தம்மைவிட 250 மடங்கு கனமான உருண்டைகளை ஒரே நாள் இரவில் இவற்றால் மண்ணுள் புதைக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, தம் உடல் எடையைவிட 1141 மடங்கு அதிக எடையை இவற்றால் இழுத்துச் செல்ல முடியும் என்பதை அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது, பயணிகள் நிறைந்த ஒரு இரட்டை அடுக்கு பேருந்தை ஒற்றை மனிதனாய் இழுத்துச் செல்வதற்கு சமம்.
Category: இதழ்-178
இரு கவிதைகள்
கனவுள்ளே கனவுள்ளே
கனவுலகில்,
மழையின் சத்தம்.
அத்தனை கனவுகளின்
கண்களும் விழித்து
துணிப்பிடிப்பி தொழிலகத்தில் நாங்கள் அடிக்கடி லெனினை நினைத்துக்கொள்வோம்
கை டாவன்போர்ட்டின் ‘We Often Think of Lenin at the Clothespin Factory’ என்ற கவிதை ஒரு டெகாஸிலபிக் உரையாடலாய் அமைக்கப்பட்டுள்ளது (ஆங்கில பாவின அடிகள் accentual-syllable கணக்கை அடிப்படையாய்க் கொண்டவை. தமிழில் குற்றெழுத்து தவிர்த்து பத்து எழுத்துக்கள் கொண்ட அடி என்று கொள்ளலாம்). கிரேக்க அபிநயக்கூத்துக்களை மொழிபெயர்க்க டாவன்போர்ட் இவ்வடிவைப் பயன்படுத்தியிருக்கிறார்.
…
இக்கவிதை மேற்கூறிய எதிர்களின் உரையாடலாய் அமைக்கப்பட்டுள்ளது: பெயர் குறிப்பிடப்படாத ஒரு பெண், மாண்டல்ஸ்டாமின் விதவையின் சாயல் கொண்டவளின் பின்னோக்கு தரிசனத்தின் ஆதர்சவுலகம், தனது “பொன்னுலகம்” அழித்தொழித்த மகோன்னதங்கள் பற்றிய ஓர்மை சிறிதும் இல்லாத, கோட்பாட்டு மயக்கத்தில் ஆழ்த்தப்பட்ட கட்சிக்காரன் ஒருவனை எதிர்கொள்கிறது. ஆனால் இது எளிய கருப்பு வெள்ளைச் சித்திரம் அல்ல.
எம். எல். – அத்தியாயம் 7
அவர் “எய்ட் டாக்குமெண்ட்ஸ்” என்ற பேரில் பிரசுரங்களை எழுதியிருப்பதாகவும் சொன்னார். அவை எல்லாம் ஆயுதப் புரட்சியைத் தூண்டுபவை. ஒருவேளை அந்தப் பிரசுரங்களை அவர் தன்னுடன் எடுத்து வந்திருக்கலாம் என்றார். அந்த ரெவியு கூட்டத்தில் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், யூனியன் லீடர்களையும் கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
பெரும் கலக்கங்கள்
பாஸ்டன் ரெவ்யு பத்திரிகைக்கு 1976 இல் அவரளித்த ஒரு பேட்டியில், ஒரு தாய் தன் குழந்தையை முழு நிறைவான வகையில் வளர்ப்பது – குறையேதுமில்லாத உணவு, சிறப்பான பள்ளிகள் இப்படி- அத்தனை முக்கியமல்ல, மாறாக அவர் அரசியலில் ஈடுபாடுள்ளவராக இருப்பதே மேல் என்று பேலி வாதிட்டார். ஒரு அம்மாவாக, “நீங்கள் முக்கியமானவர்,” அவர் விளக்கினார், “ஆனால் உலகம் [குழந்தைகளை] வளர்க்கிறது என்பதால், உலகம் வளர்க்கும்போது… நீங்கள் உலகத்தைப் பற்றியும் கவனம் செலுத்துவது அவசியம். அதெல்லாம் ஒன்றுடனொன்று சம்பந்தப்பட்டவையே.” பேலி ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும் சம்பந்தப்பட்டவை என்று நம்பினார்: ஆயுதங்களில் இருக்கும் ரசாயனப் பொருட்கள் சீக்கிரமே உங்கள் குழந்தைகளின் குடிநீரில் கலந்து விடும்; எந்தக் குரூரமான போருக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையோ அந்தப் போரில் உங்கள் மகனே பணி செய்ய நேரிடலாம்.
