படிக்கும் பலருக்குச் சற்றுக் கசப்பாக இருக்கக்கூடும். அதிகக் கம்பித் தொலைப்பேசிகள் சார்ந்த கட்டமைப்பு பெரிதாக இல்லாமல், செல்பேசி தொடர்பியலில் மேற்கத்திய நாடுகளை விட முன்னேறிய இந்தியா ஏன் இந்தத் தொழில்நுட்பத்திலும் முன்னேற முடியாது? விஷயம் தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல; போக்குவரத்து ஒழுங்கு சார்ந்தது. அத்துடன், பல தரப்பட்ட போக்குவரத்து அமைப்புகள் (ஆட்டோ, பைக், ஸ்கூட்டர், மாட்டுவண்டி, ரிக்ஷா) ஒரே சாலையைப் பயன்படுத்தும் இந்தியாவில், கணினிகள் குழப்பமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. பல ஆண்டுகள் மேற்குலகில் சோதனைக்குப் பின்னரே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சோதிக்க முடியும். அப்படியே இந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், இந்தியாவில், இந்த ஒழுங்கு ஓரளவு உள்ள நெடுஞ்சாலைகளில் மட்டுமே பயன்படும்.
Category: இதழ்-173
பிரெஞ்சு இந்திய காலனி இலக்கியம் – பகுதி 3
பொருளியல் மாற்றங்களால் நடக்கும் இடப்பெயர்வும், சமூக அடுக்கு மாற்றங்களும் நவீன வரலாற்று ஆய்வுக்கு அத்தியாவசியமான ஒன்று. அன்றாட உணவு மற்றும் வாழ்வாதாரத் தேவைக்காக இடப்பெயர்வு நடக்கும்போது மக்கள் திரள் அடிமை வாழ்வுக்கும் தயாராக இருக்கிற அவலம் என்பதை மனித வரலாற்றின் கதையாகப் பார்க்கலாம். அப்படிப்பட்ட புது பொருளாதார மாற்றங்கள் சமூக அடுக்குகளைக் கலைத்துப்போடும். லே மிராப்ளே நாவலில் பிரெஞ்சுப் புரட்சி காலகட்டத்தில் எப்படி மக்கள் எலிகளைப் போல வாழ்ந்துவந்ததனர் என்பதைக் காட்டுகிறது.
திகிரி
சிதறால் மலைக்கு மேலே வருடக் கணக்கில் ஒரு மனிதரைக் கூட காணாது சமணத்
துறவிகள் இருந்திருக்கிறார்கள். மருத்துவமனையிலிருந்து வந்தபிறகு எனக்கு
அங்கே ஒரு இரவாவது தங்கவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு ஒருநாள்
தனியாகத் தங்கினேன். யாரிடமும் எங்கே போகிறேன் என்று சொல்லவில்லை. வழக்கமான சுற்றுலாப் பயணிகள் மாலைஅடர்ந்ததும் கீழிறங்கிப் போவதை
பார்த்தேன். குரல்கள் ஒவ்வொரு படியாகபுறாக்களை போலத் தத்தி தத்தி
இறங்கின. பின்னர் எதிர்பாரா ஒருகணம் காற்றால்உந்தப்பட்டு பறந்து உங்கள்
அருகே மீண்டும் வந்து உங்களைத் திடுக்கிடச் செய்தன.
நாடோடிகளுக்குக் குடியுரிமையா? கானலில் நீரூற்றா?
ஒரு இனம் அல்லது மொழியைப் பொதுவாகக் கொண்ட மக்களின் நாட்டரசு உருவான பிறகு, ரோமாக்கள் ஓரம் கட்டப்பட்டார்கள், புதுச் சமூகங்களில் அவர்களுக்கு உறுப்பினர் என்ற உரிமை மறுக்கப்பட்டது, அவர்கள் இருப்பது பொறுத்துக் கொள்ளப்பட்டதே தவிர ஏற்கப்படவில்லை. தனிக் குழுவாக இருப்பதும், தங்கள் மொழிகளையும், பண்பாட்டையும் பாதுகாத்துக் கொள்வதும் அழியாமல் பிழைத்திருக்க அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகள்- உலக வரலாற்றில் அனேகக் குழுக்கள் இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்கின்றனர். ரோமாக்கள் மட்டுமா வேரில்லாத வெளியாட்கள் என்று நடத்தப்பட்டனர்? நாடு-அரசுகளின் காலத்தில் அவர்களின் வரலாறு ஓரளவு யூதச் சமூகங்களின் நிலையை ஒத்திருந்தது. இன்றோ, ரோமாக்களில் பலர் நாடோடிகளாக இல்லாமல், ஒரு நிலப்பரப்பில் தங்கி விட்டிருக்கின்றனர், அந்த நாட்டு அடையாளங்களை ஏற்றுத் தம்மை செக் மக்கள், ஃப்ரெஞ்சு மக்கள், இதாலியர் என்றோ அடையாளம் மேற்கொண்ட போதும், நாடு தடைகளின்றி நடத்தப்படுவதற்கு அவர்கள் ஆபத்து விளைவிக்கிறார்கள் என்ற கருத்தே மேலோங்கி உள்ளது.
