செக்ஸை வைத்து இலக்கியம் படைத்தால் மட்டும் என்ன சாதித்து விடுவாராம்? எந்தப் பொருளிலும் மலிவுப் பொருள்தான் மனித புத்திக்கு உடனே சென்று சேர்கிறது. ஏனெனில் உழைப்பை, முயற்சியைக் கேட்கும் எதுவும் மனிதருக்கு அத்தனை உவப்பானவை அல்ல. கட்டுப்பாட்டோடு குடிக்கச் சொல்லும் உயர் அளவு ஆல்கஹால் உள்ள சாராயங்கள் – விஸ்கி இத்தியாதி- அனேகருக்கு ஏற்பில்லை, காரணம் விலை மட்டுமல்ல. மறக்கவும், மரத்துப் போகவும் குடிப்பவர்களே அதிகம். அது எத்தனை தூரம் தன்னைத் தானே மேன்மேலும் தோற்கடிப்பது என்பதை அவர்கள் அறியாமலா இருப்பார்கள்? அதே போல மேலை இலக்கியர்களுக்கு இந்த செக்ஸ் பற்றி எழுதுவது என்பது ஒரு உளைச்சல். முயன்று முயன்று எழுதி அதில் என்ன சாதிப்பார்களாம்?
Category: இதழ்-172
ஊசல்
வெண்அங்கியை இடதுகையில் மடித்துத் தொங்கவிட்டு, குறிப்பேடுகளைக் கையில் பிடித்துப் படிகளில் இறங்குகையில் வலது கையை அமுதாவின் தோளில் போட்டபடி, “ நீ ஏன் ஆர்ட்ஸ் சப்ஜெக்ட்ஸை எடுக்கல?”என்றாள் மோனா.
“ஆர்ட்ஸூன்னா வீட்டில இருந்து கரஸ்பாண்டென்ஸ் மூலமா படிச்சாப் போதுன்னாங்க. அதான் இந்தக் கிணத்தில வந்து விழுந்துட்டேன்.”
“என்னது கிணறா?!”
“பின்ன…ஏற்கனவே ரெண்டு மாப்பிள்ளைகளைப் பத்தி பேச்சு வருது. புதைகுழியில விழறதுக்குக் கிணறு பரவாயில்ல, நாமளா நீச்சலடிச்சுக் கரையேறிக்கலாம்,” என்று சிரித்தாள்.
கடந்து போனவர்கள்
அவனை நாங்கள் சந்தித்த அந்த அற்புதமான கோடை காலம், ஊஞ்சலின் கீரீச்சிடலாய், முற்றத்தில் வரைந்த கரிக் கோட்டு கிரிக்கெட் ஸ்டம்ப்பாய்,, நாடகத்தில் முதுகில் தொங்க விட்டுக் கொண்ட பழைய வேட்டியாய், ஆற்றங்கரையில் விளையாடிய எறி பந்தாய், கொல்லைக் கிணற்றின் பொந்திலிருந்து பறக்கும் , நீல வண்ண மீன் கொத்தியின் லாகவமான பறத்தலாய், உச்சி வெயில் வேளையின் கழுகின் கத்தலாய் விரிந்து பெருகியது.
தணிக்கைமுறை எப்படி வேலை செய்கிறது
எந்த எதிர்ப்பும் இல்லாமல் தம்மைத் தாமே தணிக்கை செய்து கொள்பவர்கள் பல வகைப்பட்ட அறச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் எப்போதுமே எதற்கும் பலியானதில்லை. அவ்வப்போது கண்ணீரைக் துடைத்துக் கொள்வது போல் நாடகமாடினாலும் எப்போதும் பலியாகவும் மாட்டார்கள். அவர்கள் தம் அடிமைத்தனத்தை ஒவ்வொரு முறை வெளிப்படுத்தும்போதும் சர்வாதிகாரிகளின் இதயத்தைக் குளிர்விக்கிறார்கள். எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தீமை செய்கிறார்கள். முதுகெலும்பு இல்லாமல் நடந்து கொள்பவர்களின் நிலைப்பாடு காலப்போக்கில் மக்களிடையே பரவுகிறது. இதுவே நம் சமூகம் அற வீழ்ச்சி அடையவும் அடிப்படை காரணமாகிறது.
