புதிருக்கு விடை தெரியுமா?

பூமியின் தாவரங்களும் விலங்குகளும் மெள்ள மெள்ள அழிந்துகொண்டிருக்கின்றன அல்லது நசிந்துகொண்டிருக்கின்றன என அறிவோம். ஆனால், நம் காடுகள் எந்தப் பகுதியில் அழிக்கப்படுகின்றன என்றும் எந்த நாடுகள் அவற்றை பாதுகாக்கப் போராடுகின்றன என்றும் உங்களுக்குத் தெரியுமா? உங்களின் அறிவை பரிசோதித்துப் பார்க்க ஸ்பீகல் அழைக்கிறது. எடுத்துக்காட்டுக்கு முதல் கேள்வி: கானழிப்பு: “புதிருக்கு விடை தெரியுமா?”

காளி பிரசாத் எழுதிய பழனி சிறுகதை குறித்து

ஜெயகாந்தன் காலத்துலேருந்து அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எழுதினவங்க எல்லாம் அப்படியே எதார்த்தத்தைக் கொடுக்க முயற்சி செய்தாலும், அந்தக் கதைகள் எல்லாத்திலயும் அவர்களிடம் இருந்த மனிதனாகும் முயற்சியைச் சுட்டி, அவர்களுக்கு எதிராக எத்தனை சக்திகள் இயங்குகின்றன என்று காட்டும் முயற்சிகளாக இருந்தன. லும்பன் வாழ்க்கையைத் தானே கூட வாழ முயன்று வாழ்விலும், தன் முயற்சிகளிலும் தோற்றுப் போன ஜி.நாகராஜன் கூட தன் வேசி/ கூட்டிக் கொடுக்கும் கந்தன் ஆகியோரினுள் இருக்கும் ஆழ்ந்த அன்பையே தொடர்ந்து குறைவான சொற்களில் கொடுத்துக் கொண்டிருந்தார். அது ஏதோ அவர்களை உய்வுக்கு இட்டுச் சென்று விடும் என்பது போலத்தான் அவருடைய அணுகல் இருந்தது. சா.கந்தசாமிதான் 60களின் இறுதியில் கதாசிரியன் இழிவைச் சித்திரிக்கும்போது ஒரு அற நிலைப்பாடும் எடுக்காமல் கொடுக்கலாம் என்ற நிலையில் இருந்து கதைகளை அளித்துப் பார்த்தார். ஆனால் அவராலும்…

ஆக்டேவியா பட்லரின் காலடியில்

ஒவ்வொரு நாளும் இதழ்களில் ஏதாவது எழுதுவார், அதன்பின் அவருடைய புதினங்களைப் பற்றிய வேலையோ அல்லது கதை எழுதுவதோ அல்லது வேறொரு வேலை ஏதாவதோ அவருக்கு இருக்கும். அவருக்குக் கிடைக்கக்கூடிய லாபத்தைப் பற்றிக் கணக்கிட்டுக் கொண்டே இருப்பார்- எத்தனை வார்த்தைகள் எழுதியிருக்கிறார், ஒரு வார்த்தைக்கு எவ்வளவு கிடைக்கும், ஒரு வாரத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியும், அதை வைத்து எவ்வளவு உணவுப் பொருட்களை வாங்க இயலும் என்பதையெல்லாம் பற்றி கணக்கிட்டு வைத்திருப்பார். அவர் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலில் எத்தனை காசுகள் வரை செலவழியும் என்பதை எழுதி வைத்திருப்பார். இதிலிருந்து நமக்கு அவரது எழுத்துக்களை பரிசாக அளிக்க பல விஷயங்களைத் தியாகம் செய்திருக்கிறார் என்று தெரிகிறது.

அமுதசுரபியும் சத்துணவுத் திட்டமும் மலிவு விலை உணவகங்களும்

நமது தமிழ்க் காப்பியங்கள் பசிப்பிணி பற்றி என்ன கூறியிருக்கிறது என்று பார்த்தால் முதலில் நமக்குக் கிடைக்கும் பாடலின் காலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகும். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமோதங்கிழார் என்ற புலவர் நாட்டில் நிலவிய பசிப்பிணியை இரண்டு பாணர்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார். புறநானூற்றில் இடம் பெறும் பாடல் இது.