இந்தியாவின் முகங்கள்
ஜோஷுவா க்ளக்ஸ்டைன் (Joshua Gluckstein) இந்தியா நெடுக பயணித்திருக்கிறார். சந்தித்தவர்களில் சிலரை ஓவியமாகத் தீட்டியிருக்கிறார். கோட்டோவியமாக இந்தியர்களின் முகங்களை அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடு தெரியுமாறு பதிந்திருக்கிறார்.
இசை நாடகம் நடக்கும் முன்னே
நியு யார்க் நகரத்தில் இருக்கும் மெட் ஆபரா (Metropolitan Opera House) எவ்வாறு தன்னை தயார் படுத்திக் கொள்கிறது? ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் என்ன நடக்கிறது? யாரெல்லாம் என்ன வேலையை எப்பொழுது செய்கிறார்கள்? இசை நாடகம் துவங்குவதற்கு முன் பின்னணியில் நடக்கும் தயாரிப்புகள் குறித்த வீடியோவை இங்கு பார்க்கலாம்:
வேதனையின் புகைப்படங்கள்
இன்று வியட்நாம் புகைப்படங்கள் எதுவும் தினசரிகளில் இல்லை. ஆனால் இன்று காலை அளிக்கப்பட்ட குறிப்புகளுடன் அச்சிடப்பட்டிருக்கக்கூடிய புகைப்படம் ஒன்று இருக்கிறது. 1968ல் hueல் donald mccullin எடுத்த புகைப்படம் அது. ஒரு குழந்தையைக் கையில் ஏந்தி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் முதியவர் ஒருவரின் படம் அது. அவர்கள் இருவர் உடலிலும் கருப்பு-வெள்ளை புகைப்படங்களுக்கே உரிய கருப்பு ரத்தம் ஏராளமாய் வழிந்து கொண்டிருக்கிறது.
உள்ளிருக்கும் எதிரி
இதில் வரலாற்று விசித்திரம் என்ன? முன்பு முஸ்லிம் நாடுகளில் உரிமைகளோடு இருந்த யூதர்கள் இன்று முஸ்லிம் நாடுகளில் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள். குறிப்பாக இஸ்லாமிசத் தீவிர வாதம் யூதர்களை ஒழிக்க வேண்டும் என்றே உலகெங்கும் பிரச்சாரம் செய்கிறது. இதனால் சமீப காலம் வரை துருக்கியில் வசித்த யூதர்கள் கூட வெளியேற முற்பட்டிருக்கின்றனர். முன்பு கிருஸ்தவ நாடுகளில் கொடுமைப்படுத்தப்பட்டு, கேவலமான நிலையில் வாழ்ந்த யூதர்கள் இன்று அந்நாடுகளில் குறைவான வெறுப்புக்கு நடுவில், அனேகமாக நன்னிலையில் வாழ்கிறார்கள்.
மறுபடியும் ஜென்கின்ஸ்- அதாவது ‘ஒருங்கிணைந்த கட்டமைப்பு’
அப்போதெல்லாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றங்களை அமல்படுத்துவார்கள். இரவும் பகலுமாக நான்கு நாட்கள் கூடிப் பேசுவார்கள். ஒரே குழு, பத்து நாட்கள் உட்கார்ந்து நிரல் (coding) எழுதுவார்கள். எழுதியதைச் சரிபார்க்க இன்னொரு பத்து நாட்கள் ஆகிவிடும். போட்டி நிறைந்த இவ்வுலகில் பத்து நாட்கள் என்பது அதிகக் காலம். அதற்குள் வாடிக்கையாளர்களின் தேவையே மாறிப்போய்விடும். காலையில் முடிவெடுத்தால், மறுநாள் காலையில் மாற்றங்களை அமல்படுத்த வேண்டியிருக்கும். போதுமான நேர அவகாசமில்லை என்பதற்காகச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல், அவசர அவசரமாகப் பணியை நிறைவேற்ற முடியாது. குறுகிய காலம் என்பதற்காக நடைமுறைகளை நமக்கேற்றபடி திருத்தியெழுதினால், தரம் குறைந்துவிடும்.
மூன்று கவிதைகள்
பாதை என
தனியாக ஒன்று
எங்குமில்லை..
