ஆதவனின் ‘நிழல்கள்’ சிறுகதை பற்றி

நிழல்கள்’ பனி முடிந்து தத்தம் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும் காதலர்கள் இரவு வேளையில் நடந்து செல்லும்பொழுது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் மூலம் தத்தம் உணர்வுகளை வெளிப்படுத்துவது மூலமும் அவற்றிற்கு ஒருவர் மீது ஒருவர் புரியும் எதிர்வினைகள் மூலமும் நகர்கிறது. கதாநாயகன் காதலியிடம் பூடகமாக எதையோ கோரிக்கொண்டே இருக்கிறான். அது உடலுறவா, முத்தமா, தழுவலா எதுவுமே தெரியவில்லை. எதுவாயிருந்தாலும் பஸ்கள் தொடர்ந்து வந்து போகும், போக்குவரத்து மிக்க சாலையில் அது எப்படி சாத்தியம் என்பது அவனுக்கு உறைப்பதில்லை. காதலிக்கும் இது பற்றிய பிரக்ஞை இருப்பது போலத் தோன்றவில்லை.

ஓம் மணி பத்மே ஹூம்

இந்தக் கதையில் குரங்குதான் முக்கிய நாயகர். இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் குரங்கின் நினைவு வருகிறது. இந்தப் ஜர்னி டு தி வெஸ்ட் புத்தகமும் குரங்கு ராஜாவும் அவரின் எஜமானன் ‘த்ரிபீடக’ (त्रिपिटक) குறித்த பயணமும் பற்றிய கதை. புத்த மதக் கொள்கைகளில் முரண்பாடுகள் இருந்தததைக் கண்டு, அதன் உண்மைகளைக் கண்டறிய இந்தியாவில் 17 வருடங்கள் பயணம் மேற்கொண்ட பின், தான் கற்றவற்றை, சீன மொழியில் பெயர்த்துக் கொடுத்தவரின் பெயர் த்ரிபீடகா. திரிபீடகா என்பது புத்த மதச் சூத்திரங்களைக் கொண்ட ஏடுகளைக் கொண்டு வருவது. அது சாகசங்களும் அறிவின் ரகசியங்களும் வாழ்க்கையின் விளங்கொண்ணா வினாக்களும் அடங்கிய புத்தகம். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் புரியிலி தத்துவம் கொஞ்சம் காமம் என எல்லாமும் கலந்து கட்டி ஊட்டும் புத்தகம்.

கோட்பாட்டு மோதல்

தீவிரவாதத்தினால் உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுதல் நிலவுகிறது. தொழில்நுட்ப மாற்றங்களினால் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கின்றனர். ஓரிடத்தில் இருந்து மற்றொரு பிரதேசத்திற்கு வரலாறு காணாத அளவிற்கு மக்கள் குடிபெயர்கின்றனர். இது இப்போது அல்ல. 1914ஆம் வருடம். உலகப் போர் மூள்கிறது. பொருளாதார சித்தாந்தங்களை எல்லோரும் குறைகூற ஆரம்பிக்கின்றனர். அரசாங்கத்திற்கு முழு அதிகாரமும் “கோட்பாட்டு மோதல்”

2016இல் மறைந்த இலக்கியவாதிகள்

தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் கடந்த வருடத்தில் யாரெல்லாம் மறைந்தார்கள்? ஞானக்கூத்தன், வே.சபாநாயகம், குமரகுருபரன், கே.ஏ.குணசேகரன்… இங்கே மேற்கத்திய உலகின் ஜாம்பவான்களைப் பட்டியலிடுகிறார்கள். 2016ல் சொல்வனம் இதழில் அஞ்சலி செலுத்தப்பட்டவர்கள்: எழுத்தாளர் உம்பர்த்தோ எக்கோ நாடகாசிரியர் சோ கவிஞர் ஞானக் கூத்தன்  

மூச்சுக்காற்று வெறும் காற்றாகும்போது

பெரும்பாலான பள்ளி நாட்கள் அரிசோனா நகரத்தில் கிங்க்மான் எனும் சிறிய பாலைவன பள்ளத்தாக்கில் கழிகிறது.. மற்ற மருத்துவர்களின் குழந்தைகள் போலவே தந்தையுடன் சேர்ந்து களித்த நேரம் சிறிதளவே என்ற சோகம் ஒரு புறம் இருக்க இவருடைய தாய், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்க்கும் மேல் ஓர் படி போய் தன பள்ளியிலேயே கல்லூரி பாடங்களை தனக்கு மட்டுமன்றி மற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களை கற்பிக்க வற்புறுத்தி பள்ளியின் கல்வி தரத்தையே உயர்த்திய அதிசயத்தையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். Stanford பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியமும் உயிரிய லும் இளங்கலை கல்லூரியில் பயில்கிறார்

