பட்டதாரி

இது கல்லூரி பட்டமளிப்பு விழாக்காலம். வாழ்க்கையில் முதல் அடி எடுத்து வைப்பதை வைபவமாகக் கொண்டாடும் காலம். பட்டதாரிகளின் படிப்பு முடிந்து புதிய பாதை துவங்குவதை வரவேற்கும் காலம். இங்கே விவேகானந்த் விமல் பேசுகிறார். பிராண்டெயிஸ் பல்கலையில் நரம்பு இயங்கியல் துறையில் ஆராய்ச்சியை முடித்து பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறார். கொஞ்சம் “பட்டதாரி”

46,000 கி.மீ. – 500 நாள்கள் – ஒரு புல்லட் பைக்

தீபக் சௌஹான் மும்பையைச் சேர்ந்தவர். இந்தியா முழுக்க தன் புல்லட் பைக்கை எடுத்துக் கொண்டு 46,000 கிலோமீட்டர் சுற்றி வந்திருக்கிறார். நீல மலை நிலமான மிஜோரம் முதல் விசாகப்பட்டின வயல் வரை எல்லாமும் படம் பிடித்திருக்கிறார். கீழே கைவினைக் குடை தாங்கிய ஆடு மேய்ப்பவரை ஓரிஸாவின் பிரம்பூர் பகுதியில் “46,000 கி.மீ. – 500 நாள்கள் – ஒரு புல்லட் பைக்”

கரிக்கும் பாதையின் இனிக்கும் ஆரஞ்சுகள்

தடைகளுக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள், கடினமான சூழலில் தீர்வுகளைக் கண்டெடுக்கும் கட்டாயத்தால்தான் பாலெஸ்டீனிய சினிமா இவ்வளவு நன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அனைத்துமே கடினமாக இருப்பதால் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இக்கடினங்களை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை, ஏனெனில் இரண்டே வாரங்களில் ஐம்பது வயதாகியது போல் களைத்து விடுகிறது. இது இரானியச் சினிமா போலதான், சற்று வித்தியாசமான விதத்தில். அங்கே சென்சார் தடைகளை மீற மாற்றுவழிகள் தேவைப்படுகின்றன. அவ்வழிகளைப் பயன்படுத்த அவர்கள் இன்னமும் நுண்மையாக கற்பனை செய்ய வேண்டியிருக்கிறது. அதிகாரிகளை வெல்ல எப்போதுமே அவர்கள் ஜாக்கிரதையாகவும் சாமர்த்தியமாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. பாலெஸ்டீனிலும் இது மாதிரியான ஒரு…

எங்கேயும் எப்போதும் எல்லாமே தானாகவே இயங்கும் – ஜென்கின்ஸ்

உங்களது நிரல், எதில் வேண்டுமானாலும் எழுதப்பட்டதாக இருக்கட்டும். எங்கே, யாரிடம் வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை இயக்கி, முடிவுகளை சரியானவர்களிட்ம் சேர்ப்பிக்கும் அஞ்சலக பணியாளர் பணியைத்தான் ஜென்கின்ஸ் செய்கிறது. இதென்ன கட்டண சேவையா? இல்லை. உரிமம் வாங்கவேண்டுமா? தேவையே இல்லை. முழுவதும் இலவசம். கட்டற்ற சுதந்திரம்! எத்தகைய அடியையும் தாங்கிக்கொண்டு அசராமல், அசுரகதியில் உழைத்துக்கொண்டே இருக்கும் அடிமாடுதான் ஜென்கின்ஸ்.

யுடோபியா

வாசலிலேயே மெர்சி மிஸ் காத்திருந்தார். வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி நடந்து கேட்டைத் திறக்கும் வரை அவர் முகம் பார்க்காமல் தவிர்த்தேன். நல்ல மாதிரி தான். இருந்தாலும் இதோடு எத்தனை முறைகள். வழக்கமான சங்கடப் பார்வையோடு வழக்கமாய்ச் சொல்வது போல் “சாரி மிஸ் “ என்றேன். “இட்ஸ் ஓகே. ஆப்டர் ஆல் என் பொண்ணு மாதிரி தானே” என்றார். இன்றைக்கு இதைச் சொல்கிறார். பெரும்பாலான நாட்களில் ஏதும் சொல்லாமல் புன்னகைத்து விட்டுக் கிளம்பி விடுவார். அவர் கண்களை சிரமப்பட்டு நேராய்ப் பார்த்தேன். நிச்சயம் அதில் ஒரு சோர்வும் சலிப்பும் இருந்ததாய்த் தோன்றியது. இருந்தும் வேறு வழியில்லை.

