பார்வையற்றவர்களுககு கிட்டுமோ பார்வை

ஆப்டோஜெனெடிக்ஸ் என்பது மரபணு சிகிச்சையை சேர்ந்தது. முதலில் ஒளியை உணரச்செய்யும் புரதங்களை உற்பத்திசெய்யும் கடற் பாசியிலிருந்து பிரித்தெடுத்த மரபணுக்கள் நுண்ணிய கிருமிகளில் அடைக்கப்பட்டு கண்ணினுள் ஊசியின் மூலம் செலுத்தப்படுகிறது. இந்த மரபணுக்கள் கங்கிளியான் உயிரணுக்களையே ஒளி வாங்கிகளாக மாற்றி அமைக்கின்றது. பிறகு இந்த நோயாளிகள ஒரு நவீன கண்ணாடியை அணிகிறார்கள். இக்கண்ணாடி முதலில் உருவத்தை புகைப்படம் எடுத்து பின் அவ்வுருவத்தை மிகப்பிரகாசமானதாகவும் சிவப்பு நிறமுள்ளதாகவும் மாற்றி உயிரணுக்களால் அடையப்பட்டு அதை சுலபமாக உணரவும் வழி செயகிறது. இம்முறையை கண்ணிழந்த குரங்குகளிடமும் எலிகளிடமும் செயல் படுத்தி வெற்றியடைந்துள்ளதாக ஜென்சைட் முதல்வர் அறிவித்துள்ளார்.

உடன்வரும் நிழல்

ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.

தானோட்டிக் கார்கள் – சமூகத் தேவை மற்றும் மனித ஓட்டுதல் பிரச்னைகள்

எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்திற்கும் ஒரு தேவை இருந்தாலே அது வெற்றி பெறுகிறது. தொலைதூரப் பயணம் என்பது மனிதர்களுக்குக் கால்நடையாகச் செல்வது அதிக நேரம் மற்றும் உடல் சோர்வு உண்டாக்குவதால், விலங்குகளில் ஆரம்பித்து (குதிரை, யானை), சைக்கிள் என்று முன்னேறி, கார் வரை தேவையானது. கடல் தாண்டிச் செல்ல கப்பல் மற்றும் விமானம் தேவையானது. தானோட்டிக் கார்களுக்கு என்ன தேவை? … நாம் பெட்ரோல் விலை அதிகமானால் சீறுகிறோம். அரபு சர்வாதிகாரிகளைத் திட்டுகிறோம். கார் செலுத்துவதன் பிரச்னைகளில், பெட்ரோல் ஒரு சின்னப் பங்கே வகிக்கிறது. மேலே உள்ள படம், ஒரு மைல் பயணத்திற்குச் சமூகம் தரும் விலையைப் பட்டியலிடுகிறது. நம்முடைய பாக்கெட்டிலிருந்து பெட்ரோல், கார் பராமரிப்பு மற்றும் காப்பீடு – இந்த மூன்றே செலவுகள் தான் என்று நினைக்கிறோம். சமூகத்திற்கு, இன்னும் பல செலவுகள் உள்ளன.

ட்ரம்பியம் ஆளத் துவங்குகிறது

பருவநிலை மாற்றம் மனிதர்களால் ஏற்படுகிறதா என்று தனக்குத் தெரியாது ஆனால் அதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அதன் விளைவுகள் தீவிரமாகவே இருக்க வாய்ப்பிருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னவர், பருவநிலை மாற்றம் குறித்த தவறான கருத்துக்களை எக்ஸான் மொபில் பரப்புவதாக டிம் கெயின் கேட்ட கேள்விக்குப்பதிலளிக்க முடியாமல் தடுமாறவும் செய்தார்!

