உலக பலவான்களான வளர்ந்த நாடுகள் , முன்னெப்போதுமில்லாத வன்முறையையும் அழிவையும் உருவாக்கி இருப்பதாக இந்தக் கட்டுரை ஆசிரியர் குற்றம் சாட்டுகிறார். இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. கடந்த நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் பெரிய ஆக்கிரமிப்புகள் மற்றும் கலவரங்களுக்கு மத்தியில் ஓரளவு தனது சுயத்தைத் தக்கவைத்து பிரிவினைவாதிகள் ஊடுருவ முடியாத நிலமாகவே சிரியா இருந்து வந்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஆதிக்க சக்திக்கு பலப்பரிட்சைக் களமாக இருந்துவரும் சிரியா உள்நாட்டு கலவரங்களால 2011 ஆம் ஆண்டு முதல் பேரழிவை சந்தித்துவருகிறது.
Category: இதழ்-159
முகத்தை வரைவது எப்படி?
எத்தியோப்பியாவின் பழங்குடியினர்
தி கார்டியன் புகைப்படத் தொகுப்பு: எத்தியோப்பிய நாட்டின் பழங்குடியினர் பற்றிய குறிப்புகளும் படங்களும்
ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்
இன்னாரை நேரில் கண்டு உரையாடப் போகிறோம் என்றால், அவர்களின் எழுத்தில் மூழ்கி அமிழ்தலைத் துவங்குவேன். ஒருவரைக் குறித்து நான் ஆராய ஆரம்பித்தால் ஒரு வாரத்திற்குள் அவரின் பெரும்பாலான புத்தகங்களையும், இணையத்தில் எழுதிக் குவித்ததையும், விமர்சனங்களையும், வம்புகளையும் படித்து முடித்துவிடுவேன். சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என்று எழுதிக் குவித்த வஸ்தாதுகளைக் கூட இந்த சட்டகத்தினுள் அடக்கி, ஒரு பருந்துப் பார்வை பார்த்து, அந்த ஒரு துளி அரிசியில் இருந்து முழு சோறும் எப்படி வெந்து இருக்கும் என்பதை உணர்ந்தாவது விடுவேன். எல்லோருக்கும் ‘கற்றது கைம்மண்ணளவு’ என்று உணரும் நேரம் வரும். அது அரவிந்தன் நீலகண்டன் அமெரிக்கா வருகிறார் என்றவுடன், அவரின் எல்லா எழுத்துக்களையும் வாசிக்கவும் தேடவும் அவர் கொடுக்கும் மேலதிக விபரங்களுக்குக்கான குறிப்புகளின் …
கென்யா – குறுங்குறிப்புகள் – 2
பகலில் எங்கு சென்றாலும், மாலை ஏழு மணிக்குள் வீடு திரும்பி விடுவது அல்லது தாமதமானால் நண்பர்கள் வீட்டில் தங்கிவிடுவது வழக்கம்.எப்போதும் பயணிக்கும்போதோ அல்லது வீட்டிலோ கொஞ்சம் பணம் வைத்திருப்பது நல்லது; திருடர்களோ, வழிப்பறியோ – நாமாக பணத்தைக் கொடுத்துவிட்டால் நல்லது (உயிருக்கு உத்தரவாதம்!); பணமில்லையென்றால் கோபமாகி விடுவார்கள் (பெரும்பாலும் இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடுபவர்கள் போதைக்கு அடிமையானவர்கள்).
விவாதங்களின் அரசியல் ; இரண்டாம் பட்சமான தகுதியும் தரமும்
முப்பது வருடங்களுக்கும் மேலாக அரசியலில் தன் கணவருக்கு பக்கபலமாய் இருந்த அனுபவம், பில் கிளிண்ட்டனின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு நேரடி அரசியலில் இறங்கி செனட்டராக, வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றிய நிர்வாக அனுபவம் பெற்றவர். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளர் என்கிற கூடுதல் சிறப்புத்தகுதியுடையவர் என்பதால் அவரை சரியான வகையில் எதிர்கொள்ளும் ஒரு வலுவான வேட்பாளரை தாங்கள் தேர்ந்தெடுக்கவில்லையோ என்கிற ஏமாற்றமும், ஆதங்கமும் தற்போது குடியரசு கட்சியினரிடையே வெளிப்படையாகவே எதிரொலிக்கத் துவங்கிய சூழலில் ஹிலரி-ட்ரம்ப் இடையேயான இரண்டாவது விவாதம் செயிண்ட் லூயிஸில் நடந்தேறியது.
