ஒரு புனிதருடன் தனது பெயரை பகிர்ந்து கொண்டிருப்பவர். ரெல்க, வாலெரி, ஃபிளோபெர் ஆகியோருடன் எழுத்துக்கலையின் ஒரு துருவத்தின் உச்சப் பிரதிநிதி இவர். அவருடையது முழுமையான அர்ப்பணிப்பு. அது அவர் இருப்பிற்கு அடிக்கடி பங்கம் விளைவித்தது. அனேகமாக நாமெல்லோருமே சமரசம் செய்து கொள்பவர்கள். அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கும், தொழிலாளர் சச்சரவுகளை தவிர்ப்பதற்கும், மணவாழ்க்கையை தக்கவைத்துக் கொள்வதற்கும், போரில் பங்கெடுக்காமல் தப்பிப்பதற்கும் நமக்கும் இச்சமரசங்கள் தேவைப்படுகின்றன. கொள்கைகளும் கறைபடுகின்றன , துணிகளைப் போல் அவற்றையும் அடிக்கடி நாம் கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஷேக்கர்களைப் போல் பல விஷயங்களை கேளிக்கை, பயனற்ற அலங்காரம் அல்லது பகட்டு என்று கருதியதால் அவர், மினிமலிஸ்ட் என்று நாம் அழைக்கும் ஒரு சுருக்கவாதி. மேலும், சந்தேகமில்லாமல் அவர் சொல்வதே சரி.
Category: இதழ்-183
வாசகர் மறுவினை
இந்த வகைக் கதைகளை அடிக்கடி மேற்கு எழுதி உளைச்சல்பட ஆதிக் காரணம் ஒன்று உண்டு. யூதத்தில் மனிதர் கடவுளின் படைப்புக்குச் சவாலாகத் தாமும் படைக்க முயன்ற கோலெம் என்ற மண் பொம்மைக்குக் கொடுக்கப்பட்ட உயிர்ப்புடைய விபரீத விளைவுகள் பற்றிய பழங்கதை அது. ஒற்றைக் கடவுள் என்ற கருத்துருக்குள் மனிதக் கற்பனையை அடைக்க முயலும் செமிதியக் கருத்தியலின் பல விகார அணுகல்களில் இது ஒன்று. இந்த பயம் முன்பு வெறும் அச்சுறுத்தல் கதையாகவும். ஒழுங்குக்குள் மனித நடத்தையைக் கொணர முயலும் செயலாகவும் இருந்திருக்கலாம், இன்று இது வெறும் மனப் பேதலிப்புகளில் ஒன்றாக் ஆகி, ஐஸிஸ் போன்ற கொடுங்கோல் அரசியலுக்குக் கூட இட்டுச் சென்றிருக்கிறது. இதன் ஒரு அபத்த விளைவுதான் மார்க்சியத்தின் ‘ஏலியனேஷன்’ (அன்னியமாதல்) என்ற ஆர்ப்பரிப்பான கருத்துருவுக்கும் அடிப்படை. இணைவைத்தல் என்ற ஒரு இஸ்லாமியக் கோட்பாட்டிலிருந்து பிறக்கும் பயங்கரங்களைப் போன்ற கருத்துரு பேதலிப்புதான், மார்க்சின் ரைஃபிகேஷன் என்ற அச்சுறுத்தல் கோட்பாடு. இதையே ஃப்ரெஞ்சு நவீனக் கடப்பு வாதிகள் இன்னமும் தாண்ட முடியாமல் தத்தளிக்கிறதை, மீடியம் ஈஸ் த மெஸேஜ் என்ற கருத்தில் துவங்கி …
தமிழக அரசியலும் ரஜினிகாந்தின் முடிவும்
தமிழகத்தில் பிற துறைகளில் மக்களுக்காக உழைத்த, வெற்றி பெற்ற சாதனையாளர்கள் ஏராளமாக உள்ளனர். அப்துல் கலாம், கேன்சர் மருத்துவர் டாக்டர் சாந்தா, ராக்கெட் சயிண்டிஸ்டுகள், பொறியாளர்கள், மக்களிடம் சிந்தனை மாற்றத்தை எற்படுத்த விரும்பிய எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற சிந்தனையாளர்கள், நீர் ஆதாரத்தை இணைக்கத் திட்டமிடும் ஏ.சி.காமராஜ் போன்ற பொறியாளர்கள் இன்னும் பல நூறு திறமையான நிர்வாகிகள் சமூக சேவகர்கள் எவருமே மக்களிடம் ஓரளவுக்கு பிரபலமடைந்திருந்த போதிலும் தேர்தல் என்று வரும் பொழுது அவர்களை எந்நாளும் மதித்துத் தமிழர்கள் ஓட்டுப் போட்டதில்லை. எம்.எஸ்.உதயமூர்த்தி ஒரு சோதனை முயற்சியாக…