மெய்ம்மை-கடந்த உலகில் உண்மை குறித்து…

நாம் எல்லாரும் தரவுகளைத் தெரிந்து கொள்வதிலோ, அவற்றின் உண்மையை உறுதி செய்து கொள்வதிலோ ஒரே அளவு ஆர்வம் காட்டுவதில்லை. நம் பார்வையை வலுவாக்கும் செய்திகளுக்கும் கருத்துகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம். அவற்றை விரும்பி பகிர்ந்து கொள்வதால் அவை கூடுதல் ஆற்றல் பெறுகின்றன. இணையம் உண்மையை அறியும் சாதனம் என்ற நிலையை எட்டாமல், எல்லாரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறியும் சாதனமாகி விட்டது. நிறைய பேர் பேசிக்கொள்ளும் விஷயங்களே கவனம் பெறுகின்றன, உண்மைக்கு இங்கு மதிப்பில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் களப்பணியாளர்களும் நிறுவன அமைப்புகளும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் தகவல்களையும் பரப்புவது இரண்டாம் சிக்கல். உண்மையறியும் சல்லடை இல்லாத உலகில்…

குமாஸ்தா எழுத்தாளர்களுக்கான இலக்கியம்

2016ஆம் ஆண்டு அரபு இலக்கியத்துக்கான நக்விப் மஹ்ஃபூஸ் பதக்கம் எகிப்திய எழுத்தாளர் ஏடல் இஸ்மாட் (Adel Esmat) அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தினரால் வழங்கப்படுவது. ஆங்கில மொழியாக்கம் செய்யப்படாத சமகால அரபு மொழி நாவல்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. ‘யூசுஃப் டாட்ரஸின் கதைகள்’ (Hikayât Yûsuf Tadrus- The Tales of Yusuf Tadrus) என்ற நாவலுக்காக விருது பெற்ற இஸ்மாட்டின் ஏற்புரை

சோ

அரசியல் தலைவர்கள், ஆன்மீகத் தலைவர்கள், துறை வல்லுனர்கள் முதலியவர்களுக்கு இடையில் சாதாரண மக்கள் மத்தியில் இருந்து கருத்துருவாக்குகிறவர்களாக, அவர்களை வழிநடத்துபவர்களாக சிலர் தோன்றுகிறார்கள். அவர்கள் பின்னால் இயக்கங்களோ, ஸ்தாபனங்களோ, பண/ஜாதி/இன பலங்களோ இருப்பதில்லை . எனக்கு முந்தைய தலைமுறையிலிருந்து, இன்றைய தலைமுறை வரை அரசியல் சமுதாய நிலைப்பாடுகளில் எவை நல்லவை என்று உடனடியாகவும், தெளிவாகவும் சுட்டி வழி நடத்திய, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் சோ முதன்மையானவர்

தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே இருந்த தீண்டாமை

தோல் 2012ல் சாஹித்ய அகடமி விருதுபெற்ற நாவல். திண்டுக்கல்லில் தோல்ஷாப்பு எனப்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வும், அதன் நெருக்கடிகளால் தொழிற்சங்கம் எப்படி உருவாகிவந்தது என்பதும்தான் கதை. நாவல் தொடங்குமுன் கதா மாந்தர்கள் என்ற தலைப்பில் 117 பாத்திரங்கள், அவர்களது பெயர்கள்-தொழில்கள் என்ற அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆசிரியர் டி.செல்வராஜ் அவரது முன்னுரையில்,’ இந்த நாவலில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள் தமிழகத்தின் சரித்திர கதியில் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மாந்தர்களின் பிரதிபிம்பங்களே’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அளவில் வரலாற்றை நெருக்கமாகப் பிரதிபலிக்கும் நாவல்

சோ – ஒரு தன்னிகரற்ற நிகழ்வு

தன் அபத்த நாடகங்களை மீறி உண்மையான நாடகக் கலைகளை எல்லாம் அவர் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தத் தவறியதில்லை. உடையப்பா தேவரின் தெருக்கூத்து பாணி நாடகங்களை பலரிடமும் கொண்டு சேர்த்தவர் சோ. … சோவின் நாடகங்களை கிரேக்க நாட்டின் பண்டைய நாடக ஆசிரியரான அரிஸ்டோ ஃபனோசுடன் ஒப்பிடுகிறார் எழுத்தாளர், விமர்சகர் ஆர் வி சுப்ரமணியன். நாடகத்தை தன் எண்ணங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாகக் கருதினாரே ஒழிய அவற்றை கலையம்சம் உடைய ஒரு கலையாக அவர் கருதியதில்லை. அது ஒரு வேடிக்கையான உத்தி என்ற விதத்தில் மட்டுமே கையாண்டார். நடிப்பு, மேடை உத்திகள், பெரிய செட்டுகள், படாபடோபமான ஒப்பனைகள் உடைகள் மாயா ஜாலங்கள் என்று எதையும் அவர் பொருட்படுத்தியதில்லை.

