பாரபட்சம் (discrimination) , கோடல்கள் (bias), நுட்பக் கோடல்கள் (micro bias) ஆகியவை நாம் பல நூறு ஆண்டுகளாக சந்தித்து வருபவை. வேற்றுக் கிரகத்தில் ஒரு ஆண், ஒரு பெண்ணை சென்றடையச் செய்து அவர்களைப் போல் குளோனிங் முறையில் பலரை உருவாக்கினாலும், அதிலும் பாகுபாட்டை முதலில் சுட்டிக்காட்டும் மனநிலை உள்ளுர ஓடிக்கொண்டிருப்பதை உணரமுடிகிற வகையில் ஒரு அத்யாயத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாராருக்கு இருக்கிற advantage அவர்களால் உணரப்படுவதில்லை என்பனவற்றை விவாதித்த பின் இன்றும் சாதிய மோதல்கள், பாகுபாடு மோதல்கள் ஏன் தொடர்கிறது என்பது பற்றி ஒரு புரிதல் ஏற்படுகிறது. மனிதன் சிந்திக்க சிந்திக்க பல்வேறு வளர்ச்சிகளும், சாதனைகளும் சாத்தியமாயிருக்கிறது.
Category: இதழ்-175
சங்கு சுட்டாலும்
“இந்த எறும்புகளுக்கு வானம் தெரிய நியாயமில்ல சீனியர். வானத்தை இதுக்கு புரிய வச்சி என்ன பண்ணப்போறீங்க? இல்ல வாழ்நாள்பூராச் சொன்னாலும் புரியுமா?” என்றாள்.
“ஓடிக்கிட்டே இருக்கும். சேத்துக்கிட்டே இருக்கும்..மழைகாலத்துக்காக..,”என்று சிரித்தான்.
“மழைகாலத்துக்கு நாமளும்தான் சேக்கணும். ஆனா இப்ப இருக்கறதெல்லாம் சந்தை எறும்புகள் சீனியர்,” என்று சிரித்தாள்.
“தன் புத்துக்குள்ள உலகத்தை வைக்கப் புதுஉத்தி பாக்குது. தானில்லாத மழைக் காலத்துக்கும் சேக்க கூட்டமாப் போகுது,” என்றான்.
“அதனாலென்ன?” என்றாள்.
கென்யா…இனக்குழு அரசியல் சூழலில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தல்
ஒருவழியாக ஆகஸ்ட் 11 மாலை IEBC தேர்தல் முடிவுகளை அறிவித்தது. முடிவுகளை அறிவித்த IEBC-ன் அலுவலர் பயத்துடனேயே முடிவுகளை வாசித்தார்; பதட்டத்துடனேயே இருந்தார்; முடிப்பதற்குள் மூன்று/நான்கு முறை தண்ணீர் குடித்தார். நான், எங்கே அவர் மயக்கம் போட்டு விழுந்துவிடுவாரோ என்று நினைத்தேன்.
பருவம், படம், பீஷ்மர் & போப்
துரியோதனன் கேள்வி ரொம்பவே விசித்திரமானது. அவனுடைய அப்பாவே குரு வம்சம் இல்லையே? திருதராஷ்ட்ரனே விசித்திர வீர்யனின் பிள்ளை இல்லை. வேத வியாசரும் அம்பிகாவும் கூடித்தான் திருதராஷ்ட்ரன் பிறக்கிறான். வேத வியாசர் குரு வம்சத்தினரா என்ன? அம்பிகாவுமே குரு வம்சம் இல்லை. பின் பாண்டவர்களை அவன் கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கும்? இதை பைரப்பா கவனிக்கவில்லையா? பைரப்பா பொதுவானதோர் விடையை/ விடைகளைக் கொடுத்தாலும், துரியோதனன் இப்படிக் கேட்பதாக எழுதுகிறவர் வேறு பாத்திரங்கள் அவனுக்கு என்ன விடை கொடுத்தன என்று எழுதுகிறார் எனத் தெரிந்துகொள்ள கேட்கிறேன். இதே துரியோதனன், சுதன் வளர்த்த கர்ணனுக்கு ராஜ்யத்தைத் தத்தம் செய்கிறான் ஆனால் தன்னுடன் வளர்ந்தவர்களுக்கு ஐந்து கிராமம் கூடக் கொடுக்க மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தான்.
