஆனால் அவருடைய கட்சியில்தான் இல்லை. ஜனங்களுடைய விருப்பத்துக்கு மாறாக என்ன செய்ய முடியும்?
தமிழ் பதித்த நல்வயிரம்
பொன்னால் செய்த பாவைகளையும், வயிரம் முதலிய மணிகள் உள்ளிட்ட பொருள்கள் அத்தனையும் (சேரலாதன், மாந்தை என்னும் தனது தலைநகரின் கண், தனது நல்ல அரண்மனை முற்றத்தில்) எங்கும் நிறையும்படிக் குவித்து, அக்காலத்தில் அவற்றை நிலம் தின்னும் படிக் கைவிட்டுப் போனான். அந்த நிதியம் ஆம்பல் எனும் பேரெண்ணை ஒத்திருந்தது. ஆம்பல் எனும் சொல், ஒரு பெரிய எண்ணைக் குறிப்பது. சங்கம், பதுமம் என்பது போல. அல்லது மிலியன், பிலியன், ட்ரில்லியன் (million, billion, Trillion) என்பது போல.
இந்திய அடுக்கு – எதிர்காலம், சர்ச்சைகள்
தன்னுடைய குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மேற்கொண்ட முயற்சிகள். இந்திய அடுக்கின் நோக்கம், இந்தியாவை ஒரு வல்லரசாக்குவதல்ல. மாறாக,, அதன் குடிமக்களுக்கு சரியான சந்தர்ப்பங்களை உருவாக்கும் முயற்சி. டாம் ஃப்ரீட்மேன் கூறியது போல, ”இந்திய மக்களின் பேரார்வத்தின் அளவு, ஒரு ஷாம்பெயின் பாட்டிலை 70 ஆண்டுகள் குலுக்கியதற்கு ஈடாகும். இந்த பாட்டில் திறக்கும் பொழுது, வெளிப்படும் வேகம் இவ்வுலகம் கண்டிராதது”
மகரந்தம்
இயற்பியலாளர்களில் மிகவும் பிரபலமான ஸ்டீபன் ஹாக்கிங் இறந்துவிட்டார். அவரைப் பற்றிய அஞ்சலிக்கட்டுரைகள் குவிந்த வண்ணம் இருக்கையில் அவரது இருபது ஆண்டுகால துணையாகவும் அவரது இயக்கத்துக்குக் காரணமாகவும் இருந்த தொழில்நுட்பங்களை இங்கு காணலாம். இருபது வயதில் தசைநரம்பு சிக்கல் நோயினால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மெல்ல நலிந்து வந்த அதே சமயத்தில் தொழில்நுட்ப சாத்தியங்களினால் அவரது ஆராய்ச்சிகளும், ஆசிரியர்பணிகளும் இடையறாது நடந்து வந்திருக்கின்றன. இந்த நோய் தாக்கிய பின்னான இருபது வருடங்களில் அவரால் கை விரல்களைக் கொண்டு சிறு அசைவுகளைச் செய்ய முடிந்திருக்கிறது. சக்கர நாற்காலியோடு பிணைக்கப்பட்டிருந்தாலும் அதனுடன் பொருத்தப்பட்ட கணினியின் துணையோடு கட்டைவிரல் அசைவுகளைக் கொண்டு தனது ஆய்வுக்கட்டுரைகளையும், உரைகளையும் தயாரித்தார்.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 9
இன்னொரு கச்சேரியில் ‘மகுவா நின்னே கோரி’ என்கிற வர்ணத்தை எடுத்தான். நாராயண கௌளையில் அமைந்த வர்ணம். நாராயண கௌளை ராகத்தை யாரும் அவ்வளவு எளிதாகப் பாடி விட மாட்டார்கள். ஏனென்றால் கரணம் தப்பினால் மரணம் என்பது போல் கொஞ்சம் பிறழ்ந்தால் கேதார கௌளைக்குச் சென்று விடும். … இந்தக் கச்சேரி பற்றி பெரிய இசை வாணரிடம் பேசிக் கொண்டிருந்தபோது நாராயண கௌளையைப் பற்றிக் கூறினோம். அவர் ஆச்சர்யப்பட்டுப் போனார். ‘பெரிய வித்வானகள் கூட ட்ரை பண்ண மாட்டா. வெரி குட் ஆதித்யா’ என்றார்.
முறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் – கவிஞர் இசையின் கவிதை குறித்து.