திமிங்கிலம்

உலகம் தழுவிய பேரழிவு எனும் பெரும் சோகத்தில் அவர்களுக்கென சிறு பங்கை ஒதுக்கிவிட்டு அவரவர் பணிகளுக்கு திரும்பியிருந்த போது, ஒருவாரம் கழித்து சிறு மிதவையை பற்றிக்கொண்டு உயிருடன் கரையடைந்தான். அப்போது திமிங்கிலம் என தலைப்பிட்டு பிரபல ப்ராக்ருதிஸ்தான் பத்திரிக்கை அவன் பிழைத்த நம்பவியலாத கதையை செய்தியாக்கியது. அந்தச் செய்தி கட்டுரை இப்படி துவங்கியது “திமிங்கிலம் பிரம்மாண்டமானது, அதனாலேயே தப்பவியலாதது, தின்று கொழித்து வளர்வது எனினும் இன்றியமையாதது”. இந்தக் கனவு அல்லது உருவெளித்தோற்றம் அவனுக்கு நன்கு பரிச்சயம் தான். எத்தனையோ வருடங்களாக மீள மீள உறக்கம் உண்ணும் அதே கனவு. இந்த கனவின் செல்திசையை, அதன் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அவன் நன்கறிவான். மரித்துப்போய் கல்லறைகளில் அறிதுயிலில் கிடக்கும் மூதாதைகளின் மட்கும் உடல்களை…

குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் கம்ப்யூட்டருக்கு சொல்லித் தருவது எப்படி?

காரில் பயணம் செய்யும் பொழுது, இளையராஜாவின் பாடல்களில் அவருக்கு ஒரே குழப்பம். எந்தப் பாடலை எஸ்.பி.பி. பாடுகிறார், எந்தப் பாடலை யேசுதாஸ் பாடுகிறார் என்று எவ்வளவு முறை தெளிவுபடுத்தினாலும், அவருக்குச் சரிவரப் பிடிபடவேயில்லை. பத்து நாட்களுக்குப் பின் இந்தியா சென்று விட்டார். அவருக்குப் பழைய இந்திப் பாடல்கள் மிகவும் பிடிக்கும், மன்னாடே, ஹேமந்த் குமார் பாடல்களை யூடியூபில் கேட்ட வண்ணம் இருப்பார். எனக்கு, எந்தப் பாடல் மன்னாடே பாடியது, எது ஹேமந்த் பாடியது என்று அந்தப் பத்து நாட்களும் குழப்பம். இருவருக்கும் இசை மீது ஈர்ப்பு இருந்தும், ஒருவருக்குச் சட்டென்றுத் தெரிந்த குரல்கள், இன்னொருவருக்குப் பிடிபடவில்லை. ஏன்? எனக்கு, கேட்கும் மொழி இந்தி என்றும், அவருக்கு நான் இசைக்கும் பாடல்கள் தமிழ்ப் பாடல்கள் என்றும் தெரியும். ஆனாலும், இருவருக்கும் மொழி, இந்தச் செயலுக்கு உதவவில்லை…. அவரது மூளையும், என்னுடைய மூளையும் வெவ்வேறு முறையில் செயல்படுகிறது. இதை வேறு விதமாகவும் சொல்லலாம். அவருடைய மூளையும், என்னுடைய மூளையும், வெவ்வேறு முறைகளில், பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.

இந்திய அமெரிக்கரின் விதூஷக ராஜாங்கம்

9/11க்குப் பிறகு இஸ்லாமியர்களை ‘ஒசாமா’ என்று அழைப்பது; பைபிள் பெல்ட் என்று அழைக்கப்படும் நடுப்பகுதியில் உள்ள தெற்கு மாகாணங்களில் இன்றைக்கும் நிலவும் வெள்ளையின உயர் பெருமிதத்தின் எச்சங்கள்; பள்ளியில் பெரும்பான்மையினர் இடையே சிறுபான்மையினராக உலா வரும்போது தோன்றும் இருப்பியல் அபிலாஷைகள் – என்று கலந்து கட்டி தன் வரலாற்றைச் சொல்கிறார் ஹஸன். நடுநடுவே இந்தியக் குடும்பங்களின் பண்பு; படிப்பில் காட்டும் சிரத்தை; திறந்த வெளியாக எதைப் பற்றியும் பேசாத இந்தியக் குடும்பங்களின் சூழல்; சமூகமும் சமயமும் சாராமல் திருமணம் செய்து கொள்வதில் இந்தியர்களுக்கு நிலவும் சிக்கல்கள் என்று பல இடங்களில் கோர்வையாகத் தாவுகிறார்… நகைச்சுவையாகவும் பேசி சிரிக்க வைக்க வேண்டும். வெறுமனே கேலியாக இல்லாமல் அந்தப் பேச்சில் வாதத் திறனும் இருக்க வேண்டும். வெறும் வாதமாக இருந்துவிடாமல் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களையும் கோர்க்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளாக இருக்கட்டும்; அரசியல் சிக்கல்களாக இருக்கட்டும் – ஏன் இந்த முடிவிற்கு நீங்கள் வர வேண்டும் என்பதை சுயவரலாற்றுடனும் சிரிப்புடனும் சொல்ல ஹஸன் மினாஜிற்கு தெரிந்திருக்கிறது.

