”பிணையுண்ட வாழ்வு” என்னும் தலைப்பிடப்பட்ட இந்தப் படம் 2016ஆம் வருடத்தின் சிறந்த காட்டுயிர் புகைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மனிதரின் உயரம் 1.8 மீட்டர் என்றால், இந்த ஒராங்குட்டான் முப்பது மீட்டர் உயரத்தை ஏற்கனவே கடந்து ஏறிக்கொண்டிருக்கிறது. கீழே அதன் வீடான கானகத்தைக் காணலாம்: நன்றி: 2016 wildlife photographer “காட்டு விலங்குகள்”
Category: இதழ்-160
குற்ற நீதியொறுத்தல் முறை
அமெரிக்க நீதி முறை எத்தனை பயங்கரம் என்பது தெரியாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் இந்தியர்களும்/ தமிழர்களும். பழுப்புத் தோலுக்குக் கீழே பல நிறங்களில் மேலும் பல இனக் குழுவினர் காவல் துறையின் கடுமையான பார்வைக்கும், இழி நோக்குக்கும் ஆளாக இருக்கக் கிட்டுவதால், இந்தியரும் சீனரும் இது “குற்ற நீதியொறுத்தல் முறை”
குட்டிப் பாதங்களால் அறிந்த மண்ணில்
மல்லிகாவும், இயலும் இறங்கிப்போய் டீ வாங்கி வந்தார்கள். பகலாயிருந்தால் கடலை மாவு போண்டா பெரிய உருண்டையாய் கிடைக்கும். ராஜலிங்கத்தின் வீடு தாராபுரத்தில்தான் இருந்தது. ஒருமுறை காலேஜ் டூர் போனபோது தாராபுரம் கடக்கும்போது ராஜலிங்கம் வீட்டிற்குப் போனது ஞாபகம் வந்தது. பத்து நிமிடத்தில் பஸ் கிளம்பியது. கொஞ்ச நேரம்தான் கண்ணயர்ந்த மாதிரி இருந்தது. சத்தம் கேட்டு பாதி கண் திறந்து பார்த்த போது, பஸ் ஆரப்பாளயம் ஸ்டேண்டில் நுழைந்துகொண்டிருந்தது.
விழுப்பம் தரும் கொழுப்பு
கற்காலத்தில் மனிதர்கள் மலைகளிலும், குகைகளிலுமே வாழ்ந்தனர். வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சி, காய்கள்,கிழங்குகள்,விதைகள்,கொட்டைகள் போன்றவையே அவர்களின் உணவாக இருந்தது. அதாவது நிறைய கொழுப்பும், புரோட்டீனும், குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுமுறை.நெருப்பை உருவாக்க கற்றுக்கொண்ட பின்னரே தங்கள் உணவை நெருப்பில் சுட்டு உண்ண ஆரம்பித்தனர். பின்னர் சமவெளியில் வாழத்துவங்கிய காலகட்டத்தில்தான் கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து நிரம்பிய புல் உணவுகளான நெல் மற்றும் தானியங்கள் மனிதர்களின் உணவில் இடம்பெற ஆரம்பித்தது. இதன் அடிப்படையில்தான் பேலியோ டயட் என்கிற சித்தாந்தம் அமைகிறது.