தொழில்நுட்ப மயக்கங்களும் நவீனத்துவத்தின் முடிவும் – மைக்கேல் சகசாஸ்
சார்லஸ் டைலர் கனடாவைச் சேர்ந்த தத்துவவியலாளர். இவரது ‘எ செக்யூலர் ஏஜ்’ என்ற புத்தகம், சமயம் மற்றும் சமயசார்பின்மை பற்றி பேசுகிறது. சமய நம்பிக்கை வலுவிழப்பதால் சமயசார்பின்மை வளர்வதில்லை, மாறாய் தன்னைத் தவிர பிறிதொன்றுக்கு இடமளிக்காத மானுட நேயமே அதன் வளர்ச்சியின் அடிப்படையாய் இருக்கிறது, என்றார் அவர். இக்கருத்து, கட்டுரையில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது…..பல பரிமாணங்களும் நுட்பங்களும் கொண்ட அவரது வாதத்தின் ஒரு சிறு பகுதியை இங்கு பயன்படுத்திக் கொள்ளவே அவர் எழுதிய ‘எ செக்யூலர் ஏஜ்’ நூலைச் சுட்டுகிறேன். வசீகரமிழத்தல் (disenchantment) குறித்த அவரது புரிதல் முக்கியமானது.
நவீனத்துக்கு முற்பட்ட சமூக இயல்புகளில் மாயங்கள் நிறைந்த உலகம் (enchanted world) என்ற பார்வையும் ஒன்று. அதைக் கடந்த பின்னரே, டைலரின் பொருளில் சமயச்சார்பற்ற உலகம் ஒன்று தோன்ற முடியும்.
ஆரோக்கியத்திலும் நோயிலும் குடல் நுண்ணுயிர் சமூகத்தின் பங்கு
தாய்ப்பாலின் வழியாகவும் முதற் சொட்டிலிருந்தே இந்த நுண்ணுயிர்க் கிருமிகள் குழந்தையின் குடலில் அடைக்கலமாகின்றன. எவ்வாறு இந்த நுண்ணுயிர்க் கிருமிகள் தாய்ப்பாலை வந்தடைகின்றன என்பது இன்னும் தெளிவாகவில்லை.. இத்தாய்ப்பாலில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னெவென்றால் இதில் கலந்துள்ள ஆலிகோசாக்கரைட் எனும் நம்மால் செரிக்க முடியாத சர்க்கரையாகும். வெகு நாட்கள் வரை குழந்தைக்கு தேவையில்லாத இச்சர்க்கரை தாய்ப்பாலில்எதற்காக உள்ளது என்ற கேள்விக்குச் சமீபத்தில்தான் சரியான விடை கிடைத்தது. இதுதான் குழந்தையின் குடலைச் சேரும் நுண்ணுயிர்களுக்கு முக்கிய உணவாகும். தாய்ப்பாலில் குழந்தை வளர்ப்புக்கு வேண்டிய எல்லா பொருட்களும் அடங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் நோயின்றி வளர்வதற்கு வேண்டிய நுண்ணுயிர்க் கிருமிகளும் (ப்ரோபயாட்டிக்ஸ்) அவற்றுக்குத் தேவையான உணவும் (ப்ரீபயாட்டிக்ஸ்) அடங்கியுள்ளது என்பதை நினைத்தால் இயற்கை அன்னைக்குத் தலை வணங்காமல் இருக்க இயலவில்லை.