என் ஒவ்வொரு காலடிக்கும்
முன்பு கைப்பிடி கருங்கற்களை
நானே நிரப்பியப்படி செல்கிறேன்
குளக்கரை
உலகுக்கு அற போதனை செய்வதில் முதல் நிலையில் இருக்கும் அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் சிறுவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தடையேதும் இல்லையாம். 13, 14 வயதினர் கூடத் திருமணம் செய்து கொள்ளலாம். அதுவும் சில நேரம் 14 வயதுப் பெண்கள் அவர்கள் வயதைப் போல இரட்டை மடங்கு மூத்த ஆண்களைக் கூடத் திருமணம் செய்து கொள்கிறார்களாம். அதோடு முடிந்ததா கதை, ஒரு (வயதால் மூத்த) ஆண், சிறுமியை வன்புணர்வு செய்து அவள் கர்ப்பமானால், அவளை அந்த ஆண் திருமணம் செய்து கொண்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடலாம். இதைப் பற்றிப் பலமான விவாதங்கள் சட்ட சபைகளில் சில மாநிலங்களில் நடந்திருக்கின்றன. கிருஸ்தவம் இந்தியாவில் மேலோங்கி வரும் இந்நாளில் இந்து சமுதாயத்தின் பழக்க வழக்கங்களைக் கடுமையாக விமர்சிக்க அவர்களுக்குப் பிரச்சாரத்துக்கு நிதி உதவியைக் கொட்டும் நாடுகளில் அமெரிக்கா ஒன்று. இப்படி ஒரு மாநிலமான டெக்சாஸில் மட்டும் கடந்த 14 வருடங்களில் 40,000 சிறு பிராயத்தினர்கள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி
சென்னை தினம் (மெட்ராஸ் டே) நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது. அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். கதைகள் சென்னையைப் பின்னணியாகக் கொண்டதாக இருக்கவேண்டும். சென்னையில் நடக்கும் கதையாகவோ அல்லது சென்னையைப் பற்றிய கதையாகவோ அல்லது சென்னையைக் களமாகக் கொண்டு நிகழும் கதையாகவோ இருக்கலாம். சென்னையை மையமாகக் கொள்ளாத கதைகள் நிராகரிக்கப்படும். போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2017.
மகரந்தம்
சமீபத்தில் வெளியான ‘ஒண்டர் உமன்’ என்கிற திரைப்படத்தை ஒட்டி அமெரிக்கன் ஸ்காலர் பத்திரிகை இந்தக் கட்டுரையைப் பிரசுரித்திருக்க வேண்டும். உளவியலாளரான விலியம் மார்ஸ்டன் இந்தப் பாத்திரத்தை உருவாக்கி முதல் புத்தகத்தை வெளியிடக் காரணமாக இருந்தவர். ஒரு பெண் பாத்திரம் ஏன் அவசியம், அந்தப் பாத்திரத்துக்கும் இதர சூப்பர் ஹீரோ பாத்திரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன, 1940களிலேயே இந்தத் தேவையை உணர்ந்து அவர் ஏன் இப்படி ஒரு பாத்திரத்தை மையமாகக் கொண்ட காமிக் புத்தகங்களை உருவாக்க முயற்சி செய்தார் என்ற விவரங்களை இந்தக் கட்டுரை கொடுக்கிறது. விலியம் மார்ஸ்டனும் பெண்களைப் பற்றி யோசிக்கையில் இதரரிடம் அன்பாக இருத்தல், பராமரிப்பில் கவனம் செலுத்துதல், இனிமையாகப் பழகுதல் என்ற சில குணங்களை முன்வைக்கிறார் என்று ஒரு குற்றச் சாட்டு இருக்கிறது.
நுண்ணறிவு – நூல் அறிமுகம்
ஹாவ்கின்ஸின் அறிமுகச் சான்றுகள், அவரது அபரிமிதமான ஆக்கத் திறனையும் இயல்பான நுண்ணறிவையும் சுட்டிக்காட்டி நம்மை மலைக்க வைக்கின்றன. அவருடைய இந்த புதிய நூலின் (On Intelligence) மதிப்புரைகள் ஒவ்வொன்றும் “ஹாக்கின்ஸ் ஒரு சிறந்த தொழில் முனைவர்; கணினி நிபுணர்; Palm computing, Handspring என்கிற இரு குழுமங்களின் நிறுவனர்” என்ற உயர்த்தும் குறிப்புகளுடன் தொடங்குகின்றன. இவர் Palm Pilot, Treo ஸ்மார்ட் போன் மற்றும் சில சாதனங்களைக் கண்டுபிடித்தவர், “On Intelligence” என்னும் இந்த நூலில், ஹாக்கின்ஸ், “மூளை எவ்வாறு செயல்படுகிறது, நுண்ணறிவு இயந்திரங்களை எவ்விதம் உருவாக்கிக் கொள்ள முடியும்,” என்பன பற்றிய புதிய கோட்பாட்டை அறிமுகப்படுத்துகிறார்
சொல்வனம் வழங்கும்..