கறங்குமணி நெடுந்தேர் வரும்!
கருப்பொருளும் மயங்கி அமைய இயலும் என்பர். அவ்வத்திணைகளுக்குரிய கருப்பொருள்கள் அந்தந்தத் திணைகளுக்கே உரியதாக அமையின் சிறப்பாக இருக்கும்; அவ்வாறு அமையாவிடினும், அவை அமைந்த நிலத்திற்குரியனவாகவே கருதப்பட வேண்டும் என்பது நியதி. ஒரு நிலத்திற்கே உரியதான பூக்கள் மற்ற நிலங்களிலும் பூக்க வாய்ப்புண்டு. நெய்தற்பூ மருத நிலத்திலும் பூக்கலாம்; குறிஞ்சிக்குரிய பறவை வேறுநிலத்திலும் பறக்கலாம். இவ்வாறு வரும்பொழுது அந்தந்தப் பூவையும் பறவையையும் அவை உள்ள வேறுநிலங்களுடன் பொருத்திப் பொருள்உணர்ந்து கொள்ளவேண்டும். காலமும் அவ்வாறே; குறிஞ்சி நிலப்பொழுதான யாமம் என்னும் சிறு பொழுதும் முல்லை நிலத்தின் பெரும் பொழுதான கார்காலமும் மற்ற நிலங்களிலும் வரும் வாய்ப்புகள் உள்ளன! இது தான் திணை மயக்கம் எனப்படும்.
அகதிக் கடத்தல்
மேற்காசியாவிலும் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள நாடுகளில் இருந்தும் யூரோப்பில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே இருக்கிறது என்றும் அதன் விளைவுகளைப் பற்றியும் சொல்வனத்தின் முந்தைய இதழ்களில் படித்திருக்கிறோம். யூரோப் வளமிக்க வாழ்க்கையை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டம் கூட்டமாக அகதிகளாக இம்மக்கள் குடியேறுகின்றனர். பிரிட்டன் போன்ற சில நாடுகள் யூரோப்பிய யூனியனிலிருந்து தனியாக செல்லும் நிலைமைக்கும் இந்த அகதிகள் பிரச்சனை பெரும் காரணமாக இருந்ததைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எல்லாவற்றையும் காசாக்கி ஆதாயம் தேடும் சிலர் இந்த ‘வாய்ப்பையும்’ பயன்படுத்தி இந்த நாடோடிகளுக்கு உதவுகின்றனர். போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் போன்று பெரிய அளவில் வளர்ந்து வரும்…
ஸெரங்க்கெட்டி நான்காம் நாள்
வண்டி, மீண்டும் சாலையேறி, தட தட தட தட.. பத்து நிமிடங்கள் கழித்து, தூரத்தில் ஒரு ஸஃபாரி வாகனம் நின்று கொண்டிருந்தது.. அதன் மேற்கூரையைத் திறந்து ஒரு சுற்றுலாப்பயணி, தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்தார்.. நாங்களும் நிறுத்தி, அண்ணல் நோக்கிய திசையை நோக்கினோம். தொலைவில், அக்கேசியா மரங்களின் குடுமியைக் கொய்து கொண்டிருந்தன சில ஒட்டகச்சிவிங்கிகள்.. முதல் முறை பார்க்கும் போது, ஒரு காட்சிப் பிழையெனத் தோன்றும்.. மரத்தை விட உயரமான விலங்கு
ரோஸ்லாண்ட்
என்னருகே அமர்ந்திருக்கும், வியட்னாமில் பணியாற்றிய படைத்துறை வீரரொருவர் அவரது கதையை என்னிடம் கூறத் தொடங்கினார். கதை விவரணையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவருக்கு, தலையை கைகளில் பற்றியபடி முகத்தை என் கவட்டையில் இருத்துவதற்கான ஒரு அத்தியாவசியத் தேவை எழுந்தது. சாராய நெடியுடன் அவரது சீரான மூச்சுக்காற்றை என் ஜீன்ஸினுள் வெப்பமாய் உணர முடிந்தது.. அதன்பின் அவர் கதையைத் தொடராமல் அசையாதிருந்தார். என் பொச்செலும்பின் மீது அவர் கனமாக மூச்சிருத்துவதை நான் தடுக்கவில்லை. என் அடிமுதுகை இறுக்கமாக பற்றினார். அது ஒரு மௌனமான மன்றாடலே.