கவிதையாக்கம் குறித்து நமக்கிருக்கும் மயக்கங்களைத் தாண்டி கவிஞர் இசையின் வரிகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இவை வார்த்தைகளின் வரிசை மீதும், கவிதை இலக்கணம் மீதும் மதிப்புள்ள கவிதைகள அல்ல. இயல்புக்கும் கற்பனைக்கும இடையே சஞ்சரிக்கும் வேடிக்கை உலகத்தைப் பற்றிப்பேசுபன. மரபு வழி மனது கொண்டவர் என்றாலும் அதை மறுதலித்து சற்றேனும் தளர்த்திக்கொள் என எதிர் தரப்பிலிருந்து தன் கவிதை உலகை அமைத்துக்கொள்பவராகக் கவிஞர் தெரிகிறார். அவர் மனம் இயங்கும் முறை அப்படி இருக்க வேண்டும், இல்லாவிட்டால் ஏதேனும் ஒரு சொல்லேனும் நீ எங்கள் உலகவாசி அல்ல எனத் தள்ளிவிட்டுவிடக்கூடும்.
புனைவுத் தருணம்
அந்த ஆசாமி குறித்து தெருவில் எந்த மாதிரியான வம்புகள் உருவாகி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அந்த பதின்ம வயதிலும் எனக்கு அவரது வருகை குறித்த பாலியல் கிளர்ச்சியோ கற்பனையோ ஏற்படவில்லை. மற்றொரு ஆசாமி தன் வீட்டிற்கு வந்து போவது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் என்ன நினைக்கிறார் என யோசிப்பேன். ஆனால் அதிகமும் அந்தப் பிள்ளைகள் குறித்து, அவர்கள் அந்த தொடர் நிகழ்வை, அது குறித்து தெருவில் உலவிய புரளிகளை எதிர்கொண்ட விதம்- கண்டிப்பாக அவை அவர்கள் காதுகளையும் சென்றடைந்திருக்கும்-, அது அவர்கள் மனநிலையை, அன்றாட வாழ்க்கையை பாதித்திருக்கக்கூடிய விதத்தை பற்றிதான் என் எண்ணம் இருக்கும்.
இருப்பது, அல்லது இல்லாதிருப்பது
இந்த தேசத்தில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நான் ஒரு பத்திரிகையாளராக மாஸ்கோ திரும்பினேன், பணி நிமித்தம். நான் அன்னியமாக இருக்கும் என்று நினைத்த ஒரு தேசத்தில் எதிர்பாராதவிதமாக இயல்பாய் உணர்ந்தேன்- தனக்கென்று திறந்திருந்த வெளியொன்றில் என் உடல் தளர்ந்து கொடுத்துக் கொண்டது போல்-, வெளியேறுவது என்ற முடிவில் எனக்கு எந்த தேர்வும் அளிக்கப்படவில்லை என்பது குறித்து எனக்கு அதனால் கோபமும் இருந்தது. நான் மீண்டும் மீண்டும் திரும்பிச் சென்றேன், கடைசியில் என்னை ஒரு ருஷ்ய மொழி பத்திரிக்கையாளராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி விட்டேன். வெளியேறியிருக்காவிட்டால் இப்படிப்பட்ட வாழ்க்கைதான் வாழ்ந்திருப்பேன் என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்.
கிவி
மௌனமாய்த் தலையசைத்து விட்டுக் கவரை வாங்கிக் கொண்டு கிளம்பியவரை நிறுத்தியது “ அண்ணே” என்று மீண்டும் செல்வேந்திரன் அழைத்த அதிகாரக் குரல். அண்ணே என்கிற அவன் விளிப்புக்கும் அவன் குரலில் உள்ள தொனிக்கும் சற்றும் பொருந்திப் போவதில்லை. இதற்குப் பேசாமல் அவன் நரசிம்மா என்றே அழைக்கலாம் என்று எண்ணிக் கொண்டு திரும்பிப் பார்த்தார். “ வழக்கம் போல எதுனா சினிமா போஸ்டரயோ கட்டவுட்டையோ பராக்கு பாத்துக்கினு வேலைய கோட்டை விட்டுறாதீங்க. சீக்கிரம் முடிச்சிட்டு வந்து சேருங்க. கடைல நெறைய வேலை கிடக்கு. நான் வேற வெளிய போவணும்” என்றான்.
டோக்கியோவின் இளையநிலா…
கலைமகள் எப்போதும் தமிழகத்தில் தாமரை மீதமர்ந்து வீணை மீட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவள் அகியாபாராவில் அமர்ந்து கோடோவும் வாசிப்பாள் என்பதை புரிய வைத்தது போல் புன்னகைத்து வந்தனம் கூறி அகன்றாள் அந்த ஓமோய்கானே*. அவர் ஒரு தேர்ந்த கோடோ கலைஞர் என்பதையும், ஆர்வம் காரணமாக அந்தக் கடையில் பகுதி நேரம் பணியாற்றுகிறார் என்பதையும் நாங்கள் அறிந்த போது நம்புவதற்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது.