பெருவெளிக் காற்று
யசோதரா, அவளுக்கு என்ன குறை? அழகு இல்லையா? அறிவு இல்லையா? நளின நாசூக்கு இல்லையா… எல்லாமே இருந்தன. எல்லாமே முழுமையாக இருந்தன. அவனை அவள் எத்தனை நேசித்தாள், அதிலும் குறை சொல்ல என்று ஒன்றுமில்லை. அவன் இரவுகளை அவள் அலங்கரித்தாள். அந்த இருளிலும் அவளது அருகாமை, பெண்வாசனை எத்தனை இதம். எல்லாவற்றையும் மூடி மறைத்தது இருள். வாசனையை மூட முடியுமா? யசோதராவின் வாசனையை அந்த இருளிலும் அவன் அறிவான். எந்த இருளிலும் அறிவான். அவள் அருகே இல்லாவிட்டாலும் கூட அறிவான் நன்றாக. செயற்கையை விட இயற்கையை நேசிக்கிறவன் அவன். வணங்குகிறவன் அவன்… தலையணை மேலே விரிந்து பரந்து கிடந்த கூந்தல். அவள் தலை நிறைய சூடியிருந்த மல்லிகை மலர்கள், இருளில் நட்சத்திரங்களாய்க் கண்டன. மலர்களை விலக்கி கூந்தலை முகர்ந்தான் அவன். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டோ? பெண்ணே, மொத்த பெண் அம்சமுமே, ஆணுக்கு மணம் தான்.
புனைதலும் கலைதலும்
தமிழில் எழுதப்பட்டுள்ள சுயசரிதைகளில் மிக முக்கியமான ஒன்று ஔவை.தி.க.சண்முகம் அவர்களின் ‘’எனது நாடக வாழ்க்கை’’. அவர் அதனை நாடக வாழ்க்கை எனக் கூறினாலும் அது அவரது வாழ்க்கையே தான். ஒரு நாடகக் கலைஞராக அவர் தன் வாழ்க்கையைத் தொகுத்து எழுதும் போது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான தமிழின் சமூகவியல் ஆவணமாகவும் அந்நூல் மாறுகிறது. மனிதர்களுக்கு உலகியல் நேரடியானதும் மறைமுகமானதுமான எல்லைகளை உருவாக்குகிறது. பலர் அந்த எல்லைக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் அமைந்து விடுகின்றனர். சிலர் அந்த எல்லைகளுடன் திருப்தி அடையாமல் அதனைத் தாண்டி பயணிக்கின்றனர். புதிய அனுபவங்களைப் பெறுகின்றனர். புதிய விஷயங்களைக் கண்டடைகின்றனர். அவர்களிடமிருந்து ஒரு புதிய துவக்கம் நிகழ்கிறது. மாற்றத்தை உருவாக்க பணியாற்றியவர்களாகவும் மாற்றத்தை உருவாக்கியவர்களாகவும் வரலாற்றில் அவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
தானோட்டிக் கார்கள் – காப்பீடு மற்றும் காப்புப்பிணை
சென்ற பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி அலசினோம். அதைவிட மிக முக்கியமான விஷயம் வாகனக் காப்பீடு. தானோட்டிக் கார்களில் காப்பீடு ஒரு மிகப் பெரிய பிரச்னை. சொல்லப்போனால், தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வாகனக் காப்பீடு சமாச்சாரம். வாகனக் காப்பீடு வாகனத்தில் இல்லையேல், உங்களுக்குக் கார் ஓட்டும் உரிமம் இருந்தாலும், நீங்கள் கார் ஓட்டுவது சட்டப் புறம்பான விஷயம். இதற்குச் சட்டப்படி அபராதம் உண்டு. சரி, ஏன் வாகனக் காப்பீட்டிற்கு இவ்வளவு முக்கியத்துவம்?
மூன்று கவிதைகள்
எப்போதும் அணிந்து செல்லும்
முகமூடியை
அத்தனைக்கும்
அணிந்து
அணிந்து
மலிவாகிவிட்டதின் பொருட்டு
மகரந்தம்
1. அச்சுப் பத்திரிகைகளின் அந்திம காலமா இது?
2. போக்குவரத்துச் சந்தடியால் நரம்பு இழி நோய் வருமா?
