காலமே உனைஓத நீவந்து காட்டினாய்!

காலம் போல உலகமும் தொன்மையானது. தொல்லுலகம் என அழைக்கப்படுகிறது. முதுமை, தொன்மை, பழமை எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் இருக்க வேண்டுமே. பிரபஞ்சத் தோற்றத்தில் காலதத்துவமே முதலில் தோன்றியது என்பர். இந்த உலகமும் காலமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியுடையனவாக இருந்துள்ளன; அவருக்கும் பல்லாயிரமாண்டுகளுக்கு முற்பட்டவர்களுடையதாவும் இருந்துள்ளன.

காலில் விழுந்த கண்டக்டர் !

கடந்த பத்து ஆண்டுகளில் கல்விக்கூட ஆராய்ச்சிகள் பலப் பல செய்யப்பட்டு அத்தனையின் முடிவும் ஒன்றுதான் : நல்ல பள்ளிக்கூடம், நல்ல சூழ்நிலை, முன்னேறிய சிலபஸ், பெற்றோர் வருமானம், மதிய உணவில் முட்டை எல்லாவற்றையும் விட மாணவர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பது ஆசிரியர்கள்தான்.

மகரந்தம்

ஆண் க்ரோமோசோமான “Y” பாலூட்டிகளில் ஒருவித ‘சீரழியும்’ – அதாவது பரிணாமத்தில் பொருளிழக்கும் செயலிழக்கும் ஒரு க்ரோமோசோம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் சில நவீன ஆராய்ச்சிகள் -சிம்பன்ஸி மானுட Y க்ரோமோஸோம்களை ஆராய்ந்ததில் கடந்த ஆறு மில்லியன் ஆண்டுகளில் இந்த க்ரோமோஸோம் அதிவேக பரிணாம மாற்றமடைந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

தூரிகைக்கலை

ஓவியத்தையும் தூரிகைக்கலையையும் ஒரே தாய்வயிற்றுப் பிள்ளைகள் என்று வருணிப்பர் சீனர். அவ்வந்த காலத்துக் கலைஞர் உருவாக்கிய முக்கிய பாணியிலிருந்தே படைப்பின் காலத்தைச் சொல்லிவிடக் கூடிய தூரிகைக் கலைஞர்கள் சீனாவிலும் சீனாவுக்கு வெளியிலும் இன்றும் உளர். சீனத்திலோ அரசர் முதல் ஆண்டி வரை பலரும் தூரிகை ஓவியங்களைக் காலங்காலமாக சேகரித்துப் பாதுகாத்திருக்கிறார்கள். சீனச் சமூகத்தில் வீடு, அறைகள், பெரிய கட்டங்கள், நீதிமன்றம், கைவிசிறிகள், சுவர்கள், நுழைவாயில்கள், அருங்காட்சியகம், அலுவலகம், நினைவுச் சின்னங்கள், கல்லறைகள், ஆலயங்கள் என்று எங்கெங்கு காணினும் தூரிகைக்கலையின் சுவடுகள் வாழ்த்து, முதுமொழிகள், அறிஞர் பொன்மொழிகள், கவிதை, பாடல், ஈரடிக்கவிதை, கடிதம் போன்ற பல்வேறு வடிவில் மிளிரும்.

சுஜாதா தேசிகன் – பேருக்கு ஒரு முன்னுரை

சமீபத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களைச் சந்தித்தபோது, “உங்களுக்குக் கிட்டத்தட்ட ஐம்பது வயசு இருக்கும் என்று எதிர்பார்த்தேன்” என்றார். “நான் வேண்டும் என்றால், இன்னும் பதினொரு வருஷம் கழித்து உங்களை வந்து பார்க்கிறேன்” என்றேன். முன்பு ஒரு முறை எழுத்தாளர் ஜெயமோகன் புத்தகக் கண்காட்சியில் பார்த்தபோது “ஓ, அந்த தேசிகன் நீங்க தானா?” என்றார். எப்படியோ தேசிகன் என்ற சிறிய பெயருக்கு வயசான பிம்பம் பலரின் மனதில் வந்துவிட்டது. நல்ல வேளை என் அப்பா “வேதாந்த தேசிகன்” என்று பெயர் வைக்கவில்லை.