பார்வை

சுஜாதா இந்த முறை சற்று எரிச்சலாகி விட்டாள். “இருக்குற வேலையை விட்டுட்டு உங்க கேபினுக்கு வந்து ஜோக் பண்ற நிலைமையில நான் இல்லை திவாகர். ஐ யம் ப்ரெட்டி சீரியஸ்.”
“நானும் சீரியசாத்தான் கேக்குறேன். அரை நாள்ல முடிக்க வேண்டிய வேலைய இரண்டு நாள் எடுத்து முடிச்சீங்க. இன்னைக்கு முடிக்க வேண்டிய வேலை இதுவரைக்கும் பெண்டிங்லதான் இருக்கு. இதப்பத்தி இதுவரைக்கும் நான் ஏதும் சொன்னேனாங்க? ஏற்கனவே ஒருத்தர் கல்யாணம்ன்னு லீவ்ல போயிருக்கார். அவருக்கு பதிலா நான், அவர் வேலையைப் பாத்துக்கிட்டிருக்கேன். நீங்க நாளைக்கு லீவு சொல்றீங்க. என் பொஸிசன்ல இருந்து நீங்க கொஞ்சம் யோசிங்க மேடம்” கடைசியாக மேடம் என்ற வார்த்தையில் கொடுக்கப்பட்ட அழுத்தம் சுஜாதாவை உறுத்தியது.

ஸ்பென்சர்

வேளாங்கண்ணிக்கு நடந்து வரேண்ணு வேண்டிக்க. சித்தூர்ல நாட்டு வைத்தியம் பாக்குறாங்க சாரப்பாம்பு எண்ணெய உருவி விட்டா நடந்திடுவான், பெங்களூர்ல காந்த சிகிச்சை தராங்க, மேக்னட் வச்சி ரெண்டு காலும் நடக்காத ஒரு அம்மாவுக்கு சரியாயிடுச்சி. மருதூர்ல இருக்குற சாமியாரு… நாகூர் தர்காவுல சரியாயிடும்.,கேரளாவுல மண்ணுல நாள் பூரா ஒக்கார வச்சி எண்ணத்தடவி சரி பண்ணிடறாங்க. எழுப்புதல் கூட்டங்கள். சுகமளிக்கும் பிரார்த்தனைகள். அக்குபஞ்சர்ல ஊசி குத்துனா சரியாயிடும். சித்த மருத்துவம், ஆயுர்வேதம், சோசியங்கள், ஆருடங்கள், கணிகாரர்கள்,.,தேவ ஊழியர்கள். ,இயற்கை மருத்துவர்கள், பழம் மட்டுமே சாப்பிடக் குடுங்க. எத்தனை எத்தனை ஆலோசனைகள்… பரிகாரங்கள்.. வழிகாட்டுதல்கள்… எல்லா இடங்களுக்கும் அவனைச் சுமந்து அலைந்தார்கள்.எதற்கும் இளகாத கரும்பாறையல்லவா வாழ்வு

போதிமரம்

மரங்களில் இருந்து என்ன கற்றுக் கொள்ளலாம் என்று நேஷனல் ஜியாகிரபிக் இங்கே புகைப்படக் கட்டுரையொன்றை வெளியிட்டு இருக்கிறது. மிகப் பழமையான மரம், நம் நினைவில் நீங்கா இடம் பிடித்த மரம், சாமியான மரம், விளையாட்டு ஸ்டம்ப் ஆன மரம் என பலவிதங்களை இங்கே பார்க்கலாம்.

சக்யை

அவனுடன் குதிரையில் இரண்டாம் மதிலைக் கடந்து வெளியேறிக் கொண்டிருந்தாள். குளம்படிகளின் ஓசை முரசொலியாய் அதிர்ந்தது. நிமிர்கையில் பிணந்திண்ணிகள் கார்த்திகைக் கோபுரமதிலில் சிறகு குறுக்கி அமர்ந்திருந்தன. காற்றில் நிணவீச்சம் ஏறியிருந்தது.