நீலக்கடல் – பிரெஞ்சு இந்தியக் காலனி – மொர்ரீஸியஸ்

நாட்குறிப்பு எழுதி தன் எழுத்தின் மூலம் புதுவை பிரஞ்சு ஆட்சிக்கு நீங்காத இடம் தந்த துய்ப்பளே துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை பாத்திரத்தை இரு எழுத்தாளர்களும் வெவ்வேறு வரலாற்றுப் பார்வையில் அணுகியுள்ளனர். மானுடம் வெல்லும் பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையை தனது காலத்தின் விதிகளுக்கேற்ப பிரெஞ்சு கவர்னரிடம் விசுவாசமாக நடந்துகொள்பவராக மட்டுமல்லாது புதுவை ஹிந்துக்கள் மீது பரிவு கொண்டவராகவும் சித்திரிக்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடலைப் பொருத்தவரை ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சு அராஜகத்துக்கு ஊமைச்சாட்சியாக நின்ற மற்றொரு உயர்மட்ட ஹிந்துவாக சித்திரிக்கிறார். பிள்ளை ஒரு நேரடியான கதாபாத்திரமாக வராவிட்டாலும், மொர்ரீஸியஸ் தீவிலுள்ள தமிழரின் நிலையையும் அடிமை வாழ்வையும் ஆட்டிவைக்கும் பாவைகளாக விளங்கும் பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அச்சாணியாக உயர்மட்ட வணிகர்களைக் குறிப்பிடுகிறார்.

ஒற்றைமரம் (கொலுக்குமலை பயணம்)

வாகனத்தின் மூலம் (ஜீப்) கொழுக்குமலை செல்ல வேண்டுமாயின் கேரளாவின் சூரியநல்லி வழியாகத்தான் சென்றடைய முடியும். ஏறகனவே சிறு சிறு மலையேற்ற அனுபவமும் எங்களுக்கிருந்தால் போடியிலிருந்து மலைப்பாதை வழி நடந்து செல்ல முடிவாயிற்று. எழத்தாழ 5000 அடி உயரத்தை 20 + கிலோமீட்டரில் நடந்து கடப்பதில் , அசல் சவால் அதன் கடும் ஏற்றமும், சரிவும் கொண்ட பாதைதான். காட்டுமாடு, செந்நாய், முள்ளம்பன்றி பற்றிய பயமும் சுமந்து மலையேற உடல் மட்டுமல்ல கொஞ்சம் மன திடமும் தேவை. திடீரென பிளவுறும் பாதைகளில் சரியான பாதையை தெரிவு செய்வது முக்கியம். உயரம் கடக்க சில மணி நேரங்களிலேயே அவ்வளவு குளிரிலும் கால் துவள, நாவறலத் தொடங்கியது, ஆங்காங்கே பழம் , தண்ணீர் கொண்டு சக்தி மீட்டு எங்கள் நடை தொடர்ந்தது.