தகவல் விஞ்ஞானம் – கற்றுக் கொள்ள மற்றும் பயிற்சி வாய்ப்புகள் : பகுதி 3
தரவின் கதைக்கும் டேடா விஞ்ஞானியின் கதைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. உதாரணத்திற்கு, தரவின் கதைப்படி, ஒரு 200 கோடி ரூபாய் முதலீடு செய்து சில வியாபார மாற்றங்கள் நிகழ்த்த வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இந்த 200 கோடி முதலீடு பயனளிக்குமா என்று நிச்சயம் சொல்ல முடியாது; அப்படியே பயனளித்தாலும், எதிர்பார்த்த லாபத்தையோ, செயல்திறனையோ அளிக்கும் என்பதும் சொல்வதற்கில்லை. டேடா விஞ்ஞானியின் கதையாக இருந்தால், அது, அவரது தோல்வியாக பாவிக்கப்படும்
மருது பாண்டியரின் கனவு
இந்திய விடுதலைப் போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாற்றைப் பொருத்தவரை, முதல் சுதந்தரப் போர் என்று நம்மாலும் சிப்பாய்க் கலகம் என்று பிரிட்டிஷாராலும் அழைக்கப்படும் 1857ம் ஆண்டுக் கிளர்ச்சியே விடுதலைக்காக நடந்த முதல் ஒருங்கிணைந்த முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னால், விடுதலைக்காக இப்படி ஒரு கூட்டு முயற்சியை தென்னகத்தில் மேற்கொண்டவர், மருது பாண்டியர்களில் இளையவரான சின்ன மருது. போரின் ஒரு கட்டத்தில் இதற்கான பிரகடனத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். விடுதலைப் போரின் பல கட்டங்களில் நாம் பார்க்கும் துரோகமும், சதிச்செயல்களும் இந்த ஒரு முயற்சியையும் முறியடித்துவிட்டன என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி
‘மூத்தது மோழை இளையது காளை’ என்ற பிரபலமான தமிழ்ப் பழமொழி, மருது சகோதரர்களில் பெரிய மருதுவிற்குப் பொருந்தி வராவிட்டாலும், இளையவரான சின்ன மருதுவிற்கு பொருந்துகிறது என்பது பல வரலாற்று ஆவணங்களாலும் தெளிவாக விளங்குகிறது. அவர் வீரத்திலும், தீரத்திலும், விவேகத்திலும் …
பருக்கை – 'யுவ புரஷ்கார்' விருது பெற்ற புதினம்
சமீபத்தில் 2015ல் சாகித்ய அகாதமியின் ‘யுவ புரஷ்கார்’ விருது பெற்ற வீரபாண்டியனின் “பருக்கை” நாவலை (புதினம்) வாசித்தேன். தமிழில் மறக்கப்பட்டுவரும் பல வார்த்தைகளில் ஒன்றான “பருக்கை” என்பதையே புதினத்தின் தலைப்பாக வைத்தமைக்காகவே வீரபாண்டியன் முதலில் பாராட்டுக்குரியவர். சரி புதினத்துக்குள் வருவோம். ஊர் பக்கத்திலிருந்து கல்விக் கனவுகளுடன் சென்னை போன்றதோரு பெருநகருக்கு வரும் ஏழை மாணவர்கள் தங்களின் உணவுக்கு, தங்குமிடத்துக்கு, கல்விக்கட்டணத்துக்கு என எதிர்க்கொள்ளும் பல அவலங்களைத் தோலுரிக்கும் கதை.
ஒரு கிறிஸ்துமஸ் மாலை
அவள் அர்சி. கருப்பின வேலைக்காரி. இரவு உணவுக்காக அடுப்படியில் வெந்து கொண்டிருக்கிறாள். ரொம்ப அலுப்பாய் இருந்தாள். மதிய உணவு சமயத்தில் இருந்து அவளுக்கு ஓயாத வேலைகள். வெள்ளைக்கார மொத்தக் குடும்பத்தின் அறைகளையும் அவள் சுத்தம்செய்ய வேண்டியிருந்தது. விடிந்தால் கிறிஸ்துமஸ். அதற்கென வீட்டைத் தயார்செய்ய வேண்டும் அவள். குனிந்து குனிந்து நிமிர்ந்ததில் அவள் முதுகு கடுத்தது. தலை கிறுகிறுத்து மயக்கமாய் இருந்தது. ம். இன்னும் சித்த நேரம். எசமானியும் அவளுடைய ரெண்டு குழந்தைகளும் இராச் சாப்பாடு முடித்து விட்டால் அவளுக்கு விடுதலைதான். வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் …
வாசகர்களுக்கு சொல்வனத்தின் தீபாவளி நல் வாழ்த்துகள்
தீபாவளி நன்மைகளின் எழுச்சியைக் கொண்டாடும் திருவிழா. இந்திய கலாச்சார ஒற்றுமையின் சின்னங்களில் ஒன்று.
வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
குழப்பவாதக் குரங்குகள் கட்டுரை – மறுவினைகள்
வீட்டில் யாருமில்லையென்றால், ரெண்டு பீர் பாட்டிலுடன், ஒரு நல்ல திரைப்படத்தை டி.வி.டியில் பார்த்தபின் அதனைக்க்குறித்து சிந்தனை செய்யும்போது குழப்பவாதக் குரங்குகள் மனதுள் குதித்து ஆர்ப்பரிக்கும் பாருங்கள். அப்போதும் இது போன்ற உணர்வுகள் சாத்தியம்.. குதர்க்கமாகவோ, கிண்டலாகவோ சொல்லவில்லை. சாத்திய இழைகளை சிந்திக்கிறேன். … சிலிக்கான் பள்ளத்தாக்கின் மீது சிலருக்கு ஒரு காட்டம் இருக்கும். எப்படி, மும்பையிலிருந்து அமெரிக்கா செல்ல விசா கிட்டாதவர், ஊராய்யா அது? என்று பேசுவது போல,
கடவுளின் வெண்கல கரமும், நீல நிற ஜீன்ஸ்களும்
ஸ்வெட்லான அலேக்சிவிச் சென்ற காலத்து சோவியத்தில் வளர்ந்தவர். தன்னை ஒரு ‘சோவோக்’ என்றே கருதுகிறார். ”அவருடைய பல்குரல் எழுத்துக்கு, நம் காலத்து வேதனைகளுக்கும் துணிவுக்குமான சின்னமாக” 2015 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் அவருடைய ‘Second Hand Time – Last of the Soviets’ எனும் நூலுக்காக கிடைத்திருக்கிறது. 1991- 2013 வரையிலான காலகட்டங்களில் ஸ்வெட்லானா பல்வேறு சோவியத் மனிதர்களை சந்தித்தபடி இருக்கிறார். இந்நூல் அவர்களுடனான உரையாடல்களின் தொகுப்பு.
மகரந்தம்
அரிஸ்டாட்டலின் காலம்தொட்டு மனிதனின் சிந்தனை இயல்புகளை பதிவு செய்யத் தொடங்கியிருந்தாலும் நாம் விலங்குகளின் இயல்பிலிருந்து எத்தனை தூரம் விலகி இருக்கிறோம் என்பதைக் காட்டும் தொகுப்பாக அது இருந்து வந்திருக்கிறது. சகஜீவனான மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூட சரியான கருவிகள் இல்லாத மனிதனுக்கு விலங்குகளுக்கு பசி, தூக்கம், வலி போன்ற எந்த உணர்வுகளும் கிடையாது என அறிந்துகொள்ள பலகாலம் ஆனது என்பதில் அவ்வளவாக ஆச்சர்யம் இல்லை. வவ்வாலாக ஒருவன் மாறினால் அவனது சிந்தனையில் எவ்விதமான மாற்றங்கள் நடக்கும்? இன்றைய காலத்தில் நாம் விலங்குகளின் அரிதான பல நடத்தைகளைப் பற்றிப் படிக்கிறோம் – கால் உடைந்த ஒட்டகத்தைப் ரெண்டு நாட்கள் பார்த்துக்கொண்ட யானை, பல வருடங்கள் பிரிந்திருந்த மனிதனை அடையாளம் கண்டுகொள்ளும் சிங்கம், டால்ஃபின்களின் தன்னலமற்ற செயல்கள் போன்றவற்றை எளிய அறிவியல் கொண்டு விளக்க முடியுமா?
வசந்தம் : மரங்கள் பறவைகளை நோக்கிப் பறப்பது
பிரமிப்பூட்டும் உருவகங்கள்,வார்த்தைப் பிரயோகங்கள் செலனால் பயன் படுத்தப்பட்டுள்ளன. சான்றாக In rivers என்ற கவிதையில் ’ north of the future” என்ற வார்த்தை மிக வித்தியாசமான உருவகமாக உள்ளது.ஆறும் ,வடக்கும் இடம் சார்ந்த பெயர்ச்சொற்கள்.எதிர்காலம் தற்காலிகமானது. எதிர்காலமென் பது இறந்த நிகழ்காலங்களின் பார்வை என்பதால் இலக்கிய ரீதியில்,கவிதைப் பாணியில் புதிய உருவகங்கள், வடிவங்களைப் பயன்படுத்துவது மிகச்சிறந்த கவிஞனுக்கு கைவருகிறது. கவிதையைப் பொறுத்தவரை புதிய வார்த்தைக ளுக்கான களனாகிறது
கடைவழி
காலுக்குக் கீழே மூத்திரம் வழிந்து சேலையை நனைத்தது. இடுப்பை நிமிர்த்தி நடுங்கும் கைகளால் பழஞ்சீலையை சுருட்டி அடியில் திணித்தாள். நிலைகொள்ளாது கிடுகிடுத்த தலையை நிமிர்த்தி கண்களை இடுக்கியபடி பார்த்தாள். அசைவேதும் தென்படவில்லை. கயிற்றுக் கட்டிலின் ஓரத்தில் கிடந்த குச்சியை தடுமாறும் விரல்களால் பற்றி எடுத்தாள். கீழே கிடந்த ஈயப்போசியைக் குச்சியால் தட்டவேண்டும். சத்தம் கேட்டால் யாராவது எட்டிப் பார்க்கக்கூடும்.
