Category: இதழ்-16
2009-ன் சிறந்த வானியல் புகைப்படங்கள்
2009-ன் சிறந்த 10 வானியல் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்
சொக்கப்பனை
வருடாவருடம் சொக்கப்பனையின் போது ஒரு பட்டரை கொளுத்திவிடுவார்கள் என்றே நான் வெகுகாலம் நம்பி வந்தேன். எனது சந்தேகத்தை குஞ்சுவும் ஊர்ஜிதம் செய்தான். ‘ஒனக்கு தெரியாதா? அதுக்குன்னே கோயில்ல இருந்து பட்டர்களை வளக்காங்க’ என்று கூசாமல் சொல்லியிருந்தான். விவரம் தெரிந்த வயதில் கார்த்திகை தீபம் முடிந்த ஓரிரு நாளில் நானும், குஞ்சுவும் போத்தி ஹோட்டலில் ரவா தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கணேச பட்டர் வந்து எங்களருகில் உட்கார்ந்து பன்னீர் பக்கோடா ஆர்டர் பண்ணி சாப்பிட்டார். அந்த வருடம் அவர்தான் சொக்கப்பனை கொளுத்தியவர். நான் மேஜைக்கடியில் அவர் கால்களையே பார்த்தேன்.
முட்டாள்களின் அறைகள்
புலம்புவதும், பிதற்றுவதும், அழுவதும், உளறுவதும், சத்தமாகச் சிரிப்பதும், குழந்தைத்தனமாக இருப்பதும் என இவற்றையெல்லாம் சில சமயங்களில் அறிவாளிகள் செய்ய தயங்குவார்கள். அது அவர்களின் பிம்பத்தின் மீது எச்சில் உமிழ்ந்துவிடும் எனப் பயந்து சாகிறார்கள். என் தலைமுறையில் மறுக்கப்பட்ட எத்துணையோ புலம்பல்களும், அழுக்குரல்களும், பிதற்றல்களும், சுயத்தை இழந்த சிரிப்பொலிகளும் பாதாளத்தின் ஆழத்தில் யாரும் கண்டறிய முடியாத இருளில் ஒளித்து வைக்கப்பட்டிருகின்றன.
மகரந்தம்
அவதார் படத்தின் பிரம்மாண்டத்தில், பிக்ஸல் பிக்ஸலாக வடிவமைக்கப்பட்ட அதன் கிராபிக் அசாத்தியத்தில் மயங்கி கிறங்கி இருப்பவர்களுக்கு ஒரு செய்தி. அத்திரைப்படத்தின் வேற்றுலக சிருஷ்டியில் முக்கிய பங்கு வகித்தவர் ஜோடி கோல்ட் (Jodie) எனும் தாவரவியலாளர். வேற்றுக்கிரகமொன்றை முதன்முதலாக ஆராயும் ஒரு தாவரவியலாளர் எவ்வாறு நடந்து கொள்வார் எனும் உணர்ச்சிகளை இவரே அத்திரைப்பாத்திரங்களுக்கு சொல்லி கொடுத்தார்.
மணம்
பீட்டரின் அப்பா யார் என்று தெரியாது. ஆனால் லூர்தின் கணவனைத்தான் அப்பன் என்று பீட்டர் சொன்னான். லூர்தின் கணவன் மாற்றாந்தந்தை என்றும் கிடையாது. அவன் ஊர்மேய்பவனும் கிடையாது. லாரியில் கிளீனர் வேலை. முன்பு லாரி டிரைவராக இருந்தவன். கிளீனர் வேலை என்பது கொஞ்சம் தொந்தரவு இல்லாத வேலை அவனுக்கு. லாரி ஓட்டும் டென்ஷ்ன் இல்லை. டிரைவர் தூங்காமல் இருக்க பேச வயசானவனாய் அருகே கிளீனர் வேலை ஸ்தானம்.
வீட்டுக்கு வடக்காய் பனிக்குவியல்கள்
இரவெல்லாம் கடல் எழுந்து விழுகிறது, நிலவு
இணைவற்ற சுவர்க்கங்களின் ஊடாய் தனியாக செல்லும்.