அறிவும் அறியாமையும் – அருண் ஷௌரியின் ‘டூ செயிண்ட்ஸ்’ நூலை முன்வைத்து
அருண் ஷௌரியின் வாழ்வு துயர் தோய்ந்தது. அவரது மகன், cerebral palsyயாலும் மனைவி Parkinson’s Diseaseஆலும் அவதிப்படுகின்றனர். செரிப்ரல் பால்ஸி, உடல் இயக்கங்களை மெல்ல மெல்லச் சீரழிக்கிறது. பார்க்கின்சன்ஸ் டிசீஸ் மூளையின் செயல்பாட்டை மெல்லச் சீர்குலைக்கிறது. இரண்டுமே தொடர்ந்து முற்றி, முடிவில் மரணத்துக்கு இட்டுச் செல்லும் நோய்மை நிலைகள். “அறிவும் அறியாமையும் – அருண் ஷௌரியின் ‘டூ செயிண்ட்ஸ்’ நூலை முன்வைத்து”
மகரந்தம்
தபால் ஓட்டுக்கள் என்ற உடன் ஓட்டுக்கள் எண்ணும் நாளில் முதலில் எண்ணப்படுபவை அவை என்பதுதான் நம் நினைவுக்கு வரும். அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகணத்தில் இப்படித் தபால் மூலம் ஓட்டளிப்போர் வீடுகளில்த், அரசியல் பேசத் தடைவிதிக்கும் சட்டமுன்வரைவு ஒன்று பிரச்சனையைக் கிளப்பியுள்ளது. டெக்ஸாஸ் செனேட்டில் மெஜாரிட்டி மூலம் நிறைவேற்றபட்ட இந்த முன்வரைவு தற்போது டெக்ஸாஸ் பிரதிநிதிகளின் சபைக்குச் சென்றுள்ளது.
குளக்கரை
பரிணாம வளர்ச்சியைப் பொருத்தவரை, மலர்களின் பரிணாம வளர்ச்சி எப்போது துவங்கியது என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 140 மில்லியனிலிருந்து 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்பட்டாலும், மலர்களின் படிமங்கள் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் காணப்படவே இல்லை. டார்வின் கூட மலர்களின் பரிணாம வளர்ச்சியைப் புதிராகவே கருதியிருக்கிறார். திடீரென்று பல்வேறு வடிவங்களில் காணப்பட்ட மலர்களின் வளர்ச்சியை ஒரு மர்மம் என்றே அவர் வர்ணிக்கிறார்.
மறவோம்
“They shall grow not old, as we that are left grow old:
Age shall not weary them, nor the years condemn.
At the going down of the sun and in the morning
We will remember them. “
நுண்ணறிவு-2
மூளை சில குறிப்பிடத்தக்க கற்கும் குணங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவது, நாம் விரைவாகக் கற்கிறோம். பல நேரங்களில் புதிய ஒன்றை அறிந்துகொள்வதற்கு, சில மேலோட்டமான பார்வைகள் அல்லது விரல்களின் சில தொடுதல்கள் மட்டுமே போதும். இரண்டாவது, கற்றுக்கொள்ளல் என்பதே, படிப்படியாக நிகழ்கிறது. புதிதாக சிலவற்றைக் கற்குமுன், மூளையை மறு பயிற்சிக்கு உட்படுத்த வேண்டிய அவசியமோ அல்லது முன்பு கற்றதை மறக்கவேண்டிய நிர்ப்பந்தமோ இல்லை. மூன்றாவது, மூளைகள் தொடர்ந்து கற்றுக்கொள்கின்றன. திட்டமிட்டும், செயலாற்றியும் உலகில் நடமாடி வரும் வேளைகளில் கூட, நாம் கற்பதை ஒருபோதும் நிறுத்துவது இல்லை. மாறும் உலகிற்கேற்ப மதிநுட்ப அமைப்புகள் (intelligent systems) இயங்க வேண்டுமானால், விரைவு, படிப்படியான உயர்வு, எல்லையற்ற நீட்சி ஆகிய மேற்குறிப்பிட்ட சிறப்பியல்புகள் கொண்ட கற்றல் அவசியம்.
