இருப்பு

”ந்யாம ச்சோமா தயாரி” ஆங்கில எழுத்துக்கள் “8 புளூஸ் ஹோட்டல்”-ன் தலையில் பச்சை, சிவப்பு நியானில் மாறி மாறி மின்னின. ந்யாம ச்சோமா என்பது சுட்ட இறைச்சி. வெறும் உப்பு மட்டும் தூவி தீயில் சுட்டு பரிமாறுவார்கள். மிகப் பிரசித்தம். பெரும்பாலும் வெள்ளாட்டிறைச்சி. மாடும், பன்றியும் உண்டு. பசு இறைச்சிக்கென்று ரசிகர் கூட்டமுண்டு. கோயம்புத்தூரில் தடுக்கி விழுந்தால் பேக்கரி மாதிரி இங்கு கென்யாவில் புட்ச்சரிகளும் ந்யாமா ச்சோமா கடைகளும். ரவி காரை நிறுத்தி கதவு திறந்து இறங்கியதும் அவர்களைப் பார்த்து புன்னகைத்தான். ரோஸூம், எசெகியேலும் ஜான், ஜோயலோடு ஏற்கனவே அங்கு வந்து வாசலில் காத்திருந்தார்கள். தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, “தயாரி” எழுத்துக்களை பார்த்தவாறு…

குதிரைலாட வளைவு

அலெக்ஸ் வாங் (Alex Wong) என்பவர் புகைப்படக் கலைஞர். நகரும் எதையும் ஆர்வமாக ஒளிப்படமாக்குபவர். காளைகளை அடக்கும் பந்தயம் ஆகட்டும்; வேகமாக கார் ஓட்டும் போட்டி ஆகட்டும். அவர் இருப்பார். தன் கேமிராவில் படங்களாக சுட்டுத் தள்ளுவார். இத்தனையும் அச்சில் வர ஆசைப்படுகிறார். சென்ற வருடத்தில் மட்டும் இரண்டு “குதிரைலாட வளைவு”

கோரத்தில் மகிழ்ச்சி கொள்பவர் கோர முடிவை அடைவர்

வெஸ்ட் வோர்ல்ட் (தமிழில் மேற்குலகம் என மொழிபெயர்க்கலாம்) என்பது மாயலோகம். அங்கே நீங்கள் அந்தக் கால அமெரிக்காவைப் பார்க்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய அமெரிக்கா எப்படி இருந்திருக்கும்? அங்கே தினசரி துப்பாக்கிச் சூடு நடக்கும். சட்டத்தை நீங்கள் கையில் எடுக்கலாம். … ரோபாட்டுகளின் ஆட்சி எப்படி இருக்கும், கோயத் எழுதிய ஃபௌஸ்ட் நாடகத்திற்கும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம், செயற்கை நுண்ணறிவு குறித்து ஃபிலிப் கே டிக் எழுதிய புதினங்களில் வரும் தடுமாற்றங்கள் எவ்வாறு வெஸ்ட்வோர்ல்ட்-இல் காட்சியாக்கம் ஆகிறது, நச்சுநிரற்கொல்லிகளைத் தாண்டியும் கணினியில் எவ்வாறு மென்பொருள்கள் இரண்டகநிலைக்கு வந்துசேர்கின்றன, ஜூலியன் ஜேன்ஸ் எழுதிய இருண்மை மூளையும் கடவுளின் குரலும் எப்படி உணர்த்தப்படுகின்றன…

கலையும், இயலும்

நாங்கள் அப்போது குடியிருந்த வாடகை வீடு ரொம்ப வாகான ஒரு இடத்தில் இருந்தது. கடை,கண்ணி, பள்ளி, அப்பாவின் அலுவலகம் எல்லாம் பக்கத்தில் இருந்ததைத் தவிர இன்னுமொரு பெரிய சாதகமான விஷயம் ஒன்று இருந்தது. அதாவது வீட்டுக்குள்ளிருந்தவாறே , வெளியில் நடக்கிற வித விதமான, சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ஏதுவாக தெருவின் முனையில், நாலு தெருவும் கூடுகிற இடத்தைப் பார்த்தாற் போல் இருந்தது. அங்கே, அரசியல் கட்சிக் கூட்டங்கள், பாவிகளை அழைத்து ரட்சிக்கிற கூட்டங்கள், கம்பி மேல் நடக்கிற கழைக்கூத்தாடி வித்தைகள், அப்புறம் எங்கள் தெருவில் கொஞ்சம் பிரபலமாக இருந்த ஒரு பையனின் சினிமா பாட்டுக்கான நடன நிகழ்ச்சிகள் …