ஷூவின் பெருவிரல் பகுதி தூசில்
மையங்கொண்டு சுழலும் …
மாற்றலும், வீடு பேறும்
என் மாமனார் கட்டிய வீடு ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது. அதில் அவரது பெயர்ப் பலகையோ அல்லது வீட்டினுள் அவரது புகைப் படமோ இராது. அவரது மகள், மருமகன்(நான்), பேத்தியின் புகைப்படங்களே சுவர்களில் இருக்கும். வீட்டின் கீழ்ப்பகுதியில் குடியிருப்பவர் பொறுப்பில்தான் காம்பவுண்ட் சாவி, தண்ணீர் மோட்டார் ஸ்விட்ச் எல்லாம் இருக்கும். அவர் மரணத்தின் போது பத்து வருடங்களுக்கு முன் அங்கு குடியிருந்தவர் வந்து, சொந்தத் தகப்பனைப் பறிகொடுத்த பிள்ளை போல, கதறி அழுத போது நாங்கள் எல்லோரும் கலங்கிப் போனோம்.
மருந்து இருந்தால் சொல்லுங்கள்!
விஞ்ஞானிகள் ஓய்வாக இருக்கும்போது ஒரு கையால் தாடியையும் மறு கையால் மனச்சாட்சியையும் கோதிக்கொண்டு யோசிக்க வேண்டும். புகையிலை, ஆஸ்பெஸ்டாஸ் போன்றவைகளால் கான்சர் வருகிறது என்ற உண்மை விஞ்ஞானிகளுக்கு விரைவிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் அது பரவலாக வெளியே வருவதற்குப் பல பத்தாண்டுகள் ஆயிற்றே, ஏன் ? அரசல் புரசலாக உண்மையைப் பேச முயன்றவர்களையும் ‘பூ பூ !!’ என்று கத்தி வாயடைத்து உட்கார்த்தி வைத்துவிட்டார்களே, அதுதான் ஏன் ? காரணம், இவற்றைத் தயாரிக்கும் மெகா கம்பெனிகள். அவற்றின் கிகா வருமானம் !
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா?
தொல்காப்பிய உரையாசிரியர்கள், தங்களின் உரைகளில் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டைப் புகுத்திவிட்டார்கள் என்றால் தொல்காப்பியத்தில் அக்கருத்துகள் இல்லை என்று பொருள். ஆனால், தொல்காப்பியப் பதிப்புகள் அனைத்திலுமே அக்கருத்துகள் காணக் கிடைக்கின்றன.
பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்
பொட்டுக் கட்டுதல், தலித் என்று சொன்ன மாத்திரத்திலேயே அச் சொற்கள்
நம்மில் எழுப்பும் பிம்பம், பின் ஒரு செடல் அச்சமூகத்தின் கட்டுப்பாட்டை எதிர்த்து தானே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வாள் என்னும் சாத்தியங்கள் பற்றியெல்லாம் நமக்கு முன் தீர்மானமான சித்திரங்கள் உண்டு. அதை உடைக்கிறது இமையத்தின் செடல் நாவல். அதை இமையம் குரல் எழுப்பாமல், நாடகமாக்காமல், அடங்கிய குரலில், ஆவணப் படுத்தப்பட்ட ஒரு சமூக நிகழ்வு
என்று சொல்லத்தக்க நம்பகத் தன்மை கொண்ட, ஒரு கலைஞனுக்கே சாத்தியமாகும் ஒதுங்கி நின்று சொல்லும் குரல் இது. தலித் அரசியலும் சொல்ல விரும்பாத, சொல்வதைத் தவிர்க்கும் குரல் இது.
நம்பி தெரு, நம்பிக்கை விநாயகர்
நம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார். அந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.
பேராசிரியர்.ரிஸ்க்(Risk)
நம் பிரக்ஞையின் எச்சரிக்கை உணர்விற்கும் அபாயத்தைத் தீண்டிப் பார்க்கும் ஆவலுக்குமிடையே ஆடும் ஊசலாட்டத்தைச் சொல்லில் வடிப்பது கடினம்தான். ஆனால் அதீத எச்சரிக்கை உணர்வு ஒரு கட்டத்தில் நமக்கு மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் என்கிறார் இந்தப் பேராசிரியர். இவர் பெயர், பேராசிரியர்.ரிஸ்க்(Risk)
மூன்று கனவுகள்
”வெளிய நல்ல மழைப்பா. குளிர் வெடவெடங்குது…” வழக்கம்போல ஒராள் பருவநிலை பத்திப்பேச மற்றவர்கள் கண் தன்னைப்போல ஜன்னல்பக்கம். கிரனோவ் தலையை நிமிர்த்தியபோது கழுத்துச் சுருக்கத்தில் நரம்பு விண்ணென்று புடைத்தது நீலமாய். அப்படியே தலையணையில் பின் சரிந்தார். மருந்தை சொட்டு எண்ணி தம்ளரில் விட்டபோது அவள் உதடுகளை சேஷ்டை செய்தாள். அடர்த்தியான கருங் கூந்தலில் மழை முத்துக்கள். கண்ணின் கீழே நீலமாய் என்ன அழகான நிழல்கள்!
