குளக்கரை

ஆர் கே நகர் தேர்தல் முடிவுகள் பற்றி பல காட்டமான விமரிசனங்கள் எழுகின்றன. அவற்றில் முக்கியமானது, ஆர் கே நகர் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்து விட்டார்கள், இதனால் ஜனநாயகம் தோற்றுப் போய் விட்டது என்பது. குறிப்பிட்ட சாதிகளைக் குறி வைத்து, கல்வியிலும் வேலையிலும் அரசு ஒதுக்கீடு பெற்றுத் தருகிறோம், என்று வாக்குறுதி அளித்து சில கட்சிகள் வெற்றி பெற்றபோது தோற்காத ஜனநாயகம் இப்போது தோற்றுப் போய் விட்டதா? அடுத்த நாள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர்கள், ஏழ்மையை அறியாதவர்கள், இவர்களால்தான் …

அவர்கள் முகத்தின் வியர்வை

இது வரை பிரபுக்களின் படங்களையும் ராணிகளின் ஓவியங்களையும்தான் அருங்காட்சியக கலைக்கூடங்களில் பார்த்திருப்போம். இப்போது “அவர்கள் முகத்தின் வியர்வை” (“The Sweat of Their Face”) என்னும் கண்காட்சியை ஸ்மித்ஸோனியன் (Smithsonian’s National Portrait Gallery) அமைத்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளிகள், அடிமை சிப்பந்திகள், ரயில் வேலையாட்கள், எஃகு தொழிலாளிகள் என “அவர்கள் முகத்தின் வியர்வை”

கணிதமும் இயற்பியலும்

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் எண்ணியல் துறையில் மின்யாங் கிம் (Minhyong Kim) ஆராய்ச்சியாளராக இருக்கிறார். கடந்த ஆயிரமாண்டுகளில் கணிதத் துறையின் ஆதார கண்டுபிடிப்புகளுக்கு பௌதிகம் எவ்வாறு துணை புரிந்திருக்கிறது என்பதை இங்கே விளக்குகிறார். குவாண்டா இதழில் வெளிவந்த குறிப்பு: Secret Link Uncovered Between Pure Math and Physics “கணிதமும் இயற்பியலும்”

கட்டுரைகளின் நகைமுரண்

அமெரிக்க புனைவுகளுக்கும் இது போன்ற கட்டுரைகளுக்கும் இடையில் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதாய்த் தோன்றுகிறது. அமெரிக்க அரசியலிலும் சமூக விவாதங்களிலும் காணப்படும் பேரச்சங்கள் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை. இவை முழுக்க முழுக்க காரணமற்ற மிகையச்சங்கள் என்று சொல்லிவிட முடியாது. அமெரிக்க அறிவார்ந்த உரையாடல்களின் அடிநாதமாய் விளங்கும் உணர்ச்சி, அவநம்பிக்கையுடன்கூடிய பிறழ்வச்சம் (paranoia), என்றுகூட சில சமயம் தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பேராபத்து அவர்களுக்கு அறிமுகமாகிறது. நம்பி கிருஷ்ணன் சொல்வனத்தில் எழுதி வரும் அமெரிக்க இலக்கிய விமரிசனக் கட்டுரைகளில்கூட இது விரித்தெடுக்கப்படாத ஒரு சரடாய்த் தொடர்கிறது. ஆனால் இந்தக் கட்டுரைகளைப் பார்க்கும்போது, இழப்பு, மரணம், துயரம், ஏழ்மை, நிறவேற்றுமை, என்று பல விஷயங்கள் பேசப்பட்டாலும் அப்படி எந்த ஒரு அச்சமும் வெளிப்படுவதில்லை.

தமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்

இராமன் தான் பாரதத்தின் அடையாளம். பாரத பண்பாட்டின் திருக்கோலம். பாரதம் புகட்டும் ஒழுக்கநெறியின் சிகரம். இராமன் நேபாளம் முதல் இலங்கை வரை நடந்ததால் மொத்த இந்தியாவே புண்ணிய பூமியாக பாரத நாட்டவர்களால் போற்றப்படுகிறது. இராமனின் வரலாற்றை மனித குலம் உள்ளவரை மறைக்கவோ மாற்றவோ மறுக்கவோ முடியாதபடி அவன் திருப்பாதம் பட்ட புண்ணிய தலங்கள் இந்தியா முழுவதும் வரலாற்றுச் சின்னங்களாக பரவிக் கிடக்கின்றன. இராமாயணக் கதை தமிழ் நாட்டில் சங்க காலத்திலேயே அறியப்பட்டிருந்தது என்பதை புறநானுறு 378ஆம் பாடலும், அகநானுறு 70ஆம் பாடலும் நினைவூட்டுகின்றன. பல்லவர்கால பக்தி இயக்கத்தினபோது மாலடியார்கள் மாலவன் மீதான பக்தியைப் பரப்ப இராமகதையினை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். இராமகாதையில் சித்தரிக்கப்பட்ட நிகழ்வுகள் தமிழ்மக்களின் நினைவுகளில் ரீங்காரமிட்டு, அவர்கள்தம் ஊர்களின் பெயர்களில்- இறை வடிவங்களில்- இறை நாமங்களில்- அவர்கள் காணும் இயற்கை வடிவங்களில் நாள்தோறும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த எதிரொலியின் நாதமே இக்கட்டுரையில் உணரப்படுகிறது.

நிஜமாக ஒரு உலகம்

’எதுக்கு இந்த மாபெரும் அறிவு, அங்குமிங்கும் ஓடல், ஓயாத தேடல். விடுறா.. பொல்லாத வாழ்க்கை. சாகாவரமா வாங்கிண்டு வந்துருக்கோம்? இன்னிக்கோ நாளைக்கோன்னு இடர்ற கேசு.. இதுக்குப்போயி எத்தனைப் ப்ரயாசை, எத்தனை அலட்டல்!’  எங்கோ பார்த்துக்கொண்டுத் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டான் விவேக்.  அவனையே பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக், கிளாசில் மேல்முட்டும் நுரையை லேசாக ஊதி ஒதுக்கிவிட்டு, சூடான ஃபில்டர் காஃபியில் எழும் வாசனையில் கொஞ்சம் லயித்தான்.

யுவதி

நான் யுவதியாக இருந்தபோது அடிக்கடி விலங்கு காட்சி சாலைக்கு செல்வதுண்டு. அடிக்கடி போய்க்கொண்டிருந்ததால் அங்கு இருக்கும் விலங்குகளிடம் – என் சம வயது பெண்களிடம் இருந்ததைவிட – அதிக நட்பு ஏற்பட்டது. மனிதர்களிடமிருந்து விலகி இருப்பதற்காகவே விலங்கு காட்சி சாலைக்கு தினமும் சென்றேன். அங்கு இருக்கும் ஒரு இள வயது, புத்திசாலியான கழுதைப் புலியுடன் எனக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. நான் அவளுக்கு ப்ரென்ச் மொழி கற்றுக் கொடுத்தேன். மாற்றாக அவளுடைய மொழியை எனக்கு கற்றுக் கொடுத்தாள். இப்படியாக இனிமையாக பொழுது கழித்தோம். என்னை கெளரவிப்பதற்காக என் அம்மா மே மாதத்தில் ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தாள். அது பற்றிய நினைவு இரவு நேரத்தில் எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்தது.

லீலாவதி

‘’சுபாஷ்! லோகத்துல மனுஷாள் என்ன பழகியிருக்காளோ அதத்தான் திரும்ப திரும்பத் திரும்ப செய்யறாள். சமூகமும் அப்படித்தான் பழகியிருக்கு. ஆனா லௌகிகத்துல எந்த விஷயமும் மாறாம இருக்க முடியாது. அது எப்படி மாறுதுங்கறத்த கவனிக்கறது அரசாங்கத்தோட வேலைல ஒண்ணு. நீ சின்னப் பையன். இப்பதான் வேலைக்குச் சேந்திருக்க. எல்லாத்தயும் வெறுமனே பாரு. வெறுமனே பாக்க மட்டும் செய். உன் அபிப்ராயம் சேர்த்துக்காம பாரு. பார்த்துப் பார்த்து நீ நிறைய விஷயம் தெரிஞ்சுப்ப.’’

மாலையே அவர்கள் வீடு வேறொரு கோலம் கொள்ளும். ராமநாதனின் அம்மா வீணை வாசிப்பார்கள்.

