ஹகீம் ஸனாய் – பாரசீக மெய்ஞானி

சுற்றுச்சுவரினால் மூடப்பட்ட நந்தவனத்தை சுல்தானும் படையும் கடக்க நேரிட்டது. தோட்டத்திலிருந்து மேலெழுந்து வந்த கீதம் – சுல்தானைப் பெரிதும் வசீகரித்தது. தன் தளபதிகள் மற்றும் ஹகீம் ஸனாய் பின்தொடர தோட்டத்தினுள்ளே நுழைந்தான். சங்கீத மயக்கத்தில் இருந்த அவனை, உள்ளே கண்ட காட்சி திணறவைத்தது. ஒரு குடிகாரன். அவனைச் சுற்றிலும் தடதடக்கும் இன்னிசை; நாட்டியம். யாரது என உற்றுப்பார்த்ததில் தெரிந்தது. லாய்-குர் (Lai-Khur) ! சுல்தானின் வருகையை அலட்சியம் செய்ததோடல்லாமல் மதுவை வழங்கிக்கொண்டிருக்கும் பெண்ணிடம் கோப்பையை நீட்டினார் லாய்-குர். கூடவே குழறலாக ஒலித்தது அவர் குரல்: ’நிரப்பு கோப்பையை.. சுல்தான் ஒரு குருடன் எனக் கூவியே குடிக்கின்றேன்!’ என்று சொல்லி கோப்பையை நிரப்பிக்கொண்டார்.

விஞ்ஞான வளர்ச்சியினால் உங்கள் வேலை போகுமா?

முதலில் நடக்கக்கூடிய சமுதாய மாற்றம், தானோட்டிக் கார்களால், வாகனம் ஓட்டுபவர்களின் வாழ்வாதாரம். ஆண்டு முழுவதும் எளிதாகப் பயணிக்கவல்ல பகுதிகளில் இவ்வகைச் சரக்குப் போக்குவரத்து தானோட்டி லாரிகளுக்கு மாறும் வாய்ப்புள்ளது, இதே பகுதிகளில், ஊபர் மற்றும் சில டாக்ஸிச் சேவைகளும் தானோட்டிக் கார்களுக்கு மாறலாம். அரசாங்கங்கள், தொழிற்சங்க அமைப்புகள் என்று மிகவும் சிக்கலானப் பிரச்னையாக, இது மாறலாம். லாரி நிறுவனங்கள் மற்றும் ஊபர் போன்ற அமைப்புகளுக்கு, வாகனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். சரியான மேலாண்மையுடன், ஒவ்வொரு மணி நேரமும் காசு பண்ணலாம். தொழிலாளர்க் கொந்தளிப்பு இதனால், பல வருடங்கள் நீடிக்கும் வாய்ப்பும் உள்ளது. தானோட்டி வாகனங்களால், நிறைய லாபம் இருப்பதால்,

இறுதி வரை உறுதி குலையாத லியு ஷியாவ்போ

சீனாவில் சட்டபூர்வமாய் உறுதியளிக்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்தக் கோரி போராடிய லி ஷியாபோ சிறைக்காவலில் மரித்தார். அவர் புதைக்கப்பட்ட இடம் ஒரு நினைவகமாய் மாறலாம் என்று அஞ்சி சீன அரசு அவரது உடலை எரித்து அதன் சாம்பலைக் கடலில் வீசியது- இத்தனைக்கும் லி ஷியாபோ சீன மக்களில் வேறு சிலருக்கே அறிமுகமானவர். அவரது மரணத்தைத் தொடர்ந்து நியூ யார்க்கர் இதழில் எவென் ஆஸ்நோஸ் எழுதியுள்ள அஞ்சலியின் தமிழாக்கம் அளிக்கப்படுகிறது.

எம். எல். – அத்தியாயம் 1

அத்தியாயம் 1

அவர் பதறிக்கொண்டே இருந்தார். மதுரைக்குச் செல்ல அவசரப்பட்டார். மதுரையில் கோபால் பிள்ளை அண்ணாச்சியைச் சந்தித்ததுமே எல்லாம் கைகூடி விடும் என்று சொல்ல முடியாது. அதன்பின் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. தளம் அமைப்பதென்றால் அது சாமான்யமான காரியமா? அதற்கு முன்னாள் இளைஞர்களைத் திரட்டி ஸ்டடி சர்க்கிள் அமைக்க வேண்டும். ஸ்டடி சர்க்கிளில் எத்தனை பேர் ஸ்திரமாக நிற்பார்கள் என்று சொல்ல முடியாது.