திருமதி

அந்த இன்ஸ்பெக்டர் கிராதகன். அந்தப் பெண் மலங்க மலங்க விழிக்கிறது… அவளை நிற்கவைத்து என்னவெல்லாம் கேட்கிறான். அவருக்கு வேறபெண் யார்கூடயாவது தொடர்பு உண்டா?… என்கிறான். “உனக்கு?…” என்று அடுத்த கேள்வி. யார்கிட்டயாவது கடன் வாங்கித் திருப்பித் தராமல் வீட்டாண்ட தகராறு எதும் நடந்ததா? கெட்ட சகவாசம் எதும் உண்டா? யார் மேலயாவது சந்தேகப் படறீங்களா? உங்க வீட்ல நகை நட்டு எல்லாம் பத்திரமா இருக்கா? அதை அவன் எடுத்துக்கிட்டுப் போயிட்டானா… சிலருக்கு சில ஆட்களை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விடுகிறது. இன்ஸ்பெக்டர் கன்னாபின்னாவென்று கற்பனைகள் செய்தான். “என்னய்யா, இந்தாளு பத்தாம் தேதியில யிருந்து காணம்… அதே தேதியில பக்கத்து ஊர்ல யாரும் பொம்பளை காணாமல் போயிருக்கான்னு விசாரிச்சிப் பாரு” …

சர்வாதிகாரம் வேரூன்றும்போது

ஒரு தேசத்தின் வாழ்வில், குறிப்பாக எப்போது, சர்வாதிகாரம் வேர் கொள்கிறது? அது அரிதாகவே கணப்போதில் நிகழ்கிறது; அந்திப் பொழுதைப் போல் அது வந்தடைகிறது, துவக்கத்தில், கண்கள் பழகிக் கொள்கின்றன. சுயமரியாதைக்கான நாட்டம் ஷ்யு ஹொங்சியை அரசியலுக்கு இழுத்தது. இரண்டாம் உலக யுத்த கால ஷாங்ஹாயில் ஏழ்மைக்குள் சரிந்து கொண்டிருந்த மத்திய வர்க்க குடும்பத்தில் ஒருவராய் வளர்ந்த ஷ்யு ஹொங்சி, ஜப்பானிய ஆக்கிரமிப்பையும் அதைத் தவிர்க்கத் தவறிய சீன…

வாசகர் மறுவினை

இந்த கட்டுரை பல அரிய தகவல்களை சுவையாக அளிக்கிறது. மேலும் கணினி மொழியியல் (computational linguistics) மற்றும் தரவு மொழியியல் (corpus linguistics) நோக்கில் படித்தால் மிகவும் சுவாரஸ்யாக இருக்கும். நாடன் அவர்கள் புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவரது தமிழ் விழிப்புணர்ச்சி பணி மிகவும் சிறந்தது, பொறியாளர் மற்றும் பல துரை சார் வல்லுநர்கள் கவனத்தை பெரும் ஒரு கட்டுரை.

பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்

நேயர் விருப்பம் போல “சாலா..கருப்பு நிலா பாடேன்..சாலா முத்தான முத்தல்லவோ பாடேன்” என ஒவ்வொருவராக பட்டியல் இட்டுகொண்டிருந்தார்கள். வள்ளி தூங்கினபாடில்லை. சிணுங்கி அழ துவங்கினாள். “அவளுக்கு அவ அய்யா பாடுனத்தான் தூக்கம்” என்றான் நானா. கால் நீட்டினால் சுவரிடிக்கும் அந்த வீட்டில், சம்மந்தியார்கள் மத்தியில் பாட அவருக்கும் சங்கட்டமாக இருந்தது. கொஞ்சிக்கொண்டு தூளியை அமைதியாக ஆட்டினாலும் அவள் தூங்காமல் ராங்கி செய்தாள். “சும்மா பாடுங்க அண்ணே” என்றாள் சம்மந்தியம்மா. அதே கட்டைக்குரலில் “ஆயர்பாடி மாளிகையில்..” என துவங்கி மூச்சிரைக்க பாடி முடிப்பதற்குள் வள்ளி உறங்கிவிட்டிருந்தாள்.