நாம் ஏன் போரிடுகிறோம்
போரால் உருக்குலைந்த சிரியாவின் அலெப்போ நகரம் “போர்கள் அதீதமான அளவில் செய்யப்படுகின்ற மதுபானக்கடைச் சண்டைகள் அல்ல’ என்று எழுதுகிறார் பார்பரா ஏரென்ரிக். ஃபாரின் அஃபைர்ஸ் மாகஸீன் என்ற இதழில், ஃப்ரான்ஸிஸ் புகுயாமா போர்களுக்கு ஆண்களே முக்கியக் காரணம் என்றும் “ஆக்கிரமிப்பு, வன்முறை, போர், சமூக அடுக்குகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான “நாம் ஏன் போரிடுகிறோம்”
நீங்கள் டொக்டரா அல்லது நான் டொக்டரா: மருத்துவர்களும் மாற்றுக் கற்பனைகளும்
டொக்டர்கள் வெறும் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியப்படையினராக குறுக்கப்பட்ட அவலம் நேர்ந்தது. அவர்களுடைய அரசியல் தலையீடு இப்போது வெறும் சம்பள உயர்வுக்கான ஆர்பாட்டங்களாக அல்லது வேலை நிறுத்தங்களாக சுருங்க ஆரம்பித்தன. அவை அந்த தேசங்களின் நவ தாராளவாத அரசுகளுக்கு (Neo Liberal Nations) ஒரு புறத்தில் சுகாதாரத்துறையை தனி உடைமையாளர்களுக்கு விற்பதற்கும் மறுபுறத்தில் அரச மருத்துவ நிறுவனங்களின் ஆதிக்கக் கட்டுடைப்பைத் தீவிரப்படுத்தவும் வழி கோலின… தன்னுடைய நிறுவனத்தின் தேவைக்காக அரசை இயக்கி சொந்த இலாபமீட்டலுக்காக முழுத் தேசத்தின் நலத்தையும் பணயம் வைக்கும் நவ தாராளவாதம் அல்லது பணமுதன்மை கலாச்சாரம் கல்வி,சுகாதாரம் இந்த இரண்டையும் இலவசமாக வழங்குவதை மிகப் பெரும் நஷ்டங்களாகப் பார்க்கிறது.
ஐபிஎல் -10 : க்ரிக்கெட் கோலாகலம்
200, 230 என்றெல்லாம் அணிகளின் ஸ்கோர்கள் தவ்விய கதைகளைப் பார்த்தால் போதுமா? நூறுக்கும் கீழே அணிகள் நொறுங்கிவிழுந்த ஐபிஎல்-இன் அபத்தக்கதைகளைப் பார்க்கவேண்டாமா? போனவருடம் கீழ்வரிசையில் இருந்த பஞ்சாப் இந்தவருடம் முதல் நாலுக்குள் வரக் கடும் முயற்சி செய்தது. மும்பைக்கெதிராய் 230 போட்டுக் கலக்கிய இந்த அணி, டெல்லியையும் ஒருகை பார்த்தது
உப்பும் உடல் நீரும்
உணவில் உப்பு அதிகரித்தால் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்பது உண்மையானாலும், இது அருந்திய நீரின் அளவு உடலில் அதிகரித்தலாலும் இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் நினைவிற் கொண்டால் ரத்த அழுத்த மாத்திரையை அதிகரிப்பதற்கு பதிலாக இந்த நீரை சிறுநீரகங்கள் மூலமாக வெளியேற்றும் மாத்திரையை அதிகரிக்க இயலும். மேற்சொன்ன எனது மருத்துவ நண்பரின் ரத்த அழுத்தத்தைக் குறைத்தது நீரையும் உப்பையும் சேர்த்து வெளியேற்றும் மருந்தேயாகும் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். நீர் வீக்கத்தை தடுக்க வைத்தியர்கள் பிணியாளர்களின் தினசரி எடை அதிகரிப்பு, ஒரு கிலோவிற்கு மேல் சென்றால் நீரை வெளியேற்றும் மருந்தை அதிகரிக்கச் சொல்வது வழக்கமாய் உள்ளது. இது சிறந்த நிவாரணம். ஏனென்றால் அதிக அளவு உப்பு உணவில் சேர்ப்பது தொடர்ந்து நீடித்தால், இரண்டாவது வாரத்தில் எடை குறைய வாய்ப்பு இருப்பதால் அது நீர் வீக்கம் அதிகரித்திருப்பதை மறைத்து விடலாம்.
