மானுடம் கண்ட மகத்தான கனவு விஜயநகரம். இன்று நாம் காணும் ஹம்பி என்பது நூற்றாண்டுகளுக்கு முன்னால் அங்கு எவ்விதமான வாழ்வு நடந்திருக்கும் என கற்பனை செய்து பார்ப்பதற்கான ஒரு முகாந்திரம் மட்டுமே. விஜயநகரம் இன்று கற்பனையால் மட்டுமே கண்டடையக் கூடிய ஒரு பிரதேசம். மாமனிதர்கள் மானுடம் குறித்த மகத்தான கனவுகள் மூலமாகவும் கலைஞர்கள் தங்களின் கலையின் வழியாகவும் மதியாளர்கள் தங்கள் திட்டமிடல் மூலமாகவும் வணிகர்கள் வாய்ப்புகளின் சாத்தியங்களின் வழியாகவும் பொறியாளர்கள் பணி மேலாண்மை மூலமாகவும் வீரர்கள் போர் நுணுக்கங்கள் மூலமாகவும் சாமானியர்கள் பெருவியப்பினூடாகவும் மட்டுமே அந்நகரை கற்பனை மூலம் அடைய முடியும். அப்பிராந்தியம் கற்காலம் தொட்டு அங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டிருக்கிறது. இராமாயணம் குறிப்பிடும் கிஷ்கிந்தை விஜயநகரமாக இருந்திருக்கக் கூடும்
Category: இதழ்-162
உங்கள் வாழ்க்கையின் கதை – வருகை
டாரில் பால்ட்வின் மயாமி (மியாமியா) இன மக்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அறிவாற்றலையும் மீண்டும் கண்டுபிடிக்கவும் ஆவணப்படுத்தவும் சொல்லிக் கொடுக்கவும் செய்கிறார். இவரை போன்ற கலாச்சார பாதுகாவலர் ஒருவரைத்தான் தன் கதாநாயகியாக டெட் சியாங் (Ted Chiang) வைத்துக் கொள்கிறார். பேச்சாளரே இல்லாத மொழியை எவ்வாறு அணுகுவது? அதற்கு நிறைய உந்துதலும் ஊக்கசக்தியும் முனைப்பும் எதையும் முயற்சி செய்து பார்க்கும் மனவுறுதியும் வேண்டும். முன்னவர் நிஜம். அவரின் ஆராய்ச்சி ஏன் முக்கியம் என்பதை எளிமையாக அறிந்துகொள்ள ’Story of Your Life’ கதையும் அந்தக் கதையை திரைப்படமாக்கிய ‘அரைவல்’ (Arrival) சினிமாவும் முக்கியம்.
பசை
“அதைத் தொடாதே” என்றாள் அவள்.
“என்னது அது” என்றேன்.
“பசை. மிகச் சிறப்பான பசை. இருப்பவற்றிலேயே மிகச் சிறந்தது”
“எதற்காக வாங்கினாய் அதை”
“இங்கே ஒட்ட வேண்டியவை நிறைய இருக்கின்றன”
மதப் போர்கள்
2014 ஆம் ஆண்டில் ஜூன் மாதம், அல் கைதாவிலிருந்து உடைந்து போன ஒரு குழு, குறிப்பிடும்படியான வகையில் கொடூரமான குழு எனலாம், இந்தக் குறிக்கோளை அடைந்தது, ஆனால் தன் மூலக்குழுவைப் பகைத்துக் கொள்ளவும் செய்தது. ஈராக்- சிரியாவின் எல்லைப் பகுதியின் இருபக்கங்களிலும் பெரும் நிலப்பரப்பை வென்று கைப்பற்றிய, இஸ்லாமிச அரசு என்ற இந்தக் குழு, தன் தலைவரான அபு பக்ர் அல்- பாக்தாதி இனிமேல் காலிஃப் இப்ரஹிம் என்று அறியப்படுவார் என அறிவித்தது…. இந்தப் புது காலிஃபும் அவரது சகாக்களும் இறுதித் தீர்ப்பு வரும் நாளுக்காகத் தயாரிப்புகளில் இறங்கி இருக்கிறார்மள். அது உடனே வரவிருக்கிறது என்று இவர்கள் நம்புகிறார்கள், இந்த நாளில் மார்க்கத்திலிருந்து தவறியவர்களும், சிலை வணக்கம் செய்வாரும் உலகிலிருந்து அழிக்கப்பட்டு உலகு சுத்திகரிக்கப்படும் என்றும் நம்புகிறார்கள்.