ஸ்விட்சர்லாந்து : ஸ்வர்க்கத்தில் சில வருடங்கள்
ஜெனீவா ஏரியின் நடுவில், ஏரி ரோன் நதியை (Rhone River) சந்திக்கும் இடத்தில் இருக்கிறது ஜெட் தூ (Jet d’Eeu) – தண்ணீரை 200 கி.மீ.வேகத்தில், 140 மீட்டர் உயரத்துக்குப் பீச்சியடிக்கும் பெரிய water jet-மின்ஃபௌண்டெய்ன். வானில் 33000 அடி உயரத்தில் பறக்கையிலும் கீழே தெரியும் இது. ஜெனீவாவின் அதிபிரபலமான சுற்றுலாப்பகுதி. ஏரியின் கரையோரத்தில் பந்துகளை எறிந்து, பந்துகளோடு பந்துகளாக ஓடும் சிறுவர்கள், சிறுமிகள்; கையில் வாக்-மேன், காதில் இயர்ஃபோன், முகத்தில் ஃப்ளேம்-கலர் காகில்ஸ்(goggles) என உல்லாச நடைபயிலும் நங்கைகள்; விதவிதமான மனிதர்கள். `ஏரிக்கரைமேலே போறவளே பெண்மயிலே..!` என்றெல்லாம் மனம் தமிழ் சினிமா பாட்டை எக்கச்சக்கமாக எடுத்துவிடும்!
தடயவியல் விஞ்ஞானம் – பாலிமரேஸ் செயின் ரியாக்ஸன் (PCR)
இதை DNA fingerprint என்கிறார்கள். இந்த இரண்டும் இன்றைய குற்றவியல் வழக்குத் தீர்ப்புகளில் பெரும் மாற்றங்களை உண்டாக்கியவை. இந்தக் கைரேகையை பவுடர் அடித்து அச்செடுத்து வைத்துக்கொண்டால் எவ்வளவு பேருடைய கைரேகையுடனும் எந்தச் சேதாரமும் இன்றி ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஆனால் இந்த டி. என். ஏ அப்படி இல்லை. அங்கே கிடைக்கும் முடி, சிலசமயம் சண்டை அல்லது போராட்டத்தில் நகத்துக்கிடையில் சிக்கும் சதைத் துணுக்கு, இரத்தம், பாலியல் பலாத்காரம் எனில் விந்து போன்ற உடல் திரவங்கள்.
ஸெரெங்க்கெட்டி – நாள் ஐந்து
தான்ஸானியா உலகின் மிக அதிகமான யானைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று. தந்த வேட்டைக்காக, உலகில் அதிக யானைகளை இழந்த நாடு என்றும் சொல்லலாம். 2009 ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 1 லட்சம் யானைகள் இருந்தன. இன்று வெறும் 40000 யானைகளே மிஞ்சியுள்ளன என்கின்றன அரசுப் புள்ளி விவரங்கள். இவை பெரும்பாலும் தான்ஸானியாவின் மற்ற 15 தேசியப் பூங்காக்களிலும், வனங்களிலும் அதிக வசிக்கின்றன. சராசரியாக, ஒரு நாளைக்கு 30 யானைகள் தான்ஸானியாவில் தந்தத்துக்காகக் கொல்லப்பட்டிருகின்றன.