பண்பாட்டைப் பேசுதல் – ஒரு பார்வை
கோயில் பற்றி பேசுவது எப்போதும் சுவாரசியமான விஷயம். கோயில், வெறும் வழிபாட்டுத் தலம் அல்ல. ஒரு சமூகத்தின் அரசியல்,நிர்வாகம், வரலாறு, கலை, பண்பாடு ஆகியவற்றை சுமந்து நிற்கும் காலப் பெட்டகம். கோயிலும், கோயிலைச் சுற்றிய மாட வீதிகளும் அதன் கட்டமைப்புகளும் சமூகத்தில் ஆன்மீகத்திற்கு இருந்த உன்னத நிலையை பளிச்சென்று சொல்லிவிடுகின்றன. இந்து சமூகத்தை வேரோடு அழிப்பதற்கான செயல்திட்டம், அதிகார பீடங்களாக இருக்கும் கோயில்களை அழிப்பதில் இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது கைபர் கணவாயில் உள்நுழைவதிலேயே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது.
மண்விழுதில் நுண்ணுயிரிகள்
ஆனால் ஒரு தாவரத்துடன் எந்த இனவகையிலும் பொருந்தாத ஒரு பூஞ்சையை, ஒரு கிருமியை அதன் பாரம்பர்ய குணக்கூறை மலடாக்கிவிட்டு அதைச் செலுத்துவது மரபியல் ஒழுக்கமா? இப்படி ஒரு ஒழுக்கங்கெட்ட விதைதான் மரபணு மாற்ற விதை. தமிழ்நாட்டில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், மாலிக்யுலர் பயாலஜி கற்றவர் – பிட்டி கத்தரிக்காய் விஷமில்லை என்று கூறியதற்கு சந்திராயன் மயில்சாமி அண்ணாத்துறை ஒத்து ஊதியுள்ளார். மயில் சாமிக்குச் சந்திரனைப் பற்றித் தெரிந்த அளவு, பூமியைப் பற்றி எதுவும் தெரியாது என்று புரிகிறது. பூமியைப் பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும்? சந்திரனில் தங்க இடம் ஒதுக்கிவிட்டாரோ!
திராவிட-ஹரப்பன் தொடர்பு? ஆய்வுமுறைச் சிக்கல்கள்
சிந்து நாகரிகம் மீதான திராவிடர்களின் உரிமை குறித்த கருத்துக்கள், ஆரிய படையெடுப்புக் கோட்பாடு குறித்த காலனிய ஆராய்ச்சிகளின் எஞ்சிய மிச்சங்களே. ஆரிய படையெடுப்பு குறித்த ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக விளங்குவதால் இன்று வரை இவை உயிர்ப்புடன் உள்ளது. ஒரு சில சித்தாந்தங்களின் துணையுடன் இந்த ஆராய்ச்சிகள் அசைக்க முடியாத தூணைப் போல் நிறுவப்பட்டுள்ளது. “ஆரிய இனம்” அல்லது “திராவிட இனம்” என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை. எப்போதும், அந்த கருத்துருக்களுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் அளிக்க முயலும் யாரும், அத்தகைய ஒன்று என்றுமே இருந்ததில்லை என்பதை வெகு விரைவில் கண்டுகொள்கிறார்கள்.
டிஜிட்டல் இசைப் புரட்சியின் தாக்கம்
புதிய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் ஒரு ஒலி பொறியாளராக இருந்ததை பெருமையாக சொல்லிக் கொண்டார். இன்று ஒலிச் சேர்க்கை மற்றும் மின்னணு ஒலி பற்றிய அறிவு, இசை அறிவுக்கேற்ற அளவு முக்கியமாகிவிட்டது. ஒரு இசையமைப்பாளர் இசை அறிவைப்பற்றி கவலைப்படும் முன் மின்னணு ஒலி அறிவுத் திறனாலேயே அளவிடப்படுகிறார். ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் பாதி ஒலி பொறியாளர்களாகவும் பணி செய்யும் திறனே இதற்கு காரணம்.