“நான் இன்று மாலையே மதுரைக்குப் புறப்படட்டுமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார் மஜூம்தார். தோழர் அப்புவுக்கு கொஞ்சம் எரிச்சலாகக்கூட இருந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. சாரு மஜூம்தார் மீது அவருக்கு அவ்வளவு மரியாதை இருந்தது. கோபால் பிள்ளை மீது மஜூம்தாருக்கு இருந்த அளவு நம்பிக்கை அப்புவுக்கு இல்லை. கோபால் பிள்ளை கட்சிச் செயல்பாடுகளைவிட்டு விலகி எவ்வளவோ காலமாகி விட்டது. இப்போது அவருக்கு எந்தளவுக்குத் தொண்டர்க்ளுடனும் மக்களுடனும் தொடர்பிருக்கும் என்று சொல்ல முடியாது.

ஆனால், தோழர் மஜூம்தார் அவரைப் பெரிதும் நம்புகிறார். 1953-ல் மதுரை பிளினத்துக்கு அவர் வந்திருந்தபோது, கோபால் பிள்ளைக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டிருக்கலாம். இது 1953 அல்ல, 1968.

இரவு – கவிதைகள்

நிழல்
சபிக்கப்பட்ட வசைகளாய்
வடிவங்களின்றி
என்னைக் காட்டிக் கொண்டிருந்தது
சலனமில்லாத குளத்தின் தோலுக்கடியில்
ஊரும் பார்வைகள்
குமிழியிட்டு ஒளிந்து மறைகின்றன

பியானோ ஆசிரியரின் கண்மணி

என்னுடைய கதைகளில் கொள்ளை கொள்ளையாக உணர்வுகள் வரும். எல்லாவித உணர்ச்சிகளும் சத்தியமானவை. ஒவ்வொரு விநோதமாக ஆராய்ந்து விதந்து கூறுகிறேன். மற்ற நிஜங்களுக்கு கதையில் ரொம்ப இடம் தர மாட்டேன். உண்மை சம்பவங்களை விட விசித்திரங்களை குடைந்து எழுத்தில் கொணர்கிறேன். அதனால்தான் பெண்களைக் குறித்து எழுதுகிறேன். நான் பெண் இல்லை. அவர்கள் எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்பது தெரியாது. இது என்னை உற்சாகம் கொள்ளவைக்கிறது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சிந்திக்கிறேன். என்னால் அவர்களாக முடியாது. அதனால் ஆர்வத்துடன் அந்த அனுபவத்திற்குள் நுழைந்து ஆராய்கிறேன்.

வரலாறும் பொறுப்புணர்வும்

இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஜெர்மனி இழைத்த கொடுமைகள், உக்ரெய்ன் எதிர்கொண்ட கொடூரங்கள், இவற்றின் பின்னணியில் உள்ள
யூரோப்பிய கொள்கைகள், கோட்பாடுகள்- இவை நமக்கு ஏன் முக்கியமாக இருக்க வேண்டும்? யூரோப்பிய மோதல்களின் வரலாற்றை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? ஜெர்மனியின் பாராளுமன்றத்தில் திமோதி ஸ்னைடர் 20.6.2017 அன்று ‘Germans must remember the truth about Ukraine – for their own sake‘ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் உக்ரெய்ன் விஷயத்தில் ஜெர்மனியின் வரலாற்றுப் பொறுப்பு பற்றி அவர் பேசுகிறார். வரலாற்றுப் பொறுப்பை ஏன் பேச வேண்டும், அதிலும் குறிப்பாக ஜெர்மனிய வரலாற்றுப் பொறுப்புணர்வை ஏன் பேச வேண்டும், என்ற கேள்வியை எதிர்கொள்ளும் ஸ்னைடர் முதலில் ஒரு பொதுப் பார்வையை முன்வைக்கிறார்.

மொழியியல்

சென்ற வருடம் உலகெங்கும் சிறிது பரபரப்பை உண்டாக்கிய அறிவியல் புனைவுப் படமான  ‘அரைவல்’ படத்தில் காண்பிக்கப்பட்ட ஏலியன்களுடன் ஆன உரையாடலுக்கும், நிஜ வாழ்க்கையில் நடக்கும் மொழியியல் ஆராய்ச்சிக்கும் எவ்வளவு நெருக்கம் உள்ளது என்று நாம் யோசித்திருக்கலாம்.

குளக்கரை

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நாடகத்தில் அதிபர் தமது சட்ட மந்திரி போன்ற பதவிக்குத் தேர்ந்தெடுத்த ஒரு நபரை ‘முறைப்படி’ தேர்ந்தெடுக்கக் கூட்டப்பட்ட ஒரு அவையில், பார்வையாளர் ஒருவர் அங்கு இந்த நபரின் ‘நேர்மை, நம்பகத்தன்மை, நியாய உணர்வு’ போன்றன விதந்தோதப்பட்டதைக் கேட்டுத் தன்னை அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார். அப்படிச் சிரித்தது அவையின் ஒழுங்கைக் கெடுக்கச் செய்யப்பட்ட முயற்சி என்று சொல்லி அவரை அவை அதிகாரிகள் கைது செய்து அவர்மீது வழக்குத் தொடர்கிறார்கள். ஆக அமெரிக்காவில் என்னவொரு சட்ட அமைப்பு இருக்கிறது என்றால், அரசு நிகழ்ச்சியில் விசாரணை நடக்கும்போது சிரித்தால் சிறை தண்டனை கிட்டும் வாய்ப்பு அதிகம் என்பதுதான் அது.