அறிதெளிவின் எழுச்சியைக் குறித்து

மேற்கத்திய தத்துவம் இரண்டரை ஆயிரம் ஆண்டுகள் ஆன முதிர் துறை. ஆனால், அதில் பெரும்பாலானவை தொடர்பற்ற இரு பெரும் அலைகளாக ஆர்ப்பரிப்புகளாக எழுந்தவை. ஒவ்வொரு எழுச்சியும் நூற்றைம்பது ஆண்டுகள் நீடித்தது. அறிதல் என்னும் கனவு (The Dream of Reason) என்னும் நூலை ஆந்தனி காட்லீப் 2000ஆவது ஆண்டில் பிரசுரித்தபோது, அதில் கிரேக்க தத்துவவியலாளர்களான சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாடில் போன்றவர்களின் சிந்தனைகளைக் கொண்டு, மேற்கத்தியத் தத்துவத்தின் முதல் ஆர்ப்பரிப்பை விளக்குகிறார். சமீபத்தில் காட்லீப் அறிதெளிதல் என்னும் கனவு: நவீன தத்துவத்தின் எழுச்சி (The Dream of Enlightenment: The Rise of Modern Philosophy) என்னும் நூலை வெளியிட்டிருக்கிறார். அது வட யூரோப்பில் எழுந்த மதப்போர்களையும், கலிலியோவிய அறிவியலின் உதயத்தையும் முன்வைத்து மேற்கத்திய தத்துவத்தின் கதையைச் சொல்கிறது.

எண்ணிய எண்ணியாங்கு

கதிரும் சிரித்துக் கொண்டே கேப்டனைப் பார்த்து ” மாமா, நான் தொட்டேனு எனக்கு தெரியும், அங்க நின்னு ஆடி ஜெயிச்சாலும் தோக்கறத விட மோசமா பீல் பண்ணி இருப்பேன், உடு முப்பது ரன் தானே ,சதிசு தட்டிருவான், நிறைய ஓவர்ஸ் இருக்கு”.

கேப்டன் எரிச்சலுடன் ” வந்து சேர்றிங்க பார்றா எனக்குன்னு, டேய் வளத்தி ஒரு தம் குடு ” என்றான் சுரேசை பார்த்து.

மகரந்தம்

சில ஓவியங்களைக் காட்டி ஆங்கிலம், பிரஞ்சு இரு மொழிகளிலும் அவற்றைக் கதைப்படுத்தச் சொல்லப்பட்டது. ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட கதைகளில் பெண்கள் சாதனையாளர்களாய் இருந்தார்கள், வன்முறை மிகுந்திருந்தது, பெற்றோர் வசை பாடப்பட்டார்கள், குற்றவுணர்வு தவிர்க்கப்பட்டது; பிரஞ்சு மொழிக் கதைகளில், மூத்தவர்கள் அதிகாரம் செலுத்தினார்கள், குற்றவுணர்வு நிறைந்திருந்தது, சமவயதினர் வையப்பட்டனர். இதே போன்ற ஒரு ஆய்வை இதே ஆய்வாளர் பின்னர் ஜப்பானிய அமெரிக்கர்களிடம் மேற்கொள்கிறார். “என் விருப்பங்கள் என் குடும்பத்தினரின் விருப்பங்களுடன் முரண்படும்போது…” என்ற வாக்கியத்தை ஜப்பானிய மொழியில் நிறைவு செய்தவர்கள், “மிகுந்த மனவருத்தம் ஏற்படுகிறது,” என்றும், ஆங்கில மொழியில் நிறைவு செய்தவர்கள், “நான் நினைத்ததைச் செய்கிறேன்,” என்றும் முடித்தார்களாம்!

மனிதர் ஓட்டாத கார்களில் பயணிக்க நாம் தயாரா?

கார் தயாரிப்பாளர்களுக்கு உதிரி பாகங்கள் செய்யும் நிறுவனங்களான Delphi மற்றும் Continental போன்ற நிறுவனங்கள், எப்படி உணர்விகளைக் கார்களுக்கான கரடு முரடுப் பயன்பாட்டிற்காகத் தயாரிப்பது என்பதில் பல மில்லியன் டாலர்களை செலவு செய்கின்றன. … காப்பீடு நிறுவனங்கள், தானோட்டிக் கார் வந்தால் தங்களுடைய தொழில் என்னவாகும் என்று கவலையில், பல புதிய அணுகுமுறைகளையும் முன் வைத்து வருகிறார்கள். அரசாங்கங்கள் பொதுவாக, வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று செயல்படும் அமைப்புகள். ஆனால், பல அமெரிக்க மாநிலங்கள், இவ்வகைக் கார் தயாரிப்பு தன்னுடைய மாநிலத்தில் நிகழ வேண்டும் என்பதால், அவசரமாக, தானோட்டிக் கார்களைப் பொது சாலைகளில் சோதிக்க முந்துகின்றன. இந்தப் புரட்சியில் பெரும் தாக்கத்தைச் சந்திக்கப் போகும் மூன்று வகை அரசாங்க அமைப்புகள் 2016 –ல் வெறும் பேச்சளவில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.