ஜார்ஜ் பெரெக்கின் நாவல்கள் – அல்லது இருட்டுக்கடை அல்வாவில் பார்த் (பாகம் II)
‘W, ஆர் தி மெமோரி ஆஃப் சைல்ட்ஹூட்’ (‘W அல்லது பால்யத்தைப் பற்றிய நினைவு’) நாவலில் மாறி மாறி இடம் பெறும் இரு பிரதிகள் இருக்கின்றன; அவற்றுக்கிடையே பொதுவான எதுவும் இல்லை என்றும்கூட நீங்கள் நம்பிவிடக்கூடும், ஆனால் அவை பிரிக்க முடியாதபடி ஒன்றுடனொன்று பிணைந்திருக்கின்றன, ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்க முடியாது என்பது போல், அவை ஒன்று கூடி ஒன்றன்மீதொன்று அளிக்கும் தொலைதூர வெளிச்சம் மட்டுமே, ஒன்றினை மட்டும் கொண்டு சொல்லிவிட முடியாதவற்றை, மிக மென்மையான இணைவில் மட்டுமே சொல்லப்படக்கூடியவற்றை, வெளிப்படுத்த முடியும் என்பது போல். இந்த இரண்டு பிரதிகளில் ஒன்று முழுக்க முழுக்க கற்பனையானது, முன் நோக்கமற்றது- ஒலிம்பிக் ஆதர்சத்தின் மயக்கத்தில் உள்ள ஒரு மண்ணைப் பற்றிய குழந்தைப்பருவ மிகை கற்பனையின் கவனமான மீளுருவாக்கம்.
கிரகணப்பொழுது
தென்னைகளின் பின்னே தாத்தாவின் ஆணியடித்த வார் செருப்பின் ஓசை கேட்டது. அண்ணன் முதுகில் என்முதுகை சாய்த்து கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து உலக்கைத்தடி மீனை வானத்தில் பார்த்தபடி இருவரும் ஒத்திசைவாக முன்னும் பின்னும் அசைந்தவாறு அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஊஞ்சலாட்டம் போன்ற என் கால்களினசைவால் பாவாடை சிறகு விரித்துப் பறந்தமைந்து கொண்டிருந்தது. அடர்பச்சை சிறகு. “வயசுக்கு வந்த பொம்பளப்பிள்ள கட்டில்ல ஒக்காந்து காலாட்டிக்கிட்டு…காலில ஒன்னு போடனும்,” என்றபடி தாத்தா வேட்டிசட்டையை கொடியில் போட்டுவிட்டு கோவணத்தோடு மோட்டார் தொட்டியின் நீரை அள்ளி அள்ளி தலையில் ஊற்றிவிட்டு பரபரவன்று உடலை, முகத்தை, பல்லை தேய்த்து மீண்டும் நீரை பரபரவன்று அள்ளி அள்ளி ஊற்றினார்.
ஆழத்தில் மிதப்பது
அக்கா நீ என்னிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? என் மீது உனக்கிருப்பது அன்பா வெறுப்பா? நீ அம்மாவை துளியும் வெறுப்பதில்லை. நம் அப்பாவை மயக்கி திருமணம் செய்து கொண்டவள் என்று அவளை நீ திட்டியபோது கயிற்றை எடுத்துக் கொண்டு தூக்குமாட்டிக்கொள்ள சென்றவளை பிடரி முடியைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்திருக்கிறாய். அன்றிரவே உண்ணாமல் படுத்திருந்தவளை உதைத்து எழுப்பி மிரட்டி சாப்பிட வைத்திருக்கிறாய். நான் உறங்கிவிட்டேன் என்ற நம்பிக்கையில் அன்றிரவு அம்மாவைக் கட்டிக்கொண்டு சத்தமாக ஏங்கி ஏங்கி அழுதாய். பின்னர் அவள் மடியிலேயே விம்மி விம்மி அழுதுகொண்டு உறங்கிப்போனாய். எனக்குத் தெரியும் அவள் மீது உனக்கிருப்பது என்னவென்று? ஆனால் என் மீது உனக்கிருப்பது என்ன? என்னை நீ தொட்டுப் பேசியதில்லை. தம்பி என்று அழைத்ததில்லை. அப்பாவின் முகம் எனக்கு இருப்பது உன்னை சங்கடப்படுத்துகிறதா? பெரியம்மா கூட அம்மாவை ஏற்றுக் கொள்ளத்தானே செய்தார். பிறகு ஏன் என்னை இவ்வளவு வெறுக்கிறாய்?