குளக்கரை
இந்த உடலுறுப்பு தானம் என்பதை நாம் கதை என்று கூட எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. எத்தனையோ ஆயிரம் இந்தியர்களின் உடல் உறுப்புகளை அவர்களுக்குத் தெரியாமலே அவர்களிடமிருந்து அகற்றி வெளிநாடுகளிலோ, அல்லது உள்நாட்டிலேயே பெரும் விலைக்கோ விற்கும் குற்றக் கும்பல்கள் இந்தியாவெங்கும் உலவுகின்றன. இவற்றில் பல மருத்துவ மனைகள், கெடுமதியாளராகி இருக்கிற மருத்துவர்கள், உள்ளூர் குற்றக் கும்பல்களிலிருந்து அடியாட்கள், தரகர்கள் என்று ஒரு ஆழ்ந்த குற்ற வலை இந்தியாவில் இருக்கிறது. இஷிகுரோவுக்குத் தான் எழுதியது கற்பனை என்ற நினைப்பு இருக்கலாம். இந்தியருக்கு இது நிதர்சன நடப்பு.
வைரச் சுரங்கத்தின் எச்ச சொச்சங்கள்
மாஸ்கோவில் இருந்து 8,500 கி.மீ. (5,200 மைல்கள்) கிழக்கே மிர்னி நகரம் இருக்கிறது. இங்கே உள்ள வைரச் சுரங்கத்தை 1956ல் ருஷியா கண்டுபிடித்தது. சோவியத் யூனியன் காலத்தில் இங்கே வெளியூர் ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாது. மிர்னிக்குள் ரஷியர்கள் நுழைவதற்கே சிறப்பு விசா வாங்க வேண்டும். 2001ல் “வைரச் சுரங்கத்தின் எச்ச சொச்சங்கள்”
தலை காக்கும் பாஞ்சசன்னியம்
கடலில் கிடைக்கும் வலம்புரி சங்கானது கல்லிலும் மணலிலும் புதைந்தாலும் தாக்குப் பிடிக்கிறது. கோரப்பற்களுடைய கடல் வாழ் சுறாக்கள் முதல் திமிங்கலம் வரை அதே சங்கை பலமாய்க் கடித்தாலும் சேதாரம் இல்லாமல் இருக்கிறது. புயலும் சுனாமியும் அலையும் தூக்கிப் போட்டு பந்தாடினாலும் இறுதியில் வென்று நிற்கிறது. அதன் உறுதியான அமைப்புடைய “தலை காக்கும் பாஞ்சசன்னியம்”
ஒரு படத்தைப் பார்த்து அது என்னவென்று எப்படி கணினி கண்டுபிடிக்கிறது?