ஆடு பாம்பே! – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அதிபர் தன்னிச்சையாகவா எல்லா முடிவையும் எடுப்பார், அவருக்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழிநடத்தும் வட்டம் இருக்காதா என கேட்கும் நல்லவர்களும் இருக்கிறார்கள். ட்ரம்பின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களோ ட்ரம்பை விட ஆபத்தானவர்கள்… கருவை சுய அபார்ஷன் செய்து கொண்ட பூர்வி படேல் என்ற இந்திய வம்சாவளி பெண் 20 ஆண்டு சிறை தண்டனை தரப்பட்டார். Pro-life என்று வேறு பெயரில் அழைத்தாலும் அதன் வேர் கிறித்துவ அடிப்படைவாதம்தான். பர்தா போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதங்களை கிண்டல் செய்துகொண்டே கருக்கலைப்பு போன்றவற்றை தீவிரமாக நம்பும் பாசாங்குத்தனமும் புதிய நிர்வாகத்தின் செயல்திட்டங்களில் இருக்கிறது.

குளக்கரை

நமது வண்டியை அளவிட்ட வேகத்தைவிட அதிகமாக ஓட்டி மாட்டிக்கொண்டு ஃபைன் கட்டுகிறோம்; வருடாந்திர வரியைத் தாமதமாகக் கட்டுவதால் கூடுதலாகக் கட்டுகிறோம்; தவறுதலாக மகனின் ரயில் கார்டைக்கொண்டு பயணம் செய்து மாட்டிக்கொள்கிறோம்; இணையம் வழியாக நிறைய தடைசெய்யப்பட்ட/புரட்சியாளர்களின் புத்தகங்களை வாங்குகிறோம் – இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை பெற்றாலும், இந்த பலதரப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து உங்களது ‘குற்றப்பட்டியல்’ தயார் செய்யப்பட்டு அதன் மூலம் சமூகத்தில் நீங்கள் எந்தளவு கெட்டவர் எனக் கணக்கிட முடியுமானால் அது எத்தனை …

எழுத்தாளர் எப்படி உருவாகிறார்?

பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் உலகெங்கும் பிரபல்யம் பெற்றிருந்தனர். ஆனால் யூரோப்பில் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் தெரிய வந்த அளவுக்கு, யூரோப்பிய எழுத்தாளர்கள் பிரிட்டனில் தெரிய வந்ததில்லை என்று சொல்லப்படுகிறது. யூரோப்பிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஒரு குளிர்ப்போர் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. தீவுகளுக்கே ஓரளவு தனிப்படக் கிடக்கும் “எழுத்தாளர் எப்படி உருவாகிறார்?”

மற்றும் அவர்கள்

எதையெல்லாமோ நினைத்துக் கொண்டே வந்ததில், சீக்கிரம் கால்வாய்க்கரையோரம் படகு வீடுகளுக்கு அருகில் வந்து விட்டாற் போல் தோன்றியது.யார், யாருடைய வீடுகளையெல்லாமோ, இப்படி உற்று உற்றுப் பார்த்துக் கொண்டே போகிறோமே, இது கொஞ்சம் அநாகரீகமோ என்று தோன்றினாலும், இந்த படகு வீடுகளைப் பார்ப்பதில் உள்ள புதுமை எனக்குப் பிடித்திருக்கிறதே என்ன செய்ய என்று சொல்லிக் கொண்டாள். தவிர, அவர்கள் யாரும் இதைக் கவனிப்பதுமில்லையே என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள். ஒரு படகு வீட்டின் ஜன்னல் வழியாக சாப்பாட்டு அறை தெரிந்தது. குட்டி சாப்பாட்டு மேஜை மேல் அழகிய வண்ணப் பூங்கொத்து.