ப்ரமீதியஸ்கள்
சோவியத் ரஷியாவில் பல்வேறு பொது இடங்களில் பெரிய ஓவியங்களையும் சித்திரவடிவுகளையும் சோசலிஸப் பிரச்சாரத்திற்காக நிறுவினார்கள். ரஷியா சிதறுண்ட பின் அந்த கல்லோவியங்கள் இன்னும் எஞ்சி நிற்கின்றன. அவ்வாறு உக்ரெய்ன் நாட்டில் பொது இடங்களில் அமைந்திருக்கும் சிற்பங்களையும் பிரும்மாண்ட கலைப்படைப்புகளையும் தேடி யூஜென் நிகிஃபொரவ் கிளம்புகிறார். இன்னும் பல அரசு “ப்ரமீதியஸ்கள்”
நான் கடவுளாக இருந்தால்
ஏழாம் வகுப்பு மாணவனுக்கு கடவுள் ஆகும் சக்தி கிடைத்தால் என்ன யோசிப்பான்? வகுப்பில் கடுப்பேற்றுபவர்களை தண்டிப்பானா? உலகத்தைத் தனக்கேற்றவாறு மாற்ற நினைப்பானா? பால்ய கால சினேகிதியை கவர விரும்புவானா? கீழே குறும்படம்:
படம்
கிடைத்ததெல்லாம் பல வருடங்களுக்கு முன் எடுத்தவை. நண்பர்களுடன் கூட்டமாக நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும் சில படங்கள். யாரோ ஒரு நண்பர் ஊர் மாற்றிச் செல்லும்போது அவருக்கான பிரிவு உபச்சார விருந்தில் எடுத்த படமாக இருக்கவேண்டும். அநேகமாக அந்த படத்திலிருந்த நண்பர்கள் அனைவருமே பாஸ்டனை விட்டு சென்றுவிட்தால் யாருடைய பிரிவின்போது எடுத்தது என்பதுகூட உடனே நினைவுக்கு வரவில்லை. காமிராவுக்கு முதுகை காட்டிக்கொண்டு குழந்தைகள் மற்றும் நாய்க்குட்டியுடன் விளையாடும் படங்கள். தனியாக இருக்கும் படம் என்று தெரிவு செய்யும்படி ஒன்று கூட இல்லை. எப்போதும் மற்றவர்களை படம் எடுத்துக்கொண்டிருப்பவனுக்கு ஏற்படும் சிக்கல், அவனை யாருமே படம் எடுப்பதே இல்லை என்பதுதான். கிடைத்த ஒரே தனிப்படமும் முள்தாடியுடனும் குவியமில்லாமலும்.
ஒரு துளி ஒரு நதி ஒரு கடல்
ஓஷோவின் உரைகளை, அவரது குரலில், அறையின் மென்வெளிச்சத்தில், கண்களை மூடி நெடுநேரம் கேட்டுக்கொண்டிருப்பது என் வழக்கம்; அந்த அற்புதமான பரவச மணித்துளிகள் என்னில் உண்டாக்கும் நெகிழ்வு, மாற்றம், சலனம், உணர்வு, போதை… வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு முன்னிரவில் படிப்பறையின் விளக்கை அணைத்துவிட்டு ஓஷோவின் ஏதோ ஓர் உரையைக் கண்களை மூடிக் கேட்டுக்கொண்டிருந்தேன். நேரம் கடப்பதை அறிந்திருக்கவில்லை; ஒன்றிரண்டு மணிநேரம் ஆகியிருக்கலாம். அந்த குரல் மனதை என்னவோ செய்திருந்தது. கண்கள் பனித்திருந்தன. உரையின் முடிவில் ஓஷோ “உங்கள் காதருகில் அந்தப் பெருங்கருணை தென்றலாய் மிக மெல்லிய ஒலியோடு கடந்துசெல்கிறது; உங்களுக்குக் கேட்கிறதா?” என்று கேட்டு “இன்றைக்கு இது போதும்” என்று முடித்தார். அவ்விருட்டிலேயே, அதன்பின்னான அமைதியில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேனோ தெரியவில்லை.