குளக்கரை

ஆறு வருடங்களாக ஆடிய ஆட்டம் முடிவுக்கு வருவது போலொரு தோற்றத்தோடு நாம் 2017இல் அடியெடுத்து வைத்திருக்கிறோம். துருக்கி, சிரியா, ரஷ்யா, இரான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஐஸ்ஐஸ் தீவிரவாதிகளோடு நடத்தும் போர் அதிகாரப்பூர்வமான நிறுத்தத்தில் வந்திருக்கிறது. ஆலப்போ நகர் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்த நிலையில் இன்னும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான தீவிரவாதிகள் அந்த இயக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

அகதி

என் சிறுவயது மிகவும் சந்தோஷம் நிரம்பிய நாட்களைக் கொண்டது. என் இன்றைய நிலைமைக்கு எவ்விதமான காரணத்தையும் அதில் தேடமுடியாது. சொல்லப்போனால் அந்த நினைவுகளில்லாமல் ஒரு நாளையும் என்னால் கடத்திவிட முடியாது. ரயில் டிப்போக்களில் இருள் வேளைகளில் திறந்திருக்கும் பெட்டிகளில் அடுக்கிவைக்கப்பட்ட சரக்கு மூட்டைகளுக்கு இடையே என்னைப் பொருத்திக்கொண்டு அந்த நினைவுகளை அசைபோடும் பல இரவுகள் உணவை மறக்க உதவியிருக்கின்றன. பதின்மவயது முடியும்வரை அன்னையின் கருப்பையைப் போல என்னைப் பாதுகாத்ததும் அவைதான். ப்ரிக் லேனுக்கு வந்த நாட்கள் முதலே கரித்துண்டும், வண்ணம் தோய்ந்த மரத்தூரிகையும்…

தொலைந்து போன சிறுவர்கள்

செச்சென்யாவிற்கு அனுப்பப்பட்ட இளம் வாலிபர்களுக்காக ‘ரஷ்யா ராணுவ வீரர்களின் தாயார் குழு’ பொட்டலங்களை சேகரிப்பதை செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொண்டேன். அதன் தலைமையகத்திற்கு 25 டிசெம்பர் சென்றேன். என் மகனுக்காக ஒரு பொட்டலத்தை பெற்றுக் கொண்டார்கள். அவன் எங்கிருக்கிறான் என இன்னும் எனக்கு தெரியவில்லை. அவனுடைய படைப்பிரிவு தலைமையகத்தின் தொலைபேசியை கண்டறிந்து 26 டிசெம்பர் முதல் ஒவ்வொரு நாளும் அவனைக் குறித்து விவரம் அறிந்து கொள்ள அழைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு எப்போதும் ஒரே பதிலே அளிக்கப்பட்டது: அவன் காயமடைந்தவர்களிலும், இறந்து போனவர்களிலும் இல்லை. பின்னர், 5 ஜனவரி அன்று, என் மகன் நிகோலை ப்யாசெட்ஸ்கி க்ரோஸ்னி நகரில் கொல்லப்பட்டான் என எனக்கு சொல்லப்பட்டது.

சொல்லாழி

வில்லாளிக்கு அம்பு எத்தன்மைத்ததோ, அத்தன்மைத்தது புலவனுக்கு, எழுத்தாளனுக்கு சொல். சேமிப்பில் சொற்பண்டாரம் இன்றி எழுதப் புகுபவன், கையில் கருவிகளற்றுத் தொழிலுக்குப் போகிறவன். தச்சனோ, கொல்லனோ, குயவனோ, நாவிதனோ, உழவனோ எவராயினும் அது பொருந்தும். அரைகுறையாகக் கருவிகளைச் சுமந்து செல்கிறவன், துல்லியமற்ற, பொருத்தமற்ற கருவிகளைச் சுமந்து செல்கிறவன், திறம்படத் தொழில் “சொல்லாழி”

அன்புள்ள வாசகர்களுக்கு…

சொல்வனம் இணைய இதழில் எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் சில கட்டுரைகள் வரவிருக்கின்றன. சொல்வனம் அ. முத்துலிங்கம் சிறப்பிதழ் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் வரலாம். அ. முத்துலிங்கம் அவர்களைப் பற்றியும், அவரது எழுத்து பற்றியும் நீங்கள் ஒரு கட்டுரை எழுத முடியுமா?