கணங்களில் தளிர்க்கின்ற ஜீவிதம் – சுப்பிரமணியன் ரமேஷ் கவிதைகள்

குழந்தைகளின் உலகம் கவிஞர்களுக்கு பிரமாதமான கச்சாப்பொருள். சிறு சொப்புச்சாமான்களோடு விளையாடிய குழந்தை பிரபஞ்சத்தை உருவாக்கிவிட்டதாக ப்ளே திங்க்ஸ் கவிபாடிய தாகூரின் உலகம் ஒரு பக்கம். அவை அன்றாட நிகழ்வுகளிலிருந்து உருவாகும் அசாத்திய தரிசனங்களை நமக்குக் காட்டுபவை. அதில் ஒரு ஆன்மிக அனுபவம் உள்ளது. கவிஞர் ரமேஷ் எதிர்கொள்ளும் குழந்தை உலகம் ஆச்சர்யத்தை அடக்கிய அதே வேளையில் அக ஸ்தம்பிப்பையும் உருவாக்கிவிடுகிறது.

சந்திப்பு

ஏதாவது ஒரு விதத்தில் அந்த பொறுப்பற்ற துணிவு இறுதிவரை தொடர்ந்தே ஆகவேண்டும். ஒருகால் அதன் முடிவு வெற்றியாகவும் இருக்கலாம். எதிரியிடமே நாங்கள் கரை சேர்ந்தது பற்றி தகவல் தெரிவிக்கும் அதிர்ச்சிகரமான அளவிற்கு வளர்ந்துவிட்ட இந்த அபத்த விளையாட்டில் லூயிஸை இழப்பது பற்றிய பேச்சுக்கு இடமே இல்லை. மேலும் அப்போது எனக்கு மற்றொரு சிந்தனையும் உடனெழுந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் வெற்றி பெற்று லூயிஸைச் சந்திக்க நேர்ந்தால், அந்த கணத்தில் மட்டுமே இந்த ஆட்டம் உண்மையிலேயே தொடக்கம் பெறும் என்றும் அத்தியாவசியமான, கட்டற்ற, அபாயகரமான எங்கள் கற்பனை நவிற்சி தோய்ந்த இலட்சியவாதத்திற்கான பரிகாரமாகவும் அது இருக்கக்கூடும் என்றும் நம்பினேன். உறக்கத்தில் அமிழும் கணத்திற்கு முன் எனக்கு ஒருவிதமான மனக்காட்சி தோன்றியது: லூயிஸ் ஒரு மரத்திற்கு அருகே நின்று கொண்டிருக்கிறான், எங்கள் அனைவராலும் சூழப்பட்டு, கையை முகத்தை நோக்கி உயர்த்துகிறான், பின்னர் முகத்தை முகமூடியை அகற்றுவதைப் போல் கழட்டுகிறான். கையில் தன் முகத்துடன் என்னையும், அவனது சகோதரனான பாப்லோவையும் ரோகேயையும் அணுகி, அதை அணிவித்துக் கொள்ளும்படி சைகை செய்கிறான். அவர்கள் இருவரும் மறுத்த பிறகு நானும் அதை அணிந்துகொள்ள மறுக்கிறேன், கண்களில் நீர் வரும் வரையில் சிரித்துக்கொண்டே. அதன்பின் லூயிஸ் தன் முகத்தை மீண்டும் அணிந்து கொள்கிறான்.

கடல்‌ மத்துகள்

பரிணாமவியலின் தந்தை எனப் போற்றப்படுகிற சார்லஸ் டார்வின். அவரின் கவனிப்பு என்னவெனில் உங்கள் வீட்டுப் பூனை, எலிகளைக் கட்டுக்குள்‌ வைத்திருக்கும். எலிகள் போன்ற கொரித்துண்ணிகள்(rodents) மகரந்தச் சேர்க்கை செய்கிற பூச்சி மற்றும் வண்டுகளின் கூட்டை கலைப்பவை. அப்படி எலிகளின் எண்ணிக்கை‌ கட்டுக்குள் இருக்கிறதெனில் நிறைய மகரந்தச் சேர்க்கை நடக்கும். நிறைய மகரந்தச் சேர்க்கை‌ நிறைய செடிகளை, நிறைய பூக்களை உருவாக்கும். இங்கிலாந்து ஒரு படி‌மேலே போய், வீட்டில் பூனை வளர்த்தல்‌ நாட்டின் வளமான ராணுவத்திற்கு அவசியம் என நம்பினார்கள்.