பெரும் மௌனம்
மனிதர்கள் அரெஸிபோவின் துணைகொண்டு வேற்றுகிரக நூண்ணறிவை தேடுகிறார்கள். தொடர்பை உருவாக்கிக் கொள்ளும் அவர்களுடைய விழைவின் உந்துதல் எவ்வளவு வீரியமானதென்றால் அதற்காக பிரபஞ்சத்தின் குறுக்கே அதை கேட்பதற்கான வல்லமையுடைய செவியை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். ஆனால் நானும் என் சக கிளிகளும் இங்கேயே உள்ளோம். எங்களுடைய குரல்களை கேட்பதில் அவர்களுக்கு ஏன் ஆர்வம் இல்லை? மனிதன் அல்லாத இனமான எங்களால் அவர்களுடன் தொடர்பு கொள்ள இயலும். மிகச் சரியாக, எங்களைத் தானே அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா?
க்யூபா – ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்
ஹவானா வியெஹாவின் பிரதான சாலையோரமாக மரங்களின் நிழலில் 2007- ல் ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவுச்சிலை ஒன்று இந்திய அரசினால் நிறுவப்பட்டது. அந்த முக்கிய நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். இந்திய கலாச்சார உறவுக் கழகத்தினால் (ICCR), இந்தியாவிலிருந்து கூபாவுக்கென பிரத்யேகமாக அனுப்பப்பட்டது அது. எழுத்தாளர்கள், ஓவியர்கள், மற்றும் கலைஞர்களை மதிக்கும் பிரதேசம் லத்தீன் அமெரிக்கா. கூபா அதற்கு விதிவிலக்கல்ல. தாகூர் சிலை திறப்பு விழாவின்போது, பழைய ஹவானாவில் உள்ள ` காஸா த லா ஏஷியா` எனப்படும் `ஏஷியா ஹவுஸ்(ஸ்பானிஷில் Casa de la Asia) பள்ளிக்குழந்தைகளை வைத்து தாகூரின் நாடகம் ஒன்றின் ஒரு அத்தியாயத்தை, எங்களுக்கு நடத்திக் காண்பித்தது. பள்ளிக்குழந்தைகள் உற்சாகமாக அதில் நடித்தது எங்களுக்கு சிலிர்ப்பூட்டிய விஷயம். கூப்ர்களுக்குப் பிடித்த உலக அரசியல் தலைவர்களில் மஹாத்மா காந்தியும் ஒருவர்.
அருவம்
அந்த சனிக்கிழமை இரவைக் எப்படிக் கடப்பது என்று மந்திரமூர்த்தி யோசித்துக்கொண்டிருந்தான். நாற்பது வயதில் நாய்க்குணம் என்று சொல்வதின் பொருள் என்ன என யோசித்துக் கொண்டிருந்தபோது, சண்டை போட்டுக்கொண்டு கனமான தொப்பை மீது ஓடி வந்து விழுந்த பெரிய மகனையும் சிறிய மகளையும் “அங்கிட்டு போய்த் தொலைங்க மூதிகளா” என்று உரக்கச் சத்தம் போட்டு ஏசினான். உள்ளே இருந்து மங்களம் “அவாகிட்ட போகாதீங்கன்னா கேக்குகளா” என்று சொன்னது இவனுக்கு மெல்லக் கேட்டது. “அப்பா ஏம்மா எப்பவும் எரிஞ்சே விழறாங்க” என்று மகன் மங்களத்திடம் கேட்டிருப்பான் என மந்திரமூர்த்தி நினைத்துக் கொண்டான். நாளெல்லாம் எண்ணெய்க்கடையில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து விழுந்தால் இங்கேயும் ஒரு நாதி இல்லை என்று மெல்லச் சொல்லலாமா அல்லது…
மகரந்தம்
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 130 மில்லியன் ஹெக்டர் காடுகள் இந்தோனேஷியாவில் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் எட்டு புட்பால் திடல் அளவுக்கான காடு சாம்பலாகிறது. கிடைத்த ஒவ்வொரு சதுர அடியும் புது நகரங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் உருவாகியுள்ளன. காட்டுத்தீயை உருவாக்குவதே மிகச் சுலபமாக தரிசு நிலங்களாகவும், கட்டிடங்களாகவும் மாற்றுவதற்கான சுலபமான வழி எனக் கண்டுகொண்டிருக்கும் அரசும் தனியார் மையங்களும் காட்டுத்தீயில் குளிர்காய்கிறார்கள்.