குளக்கரை

பறவைகளைக் கொன்று உண்பதற்கான பிராணிகள் என்றோ, அழகு என்று பார்த்துப் படமெடுக்க உதவுவன என்றோ, ரொமாண்டிக் பாடல்கள்/ இரக்கவுணர்வுப் பாடல்கள் என்பனவற்றை எழுத உதவுவன என்றோ மனிதர் பல வகைகளில் அவற்றைப் பார்க்கிறார்கள்… வனவிலங்குகளை அழிப்பதைப் பெரும் சாதனையாகக் கருதிய மூடர்கள் அமெரிக்க அதிபர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மொத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே இப்படிப் பல கண்டங்களில் வன விலங்குகளின் பேரழிவுக்கு வழி செய்த ஆட்சியாகத் திகழ்ந்திருக்கிறது. … விமானங்கள் ஆண்டுகள் செல்லச் செல்ல உருப்பெருத்து பிரும்மாண்டமான உலோகக் கூண்டுகளாக மாறி வருகின்றன. இவை மேலெழவும், கீழிறங்கவும் ஏராளமான நிலப்பரப்பு தேவைப்படுவதோடு, அந்த நிலப்பரப்பில் மரங்கள் செடிகொடிகள் ஆகியன அழிக்கப்பட்டு பறவைகளுக்கு இருக்கும் இருப்பிடங்களும், அவை உணவு தேடும் நிலங்களும் இல்லாமல் ஆக்கப்படுகின்றன.

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்ட இஸ்ரோ பெண்மணிகள்

இந்தக் காணொளியை வாசகர்களுக்குக் கொடுப்பதில் சொல்வனம் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது. இந்தியா செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பிய விண்கலம் 2014 இல் செவ்வாய் கிரகத்தை அடைந்து அந்தக் கிரகத்தைச் சுற்றி சுழற்சியில் அமர்ந்தது. இதன் சிறப்பு- இது இன்னொரு கிரகத்தைச் சுற்றி வர ஒரு கலத்தை அனுப்புவதில் இந்தியாவின் “செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்ட இஸ்ரோ பெண்மணிகள்”

பயணங்களின் தொலைவு

புத்தகத்தில் என்னை அதிகம் பாதித்த கட்டுரை – “சாவதும் ஒரு கலை”. தற்கொலை பற்றியது. மரணத்தை அதன் வாசனை ஒட்டுகிற தூரம் வரைச் சென்று தொட்டுத் திரும்புகிறவர்கள் இந்த உலகத்திற்கு அல்லது தங்களுடைய சொந்த வாழ்க்கைக்கேனும் குறைந்தபட்சமாக ஒரு கைப் பிடி அளவுக்காவது வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும். இதை ஒரு நிரந்தர விதி போல் நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஜெயமோகன் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு திரும்பி வந்தபோது இயற்கையின் பேரற்புதத்தை உணர்ந்தவராக திடமான நம்பிக்கையோடு வாழ்க்கைக்குள் மீண்டும் நுழைகிறார். ஆனால் சுகுமாரனின் உலகத்தில் தற்கொலைக்கு முன்பும் பின்பும் எந்த மாற்றமும் இல்லை. தவிப்பும் கொந்தளிப்பும் மிக்கதாகவே அது தொடர்கிறது.

உலகம் இன்று நம் கையில்

ஒரு சாதுரியத் தொலை பேசி இருந்தால் ஏதாவது நாட்டில் நடக்கும் ஏதோ ஒரு வினோத சம்பவத்தையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம். ஓய்வாக அமர்ந்து யோசிப்பது என்பது இல்லாததாக, செய்ய முடியாததாகக் கூட ஆகி விட்டது. சிகரெட் குடிப்பவர்களுக்குக் கையில் அது இல்லாது நிற்கக்கூடத் தெரியாது என்று கிண்டல் செய்வார்கள், அதே போலக் கையில் ஏதோ ஒரு காட்சிக்கருவி இல்லாது நடக்க, இருக்க முடியாத மக்களாகிக் கொண்டிருக்கின்றனர் உலக மக்கள். அடுத்து மூச்சு விடக் கூட ஏதேனும் கருவி தேவைப்படும் நிலைக்கு வருவார்களோ என்னவோ. இப்படிப்பட்ட கருவிகளில் நாம் எல்லாரும் பார்க்கக் கூடிய உலக சம்பவங்களில், அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் நேற்றைய வினோதம். அங்கு ஒரு புது அதிபர் நாடாளும் பதவியை நேற்று ஏற்றார். அவர் வழக்கமான அரசியல்வாதி இல்லை. திடீர் மழையில் முளைத்த காளானா என்றால் அத்தனை புது நபர் இல்லை, … டானல்ட் ட்ரம்ப் என்கிற ரியல் எஸ்டேட் அதிபர்.