சத்தியத்தின் தாமரை பூத்துவருவதை திஸ்ஸ கண்டாரா?

உண்மையைக் கொண்டுபோய் அடகுவைத்து
உரிமையை இரும்புச் சங்கிலி கொண்டு
சிறையிலிட்ட அந் நாளில்
திஸ்ஸ கண்டாரா
அதிகாரத்தால் உன்மத்தம் பிடித்தவோர் அரசனை

அரசியல் சொல்லாடல்கள்

பிரபல மொழியியலாளரான ஸ்டீவன் பிங்கர் அரசியல்வாதிகளின் சொல்லாடல்களில் காணப்படும் பொதுவான வகைமாதிரிகளையும், அதன் காரணங்களையும் குறித்து பேசுகிறார். அரசியல்வாதிகளின் மொழி ஜால்ம் குறித்தும், அதை ஒன்றை மட்டும் கொண்டு அவர்கள் மேற்கொள்ளும் பிழைப்பு குறித்தும் தமிழர்களான நம்மை விட சிறப்பாக அறிந்துவிட யாரால் முடியும்? ஆனாலும் இந்த ஒளிப்பதிவில் “அரசியல் சொல்லாடல்கள்”

மார்க்ஸை தலை கீழாக நிற்க வைத்த போலந்தில் ஒரு விலாங்கு மீன்

இந்திரா பார்த்தசாரதிக்குள்ளிருக்கும் மார்க்ஸ் என்ன ஆனார்? அவரும் மிக பத்திரமாக எவ்வித கஷ்டமும் இன்றி இருந்து கொண்டிருக்கிறார் தான். விலாங்கு மீன் எங்காவது யார் கையிலாவது சுலபத்தில் சிக்கி விடுமா? நழுவிக்கொண்டேயிருப்பது தானே அதன் குணம்? God That Failed எழுதிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் ஒரு காலத்தில் மார்க்ஸிஸத்தை நம்பி பின் அனுபவித்த மனவேதனைகளும் மனசாட்சி உறுத்தல்களும் நம்பிக்கைகள் கைவிட்ட ஏமாற்றமும் நாம் சர்ச்சித்துக் கொண்டிருக்கும் மார்க்ஸிஸ்டின் கிட்டக் கூட நெருங்கவில்லை.

குற்றம்

இறந்த காட்டுப்பன்றிகளின் கொழுப்பில் நானும் நிலாவும் உயிர்வாழ்ந்தோம். பிறகு பாம்புகளை வேட்டையாடி உண்டோம். அந்த கோடைக்காலத்தின் முடிவில் நிலா ஒரு நல்ல வேட்டைக்காரியாக ஆகியிருந்தாள். நிரந்தரமாக இடுப்பில் தொங்கும் கத்தியும் கையில் இருக்கும் ஈட்டியுமாக காணாமல் போன வன தேவதை போல உருமாறியிருந்தாள். அவளது நிறம் வெயிலில் அலைந்து கருத்திருந்தது.

கதைசொல்ல வரும் குழந்தை

நீ இப்போது கதை கேட்பவன்
உன் சேமிப்பிலிருக்கும்
ஆச்சரியங்களையும்
வைப்புக்கணக்கில்
இருக்கும்
புன்னகைகளை
கொஞ்சம் கொஞ்சமாக
செலவழிக்கத் துவங்கு

”ஆர்மீனியன் கோல்கத்தா”*

ஒரு துருக்கியக் கேப்டன் பலாகியனிடம் சொன்னான். ”யுத்தநேரம் என்பதால் குண்டுகள் கிராக்கியாயிருந்தன. எனவே மக்கள் கிராமத்தில் என்ன கிடைக்கிறதோ அதையெல்லாம் கையிலெடுத்தார்கள் – கோடரிகள். வெட்டுக்கத்திகள், புல் அரிவாள், பிடியறுவாள், தடிகள், மண்வெட்டிகள். சுத்தியல்,கொறடுகள்- இவற்றை வைத்தே கொன்று குவித்தார்கள்.”