ஊற்றுகள்

அதிகாலைப்பறவைகளின் உவகைமொழிகளை மூழ்கடித்தபடி கணபதிபாளையத்தை எழுப்பிக்கொண்டு போர் -வண்டி முடக்கு வேம்பைக் கடந்து நின்றது.பறவைகள் எழுந்து வயல்காட்டுப்பாதையில் பறந்தன.அப்போதுதான் அசந்து படுத்த நாய்கள் சுழன்றெழுந்து குரைத்து, பின் நிதானம் கொண்டு சுற்றிவந்தன.மாசி மாதக் கிழக்கு கொள்ளைச்சிவப்பாக விடிந்தது. சில வெள்ளைநிறக் கூரைவீடுகளும், முற்றம் வைத்த மஞ்சள் ஓட்டுவீடுகளும், மில்லெனியத்திற்குப் பின், திண்ணைகள் இல்லாது கட்டிய பச்சை,ரோஸ், ஊதா நிறச் சிறு மாடிவீடுகளுமாகத் தெரு வளைந்து நெளிந்திருந்தது. இரும்புக் குழாய்களை இறக்கிப் போட்டுவிட்டு சந்தின் முனையில் பெருஞ்சத்தத்துடன் துளைக்கத் துவங்கினர்.வெயிலேறத் தொடங்கியதும் வயல் வேலையில்லாததால் ஆடுமாட்டிற்கு தண்ணீர்காட்டி, தீனி பிடுங்கிப் போட்டுவிட்டு,

பாலர் , இளம்பிராயத்தினரின் உறக்கமும் உறக்கமின்மையும்

6 மணிக்கும் குறைவான அளவு உறக்கமுள்ளவர்களிடையே 8 மணி நேர உறக்கத்தையுடையவர்களோடு ஒப்பிடும்போது அகால மரணத்தை தழுவும் ஆபத்து 13 சதவிகிதம் அதிகமாக உள்ளது..உறக்கம் குறைவாக உள்ளவர்களினால் 40,000த்திற்கும் மேலான சாலை விபத்துகள் நிகழ்கின்றன.இதனால் வருடந்தோறும் 1,500 பேர் உயிரிழக்கிறார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது போல் சரியான அளவு உறக்கம் கொள்வதை சிறுவயதிலேயே ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய ஒழுக்கக் கட்டுப்பாட்டில்சேர்ந்த ஒன்று. சரியான அளவு உறக்கம் கொள்வதை சிறு வயதிலேயே பழக்கிக் கொண்டு விட்டால் பெரியவர்களான பின் உறக்கப் பற்றா குறையையும் அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் தவிர்க்கலாம் என்றே நான் நம்புகிறேன். அதனால்தான் இக்கட்டுரை சிறுவயதினரிடையே உறக்கத்தின் அருமையை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

மறைந்து கொண்டிருக்கிறாய், நீ…

தமிழில்: எம். நரேந்திரன் இன்று காலை படியிறங்கி கீழே வந்தபோது குக்கீ மாயமாக மறைந்து விட்டதை உணர்ந்தேன். அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவசரக்கால அதிகாரப்பூர்வ விதிகளின்படி கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போனவைகளுக்கான பிரத்தியேக துறைக்கு போன் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட குரலைப் “மறைந்து கொண்டிருக்கிறாய், நீ…”

மகரந்தம்

மிஹிர் சென்னைப் போல யோசிப்பவர்கள் ஸ்வீடனிலும் சிலர் உண்டு. ஸ்வீடனில் கொஞ்சம் இடது சாரித்தனமும், கொஞ்சம் ஃபாசிசமும், கொஞ்சம் பழமை வாதமும், கொஞ்சம் அடாவடி/ தத்தாரி நாகரீகம். அங்கு வ்யூவர்டோன்யோ (Övertorneå) என்ற ஒரு சிறு நகரில், பொழுது போகாதவர்கள் நிறைய இருந்திருப்பார்கள் போல இருக்கிறது. ஆனால் சும்மா இருப்பதை விரும்பாத மிஹிர்சென் கோஷ்டி போலவும் இருக்கிறது. அதனால் ஒரு போட்டி வைக்கலாம் என்று யோசித்து அதன்படி, உலக சாம்பியன்ஷிப் விருது வழங்கும் போட்டி ஒன்றை நிறுவி இருக்கிறார்கள். அந்த ஊரில் கோடையில் கொஞ்சம் கொசுக்கள் மண்டுமாம். அந்தக் கொசுக்களை யார் அதிகமான எண்ணிக்கையில் பிடித்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இந்த விருது கிட்டும்.