தானிவத்தாரி

இருவரும் மெளனமாக அந்த சிமெண்ட் பெஞ்சில் காத்திருந்தோம். வெகுநேரமாக எதுவும் பேசிகொள்ளவில்லை. இனி காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. கஷுமியின் முகத்தைப் பார்த்தேன். சலிப்பின் சுவடேயில்லை. எந்த நேரமும் அது நிகழும் என்பதுபோல் அமர்ந்திருந்தாள். ஐபோனில் பதிவு செய்வதற்காக விரல்கள் தயார்நிலையில் இருந்தது. நான் சலித்துபோய், நாம் நடக்கலாம் என்று சொல்லவாயெடுத்த அந்த நொடியில் எங்கிருந்தோ பறந்து வந்து எங்களுக்கு எதிரே இருந்த மரத்தில் அமர்ந்தது, அந்த உகியிசு குருவி. மேல்பகுதி முழுவதும் ஆலிவ் ப்ரவுன் நிறத்திலும், பஞ்சுபோன்ற உடலின் அடிப்பகுதி வெளுத்தும் இருந்தது. உட்கார்ந்தவுடன், தலையைச் சிலிர்த்து, உடலில் கொத்திகொண்டது. பிறகு சிறிய வாயை மெலிதாக திறந்து பாடுவதற்க்கு முன் குரலை சரிசெய்துக்கொள்ளும் தேர்ந்த பாடகனை போல் செருமி, க்யூ..க்யூ..க்யூகுயிக்யூ என்றது. ஒரு நீண்ட விசில் போல, ரயில் வண்டியின் கூவல் போல எழுந்து, பிறகு…

லட்சுமிராஜபுரம் அரண்மனை

கமலாம்பாபாயி அனைவரையும்விட அதிகாரம் மிக்கவளாக இருந்தாளாம். இராகேஜி ராவின் தர்மபத்தினி. அவள்மேல் காட்கே கொண்ட மோகம் அளவிடமுடியாதது. நீட்டிய காகிதங்களிலெல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டுக் கவலை ஏதுமற்று இருக்குமளவிற்கு மோகம். ஸ்ரீ தளிகேசுவர சுவாமி கோயில் அங்கப் பிரதட்சிணம் செய்ய மாதந்தோறும் முப்பது சக்கரம் கொடுக்க வேண்டியது என்று ஹுசூர் கட்டளையிட்டிருந்தார். கமலாம்பா பாயியின் அத்தனை வரவுகளும் இலட்சுமிராஜபுரம் அரண்மனைக்குள் புகுந்துவிட்டனர். எல்லோருக்கும் உலுப்பை வழங்க மளமளவென உத்தரவாயிற்று. பத்தேசிங் ராகேஜிராவ் பக்கம் வீசிய அதிர்ஷ்டக்காற்று வெறும் காற்றல்ல சூறைக்காற்று.

சினிமா நடிகர் சோ

அவர் நடித்த மேடை நாடகம் ஒன்று சிவாஜிகணேசன் நடிக்க சினிமாவான பொழுது அவர் நாடகத்தில் நடித்த வேடத்தில் நடிப்பதற்காக சினிமாவுக்கு அழைக்கப் பட்டார். தன் வீட்டுக்குத் தெரியாமலும் தயக்கத்துடனுமேயே சினிமாவுக்குள் நுழைந்த சோ கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து சினிமாவில் புகழ் பெற்ற ஒரு நடிகராகவே தொடர்ந்தார். கணீரென்று தனித்துவமான குரல், சமயோதிடமான நையாண்டி, போகிற போக்கில் செய்யும் கேலிகள் தவிர்த்து அவர் ஒரு நல்ல ஸ்லாப்ஸ்டிக் காமெடியனாகவும் தமிழ் சினிமாவில் நிலை பெற்றார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நூற்றுக்கணக்கான சினிமாக்களில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். எம் ஜி ஆரின் கட்சியான தி மு க வை அவர் கடுமையாக விமர்சனம் செய்த போதிலும் கூட எம் ஜி ஆரின் பல படங்களில் தொடர்ந்து காமெடி ரோல்களை சோ செய்து வந்தார்.