வாசகர் மறுவினை
வெறும் பணி சம்பந்தமான அனுபவம் பற்றி மட்டுமோ அல்லது சுற்றுலாவில் பார்த்த விஷயங்களைப்பற்றி மட்டுமோ எழுதாமல், பலமுனைகளில் இருந்து ஸிவிட்ஜெர்லாந்தை பார்த்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி. உங்கள் பதிவுகள் அனைத்தும் என் பயணங்களின்போது அங்கே நான் கவனித்ததில் இருந்து இம்மி பிசகாமல் இருந்தது மனதிற்கு நிறைவாய் இருந்தது. ஹிந்தி சினிமா தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா தனது பல படங்களை இன்டர்லாக்கன் ஊரைச்சுற்றி எடுத்து அந்தப் பகுதியை பிரபலப்படுத்தி இருப்பதால், இப்போதெல்லாம் அங்கே இந்திய சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால் ஜெனீவாவில் உள்ள செர்னில் …
ஈரிதழ் வால்வுகள்
தொலைபேசி அருகிலேயே அப்படியே கிடந்தார் மாதவன். கண்மூடி அயர்ந்து கிடந்தார். நெஞ்சு மாத்திரம் நடுக்கடல் அலை என பொங்கித் தணிகிறது. விளக்கில் முட்டிய பூச்சியாய்த் தவிக்கிறது மூச்சு. உடனே டாக்சி சொல்லி… அவரை எழுப்பி உட்கார்த்தினார். இட்லிக் கொப்பரையைத் திறந்தாப்போல அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார், தெளிவித்தார் அண்ணா. “என்னாச்சி மாது?” சுரணை மெல்ல மீள்கிறது. மாதவன் என்னவோ சொல்ல வந்தார். முடியல்ல… என்று சொல்ல வந்தார்.
'டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்' சிறுகதைத் தொகுப்பு மதிப்புரை
மிகச் சுலபமாக நீதி போதனைக்கதையாக மாறியிருக்க வேண்டிய கதையை கணேஷ் வெங்கட்ராமன் மனித மனதை அலசும் வழியைக் கொண்டு இலக்கிய ஆக்கமாக மாற்றியிருக்கிறார். மனதின் விநோதங்களைப் பேசும்போது அவர் இயல்பாக அதில் அதிகாரத்தின் தேவையையும், அதிகாரத்தைக் கைகொள்ள செய்ய வேண்டிய வித்தைகளையும், அதிகாரத்துக்கு முன் எந்தளவு குறுக்கிக்கொள்ள வேண்டும் என்பதை முடிவெடுக்கும் மனதின் ஊசலாட்டத்தையும் அவர் கையாள்கிறார். மிக இயல்பாக அதிகார வேடங்கள் நாய்களாகவும் பூனைகளாகவும் சுப்பு, அஷுவோடு அமைந்திருப்பதே இக்கதையின் வெற்றி.
ஹயாவ் மியாசகியின் சினிமா: மனிதத்தின் சாரம்
கார்ட்டூன் சினிமா என்றால் எலியும் பூனையும் துரத்திக் கொண்டிருக்கும் படங்கள் என்றோ, தூங்கும் ராஜகுமாரியை ஒரு ராஜகுமாரன் எழுப்பி மணம் புரியும் கதை என்றோ நினைத்துக் கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது. இன்று எந்தத் துறையும் நூறு உள்பிரிவுகளைக் கொண்டு விளங்குகிறது. சில சமயம் ஒரு சிறு உப “ஹயாவ் மியாசகியின் சினிமா: மனிதத்தின் சாரம்”
வே.நி.சூர்யா, திருமூ, நந்தகுமார் கவிதைகள்
வானத்தை
விழுங்கிக் கொண்டிருந்தது
நிலவும் சூரியனும்
கண்ணாடிச்
சில்லுகளாய்’
உடைந்து
விழுகின்றன
பாட்டிக்கு, அன்புடன் – அனுக்ரஹா கவிதைகள்
செவிட்டு உலகில் பேசிக்கொண்டிருக்கிறோம்
சிரிப்பு அழுகை கிண்டல் கோபம்
ஆற்றாமை,
ஒன்றும் மற்றொருவரை
தீண்டுவதில்லை..