காவேரியும் இல்லத்தரசியும்
என் தேசத்தில் எனது பக்கத்து மாநிலத்தில் நான் தைரியமாக நடமாட முடியவில்லை என்பது எத்தனை துக்ககரமான விஷயம்! என் தாய்மொழியை நான் இங்கு பேசுவதற்கு யோசிக்க வேண்டுமா? எனது பேரன் பேத்திகளுக்கு காவிரி என்பது வெறும் வரைபடத்தில் மட்டுமே காண்பிக்கப்பட வேண்டுமா? தென்பண்ணை, பாலாறு போல இந்த ஜீவநதியும் என் மாநிலத்தில் காணாமல் போய்விடுமோ?
வியாழன் இரவு
பிலிப்பனோக்கார கார் டிரைவர் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். காரில் நெருக்கி அடித்து உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு பிரேக் அடிச்சா ஆளுக்காளு முத்தம் கொடுத்துக்கவேண்டியதுதான் என்றான் ஷிராஸ். அய்ய என்றான் சந்தோஷ் மேனன். சந்தோஷ் மேனனின் வழுக்கைத் தலை அவனுக்கு நாற்பது வயதிருக்கும் என்று காட்டினாலும் அவனுக்கு 30 வயதுதான் ஆகி இருந்தது. ஷிராஸ் எப்போதும் அவனை கஸண்டி என்றே அழைப்பான். அவனை வெறுப்பேற்றுவதற்கென்றே தன் தலைமுன்பு வந்து விழும் முடியை அடிக்கடி கோதிக்கொண்டான் சுரேஷ். ‘பின்னே… இவன் ரஜினியல்லே’ என்றான் சந்தோஷ் மேனன். அதுவரை அமைதியாக அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த பிஜூ, “அது கொள்ளாம்” என்றான். சுரேஷ், பிஜுவின் தொப்பையைத் தட்டி, “தொப்பை போட்ட ஃபார்ட்டி கிழவன்ஸ்… பொறாமை எதுக்கு? ஐ’ம் தி ஒன்லி எலிஜிபில் பேச்சிலர்” என்றான்.
அத்திப் பழமும் கூட்டுவாழ்வும்
இந்தத் தாவரவியல் மிகவும் விந்தையானது. நிறைய முரண்களை உடையது. ஸ்ட்ராபெர்ரி என்று நாம் சாப்பிடும் பழம், பெர்ரி வகையைச் சேர்ந்தது அல்ல. ஆனால் வாழைப்பழம் பெர்ரி வகையைச் சேர்ந்தது. சீதாப்பழம் என்பது ஒரே பழம் அல்ல. அது ஒரு கூட்டுக்கனி. Compound fruit என்பார்கள். சீதாப்பழங்கள் என்று எழுதவேண்டுமோ. தெரியவில்லை. கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் அதிகமாகச் சாப்பிடப்படும் அத்திப்பழம் மற்றப் பழங்களைப்போல் பூப்பூத்து சூல்கொண்டு பழமாவதில்லை. என் வழி தனி வழி என்று அத்தி மரம் தனி வழி வைத்திருக்கிறது.
பேராசைக்காரியின் புலம்பல்கள்
உறங்காத இரவுகளில் இவன் தேடுவது
தன்னை மட்டும் காணும்
மோனோலிசா ஏந்தி வரும்
கோப்பை தேநீர் ஒன்றை மட்டுமே…
மரி
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரையும் எதுவும் கேட்காமல் நானே “ எட்டு டீ” என்று சொல்லி விட்டு சற்றுத் தள்ளி நின்று சோம்பல் முறித்துக் கொண்டிருந்த பார்த்தியருகே போய் நின்றேன். எதுவும் பேசிக் கொள்ளவில்லை இருவரும். கையைக் கட்டிக் கொண்டு இருளை வெறிக்கத் துவங்கினான். மெல்ல அவன் தோளில் கை போட்டேன். அமைதியாய் இருந்தான். நெடுஞ்சாலையில் விரையும் வாகனங்களின் ராட்சச சப்தத்தையும் மீறி அங்கே தொடங்கி சாலையிலிருந்து விலகி நீண்டிருந்த புதர்க்காட்டிலிருந்து ராப்பூச்சிகளின் சப்தம் கனமாய் ஒலித்தபடியிருந்தது. காற்றில் லேசான மூத்திர வீச்சம் கலந்திருந்தது.