ஒரு ஜன்னல்

உங்களின் கடிதம் எனக்கும் ஹாம்பர்கர் சாப்பிடவேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிட அன்றிரவே நான் நேராக ஹோட்டலுக்குப் போய் அதைச் சாப்பிட் டேன்.அந்த ஹோட்டலில் எட்டுவகையான ஹம்பர்கர்கள் வைத்திருந்தார்கள். டெக்சாஸ், ஹவாய் கலிபோர்னியா,ஜப்பான் என்று எல்லாநாட்டு ஹாம்பர்கர் களும் அங்கிருந்தன.டெக்சாஸ் ஹாம்பர்கர் பார்க்கப் பெரிதாக இருந்தது. டோக் கியோவின் இந்தப் பகுதிக்கு வரும் டெக்சாஸ் மனிதர்களுக்கு இது அதிர்ச்சி யாகத்தானிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.ஹவாய் ஹாம்பர்கர் ஒரு அன் னாசிப் பழத்துண்டத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலிபோர்னியாவின் அலங்காரம் …எனக்கு நினைவில் இல்லை

புகைப்படங்களின் கதைகள்

நாராயண் ராவ் திருநெல்வேலியில் தன் மூத்த மகனின் வீட்டில் தங்கி இருந்தார். மூத்தமகன் தனது மகன் வீட்டில் தங்கி இருந்தார். அப்படிப் பார்த்தால் நாராயண் ராவ் தன் பேரன் வீட்டில் தங்கி இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பேரனுக்கே ஐம்பது வயதுக்கு அருகில் இருக்கும் என்பதையும் இவரது மகன் கல்யாணத்துக்கு நிற்கிறான் என்பதையும் இப்போதைக்கு விட்டுவிடலாம். நாராயண் ராவின் மனைவி இறந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தன் மனைவியின் முகம் கூட சில சமயங்களில் அவருக்கு நினைவுக்கு வராது. அது அவருக்கு ஆச்சரியமாக இருக்கும்

ருஷ்யாவில் மூடர்களும் மேதைகளும்

~~ருஷ்ய இலக்கிய நூல்கள் மூன்றின் அறிமுகம் – நெகிபெலொஃப், சோல்ஜநிட்ஸின், தாஸ்தாவெஸ்கி, தால்ஸ்தோய், செகாவ் மற்றும் பலர்~~ இளங்கன்று ஏன் கருவாலி மரத்தை முட்டியது? இதில் சந்தேகத்துக்கே இடமில்லை- சில இளங்கன்றுகள் தனி வகை, அவற்றின் இயல்பு அப்படி. நல்ல வேளை, மந்தையிலிருக்கும் நம்மைப் போன்ற பிறர் அப்படியில்லை. “ருஷ்யாவில் மூடர்களும் மேதைகளும்”

தானோட்டிக் கார்கள் – ஒரு பருந்துப் பார்வை

வெறும் 2,500 பேர் வசிக்கும் சின்ன ஊரில் 3 கார் டீலர்ஷிப்கள்! இதுவே அமெரிக்க வாழ்க்கை முறை. கார் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்தது. வட அமெரிக்காவை GM Country என்று சொல்வதுண்டு. கார் இல்லாமல் இங்குக் காலம் தள்ளுவது வெகு சில நகரங்களில் மட்டுமே சாத்தியம். கார்களின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனைத்திலும் வட அமெரிக்கப் பங்கு மிகவும் முக்கியமானது.

சிரியாவே தன்  துயரத்தைச் சொல்லும் கவிதை

புதுச்சேரியில் பிப்ரவரி 2016-ல் நடைபெற்ற பன்னாட்டு ஆவணக் குறும்பட விழாவில் திரையிடப்பட்ட அலெப்போவை அலைக்கழிக்கும் கொலைப் போரையும் பேரழிவையும் பேசும் Young Syrian Lenses என்ற ஆவணப்படத்தைப் பார்த்த யாரும் அதிர்ந்து போகாமல் இல்லை. மக்கள் வாழும் பகுதிகளில் வீழும் குண்டுகளின் பொழிவு, தரைமட்டமாகும் கட்டிடங்கள், அழிவின் அச்சுறுத்தலிலும் மரணத்தோடு விளையாடுவது போல் விளையாடும் சிறார்கள், அமர்ந்து மரணத்தை ஒரு மிடக்கு அருந்துவது போல் தேநீர் அருந்தும் மனிதர்களரென்று அலெப்போவின் போர்த் துயரத்தைப் பதிவு செய்கிறது இந்த ஆவணப் படம்.