3. காற்றாலை மேடைகளின் அதிசய உடன் விளைவுகள்
சமூக ஊடகங்களும் அநாதைகளாக்கும் ஆர்ப்பாட்டங்களும்
2010ஆம் ஆண்டு. துனிசியாவில் மொகமது பவசிசி என்ற சாலை வியாபாரி கடன் வாங்கிக் கொள்முதல் செய்த பொருட்களுடன், வழக்கமாய் வியாபாரம் செய்யும் இடத்துக்கு வந்தார். காவல்துறைக்கும் நகராட்சி அலுவலர்களுக்கும் லஞ்சம் கொடுக்க அன்று அவரிடம் பணமிருக்கவில்லை. இதுவே அவரது விதியைத் தீர்மானித்தது. அவரது கைவண்டியில் இருந்த சாமான்கள் காவல் துறையினரால் வீதியில் வீசப்பட்டன, அவரது எடைபார்க்கும் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தாக்கப்பட்டார், காறித் துப்பி அவமானப்படுத்தப்பட்டார். அதன் பின் தன் எடை பார்க்கும் கருவியை திரும்பப் பெற அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனிக்கவில்லை. அரசு அலுவலர்கள் யாரும் அவரைப் பார்க்கவோ, அவரது புகாருக்கு செவி சாய்க்கவோ தயாராக இல்லை. இதனால் மனமொடிந்த மொகமது அரசு அலுவலகம் முன், சாலையில் தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு இறந்தார். அரபிய வசந்தத்தின் முதல் பொறி அது.
நிறைவடையத் தவறிய மாபெரும் சாத்தியங்கள் – சோ. தர்மனின் ‘சூல்’
சோ.தர்மனின் சூல் நாவலைப் பற்றி எழுதப்போனால், அதன் முன்னுரையில், அவர் அந்த நாவலைப் பற்றிக் கூறுவதை ஒரு வழிகாட்டியாகக் கொள்வது அவசியம். அதில் அவர் ரஷிய அதிபர் ப்ரியெஸ்னேவ் (Brezhnev) சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். ப்ரியெஸ்னெவ் காலத்தில்,சரியாக இன்னமும் 10 நாட்களில் மழைக்காலம் துவங்க இருப்பதால், இந்தப் பயிருக்கான விதையை,இவ்வளவு ஆழத்தில், விதைக்க வேண்டும் என்று சோவியத் அரசாங்கத்திடம் இருந்து ஒரு உத்தரவு வருகிறது. விவசாயிகள், அப்படியே செய்கிறார்கள். ஆனால்,பத்து நாட்களில் மழை துவங்கவில்லை.எல்லாப் பயிர்களும் காயந்து விடுகின்றன. அதை அதிபர் விமானத்திலிருந்து பார்வையிடும்போது ஒரே ஒரு இடத்தில் மட்டும் பயிர் விளைந்து இருப்பதை பார்க்கிறார். உடனே அந்த உழவரை அழைத்து கேட்கிறார் என்ன நடந்தது. அதற்கு அவர் சொல்கிறார், ’நீங்கள் 10 நாட்களில் மழை துவங்கும் என்பதால், 4 அங்குல ஆழத்தில், விதைக்க சொன்னீர்கள். ஆனால்…
புகைப்படப் போட்டி
நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிகை வருடந்தோறும் தங்கள் வாசகர்களுக்கான புகைப்படப் போட்டியை நடத்துகிறது. 2017க்கான படங்களை இங்கே பார்க்கலாம். கீழே கனடாவின் நுனாவுட் (Nunavut) பகுதியில் பனிக்கரடி:
சுயமும் சூர்யோதயமும்
மேற்கத்திய தத்துவத்தின்படி நாம் சுயம் என்னும் தனிப்பட்ட குணத்தோடு பிறப்பதில்லை. தன்னியல்பு என்பது நம்முடைய முதல் இரண்டாண்டுகளில் உருவாகி ’சுயம்’ என்னும் பிம்பத்தை எழுப்புகிறோம். நாம் பார்ப்பது, கேட்பது எல்லாம் நம் கற்பிதமே. இதனால் நம் அறிதலை சுருக்கிக் கொள்கிறோமா? புத்தரின் வழியில் யோசித்தால் தற்சார்பற்ற உண்மைகளை இன்னும் “சுயமும் சூர்யோதயமும்”
உடல் தடிப்பு- தவிர்ப்பும் நிவர்த்திப்பும்
40லிருந்து 60 வயது உள்ளவர்களிடையே மாதத்தில் ஒரு நாளாவது 10 நிமிடங்கள் விரைவாக நடப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதமே என்ற ஒரு அறிக்கை. இருந்தும், சிறிதளவு எடையிழபபிறகும் பலன்கள் உள்ளன 5% எடையிழப்பு இன்சுலினுடைய தாக்கத்தை அதிகரிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது. ஒரு வருடத்தில் 8.6% எடையிழப்பை அடைந்தவர்களிடம்,இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, மூன்று மாதத்திய சர்க்கரை அளவு ஆகிய எல்லாமே குறைந்து காணப்படுகிறது. சர்க்கரை வியாதிக்கான அறிகுறிகள் உள்ள நபர்கள் 2.8 வருடங்களில் 5.6 கிலோ எடையை குறைத்தால் சர்க்கரை வியாதி ஏற்படுவதை 58% குறைக்க முடிகிறது. இவர்களை 10 வருடங்கள் தொடர்ந்து கவனித்ததில், மீண்டும் எடை கூடினாலும்,இவ்வியாதி 34% குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
சங்கத்தில் பாடாத கவிதை..