மூன்றாம் மதிலின் தவிட்டறையையடுத்த, கழுத்து மணியோசையும், மூச்சுச் செருமலுமில்லா தொழுவைக் கடக்கையில் மூச்சையிழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

மானுடத்தை ஆராயும் கலைஞன்

அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகள் வடிவை ஒரு தோட்டம் என்று சொல்லலாம். விதை முளைவிட்டு, நிதானமாக வளர்ந்து, அதன் பலனை கண்ணால் பார்க்கும்போது வரும் குதூகலம், அதை அறுவடை செய்தபின் மறுநாள் தோட்டத்தைப் பார்க்கும்போது வரும் ஒரு துளி சோகம் போன்றவை அவரது கதைகள். தீவிர இலக்கியம் படிக்க ஆரம்பிக்கும்போது நமக்குத் தெரியவேண்டிய ஒன்று, இலக்கியவாதிகளின் கதைகளில் அவர்கள் சொல்லவந்தது வரிகளில் மறைந்திருக்கும். சில கதைகளை மீண்டும் படிக்க வேண்டியிருக்கும், அல்லது அசை போடவேண்டியிருக்கும். அவசர உலகில் நல்ல இலக்கியங்களுக்கு நேரம் ஒதுக்கத்தான் வேண்டும். அ. முத்துலிங்கத்தின் கதைகள் அந்தத் தகுதியைப் பெற்றவை.

உம்பர்த்தோ எக்கோ பேட்டி

தி பிராக் சிமத்தேரி புத்தகத்தை 2010ல் உம்பர்த்தோ எக்கோ ஆங்கிலத்தில் வெளியிடுகிறார். அந்தப் புத்தகம் மதவெறி, பொல்லாங்கு சொல்லுதல், செமித்திக் இனவெறுப்பு., ஐயவுணர்வு, யூதப்பகைமை, பொய்யாவணம் புனைதல் போன்ற விஷயங்களை ஐரோப்பியச் சூழலில் இத்தாலியில் நடந்த அரசியல் விஷயங்களைக் கொண்டு புனையப்பட்ட நாவல். அது குறித்த பேட்டி:

காற்றில் துளிர்க்கும் யாழ்

கொள்ளிடம் போலவே தன்னியல்பில் பாயும் காட்டாறுதான்போலும் வாழ்வும். உயிர்ப்பு வற்றும் பொழுதுகளிலும் சன்னதம்கொண்டு எழக்கூடுமோ நினைவின் நதியிலிருந்து கடந்தகாலம்? பால்யத்தில் நம் நினைவில் தங்கும் நிலமே நம் அகத்தின் நித்தியவாசமாய் என்றென்றைக்கும் தங்கிவிடுமோ? சட்டென்று கவனம் இடறி கனக்கும் வலியோடு எழும் கடந்தகாலத்தின் வலியை, அழகையே நான் எப்போதும் அ. முத்துலிங்கம் அவர்களது எழுத்தில் அறிகிறேன். யாழை கதைக்களமாகக்கொண்டு அவர் எழுதிய கதைகள், பிடுங்கி வீசப்பட்ட வேரின் மணம் வீசுவதே என்றென்றும் நானடையும் மனச்சித்திரம்.

‘தமிழ்நாட்டில் காந்தி’ – தி. சே. சௌ. ராஜன்

அம்பேத்கருக்கு நேரடியான எதிர்வினை என்றில்லாமல் காந்தியின் அரிஜனத் தொண்டு குறித்து 1944ல் தமிழில் ஒரு நூல் வெளிவந்தது. அது தி. சே. சௌ. ராஜன் அவர்கள் எழுதிய “தமிழ்நாட்டில் காந்தி”. புகழ்பெற்ற புனே ஒப்பந்தத்துக்குப் பின் காந்தி தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தையே முக்கியமான இலக்காகக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடைய பயணத்திட்டத்தில் தொடக்கத்திலேயே இடம்பெற்ற இடம் தமிழ்நாடு. 23.02.1934 முதல் 22.03.1934 வரை தமிழ்நாட்டில், மாட்டு வண்டி, கார், ரயில், என்று பலவிதங்களில் பயணம் செயது 112 ஊர்களில் பொதுமக்களைச் சந்திக்கிறார். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் அவரை நேரில் பார்க்கவும், அவருடைய உரைகளைக் கேட்கவும் செய்திருக்கிறார்கள். சென்ற இடங்களிலெல்லாம் தீண்டாமை ஒழிய பாடுபடுமாறு மக்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறார் காந்தி.

அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரியில் காந்தியோடு இந்த பயணத்தில் இணைந்து கொள்கிறார் ராஜன். அங்கு தொடங்கி, காந்தியுடனேயே பயணம் செய்து, அவரது உரைகளை தமிழில் மொழிபெயர்க்கவும் செய்கிறார். காந்தியின் நிழல் போல அவரைத் தொடர்ந்து சென்ற அந்தப் பயணத்தின் கதையை மிக சுவாரசியமாய் பதிவு செய்திருக்கிறார் ராஜன்.

புத்தகப்பை

சின்னையாத் தோப்பு வழியாகச் செல்வது சற்று கடினமான வேலை. பள்ளியின் கழிவறை சுவரில் ஏறி அந்தப் பக்கமாகக் குதித்தால் சின்னையாத் தோப்பு. அதை தாண்டினால் வரும் மாந்தோப்புக்குள் காவக்காரன் கண்ணில் அகப்படாமல் சென்றால் செந்துறை விளக்கை அடைந்துவிடலாம். அதற்கு முன்னர் ஆசிரியர் கண்ணில் மாட்டாமல் சுவர் ஏற வேண்டும். என் மனம் சின்னையாத் தோப்பு வழியை தேர்ந்தெடுத்தால் அன்று நான் படிப்பாளியாக மாறி விடுவேன். ‘பள்ளி முடிந்ததும் மரத்தடியில் அமர்ந்து படிப்பது போல சிறிது நேரம் பாவ்லா செய்ய வேண்டும். பின்னர் ஆசிரியர்கள் அனைவரும் சென்றவுடன், மாணவர்கள் யாரும் விளையாடிக் கொண்டிருந்தால் அவர்கள் கண்ணிலும் சிக்காமல் புத்தகப்பையுடன் கழிவறை நோக்கி செல்ல வேண்டும். ஒண்ணுக்கு இருக்கும் பகுதியில் யாரும் இல்லையென்றால் சிறிது கூட யோசிக்காமல் சட்டென ஏறி குதித்துவிட வேண்டும்

மகரந்தம்

2016 என்பது உலகம் பூராவுமே கடும் வெப்பம் நிறைந்த வருடமாக இருந்ததாக உலக தட்ப வெப்ப மானிகளைக் கவனிக்கும் அமைப்புகள் சொல்கின்றன. அமெரிக்காவில் பொதுவாக மேற்குக்கரை மாநிலங்களில் சிலவற்றில் நல்ல உஷ்ணம் உள்ள இடங்கள் நிறைய உண்டு. கலிஃபோர்னியா என்னும் மாநிலம் கடந்த சில வருடங்களாக மழை இல்லாது, குளிர் காலத்தில் உயர மலைகளில் பனியும் பொழியாததால் நீர்ப்பஞ்சத்தில் சிக்கி இருந்தது. அதுவும் தென் கலிஃபோர்னியா பகுதிகள் பாலைநிலங்களை விளை நிலங்களாகவும் வசிப்பிடங்களாகவும் ஆக்கிக் கட்டப்பட்ட பகுதிகள். இந்த இடங்களில் வெப்பமும் கூடுதலாக இருந்து, தண்ணீர்ப்பஞ்சமும் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஆனால் 2016 இன் இறுதியில் கலிஃபோர்னியாவில் நல்ல மழை. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சில அணைகள் உடைப்பேடுத்துப் பெரும் நிலப்பகுதிகள் ஆபத்தில் சிக்கும் என்றெல்லாம் பயப்படும் அளவு மழை பெய்திருந்தது. ஆனால் இந்த நல்ல திருப்பம் அதிகம் நாள் தாக்குப் பிடிக்காது, மறுபடி கோடை வந்து விடும். கடும் வெப்பம் தாக்கும்