எங்களை ஊசியால் குத்தினீர்களானால்
என்னுடைய இளநிலை வகுப்புக் காலத்தில், இந்தக் கேள்விகளை நான் கேட்கத் துவங்கியபோது, நான் ஒரு முடிவுக்கு வந்தேன். மூடரும் வெறியருமான அந்த நிதி உதவி அலுவலகர் போன்றார் நசுக்கி விடக் கூடியவனாக நான் இருக்க மாட்டேன் என்றும், அதே நேரம் என் பெற்றோரைப் போல எப்போதும் முழுத் தற்காப்பு நிலையிலேயே வாழ்வைக் கழிக்க மாட்டேன் எனவும் முடிவு செய்தேன். மாற்றான் எனும் என் அடையாளத்தை நான் மறைக்கவும் மாட்டேன், நான் எவனில்லையோ அவனாக மாறவும் மாட்டேன். எனக்குத் துன்பம் கொடுக்கும் எழுத்துகளிலிருந்து நான் விலக மாட்டேன், அதே போல மகிழ்ச்சி தரும் எழுத்துகளிலிருந்தும் நான் விலக மாட்டேன். சொல்லப்போனால், பண்பாடு எனும் பெரும் குழப்படியான மேற்கொள்ளலின் மொத்தத்தையும், அது என்னுடைய பிறப்புரிமை என்பது போல எடுத்துக் கொண்டு நுணுகி ஆராய்வேன்.
இந்தப் பிறப்புரிமையை, அதில் எதெல்லாம் கடும் நச்சோ அதையும் சேர்த்தே, பூரணமாக, என்னால் முடிகிற மட்டும் புரிந்து கொள்ள நான் உறுதி பூண்டேன்.
எண்பதுகளின் சீனா
ஆயினும் இந்தப் புரட்சியை அடக்கியது அதன் உள்ளிருந்த முரண்களல்ல, முரட்டுத்தனமான ராணுவ நடவடிக்கைதான். சீனாவின் சந்தைச் சீர்திருத்தங்களையும், அதிகரித்து வரும் பன்னாட்டு நல்லுறவுகளையும் பாதிப்பதற்குப் பதிலாக, இந்த கொடுமையான வன்முறை, அதைத் தூண்டிவிட்டதில் கட்சி ஆற்றிய பங்கிற்கு அங்கீகாரத்தை அளித்தது. சீனாவின் வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிராக இந்தப் போராட்டம் பார்க்கப்பட்டது. நிலைத்தன்மை எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று டெங் குறிப்பிட்டிருந்தார்.
மத்தியஸ் எனார் : வரலாற்றின் நிழலுலகில் பயணிக்கும் நில்லாத் தொடர்வண்டி
மத்தியஸ் எனார் (Mathias Enard) என்ற ஒரு நிஜ நாவலாசிரியனின் ஜோன் (Zone) என்ற நிஜ நாவலை வாசிப்பது புனையப்பட்ட நாவலாசிரியன் ரஃபேல் காஹ்லா புனைந்த நாவலை பிரான்சிஸ் வாசிக்க, நாமும் வாசிப்பது என்பது போல், இந்த நாவலில் மரியான், ஸ்டெபானி, சாஷ்காக்களோடு பிரான்சிஸ் கொண்ட காதல் விவகாரங்களின் பரிதாபகர கண்ணீர்க்கதைகளில் மனதை இழப்பது என்பது மற்றைய நாவலின் இரு மடங்கு அந்நியப்படுத்தப்பட்ட நாயகர்களான இன்டிஸார் மற்றும் மார்வானின் தேய்வழக்குத்தன்மை கொண்ட மகோன்னதத்துக்கு எதிர்ப்பாட்டாய் ஆவது போல், பெய்ரூட்டை விடுவிக்கப் போராடி தன் சகா அஹமதால் காட்டிக் கொடுக்கப்படும் மார்வான் ஏதோ ஒரு வகையில் க்ரோயேஷியாவின் விடுதலைக்குப் போராடி முடிவில் ஒரு அரைக்கிறுக்கனைச் சிரச்சேதம் செய்து தன் சகா ஆன்டியின் மரணத்துக்குப் பழி தீர்த்துக் கொள்ளும் பிரான்சிஸின் வடிகால் போல்
சாட்சி மரம்: ஓர் ‘ஓக்’ மரம் தட்பவெப்பநிலை மாற்றத்தைப் பற்றி என்ன தெரிவிக்கிறது?