சீடன்

மணிகண்டனை அறைக்குள் வைத்துப் பூட்டி வைத்திருந்தார்கள். வீடு விடாகச் சென்று தண்ணீர் கேன் போடும் வேலையைச் செய்துகொண்டிருந்தான். ஆளைப் பார்த்தால் இவனா தினமும் 100 நீர் கேனைத் தூக்குவான் என்பது போல ஒல்லியாக இருப்பான். “12 தோசை தின்னுட்டும் எந்திரிக்கமாட்டாங்க” என்று முருகேசனின் மனைவி ஒரு தடவை சொன்னபோது, “எங்க குடும்ப வழக்கம் அது” என்று முருகேசன் சொல்லிவிட்டான். எத்தனை உண்டாலும் வயிறு என்னவோ உள்ளடங்கியே இருந்தது. முப்பது வயதுக்குரிய அடர்த்தியான மீசையும் அடர்த்தியான தாடியும் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்றிருக்கும் கண்களும் சீரற்ற பற்களும் அவனை வினோதமாகக் காட்டின.

க்யூபா: ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்  (பகுதி – 2)

அடுத்த நாள் எங்களோடு ஹோட்டலில் உட்கார்ந்து காலைஉணவு சாப்பிட, எங்களோடு வந்திருந்த க்யூப மொழிபெயர்ப்பாளரை அழைத்தோம். அவரும் ஹோட்டலுக்கு வந்தார். ஆனால் ஹோட்டல் அதிகாரிகள் அவர் க்யூபன் என அறிந்ததும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்! நாங்கள் குறுக்கிட்டுப் பேசியும் பிரயோஜனமில்லை. அவர் வெளியேறி வேறெங்கோ போய் சாப்பிடுமாறு ஆயிற்று. க்யூபாவின் வெளிஉலகுக்குத் தெரியாத ரகசி்ய முகங்களில் இதுவும் ஒன்று. ஹோல்கின் நகரில் அநேக சிறு பூங்காக்கள், அறிவியல், சரித்திர மியூசியங்கள் உள்ளன. சிறிய விமான நிலையமும் இந்நகரில் இருக்கிறது.

தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்

This entry is part 19 of 48 in the series நூறு நூல்கள்

இருபத்தியோரு வயதில் படித்ததற்கும், இப்போது நாற்பத்து நாலு வயதில் படித்ததற்கும் நிறைய வித்தியாசாங்கள். எதிர்பால் ஈர்ப்பு தணிந்து, காமம் கனிந்தபின் நாவலில் பிடித்த இடங்கள் கூட மாறிவிட்டன. இப்போது படிக்கும்போது முதல் வாசிப்பின் பரபரப்போ, கிளர்ச்சியோ, இளமைக்கே உரிய இனக்கவர்ச்சியோ அதீதமாய் இல்லாமல் நிதானமாய் படிக்க முடிந்தது. தி.ஜா-வின் வரிகளையும் உரையாடல்களையும் நன்கு கவனித்தேன். இந்த முறை பிடித்த விஷயங்களே வேறாக இருந்தன. முதல்முறை படித்தபோது பரவசமடைந்த இடங்கள் சாதாரணமாய் கடந்துபோயின

விடாய்

எனதுகால் அவள்மூட்டில் இடிக்குன்னாலும் இடுப்பில் தூக்கிக்கும் அம்மா.விறகை தலையில வச்சு திரும்பையில முந்தானய புடுச்சிக்கிட்டு ஓடிவரனும்.அந்த கொடுக்காபுளிமரத்துக்கிட்டதான் கொமரன் பொறந்தான். மழைநின்றகாலையில் அம்மாவோட வந்தப்ப மழவில்லுல இருக்கற அத்தனநெறத்துலயும் கருப்பு செறகுல புள்ளிப்புள்ளியா போட்ட வண்ணாத்திப்பூச்சிகள பாத்து கண்ணுக்கு சலிக்கல.”வெவரங்கெட்டவனே ஆளுக வாரதுக்குள்ள காளான கிள்ளி மடியில போடுவியா..வெறும் பார்வ பாத்தா கொழம்பு வந்துருமா…”அம்மா குரலால் குனிந்து நெருக்கமாகப் பார்த்தான் மெய்யன்.