பன்னிரண்டு பகுதிகளாய் சொல்வனத்தில் வெளிவந்த அந்தத்தொடரில் தத்துவம், கணிதம், கணினியியல், இயற்பியல், பெண்ணியம், வணிகவியல் முதலிய பல துறைகளில் இருந்துவரும் பிரச்சினைகளை அலசவும், கருத்துக்களை விளக்கவும் உலகெங்கிலும் உருவாக்கப்பட்ட சிந்தனைச்சோதனைகளை தொகுத்து வழங்கி இருந்தேன். கடந்த ஒரு வருடமாக அந்தத் தொகுப்பை இன்னும் நிறைய பாலிஷ் செய்து, புதிதாக ஜனநாயகம், மருத்துவம் பற்றிய அத்தியாயங்களையும், ஆழ்ந்த அறிதல் (Deep Learning) முதலிய விவாதங்களையும் சேர்த்து ஒரு புதிய மின் புத்தகமாக “சிந்தனைச்சோதனைகள் – பணச்செலவில்லா பிரபஞ்சச்சுற்றுலா” என்ற பெயரில் வெளிக்கொணர்ந்து இருக்கிறோம். சொல்வனம் ஆசிரியர் குழுவின் உதவி/ஆசியுடன் .வெளிவரும் இப்புத்தகம், ஒரு சொல்வனம் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தகத்தை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வலை இணைப்புகளின் மூலமாகவோ அல்லது அருகிலிருக்கும் QR குறியீட்டை உபயோகித்தோ நீங்கள் வாங்கலாம்.
தேறேன் யானினி
அதிர்ச்சியின் அடுத்த நிலை , தற்காப்பிற்காக தாக்குதல், அல்லது தப்பியோடுதல். இரண்டும் கிடைக்காத நிலையில் , மூளை தடுமாற, அது அமிக்டெலாவின் ஆளுமையிலேயே இருப்பதால், இயலாமை, மற்றொரு உணர்வின் வடிவெடுக்கிறது. கோபம். “எனக்கு ஏன் இந்த நிலை?” என்ற கோபம், வேலையை விட்டுப் போகச் சொல்லப்பட்ட இளைஞனை, “இப்படி முடிவெடுத்த அந்த மேனேஜரை… மவனே, போட்டுத் தள்ளணும்” என்றோ “ போர்க்கொடி பிடிக்கிறேன்” என்றோ பேசவும் இயங்கவும் செய்ய வைக்கிறது. அதன் விளைவுகள் எப்படியிருப்பினும், தோற்றுவாய் கோபம் , அதன் முன்னான அதிர்ச்சி. சங்கரி “அந்தக் கடவுளுக்கு ஈவு இரக்கமே கிடையாதா?” என்கிறாள். இந்த உணர்வுக் கொந்தளிப்பு நிலை 20 நிமிடங்கள் நீடிக்கலாம். பெரும்பாலும் 10 நிமிடங்களில் மூளையின் தருக்கப்பகுதி தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிவிடும். அமிக்டெலா, கொந்தளிக்க வைத்து, கற்கால மனிதனை ஓட வைத்த நிம்மதியில், அடங்கிவிடும்.
இந்தியர்களுக்கு மாரடைப்பு அதிகம் வருகிறதா?
இதய ரத்தக்குழாய் மாற்றுவழி சிகிச்சை – இ.ர.மா.சி. இது மாரடைப்பிற்காக செய்யப்படும் அறுவை சிகிச்சை. மற்ற இனத்தவர்களை விட இந்தியர்களிடையேதான் இவ்வியாதி அதிகமாகவும் உக்கிரமாகவும் உள்ளது.
சில கொழுப்புவகைகள் பிற இனத்தவர்களை விட இந்தியர்களிடம் அதிக அளவில் சேருவதால் சிறுவயதிலேயே சர்க்கரை வியாதி ஏற்பட காரணமாயுள்ளது. மேலும் இந்தியர்களிடையே இருதயத்தை வலிமைப்படுத்தும் உடற்பயிற்சியில் ஈடுபாடு உள்ளவர்கள் ஒரு சிலரே. வருடத்திற்கு 60,000 இந்தியர்கள் இச்சிகிச்சையை பெறுகிறார்கள். அமெரிக்காவில் இச்சிகிச்சையின் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களில் முப்பது சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் காரணம் அறுவை சிகிச்சை இல்லாமல் குறுகிய ரத்த குழாய்களை விரிவுபடுத்தும் முறைகளும் (ஆன்ஜியோபிளாஸ்டி ) உட்குழாய்களை (ஸ்டென்ட்) பொருத்துவதும் புழக்கத்தில் வந்துள்ளதே ஆகும். அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் இதயம் எவ்வாறு இயங்குகிறது என்ற கேள்வி வாசகர்களிடையே எழலாம்.