வாக்காளர்

சில ஆண்டுகளுக்கு முன் மாரக்கஸ் இபே, ஒரு சாதாரண மிஷன் வாத்தி. அரசியல் அவர்கள் கிராமத்திற்குள் நுழைந்த போது சுதாரிப்பாக அதனுள் தன்னை இணைத்து கொண்டவர் மார்க்கஸ். ஆனால் ஒரு ஆசிரியியை கர்ப்பமானதால் வேலை நீக்கத்திலிருந்து தப்பித்து கொள்ளவே, அரசியலில் இணைந்தார் என்று சொல்லுபவரும் சிலர் இருந்தனர். ஆனால் இன்றோ அவர் மாண்புமிகு இனக் குழு தலைவர், இரண்டு நீளமான மகிழுந்து மற்றும் அந்த வட்டார மக்கள் பார்த்தே இருக்காத ஒரு மிக பெரும் வீட்டின் அதிபதி. இதெல்லாம் பெரிதாக மார்க்கஸின் தலைக்கு ஏறி விடவில்லை. இன்றும் தன் மக்களின் அபிமானமான தலைவராகதான் இருந்தார். முடிந்த போதெல்லாம், தலை நகரின் வசதிகளை விட்டுவிட்டு, தண்ணீர் வசதியும், மின்சாரமும் இல்லாத கிராமத்தில் தனது மக்களோடு இருப்பதையே விரும்பினார். ஆனாலும் சில நாட்கள் முன்னர் தனது வீட்டிற்கு மட்டும் மின்சாரம் தரும் இயந்திரத்தை நிறுவியிருந்தார். கிடைத்ததை பருகிவிட்டும், தின்று விட்டும், தன் முனைப்பாலேயே அவை கிடைத்தன என்ற இறுமாப்புடன் அலையும் பறவை போல் அல்லாமல், மார்க்கஸ் தன் வசதிகளின் காரண, காரியங்களை நன்றாகவே அறிந்திருந்தார்.

கற்கால உணவும் தற்கால மனிதர்களும்

ஆதி கால மனிதர்கள் உட்கொண்ட பொட்டாசியம் உப்பின் அளவு 15000 மில்லிகிராம் என்று தெரியவரும்போது, நமது உணவில் பொட்டாசியம் வெகுவாகக் குறைந்து விட்டது என்று தெரிகிறது. மேலும் நமது உணவில் சோடியம் குளோரைடு என்று சொல்லப்படும் சாதாரண உப்பின் அளவு பொட்டாசியத்தை விட மூன்று மடங்காக அதிகரித்து உள்ளது. ஆதிவாசிகள் உப்பை மிகக் குறைந்த அளவே உபயோகித்துள்ளனர். அவர்கள் உணவில் பொட்டாசியம், உப்பைவிட ஏழு மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது. இதற்கு காரணம் ஆதி மனிதர்களின் உணவில் பிரதானமாக இருந்தவை காய்,கனி, பச்சையிலை, கிழங்கு வகைகளே. இவையெல்லாவற்றிலும் பொட்டாசியம் சத்து மிக அதிகம் உப்புச் சத்து மிகக் குறைவு. தற்போதைய உணவு இதற்கு எதிர் மாறு…..
எடை அதிகரிப்பு, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கல், எலும்புத்தேய்வு போன்ற நீண்ட நாள் வியாதிகளுக்கு உப்பு அதிகமாகவும் பொட்டாசியம் குறைந்தும் உள்ள தற்கால உணவிற்கு பெரும் பங்கு உள்ளது. ..
பொட்டாசியம் சேர்க்கை ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது; பொட்டாசியம் குறைவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது என்பதை பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிப்படுத்தியுள்ளன.

குளக்கரை

”என்னுடைய முந்தைய வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதில் பல விஷயங்களை சாதிக்க முடிந்தது. இப்பொழுது முந்தைய பிஸினெஸைக் காட்டிலும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த ஜனாதிபதி வாழ்வு கொஞ்சம் சுளுவாக இருக்கும் என்று நினைத்தேன். ஏதோவொரு கூண்டில், பட்டுப்பூச்சியின் கூட்டினுள் அடைபட்ட மாதிரி உணர்வு கிடைக்கிறது. எனக்கு காரோட்டப் பிடிக்கும். அது முடியவில்லை. எனக்கு மேற்சென்று சாதிக்கப் பிடிக்கும். அதுவும் இடைஞ்சலாக இருக்கிறது.” என்கிறார் டிரம்ப்

திபெத் எப்படி நசுக்கப்படுகிறது?

திபெத்திய தேச அடையாளத்திற்கு மையமாக இருக்கும் மொழி மற்றும் பௌத்தம் ஆகியன, சீனாவின் பாதுகாப்பு, மேலும் அரசு முன்னின்று செலுத்தும் தேசியத்துக்கும், பரவலாக ஏற்கப்பட்டுள்ள ஹான் இன உயர்வு சார்ந்த தேசியத்துக்கும் சிறிதும் ஏற்க முடியாததாக உள்ளதால், மாநில மற்றும் நாட்டு அதிகாரிகள் நடுவேயும், சாதாரணச் சீனரிடையேயும் இவற்றுக்கு எதிரான காழ்ப்புணர்வு அதிகமாக உள்ளது… சீன ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் ‘கரைத்து விடுதல்’ என்ற அணுகல் முறைப்படி, 1950 இலிருந்து திபெத்தின் மீது சுமத்தப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சியும், அதிலும் 1989க்குப் பிறகு வந்த கால கட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற கடும் ஒடுக்கு முறைகளும் பண்டை நாளில் இருந்த நல்லுறவை நொறுக்கி விட்டன.