டைனியின் பாட்டி
அவள் பெயர் என்னவென்று கடவுளுக்குத்தான் தெரியும். யாரும் அவளை பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. சிறுமியாக இருந்து. சந்துகளில் மூக்கு ஒழுக அவள் சுற்றிக் கொண்டிருந்தபோது அவளை ’பதான் குழந்தை ’என்ற ழைத்தனர் ஜனங்கள். பிறகு அவள் ‘பஷீராவின் மருமகள்’என்றும். பிறகு, ‘பிஸ் மில்லாவின் தாய்’ என்றும் பிஸ்மில்லா பிரசவத்தின் போது குழந்தை டைனியை பெற்று விட்டு இறந்து போனதற்குப் பிறகு அவள் ‘டைனியின் பாட்டி ’ஆனாள். அதுவே நிலைத்து விட்டது. தன் வாழ்க்கையில் டைனியின் பாட்டி செய்யாத வேலை என்றுவுமில்லை தனது உணவிற்காகவும். உடைகளுக்காவும் விவரம் அறிந்த நாளிலிருந்தே சின்னச்சின்ன …
ராதேயன்
அவனைத் தன் இல்லவாயிலில் கண்டும் ராதை அசையாமல் அவனையே கண்டு நின்றாள். தன் செந்நிறப் பருத்தியாடையை வலது கையால் போர்த்தியவாறு கூனிட்ட முதுகை நிலையில் சாய்த்திருந்தாள். ‘வயோதிகத்தால் பழுத்த கண்களின் பிழையா?’ என்றும் மறுகணம் எண்ணினாள். தனியாள் ரதத்திலிருந்து இறங்கி, குதிரையின் கழுத்தைத் தடவிவிட்டு அது தலையை இருபுறமும் அசைக்க, புன்னகைத்தபடி நிமிர்ந்து சுற்றும் ஒருநோக்கை வீசி நின்றான். அவன் வரவுக்கென இத்தனை நாள் காத்திருந்ததா இந்தவாயில்? என்று அந்தகணம் அவளுக்குத் தோன்றியது. கருமையான விரல்கள் கொண்ட நீண்டபாதங்கள். அவன் அடியெடுத்து வைக்கையில் கணுக்கால்களின் பொன்காப்புகளுக்கு …
பொய்கள்
இதை நான் சான் யுவானிலிருந்து – இங்கிருக்கும் ஒரே தங்கும் விடுதியிலிருந்து – எழுதுகிறேன். இன்று மதியம் கரடு முரடான பாதையில் அரை மணி நேர பயணத்தின் பின் அம்மாவின் வீட்டை சென்றடைந்தேன். அவளது நிலைமை நான் எதிர்பார்த்ததைவிட மோசமாக இருந்தது. நடை மிக தளர்ந்துவிட்டது. கைத்தடி இல்லாமல் அவளால் நடக்க முடியவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி வந்ததிலிருந்து அவளால் மாடி ஏற முடியவில்லை. இப்போதெல்லாம் கீழ் அறையிலுள்ள சோஃபாவில் தூங்குகிறாள். ஆட்களை வைத்து கட்டிலை கீழே கொண்டு வர முடியுமா என்று பார்த்தாள். ஆனால் அவள் அறையில் அது நிரந்தரமாக பொருத்தப்பட்டிருந்ததால், அதை பிரிக்காமல் கீழே கொண்டு வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். (ஹோமரின் பெனிலோபியிடமும் இப்படியொரு கட்டில் இருந்ததுதானே?)