மரத்தவளைகளின் முதல் கரகரப்பொலி, நிலத்திலிருந்த பனி உருகும் தருணத்தில் மண்ணிலிருந்து எழும் தாதுப்பொருட்களின் வாசனை. முதல் இலைகள் துளிர் விடும் காட்சி, குட்டைகளில் நீர் வடிவதும் மறுபடியும் நிரம்புவதும், ஓடைகளின் பாய்வு மற்றும் காட்டுப்பூக்களின் முதல் மலர்தல். இலையுதிர் காலத்தில் நிறம் மாறும் இலைகள், கருவாலிக்கொட்டை கீழே விழும் போது கேட்கும் ‘மொத்’ என்ற சத்தம், பூக்கள் போலத் தோன்றும் உறைபனி மற்றும் குட்டைகளில் மிதக்கும் பனிக்கட்டிகள், பூர்ச்ச மரப்பட்டையின் அலாதியான கோலக்காய் போன்ற ருசி. இதோ இந்த நிலம்,சேற்றிலிருந்து அங்குள்ள கருப்பு ஈக்கள் வரை விவரச் செழுமையோடும், உன்னிப்பாகவும் கவனிக்கப்பட்டிருக்கிறது.
ஜான், காட்டினில் விடாமல் மறுபடி மறுபடி நடந்து திரிந்து பருவகாலங்களால் ஆன ஆண்டுகளைப் பற்றி விரிவான நாட்குறிப்பைச் சேகரித்து, எண். 2.5 பென்ஸிலால் தன்னுடைய சிறு கையெழுத்தில் நம் கிரகத்திற்கே தாக்கமுள்ள உள்ளூர் நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறார். பல பத்தாண்டு காலமாக அவர் சேகரித்த அவதானிப்புகளில் தெளிவாகத் தெரிகிறது – சராசரியாக, வசந்த காலம் சீக்கிரமாக வருகிறது, இலையுதிர் காலம் தாமதமாக வருகிறது. மற்றும் பனிக்காலம் இரண்டு பக்கத்திலிருந்தும் குறுக்கப்பட்டிருக்கிறது.
எம். எல். – அத்தியாயம் 2 & 3
ஒரு நாள் வீட்டு தார்சாவில் மாட்டியிருந்த காந்தி படத்துக்கு பக்கத்திலேயே ஒரு தாடிக்காரனுடைய படத்தைக் கொண்டு வந்து கோபால் பிள்ளை மாட்டினார். அவர் வெளியே போயிருந்த நேரம் பார்த்து அந்தத் தாடிக்காரன் போட்டோவைக் கழற்றி மச்சில் கொண்டு போய் மூலையில் போட்டுவிட்டார் ராமசாமிப் பிள்ளை. அவர் மனைவி பிச்சம்மாள், “அந்தப் பெய ஏதோ ஆசையா ஒரு போட்டோ கொண்டு வந்து மாட்டுனா அது ஏன் ஒங்களுக்குக் கண்ணைக் கரிக்கிது?’ என்று சத்தம் போட்டாள்.
“சவத்து மூதி…. நீ என்னத்தக் கண்ட? கண்டவன் படத்தையும் மாட்டி வைக்கதுக்கு இது என்ன நாசுவங் கடையா?”
“நீங்க காந்தியார் படத்த மாட்டி வச்சிருக்க மாதிரி, அவனும் ஆசயா ஒரு படத்த மாட்டினா, அது ஏன் ஒங்களுக்கு பத்திக்கிட்டு வருது?”
ராமசாமிப் பிள்ளையுடைய அபிப்பிராயப்படி ‘பிச்சம்மாளுக்கு விவரம் பத்தாது’, காந்தியும் எவனோ ஒரு வெளிநாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிக்காரனும் ஒன்றாகுமா?