தகவல் விஞ்ஞானம் – ஒரு அறிமுகம் – தொழில் தேவைகள் – பகுதி 2
தரவு விஞ்ஞானத்தில் அடித்தளம் ஆராய்ச்சிக்கேற்ற தரவு. அதென்ன ஆராய்ச்சிக்கேற்ற தரவு? அதாவது முன் வைக்கும் புனைக் கொள்கையை நிரூபிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரவு தேவை. நம்முடைய LED சர விளக்குகள் உதாரணத்தில், பல மாத/வருட, பல மையங்களின் வியாபார தரவு தேவை – ஆனால், LED சர விளக்குகள் சார்ந்த தரவாக மட்டுமே இருக்க வேண்டும். தீப்பெட்டி வியாபாரத் தரவில் நமக்கு பயனேதும் இல்லை. தரவுதளங்களில் எல்லா பொருட்களின் விற்பனை தரவும் இருக்கும். அதிலிருந்து நமக்கு வேண்டிய LED சர விளக்குகள் தரவை மட்டும் திரட்ட வேண்டும்.
உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா
சோமாலி கரென்சிக்கு அப்போதும் அதிக மதிப்பிருந்ததில்லை. ஒரு அமெரிக்க டாலர் வாங்க சுமார் 180-200 ஷில்லிங்குள் தேவை. கடைவீதியில் கட்டுக்கட்டாக சோமாலி ஷில்லிங் நோட்டுகள் பரிமாற்றம் நிகழ்வதைப் பார்த்து ஆரம்பத்தில் மிரண்டிருக்கிறேன். ஒருமுறை அரபுக்கடையில் நிடோ டின் வாங்கிய நண்பர் கோவிந்த் குமார் 20 ஷில்லிங் கட்டுகளில் மூன்றைத் தூக்கி வீசுவதைக்கண்டு பதறினேன். `என்னது! நோட்டை எண்ணாம அப்படியேக் கட்டாத் தர்றீங்களே! ` என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்: `இங்கே கெடைக்கிற நோட்டு இருக்கே! நோட்டா இது! ஒரே அழுக்கு, புழுதி. எண்ண ஆரம்பிச்சா தும்மல் வரும்! நான் எண்றதில்ல. கட்டைத் தூக்கிக் கொடுத்திடுவேன். வேணும்னா அவன் எண்ணிக்கட்டும்! அதே மாதிரி கட்டா மீதி கொடுத்தா, எண்ணாம அப்படியே வாங்கிப் பையிலே வச்சிக்குவேன். அடுத்த கடையில தூக்கிக் கொடுக்கவேண்டியதுதானே!` என்றார். நல்ல நாடு இது! எனக்குன்னு செல்க்ட் பண்ணி அனுப்பியிருக்கு இந்திய கவர்மெண்ட்டு! – என்று நினைத்துக்கொண்டேன்.
ரைனர் மரியா ரில்க : போய்க் கொண்டேயிரு, எந்தவுணர்வும் முடிவல்ல!
பாரீஸ் சென்ற போது அவருக்கு அகஸ்ட் ரோடான் என்ற சிற்பியோடு மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.அவருடைய செயலாளராக இருந்து ரோடானின் சிற்பங்கள் குறித்து கட்டுரைகள் எழுதினார். ரோடானின் மாணவியான கிளாரா வெஸ்ட்ஹாஃபை மணந்தார். ரில்கவின் திறமையை உணர்ந்த ரோடான் கவிதையில் ’புறநிலை நோக்கத்தின் ” அவசியத்தை அவருக்கு விளக்கியதை அடுத்து ரில்கவின் கவிதைநடையும் போக்கும் பெருமளவில் மாறின. அந்தத் தாக்கம் New Poems என்ற புத்தகத்தை எழுதப் பின்புலமானது. பாரீஸில் இருந்தபோது 1905 ல்The Book of Hours,1907ல் New Poems என்ற இரண்டு தொகுப்புகளும் வெளிவந்தன