“வாரம் முழுசும் நான் மனைவி மக்களோட பேசறதே இல்லை. என் குழந்தை முழிச்சுக்கிட்டு இருக்கறதையே நான் ஞாயிறு தான் பாக்கறேன். இந்தப் பாட்டு என்னைய வாரம் பூரா அவங்களோட வச்சிருக்கிற மாதிரி இருக்கு. எப்படியும் ரயில்ல போற வரப்ப ஒரு தடவையாவது இதை கேட்டுட்டு போனா வீட்டுல கோபம் சண்டை அண்டாது தெரியுமோ” என்றார். அந்த வயதுக்கு எனக்கு எந்தளவு புரிந்ததோ அதற்குரிய அகலத்தில் தலையாட்டினேன்…பல நாட்கள் அவரின் வாக்மேனில் தும்பி வா கேட்டிருக்கிறேன். நல்ல இசை என்பது இறை நோக்கியே நம்மை செலுத்தும். அதாவது நம்முள் இருக்கும் இறைமையை நீர் கண்ட மண்ணிலிருந்து வரும் முளை போல உயிர்க்க வைக்கும். அதையே …
போகிற போக்கில் மகத்துவங்களை உண்டாக்கியவர்- தி. ஜானகிராமன்
தமிழ்ச் சிறுகதைத் துறைக்குப் பெரும் பங்காற்றியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நூற்றாண்டுக் காலத்தில் இவ்விலக்கிய வகைமைக்குப் பங்காற்றியவர்கள் நூறு பேருக்குள்ளாகத்தான் இருப்பர். அதில் ஆளுமையுள்ளவர்களாக புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஆ. மாதவன் ஆகிய நால்வரை மட்டுமே குறிப்பிட முடியும். அசோகமித்திரனிடம் படைப்பெழுச்சி மிக்க தருணங்கள் இல்லை. மன நெருக்கடியில் விளைந்த அனுபவசாரம் அதிகக் கதைகளில் இருப்பதால் இவரை முக்கியமான சிறுகதையாளர் ஆக்குகிறது. இளம் எழுத்தாளர்களில் இரண்டுபேரை மட்டுமே சொல்ல முடியும். கறாரான இத்தன்மையில் தி. ஜானகிராமன் நிராகரிக்க முடியாத ஒரு படைப்பாளியாக இருக்கிறார். தமிழன் துரதிருஷ்டம் அவரின் நாவல்கள் பேசப்பட்ட அளவு சிறுகதைகள் பேசப்படவில்லை. அதிலும் ஒரு பாதகம் தி. ஜானகிராமன் நாவல் கலையின் உச்சத்தைத் தொட்டவரல்ல. அவருடைய அபரிமிதமான சாதனை சிறுகதைத் துறையிலேயே நிகழ்ந்திருக்கிறது.
…
ஐம்பதுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை வைத்துப் பார்க்கும்போது தி. ஜானகிராமனிடம் வெளிப்பட்ட கலையின் மகாசக்தியான உற்றுநோக்கல் திறன் வேறொருவரிடமும் வெளிப்படவில்லை. சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் பாணியைக் கைக்கொண்டனர். கருத்துலகு மீதான விமர்சனம்தான் மார்க்சியம் என்ற சித்தாந்தத்தின் பொதுத்தன்மைகளை…
பெண் தெய்வம்
சுலோச்சனாவை காணாமல் நடேச ஐயரும், அவரது மனைவியும் ஊர் முழுக்க தேடத்தொடங்கினர். ஊரில் இருந்தது ஒரே ஐயர் குடும்பம் என்பதால் இருந்த இரு நூறு முன்னூறு குடும்பங்களுக்கும் நடேச ஐயரைப் பற்றியும் அவரது மனைவியைப் பற்றியும் புத்தி சுவாதீனம் அற்ற அவரது ஒரே மகளைப் பற்றியும் நன்றாகவே தெரியும். நடேச ஐயர்தான் சுற்றுவட்ட கிராமங்களில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பூஜைகள் செய்துவந்தார். அப்படி ஒன்றும் நிறைய கிராமங்கள் இருக்கவில்லை. பத்து கிலோமீட்டர் சுற்றளவில் இருந்தவை மொத்தம் மூன்றுதான் . ஆனால் கோவில்களின் எண்ணிக்கையோ அதைவிட பத்துமடங்கு. ஐம்பது வயது வரை எல்லா கோவில்களுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ, அவர் வசதிக்கு…