இடையறாது தாக்கி மனவுறுதியைக் குலைக்கும் நவீன ஊடகங்கள்

இப்போது இத்தொழில்நுட்பங்கள் மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்று உணரும் தன்மையையே குலைத்து, இடையாறத சமூக ஊடகத்தாக்குதல் மூலம் செயலிழக்கவைக்கிறது. நம் வாழக்கையின் இயங்குதளங்களாக செல்பேசிகள் இருக்கின்றன. நம்மை, அவற்றைப் பாத்துக்கொண்டும், சொடுக்கிக்கொண்டுமே இருக்க வைக்கின்றது. இடையறாத கவனச்சிதறல் மனிதர்களின் ஐ.க்யூ எனப்படும் சிந்தனைத்திறன் அளவீடு பத்து புள்ளிகள் குறைந்துவிடுவதாக அறிகிறோம்.

இது தொடர்ச்சியாக போதை மருந்து உட்கொண்டு குறையும் அறிவுத்திறனை விட இரண்டு மடங்கு. ஒரே சமூகத்தில் ஒரே தெருவில் இரு வேறு நிதர்சனங்கள் உணரப்படுகிறது. ஜனநாயகம் திறனுடன் இயங்க பொதுவான நிலைப்பாடுகளை எடுக்க இது பெருந்தடையாக ஆகிவிடுகிறது.

சமர்த்த குப்பை மடல் வடிகட்டி

ஜோ அசௌகரியமாக உணர்வானோ? உறுதிப்படுத்த முடியவில்லை. மனித உணர்வுகளைப் புரிந்து கொள்வது மிகக் கடினம். “Mr.கோவால்ஸ்கி, ஒரு இருக்கையில் அமருங்கள்,” என்றார் பில் மோரிசன். அவர்தான் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி. அவருடைய மின்னஞ்சல்கள் சுவாரசியமாக இருப்பதில்லை. எல்லாம் அலுவலக விசயங்கள், அன்றாட அறிக்கைகள் மட்டுமே. ஜோ இருக்கையில் அமர்ந்தான். சூட் அணிந்தோரிடையே ஜீன்ஸ் -டி -சர்ட் அணிந்த ஒருவனாக வித்தியாசப்பட்டுத் தெரிந்தான்.
மனித வளத் தலைமை அதிகாரி, எமிலி, “நன்று. இந்த விஷயம் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று ஜோ வைக் கேட்டாள்.
எமிலி கேலுக்கு மிகவும் பிடித்தமானவர். விதம் விதமான பற்பல மின்னஞ்சல்கள் எழுதுபவர். குறிப்பாக பூனைகளின் நிழற்படங்களை…

எஞ்சும் சொற்கள்

இடைநாழியில் தூரத்தில் இருந்தே மாவட்ட ஆட்சியரின் அறையும் அதையடுத்த ஆதிதிராவிட நலத்துறை அலுவலரின் அறையும் சாத்தியிருப்பதை உறுதி செய்து கொண்ட பின் ஆசுவாசம் கொண்டவளாய் நடையில் துள்ளல் தெரிய ஆதிதிராவிட நலத்துறை அலுவலரின் அறைக்கு எதிரே இருந்த சிறிய அறையில் போய் அமர்ந்தாள். … நாங்கள் இருப்பதை அப்போதுதான் கவனித்தவளாய் மொத்தமாக ஒரு சிரிப்பினை அனைவரையும் நோக்கி வீசிவிட்டு “உள்ள வந்து உக்காந்து இருக்கலாமே” என்றவாறே எங்களை வரவேற்றாள். ஒரு அரசு அலுவலக அறையில் அதிலும் சிறிய அறையில் யாரும் அழைக்காத போது சென்று அமரும் அளவிற்கு எங்களில் யாருக்குமே வயதாகி இருக்கவில்லை. என்னுடன் அதுவரை பேசிக்கொண்டிருந்த பையன் “தேங்க்ஸ்க்கா” என்று அவளைப் பார்த்து சிரித்தபடி உள்ளே ஓடினான்.

மதுரைக் காஞ்சி

வைகையையே மதுரைக்கு உவமையாக்கி, வற்றாது ஓடும் வைகை போல மதுரையின் நுழைவாயிலில் மக்கள் கூட்டம் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார். ஆற்றின் அகலம் போன்ற விரிந்த தெருக்களும் அதன் கரைகள் போல இருமருங்கிலும் வீடுகளும் இருக்குமாம். ரொம்ப பழைய காலம் என்பதால் சாதாரண மண் குடில் என்று நாம் நினைத்து விடக்கூடாது. “பல்புழை நல் இல்” என்கிறார் ‍ அதாவது பல சாளரங்கள் உடைய வேலைப்பாடுகள் உடைய வீடுகளாம் அவை! “வைகை” போல் ஓயாது ஓடும் மக்கள் கூட்டத்திற்கு பசியும் ருசியும் உண்டே…அதற்கெனவே அன்றும் மதுரை முழுவதும் “பண்ணியம் பகர்நர்” நிறைந்து இருந்திருக்கின்றனர். யார் இந்த “பண்ணியம் பகர்நர்”?