மகரந்தம்

தமிழில் சாதாரணமாக நாம் காணுவது எழுத்தாளர்களுக்கு இருக்கும் அதீத தன் முக்கிய உணர்வு. சிறு திருத்தங்களையோ, அல்லது எழுத்தில் காணப்படும் குறைகளையோ சுட்டினால் ஒன்று காட்டமாகப் பதில் எழுதுவார்கள், இல்லையெனில் பிறகு எழுதிக் கொடுக்க முன் வரமாட்டார்கள். தமிழில் பதிப்பிக்கப்படும் பெருவாரி புத்தகங்களைச் சரிவர பதிப்பு வேலைக்கு உட்படுத்திப் பிரசுரிப்பது கூட நடப்பதில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் நன்கு பிரபல்யம் கொண்ட ஆசிரியர்களின் புத்தகங்கள் மீள் பிரசுரம் ஆகையில் அந்தப் புத்தகங்களைப் பார்த்தால் நிறையப் பிழைகளோடு காணப்படுகின்றன.

என் அப்பாவோடு ஓர் உரையாடல்

முதலில் என் அப்பா மௌனமாக இருந்தார், பிறகு அவர் சொன்னார், ‘முதலாவது: உனக்கு அருமையான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. இரண்டாவது: உன்னால் ஒரு எளிமையான கதை சொல்ல முடிகிறது என்பதை நான் பார்க்கிறேன். ஆகவே, நேரத்தை வீணடிக்காதே.” பிறகு அவர் சோகத்தோடு சொன்னார், “மூன்றாவது: அப்போது நான் என்ன நினைக்கணும்னா, அவனோட அம்மா, அவள் தனியாவே கிடக்கிறாள், அவள் அப்படியே விடப்பட்டு விட்டாள். தனியாவே. ஒருவேளை நோயாளியாகவுமா?”

நான் சொன்னேன், “ஆமாம்.”

“பாவமான ஸ்த்ரீ. பாவமான பொண்ணாக முட்டாள்களின் காலத்தில் பிறந்து, முட்டாள்கள் நடுவே வாழ நேர்ந்து போச்சு அவளுக்கு. அது முடிவு. அதுதான் முடிவு. அதை நீ எழுதினது சரிதான். முடிஞ்சு போச்சு.”

வன்னி

எக்காரணம் பற்றியும் இஃதோர் ஆன்மீகப் பயணக்கட்டுரை அல்ல. நாம் இங்கு தீ பற்றிப் பேசப்போகிறோம். ஐம்பெரும் பூதங்களில் மூன்றாம் இடத்தில் இருப்பது தீ. ஆகவே தான் முக்கண்ணனின் மூன்றாவது கண்ணில் தீ என்றார் போலும். கிரேக்க இதிகாசங்களில் எவ்வினைக்கும் ஒரு கடவுள் உண்டு. எடுத்துக்காட்டுக்கு Morpheus. தமிழில் மார்ஃபியஸ் என்று எழுதுவோமா? இருபுறமும் இறகுடைய கடவுள். கனவுகளின் கடவுள். அப்பெயரில் ஒரு Blended Premium Brandy இருக்கிறதே என்று கேட்கலாம். அதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.

‘தீபரவட்டும் என்றொரு நூலுண்டு தமிழில். அறிஞர், பேறரிஞர், கவிஞர், பெருங்கவிஞர் எனும் பட்டங்கள் கோமாளிகள் அணியும் சட்டை போல் ஆகிவிட்டது. பெரியவர் என்றாலே அது பெரிய சொல். அதன் மேல் பல்லடுக்குகளாக மகா என்ற பட்டம் ஏற்றி கனம் கூட்டுகிறார்கள். அது போன்றே அமிர்தம் மகா-அமிர்தம் ஆகிறது. பிரசாதம் மகாபிரசாதம் ஆகிறது. தகுதியினால் கனம் சேர்ப்பதை துறந்துவிட்டு, சொற்களால் கனம் ஏற்றுகிறார்கள். தீயை மகாத்தீ என்று எதற்காக சொல்ல வேண்டும்?

தீப்பந்தம், தீச்சட்டி, தீநாக்கு, தீக்கொழுந்து, தீமிதி, தீக்கனல், தீப்பிழம்பு, தீக்கொள்ளி, தீவட்டி, தீக்காயம் என்று எத்தனை எத்தனை சொற்கள்? தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றார் பாரதி. சற்று விரல்விட்டு பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.