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 5
என் எண்ணம் என்னவாக இருந்ததென்றால் அவனுடைய திறமையின் மேன்மை எப்படியாவது உலகம் அறியும் படிச் செய்து விட்டால் அவன் நடத்தையின் விநோதங்களை உலகம் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகிக் கொள்ளும் என்று நம்பினேன். புல்லாங்குழல் கலைஞர் டி ஆர் மகாலிங்கம் விஷயத்தில் உலகம் முதலில் அவர் வாசிப்பில் இருந்த மேன்மையை அங்கீகரித்தது. பின்னர் தான் அவர் குணாதிசயங்களில் இருந்த விநோதங்களை உள் வாங்கிக் கொண்டது. அப்போதெல்லாம் அவர் மேதைமையின் காரணமாக உலகம் அவர் குணாதிசயக் கூறுகளை சகிக்கக் கற்றுக்கொண்டது. இதே போல் ஆதித்யா விஷயத்திலும் நடந்தால் தேவலை என்று நான் நினைத்தேன். இதில் இன்னொரு விஷயமும் அடங்கி இருந்தது. அவன் பாடல்களைக் கேட்டுக் கேட்டு தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி வருகிறான். இதைப் போய் நான்கு சுவர் உள்ள ஒரு கட்டுமானத்தில் போட்டோம் என்றால் இதனால் அவன் இயற்கையான இசை மேதைமை அதில் தீய்ந்து விட்டால் என்ன செய்வது?
இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்
இந்தியர்கள், பொதுவாகத் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியுள்ளதைப் பற்றிச் சொல்லிக் கொள்வதே சுவாரசியமான விஷயம். ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுதும் இப்படிப்பட்ட விஷயங்கள் காதில் விழுவதுண்டு. “இன்ஃபோஸிஸ் – ல வேலைக்குச் சேர்ந்து, அமெரிக்கா போய், கல்யாணமாகி அங்கேயே செட்டில் ஆகிட்டானாம். அதான் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் “இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்”
ஆறாம் திணை
கூட்டம் நெரிபடுகிற நியூயார்க் நகர சப் வே நிலையங்கள் வாழ்க! ஓடிக் கொண்டே சட்டையைக் கழற்றி டீ ஷர்ட்டுக்குள்ளே திணித்துக் கொண்டான். அவர்கள் எலிவேட்டரின் மேல் பகுதியில் தென்படுவதற்குள் ஒளிய வேண்டும், எங்கே? எங்கே? பதறியபடி இடப் புற கடைகளை நோட்டம் விட்டுக் கொண்டே ஓடினான். மூன்றாவது, நான்காவது கடைகளுக்கு நடுவே இருந்த இருட்டான ஒரு அடி இடைவெளியை மறைத்த மரப் பலகையைத் தொட்டான். ஸ்பிரிங்க் வைத்தது போல வழுக்கிக் கொண்டு திறந்தது. இவன் உள்ளே நுழைந்து இடைவெளி தெரியாமல் மூடிக் கொண்டான்.பலகையில் இருந்த சின்ன ஒட்டை வழியாக அவர்கள் எலிவேட்டரின் மேல் பகுதியில் நின்று கொண்டு சுற்றும், முற்றும் தேடுவதைக் கவனித்தான். பயமாக இருந்தது,
மையம்
கடல், நீரையள்ளி தெளித்ததில் தரையோடு படிந்துக் கிடந்த மணல் காலடிகளை உள்வாங்கி தடமாக பதித்திருந்தது. ஃபாதர் தாமஸ்ஃபிலிப்புக்கு வளமையான பெரிய கால்கள் வேறு. அச்செடுத்தது போல இங்குமங்குமாக படிந்துக் கிடந்தன. இருள் விலகாத, பகல் பிரியாத நேரமது. இளங்காலை நேரத்துக் கடல் முதிய தாயைப் போல ஆதுரமாக அணைத்துக் கொள்ளும். அதன் அலைகள் பொக்கை வாயில் வழியும் கனிந்த சிரிப்பை போல கடலெங்கும் ததும்பி கிடக்கும். இந்த அனுபவத்துக்காகவே அவ்வப்போது அவர் இங்கு வருவதுண்டு. கடலும் அலைகளும் அதன் இறைச்சலும் வெற்றுக் காட்சிகளாக இன்று அவர் கண்களை நிறைத்துக் கொண்டிருந்தன. கடலையொட்டி அமைந்த புனித தேவாலயத்திற்கும் தாமஸ்ஃபிலிப்புக்கும் கிட்டத்தட்ட முப்பதாண்டுப் பழக்கம். அது அவரின் வயதில் நான்கில் மூன“று பகுதி. இத்தனை ஆண்டுகளும் பூசை..