இது சற்று நம்புவதற்குக் கடினமான விஷயம். ஆனால், சில வாகனங்களை மட்டுமே ஒரு பயிற்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டு புதிய வாகனப் படங்களை உட்கொண்டவுடன் செயற்கை நரம்பணு வலையமைப்பு வாகனம் என்று அடையாளம் காட்டக் கற்றால், மிகவும் எளிதாகிவிடும் அல்லவா? இதைத்தான் சில உயர்கணிமை மூலம் ஜெஃப் ஹிண்டன் மற்றும் யான் லகூன் என்ற இரு விஞ்ஞானிகளும் முன் வைத்தனர். புதிய வாகனங்களைக் கண்டவுடன், தன்னுடைய வலையமைப்பு சார்புத் தன்மையை (bias) மாற்றிக் கொண்டே இருக்கும். இதனால், புதிய விஷயங்களையும் இவ்வகை வலையமைப்புகள் வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய உலகில் கற்கின்றன. இதனாலேயே இந்தத் துறை எந்திரக் கற்றலியல் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் பற்றி வாசகர்கள் தீவிரம் காட்டினால், விவரமாகத் தமிழில் எழுத முடியும். இந்தத் தொடருக்கு இந்த அளவு போதும் என்பது என்னுடைய கணிப்பு.
மகரந்தம்
ஜெர்மனியில் பண்டைக்காலத்து உப்புப் படிவங்கள் நிலத்தடியில் இருப்பனவற்றில் மின் சக்தியைச் சேமித்து வைக்க முயற்சி செய்கிறார்களாம். உப்புப் படிவங்கள் மீது ஏராளமான நீரைச் செலுத்தி அவற்றைக் கரைத்து அவற்றூடே பெரும் குகைகளை உருவாக்கி இருக்கிறார்கள். தரைக்குக் கீழே அரைமைல் தூரத்தில் இந்தக் குகைகள் உள்ளன. உபரி மின் சக்தியைப் பயன்படுத்தி காற்றை அழுத்தத்துக்கு உள்ளாக்கி அதை இந்தக் குகைகளில் சேமிக்கின்றனர். மின்சக்தி உற்பத்தி குறைந்து விட்ட நேரத்தில் குகைக்குள்ளிருக்கும் அழுத்தத்துக்குட்பட்ட காற்றை வெளிப்படுத்தி அதை நிலவாயுவை எரிக்கப் பயன்படுத்தி மின் சக்தியைத் தயாரிக்கிறார்கள். அழுத்தத்தில் இருந்து விடுபடும் காற்று ஆக்ஸிஜனை எரிவாயுவுக்குச் செலுத்துவதில் திறன் அதிகம் உள்ளது என்பதால் இது பயனுள்ள முறையில் மின்சக்தியைச் சேமிக்க உதவுகிறது.
இளமூதாக்களும் கழிவுநீரும்: சால் பெல்லோவின் கலை
அன்புள்ள திரு பெல்லோ அவர்களுக்கு,
நீங்கள் நேசிக்கும் நியூ இங்கிலாந்தை இப்போது குளிர்காலம் நெருங்கி விட்டது. “சென்ற வேனிலின் இலைகள்” அளிக்கும் கசப்பும் இனிப்பும் கூடிய அழகு ஒரு புறம் இருந்தாலும், இந்தக் குளிர்காலம் ஒளியற்றதாக இருக்கும் போலிருக்கிறது. இவ்வாண்டின் கோடையில் நான் ஒரு பெருந்தீனிக்காரி போல், நீங்கள் எழுதிய ஏறத்தாழ எல்லாவற்றையும் வாசித்தேன் (மீண்டும் மீண்டும் வாசித்தேன்). ராவல்ஸ்டீன் போலவே நானும் அவற்றின் நுண்மையான இசையில் “எண்ணங்கள் கரைந்து போக” என்னை இழந்தேன். சிந்தனைகள் சுள்ளிகளாய் முறித்துத் தெறித்துச் சுடர் விட்டுக் கனலாய்த் தகிக்கும் ஓர் உள்ளத்தின் வெம்மையில் குளிர் காய்வது போன்ற அனுபவமாய் என் வாசிப்பு இருந்தது. நான் உங்கள் தீவிர வாசகி என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா!