குவெம்புவின் படைப்புலகம்

This entry is part 18 of 48 in the series நூறு நூல்கள்

”பிறைச்சந்திரன்” என்றொரு கவிதை. அதில் ஒரு சிறுவன் தன் தாயைப் பார்த்துத் தனக்குத் தெரிந்த உவமையைக் கொண்டு,

”கடவுளின் பெப்பர்மெண்டா அம்மா
வானில் சுழலும் சந்திரன்”

என்று எளிமையாகக் கேட்கிறான். அம்மா பதில் சொல்கிறாள்.

”நீயும் கடவுளின் குழந்தையானால்
உனக்கும் தருவான் கண்ணே”

இரான் – கடற்கரை முதல் கலகப்போர் வரை

தி கார்டியன் கொடுக்கும் இந்தப் படத் தொகுப்பில் இரானிய வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்று நிகழ்த்தல் காட்சிகள் மூலம் ஒரு கலைஞர் சித்திரித்திருப்பதைத் தொகுத்திருக்கிறார்கள். அவர் மிக நுண்மையான கேலியாகப் பல காட்சிகளை அமைத்து அவற்றைப் படமாக எடுத்தவை ஒரு தொகுப்பாகக் கிட்டுகின்றன. அந்தத் தொகுப்பில் சிலவற்றைக் கார்டியன் “இரான் – கடற்கரை முதல் கலகப்போர் வரை”

பருவம் – எஸ்.எல்.பைரப்பா

துரியோதனன் தர்மம் குறித்து ஒரு முக்கியமான கேள்வி எழுப்புகிறான், அதுதான் பாரதப் போரின் மையத்தில் உள்ள கேள்வியாகவும் இருக்கிறது: “பாண்டவர்கள் எப்படி குரு வம்சத்தினராக முடியும்? நியோக முறைப்படி குந்திக்குப் பிறந்த அவர்கள் பாண்டுவுக்குப் பிறந்தவர்களல்ல”. நியோகம் என்பது பிள்ளைப் பேற்றை நோக்கமாய்க் கொண்டு கணவன் அனுமதியுடன் வேற்று மனிதனுடன் உடலுறவு கொண்டு கருத்தரித்தல். பாண்டு ஆண்மையற்றவன் என்பதால் தேவ குலத்தைச் சேர்ந்த வெவ்வேறு ஆண்களுடன் நியோகம் பயிலும்படி பாண்டு குந்தியிடம் கேட்டுக் கொள்கிறான். அந்நாளைய பண்டிதர்கள் நியோக முறைப்படி வம்ச விருத்தி செய்வதை ஏற்றுக் கொண்டிருந்தாலும் துரியோதனன் இப்போது அதைக் கேள்விக்குட்படுத்தி, நிராகரிக்கிறான். இது குந்தியை கள்ள உறவு பூண்ட நிலைக்குச் செலுத்துகிறது.

குறிப்பிற் குறிப்புணர்வார்

தமிழ் நிலத்தின் வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக களப்பிரர், பல்லவர், நாயக்கர், மொகலாயர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக் காரர் ; இன்றைக்கு இந்திய யூனியன் என்று தமிழ் மண் அடிமைப்பட்டுக் கிடக்கிறபோது இதில் தமிழ் அழகியல், தமிழ்க்கலைகள் எங்கே தேடுவது? எப்படி அடையாளப்படுத்துவது? நண்பர் சா.பாலுசாமி, நாயக்கர் கால கலைகளில் இந்தியநாட்டின் பிறபாணிகளும், ஐரோப்பிய தாக்கமும் இருக்கின்றனவென்று தெரிவித்துள்ள உண்மையை நாம் அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடமுடியாது. தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி : “சிற்றிலக்கியங்களை எழுதிய புலவர்களின் பெயர்களைக்கூடத் தெரியும் ஆனால் சிதம்பரத்து நடராஜரையோ, தஞ்சை பிரகதீஸ்வரத்து நந்தியையோ ….. வடித்தவர்களின் பெயர் தெரியாது. இதற்குக் காரணம் கலையாக்கம் பற்றிய தமிழ்நாட்டுச் (இந்திய) ஒழுங்கமைவு” என முன்வைக்கும் குற்றச்சாட்டில் உள்ள உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை. இதை பாலுசாமியில் ஆய்வுமுடிவுகளும் உறுதி செய்துள்ளன.