மகரந்தம்
காஷ்மீர் பகுதியில் கிடைத்த ஒரு பாறை ஓவியம் அகழ்வாராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்படுத்தியதோடு மட்டுமல்லாது வானவியலாளர்களையும் திகைக்க வைத்துள்ளது. பொதுவாக பாறை ஓவியங்களின் வயதைக் கண்டுபிடிப்பது சிரமமான ஒன்று. கார்பன் டேட்டிங் முறையில் உள்ள சிக்கல்களைத் தாண்டி அவற்றின் வயதை அறிவது கடினம். ஒரு வீட்டில் சுவருக்குப் பின்னே இருந்த இந்த ஓவியத்தைக் கண்டுபடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள் அதில் இரு பிரகாசமான ஒளி பொருந்திய விண்மீன் வடிவங்களைக் கண்டனர்.
குளக்கரை
நம் உடலை சற்றே உற்று கவனித்தாலே தெரியும், அது எத்தனையோ ஆச்சரியங்களை இயற்கை என்ற பெயரில் பொதித்து வைத்திருக்கிறது என்று. ஓர் ஆரோக்கியரின் ரத்தத்தில், சோடியத்தின் அளவு ஓர் லிட்டருக்கு 135லிருந்து 145 milliequivalents (mEq/L). இந்த அளவுகளிலிருந்து சற்றே மீறினாலும் உடல் சீர்கேட்டிற்கு கொண்டு செல்லும். அவ்வாறு செல்ல விடாமல் உயிரினங்கள் உடல், தன்னளவிலேயே சம நிலைக்கு கொண்டு வந்துவிடும். இத்தனை கட்டுக்கோப்பாக உயிரனங்களின் உடல் சுயமாக சமநிலை பேணுவதை மருத்துவ துறையில் homeostasis என்ற சொற்றொடரில் குறிக்கப்படுகிறது. தன் தகப்பனார் உடல் நிலை சரியில்லை என அறிந்தவுடன் சித்தார்த் முகர்ஜி அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு விரைவதில் தொடங்குகிறது, இந்தக் கட்டுரை.
அப்பா அன்புள்ள அப்பா…
சென்னையில் வசித்தபோதும் சரி, இங்கிலாந்து வசிக்கச் சென்ற போதும் சரி, விடுமுறைக்கு ஈரோடு வரும் போதெல்லாம் இரவுகளில் கால் பாதங்களில் காயத்திருமேனி எண்ணையை நன்கு அழுத்தித் தடவி விடுவேன். முதலில் முட்டி, பின் படம். தேய்க்க தேய்க்க அப்பா, கால் எரிச்சல் அடங்க, சுகமாக தூங்க ஆரம்பிப்பார். நான் டிவியைப் பார்த்துக்கொண்டே தேய்த்துக்கொண்டிருப்பேன். சில சமயங்களில் “ம், போதும், நீ போய் தூங்கு” என்று மெல்ல கண் திறக்காமல் சொல்வார். சில சமயங்களில் நானாக நிறுத்தியதும் ஓர் தலையசைப்பு. காலையில், “நேற்றிரவு நன்கு தூங்கினேன்” என்று புன்னகை போதுமானதாக இருந்தது. பாதங்களை பார்க்க முடியவில்லை. வேஷ்டியைக் கொண்டு கால்கள் மூடப்பட்டிருந்தன.
எம். எல். – அத்தியாயம் 13
ஊர்க்காவலன் அவன் சொன்னது காதில் விழாதது போல, எதிரே இருந்த பேப்பர்களைப் புரட்டிக் கொண்டே இருந்தார். அந்த ஆபீஸில் அப்படித்தான். சக வேலைக்காரனை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். ஊர்க்காவலன் பீட்டரை மதிக்காததுபோல், ஊர்க்காவலை அறைக்குள் இருக்கிற சூப்பிரண்டு மதிக்க மாட்டான். அவரை அவருக்கும் மேலே உள்ள ஜாயிண்ட் கமிஷனர் மதிக்க மாட்டார். ஜே.சி.யை டி.ஐ.ஜி ஒரு பொருட்டாகவே கருதமாட்டார். இதை எல்லாம் சகித்துக்கொண்டுதான் டிப்பார்ட்மெண்டில் வேலை செய்ய வேண்டும் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ஊர்க்காவலனை மீறி நேராகவே போய் சூப்பிரண்டைப் பார்க்கவும் முடியாது.
தனிமை – கு.அழகர்சாமி கவிதை
வெயிலில்
தனிப் பனையின்
சொற்ப நிழல்.
அது
போதும்;
ஆடு சுகம் காணும்.