உத்தண்டி

உத்தண்டிக்கு ஆருயிர் நண்பர்கள்
நால்வர் பேருந்தில் சென்றிருந்தோம்,
ஒரு முன்காலைப் பொழுதில்.
பேருந்து நடத்துனரிடம்
கடைசி வண்டியை எடுக்குமுன்னர்
குரல் கொடுக்கச் சொல்லிவிட்டு,
கடற்கரை மேட்டில் ஒரு பனைமரம் கீழே
அமர்ந்தோம் அளவளாவ.

வாசகர் மறுவினை

ஆரிய – திராவிட மாயை குறித்த அவரது விளக்கம் தெளிவாக இருந்தது. மானுடவியல் அறிஞர்கள், மொழியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் செய்ய வேண்டிய பணியை, சரித்திர நிபுணர் என்ற பெயரில் ஆர்.எஸ்.ஷர்மா போன்ற அரைகுறைகள் செய்ததால் ஏற்பட்ட பின்விளைவுகள் ஏராளம். சரித்திரத் திரிபுவாதிகளும், ஆங்கிலேய தாசர்களும் அவ்வாறு பதித்துச் சென்ற பிதற்றல்களே இன்றும் பள்ளி, பல்கலைக்கழகங்களில் பாடமாக இருப்பது வெட்கக்கேடு.

டேவிட் அட்டன்பரோ – இயற்கையின் குரல்

பறவைகள் தொடர்ந்து மலைகளைக் கடப்பதற்குத் தடையாக உயரமான மலைகளின் குறைந்த காற்றழுத்தம் இருக்கும். மேலும், பறவைகள் புலம்பெயரும் பருவத்தில், அவற்றை வேட்டையாட வல்லூறுகள் காத்திருக்கும். குறிப்பாக நடுவானத்தில் சிறு நாரைகளை மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வல்லூறு துரத்தி பிடிக்கும் காட்சி மிக அற்புதமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. நாரைகளின் கனத்தை தாங்க முடியாமல், வல்லூறுகள் அவற்றை வாயில் கவ்வியபடி நிலத்தை நோக்கி விழுகின்றன.

ஓரு அந்தக் காலத்துக் காதல் கதை

அவன் அப்பா எடுத்த எடுப்பிலேயே நம்ப ஜாதி என்ன அவங்க ஜாதி என்ன, நம்ப தெய்வம் என்ன அவங்க தெய்வம் என்ன என்று ஆரம்பித்து நம்ப அந்தஸ்து என்ன அவங்க அந்தஸ்து என்ன என்று வந்து நின்றார். தமிழின் அம்மா இராமலிங்க சுவாமிகளின் குடும்பத்துக்கு தூரத்து உறவு. மீன் என்று சொன்னால் வாந்தி எடுத்து விடுவாள். ஆனாலும் தன் ஒரே மகனுக்காக அவன் சந்தோஷத்துக்காக
எதையும் செய்ய சித்தமாயிருந்தாள். கணவரையும் அவள் ஆதியோடந்தம் அறிவாள். அவர் மனசின் பாசம் எப்பேற்பட்ட ஊற்றினது என்பது அவளுக்குத் தெரியும்.

மனிதர் உபயோகம்

மறுநாள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கானமைட்டுகள் முன்வைத்த புதிய எரிசக்தி குறித்த ஆய்வு அறிக்கைகள் மளமளவென்று குவிந்தன. அத்தனை முடிவுகளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. மிகமிக மலிவானதொரு விலைக்கு வழங்கப்படும் உலோகத்தாலான சிறு பெட்டிகள் ஓர் அணுமின்கலத்தைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தியை ஓய்வில்லாமல் வழங்கும் என்பதை நம்புவதா கூடாதா என்பதில் எனக்குங்கூட சிக்கலிருந்தது. விலை மிகவும் குறைவென்பதால் ஆளுக்கொன்று வைத்துக்கொள்ளலாம் என்பதுபோல உலகம் முழுக்கப் பேச்சு. பதினேழு நாடுகள் பெட்டிகளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளைக் கட்டத் தொடங்கிவிட்டதாகப் பிற்பகல் செய்தி.