யாரும் யாருக்கும் பதில் சொல்வதில்லை..
பழனி
‘பழனி பத்தாவது மாடியில் பதினொன்றாம் ரூமில் செக் இன்னுக்கு முன்னதான வேலைகளை சரிபார்த்துக் கொண்டிருந்தான். சுரத்தில்லாமல் இருந்தான். என்னைப்பார்த்ததும் சுமாராக சிரித்து கட்டிக்கொண்டான். பிறகு அவன் சட்டைப்பையிலிருந்து ஒரு லெட்டரை எடுத்து படிக்கச் சொன்னான்..
‘அந்த பொண்ணுகிட்டேந்துதான் வந்திருக்கு, படிச்சு சொல்றியா?’
நான் அதைப் படித்து சாராம்சமாக சொன்னேன்…
‘அந்தப் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளையோட கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்களாம். ஆனா அதுக்கு உன்னயத்தான் பிடிச்சிருக்காம். எப்படியாச்சும் அது நடுவில திருத்தணி வறப்ப வந்து கூட்டிணு போக சொல்லுது.’
தூரம்
டீ குடித்து வெளியில் வருவதற்கும், அலெக்ஸாண்டர் ஜீப்போடு மருத்துவமனை வாயிலில் நுழைவதற்கும் சரியாய் இருந்தது. பிணவறை வாசல் படிக்கருகில், ரிவர்ஸில் வந்து ஜீப்பை நிறுத்தினார் அலெக்ஸாண்டர். கிருஷ்ணப்பா போய் மருத்துவமனை சிப்பந்தியை கூட்டி வந்தார். உள்ளே போய் கதவு திறந்து, தலை முதல் கால் வரை முகம் தெரியாமல் வெள்ளைத்துணி சுற்றப்பட்ட மோகனாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டுவந்தார்கள். “லட்சுமீஈஈஈ…என் கண்ணூ…” வெங்கடலட்சுமி வீறிட்டு நெஞ்சிலடித்து கதறியது அந்த நள்ளிரவின் இருட்டை கிழித்தது.
ஆழம்
“எந்திரிடீ.. என்னமோ புர்ன்னு கெடக்க… மணியாச்சு பாரு..“ கைக்கு இரண்டாக ரப்பர் குடங்களை வைத்திருந்தாள் வரலட்சுமி. கைகளிலும் ரப்பர் வளையல்கள்தான். பெண் வாரிசு இவள் ஒருத்தியே என்பதில் கூடுதல் சலுகையாக கைக்கு பொன் வளையல் கிடைத்தது. முதலில் அடகுக்குப் போனது இவைகள்தான். பிறகு இரட்டை வடச்செயின்.. என வரிசையாக மூழ்கி விட இனி மீட்க முடியாது என்ற தளத்தில் தாலிக் கொடியை விற்று வெள்ளாமை செய்தான் நாச்சிமுத்து
70களிலிருந்து ஒரு கட்டுரை: வண்ணதாசனின் 'கலைக்க முடியாத ஒப்பனைகள்'
பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுதியில் எழுத்திலும், வசீகரத்திலும் எழுப்புகிற ஈடுபாட்டிலும் வேறுபாடு இருப்பது இயற்கை. எனவே எல்லாக் கதைகளுக்கும் ஒரே வகையான கவனம் கிடைக்க முடியாது. வேறுபட்ட மனிதர்கள், நிகழ்ச்சிகள், உணர்வுகள் இவற்றை ஆசிரியர் கையாண்டுள்ள விதம் இந்தப் பதினைந்து சிறுகதைகளையும் படிக்கும் போதுதான் தெரிகிறது. இதில் நாம் காணும் ஒற்றுமை வேற்றுமைகளும் இந்த எழுத்தை இனம் காண உதவுகின்றன.