நகர்ப்புற அமெரிக்கா குறித்த உங்கள் வர்ணனைகள் அற்புதம், ஒரு லேசர் போல் குவியும் உங்கள் பார்வையில் புலப்படும் புற விவரணைகள் அத்தனையும் (நவீன இலக்கியத்தில் இவற்றுக்கு இணையான வேறொன்று இல்லை) அந்த மடிசஞ்சி நபகோவ், டிக்கன்ஸ் போன்றவர்களுக்கு மட்டுமே உரித்தென்று வைத்திருந்த தண்டுவடச் சிலிர்ப்புக்குத் தக்கவை (மரக்கால் கெர்ஸ்பாக், “ஒரு பரிசல்காரன் போல் நளினமாய் வளைந்து நிமிர்கிறான்” என்பது நினைவுக்கு வருகிறது, ஆனால் அண்மையில் எனக்கு மூர்க்கம் மிகுந்த ஒரு “நிதர்சன-படிப்பினை” அனுபவம் ஏற்பட்டது.
வானம் வசப்படும், நீலக்கடல்
அடிமை வணிகத்தைப் பற்றி விரிவான வரலாற்றைத் தந்திருப்பதன் மூலம் இந்தியப்பெருங்கடல் நிலங்களின் வணிக மூலதனங்களையும், கரும்பு, வெல்லம், பனங்கட்டி, மல்லாட்டை போன்ற உற்பத்தி பொருட்களின் சந்தையும், உபரிகளின் மூலம் வணிக வளர்ச்சிக்குத் தேவையான நகர்புற கட்டுமானப்பெருக்கங்களையும் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் புனைவுனூடாக நமக்குக் கிடைக்கிறது. இதன் ஊடாட்டம் மக்களின் வாழ்க்கையிலும், அவர்களது திரளான பயணம் மூலம் வளர்ச்சியடையும் நிலங்களின் வளமையிலும் நடத்தும் நாடகம் உயிர்ப்போடு காணப்படுகிறது. ஒரு கதவைத் திறந்து அடுத்த அறைக்குச் செல்லும் தூரத்தில் அந்த நிலம் இருக்கிறது. கற்பனை பாத்திரங்களும் வரலாற்று மாந்தர்களைப் போல ரத்தமும் சதையுமாக வளர்கிறார்கள், தேய்கிறார்கள், மறைகிறார்கள்.
கவிதைகள் நான்கு
மண் நீரூட்டும்
விதை கன்றாகும்
கன்று செடியாகி பூ பூக்கும்
வண்ணப்பூச்சி முத்தமிட
மலர் காயாகும்
ஓர் இளங்காலையில்
அவளுடைய செல்பேசியில் ஒரு செய்தி வந்ததற்கான கீச்சொலி…
- நான் ஏதாவது சொன்னால், அவன் ரொம்ப ஆத்திரப்படறான் [ஏமி முந்தைய தொலைபேசி அழைப்பில் சொல்லி இருந்தாள்]; நான் கோபப்படறதை அவன் ஏற்பதில்லை.
- ஆனால் அவன் தானே உன்னை விட்டு விட்டுப் போனான்.
- ஆமாம். ஆனால் அவன் இப்ப என் கிட்ட ஒரே ஆத்திரமாய் இருக்கான். என்னை வெறுக்கறான்.
- நீ அவனை இன்னும் காதலிக்கிறியா?
- நான் அவனைப் பொருட்படுத்தறதில்லை. பதினைந்து வருஷமா என்னோட சாப்பிட்டு, என் கிட்டே படுத்துத் தூங்கினவன் இத்தனை விட்டேத்தியா இருக்கான், இத்தனை கொடூரமா இருக்காங்கிறதைத்தான் தாங்கிக்க முடியல்ல.
பெண்களால் துக்கத்தைத் துக்கமாக மட்டுமே வைத்துக் கையாள முடியும், (ஜோயீ நினைத்தாள்), ஆனால் ஆண்கள் அப்படிச் செய்ய மறுக்கிறார்கள், அதைக் கையாள்வதற்காக அதை டீஸலாக மாற்றி, அத்தனை இழப்பையும், வலியையும் ஆங்காரமாக மாற்றுகிறார்கள், என்பதுதான் உண்மையோ?