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 4

‘மூதுரை, நன்னெறி, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்’ போதாதென்று ஆளாளுக்குத் தயார் செய்து வரும் அறிவுரைகள் கொட்டிக் கிடக்கின்றன நம் நாட்டில். யாராவது அடுத்தவன் நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து அதைப் பரிவுடன் சொல்கிறார்களா என்றால் அது சொற்பமே. ஜெயகாந்தன் சொல்வாரே ‘சஹ்ருதயர்கள்’ என்று அது போன்ற சஹ்ருதயர்கள் உலகில் சொற்பமே என்று தோன்றுகிறது. குறிப்பாக ஒரு மனிதன் கஷ்டத்தில் இருக்கிறான் என்று அடுத்தவன் உணரும் போது எதையாவது தெளித்து விட்டு ஓடத்தான் நினைக்கிறானே ஒழிய, அதில் பங்கெடுப்போம் என்று முனைவோர் நிறைய பேர் கிடையாது.
அவரவர்க்கு அவரவர் கவலை. அவ்வளவுதான் பொருளாதார சமூக சூழல் காரணிகளும் காரணம். மற்றவர் படும் அவதிகளை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நகர்ந்து விடுகிறது. இதற்கு நானும் விதிவிலக்கன்று.

கண்கள் செவிக்க மறுக்குமோ? வில்லியம் காஸின் ஐம்பது தூண்கள்

எனவே, மீண்டும் இக்கேள்வி, ஏன் எழுத வேண்டும். காஸின் கனத்த பதில்: “அவன் செய்வது அனைத்தும் எந்தப் பொறுப்புமற்ற ஓர் உள்ளார்ந்த தேவையிலிருந்து எழ வேண்டும்.” பின்விளைவுகள் குறித்து கவலைப்படாத காஸின் இத்தகைய உந்துதலுக்கு நாம் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்- இனி கோழிக்குஞ்சுகள் கொட்டகைக்கும் வேலிக்கும் இடையில், “ட்யூபிலிருந்து பற்பசை போல்” பிதுங்கிச் செல்லலாம், மரமொன்றால் ” உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றாய் அழுக்கை” மாற்ற முடியும் (வாழ்க்கையின் அழுக்கில் வேர்கொண்டுள்ள எழுத்தாளன் அதன் கசடுகளை கலையின் பொன்மூச்சாய் மாற்றும் ரசவாதம் போல்), ஆங்கில மொழியின் இரண்டாம் எழுத்தான பி, “இண்டியானாவில் உள்ள ஒரு வயலோடு பிணைக்கப்பட்ட சிற்றூர்” ஆகலாம், ஊறுகாய்கள் “முதலைகள் போல் உறங்க”லாம், “ரப்பர் ஷூக்கள் அல்லது யாரோ ஒருவனின் இருமல் போன்ற தனிமை” மானுட உணர்வாகலாம். “பளபளக்கும் சிறுமணிகள்” போல் உவமைகள் திரு. காஸில் ஊஞ்சலாடுகின்றன என்பதைச் சொன்னேனா?

எம். எல். – அத்தியாயம் 11 & 12

பெரும்பாலான மேலமாசி வீடுகளுக்கு, முன்புற, பின்புற வாசல்களைத் தவிர ஜன்னலே இருக்காது. ஒரு வீட்டுக்கும், அடுத்த வீட்டுக்கும் இடையே இடைவெளியே இருக்காது. நீளமான வீடுகள். பக்கவாட்டில் இடமே விடாமல், நெருக்கமாகக் கட்டப்பட்ட அந்தக் காலத்து வீடுகள். ஜன்னல்கள் இல்லாததால் வீட்டினுள் எப்போதும் இருட்டாகவே இருக்கும். பாலகிருஷ்ணன் ஒவ்வொரு அறைக்குள் நுழையும்போதும் சுவிட்ச்சைப் போட்டு வெளிச்சத்தைப் பரவ விட்டுக் கொண்டே சென்றார்.  அந்த வீடு கல்கத்தாவிலுள்ள வீடுகளைப் போலவே இருப்பதாகப் பட்டது சாரு மஜும்தாருக்கு.