மருத்துவம் – அறிவும் அதிகாரமும்

தடுப்பு மருந்துகளால் பிள்ளைகள் இறந்து போயின என்கிறார்கள். இது மாதிரி பீதியைக் கிளப்ப நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தைகள் இறந்தது தடுப்பு மருந்துகளால் மட்டுமே என்று ஆதாரப்பூர்வமாக நிறுவ முடியுமா? கேட்டால் இவர்களே‌ மூடி மறைக்கிறார்கள் என்கிறார்கள். இவை எதுவுமே நிரூபிக்கப் படவில்லை. எல்லாமே தமிழ் கூறும்‌ நல்லுலகம் நன்கு அறிந்த ’நம்பகமான வட்டாரங்கள்’ (ரிலையபிள் சோர்ஸ்) சொன்ன கதை. இதனால் காப்பாற்றப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை பிரம்மாண்டமானது. தரவுகள் ரீதியாக இதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதன்மேல் நம்பிக்கையின்றி தடுப்பு மருந்துகள் போட்டுக்கொள்ளாமல் இருந்த ஆட்களையும் இந்த herd immunity என்னும் குழும நோயெதிர் திறன் காப்பாற்றி வந்திருக்கிறது.

பரண்

வளர்ந்து விட்டாள். வீட்டில் தங்கி கல்லூரியில் இலக்கியம் படித்து கொண்டிருக்கிறாள். இரட்டை சடையில் ஒன்றை, ஆள் காட்டி விரலில் சுற்றிக் கொண்டு, பதினெண் வயதுக்குரிய சதை பூரிப்போடு, காலை இளவொளியில் அழகாக இருந்தாள். அப்பாவை போல் மாநிறம். வலது கண்ணோரத்தில் அந்த சிறு வடுவை தடவிக் கொண்டு பேசுவாள். இளைஞர்கள் கிறங்கக் கூடும், ஆனால் சிறு வயதில் என்னை வெகு நாள் மிகவும் வதைத்த வடு. அவளுடன் பேசும் பொழுது, அவளை நேருக்கு நேர் பார்க்காமல், ஓரக் கண்ணால் பார்த்து பேச செய்ததே இந்த வடுதான். “நான் மத்தியானத்துக்கு மேல ஃப்ரண்ட்ஸெ பாக்க போகணும். இப்பவே இந்த வேலைய முடிக்கலாம். அந்த போளி, சித்தி எனக்கு மட்டும் தான் செஞ்சு வச்சுட்டு போயிருக்கா… யாராவது கைய வச்சீங்க…” அண்ணா வீட்டுக்கு வந்தாலும் அதிகம் இருப்பதில்லை. வெளியிலயே தான் இருப்பான். வீட்டில் இருந்தாலும் ஒன்றிரண்டு சொற்றொடர்கள் மற்றும் சித்தியின் போளி மட்டும்தான். காலையில் இருந்து, விடாமல் மழை. அதனால் அதிசயமாக வீட்டில் இருக்கின்றான்.

பொருந்துதல்

அது ஒரு வாகன விபத்து. அதில் அடிபட்டு இறக்கிறார் ஒரு பெண். அந்த வழக்கில், இறந்த பெண்ணின் குடும்பத்திற்குத் தர வேண்டிய காம்பன்சேசன் தொகையைக் கணக்கிட வேண்டி வந்தது. அப்பெண் வெளி வேலை செய்து பொருள் ஈட்டவில்லை. ஹவுஸ் ஒய்ஃப். எனினும், அப்பெண் வீட்டில் செய்யும் வேலைக்கு பிரதியுபகாரமாக ஒரு தொகையாக ரூபாய் 5000, நிர்ணயிக்கப்பட்டு அதை அவள் சம்பளம் போல குறிப்பிட்டு காம்பன்சேசன் கோரப்பட்டது. (பின்னர் குறைவான தொகை பெறப்பட்டது) அதை ஒட்டி, வழக்கறிஞர்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். ஒரு பெண் தாயாக, குழந்தைகளை கவனிப்பது முதல், கணவன், குடும்பம் என அனைத்தையும் கவனிப்பதற்கான தொகை அது. அத்தொகை சரிதானா என பேசிக்கொண்டிருக்கையில், அவளுக்கான கூலியா அது?