வெண்முரசு வரிசையில் – பன்னிரு படைக்களம்: ஒரு பார்வை

வெண்முரசின் பலங்களான அழகிய மொழி நடை, உவகையூட்டும் புதிய சொல்லாக்கங்கள் இந்த நாவலிலும் ஏராளமாக உண்டு. ஜெயமோகனின் பாரத நாவல்கள் எல்லாவற்றுக்குமே பொருந்தப்போகும் அவற்றை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு முந்தைய கட்டுரைகளில் நிறையவே சொல்லியுமிருக்கிறேன். இன்றும் அவை ஒவ்வொரு நாளும் மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. எனவே, தற்போதைக்கு அதைப் பேசாமல், நாவலின் பொருள் குறித்தும் அமைப்பு குறித்தும் பேசுவது அவசியமாகிறது.

கென்யாவில் பன்னாட்டு மலர் வர்த்தகக் கண்காட்சி- 2016

“நீங்க டச்சு கத்துக்கணும் வெங்கி. இத்தனை வருஷமா இந்த பூ துறையில இருந்துகிட்டு, டச்சு இன்னும் கத்துக்கலைனா கொஞ்சம் வெட்கப்படணும்; தெரியாம இருக்கிறது தப்பில்ல; கத்துக்கிட்டா இந்த துறையிலிருக்கும் உங்களுக்கு நல்லது; உங்க உலகம் பெரிசாயிடும். நட்பு வட்டம், வாய்ப்புகள், துறைசார் அறிவு அதிகமாகும்” – ஒரு வருடம் முன்பு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது செந்தில் அண்ணா சொன்னபோதுதான் உறைத்தது. ஆமாம், இத்துறையில் இருபது வருடங்கள் அனுபவங்கள் ஆகியும் ஏன் எனக்கு இது தோணவேயில்லை என்று யோசித்தேன்.

ஸெரங்க்கெட்டியில் மூன்று நாட்கள்

தொலைவிலேயே குன்றுகளென மத்தகங்கள் தென்பட்டன. அந்த இடத்தில் நிலப்பரப்பு கொஞ்சம் சரிந்து, ஒரு நீர்நிலை உருவாகியிருந்தது. 20-25 யானைகள் இருக்கலாம். சாலையில் வாகனம் மெல்லச் சென்றது. சாலையும், அச்சரிவில் இறங்கியது. அந்த நீர்நிலையைத் தாண்டிச் செல்ல ஒரு சிறு பாலம்.. வண்டி மெல்ல இறங்கத் துவங்கியதும், நெடுநெடுவென வளர்ந்திருந்த புல்லின் பின்னால் ஒரு தாய் யானையும் குட்டியும் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு வித்தியாசம் – இங்கே பெண்யானைக்குக் கொம்பிருந்தது. கொஞ்சம் சிறிது. வண்டியை நிறுத்தினார் ஜெர்ரி.. புஸ் புஸ் என மூச்சின் ஒலி மிகத் தெளிவாகக் கேட்டது.. குட்டியானை சமத்துச் செல்லமாக சிறு புட்களை மேய்ந்து கொண்டிருந்தது.. இரண்டும் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை.

புதியதோர் வானொலி உலகம்

மோடி அரசில், ஆல் இந்திய ரேடியோ , டி.ஆர்.எம் தொழில்நுட்பத்தை, மாறி வரும் சமுதாயத்தின் தேவையாகக் கண்டு, தீவிரமாக அதனை சோதனை செய்து, செயல்படுத்த முயன்று வருகிறது. 2017ல் , டி.ஆர்.எம் தொழில் நுட்பத்தை ஆல் இந்திய ரேடியோ முழுதுமாக செயல்படுத்தும். தற்போது பழக்கத்தில் இருக்கும் அனலாக் முறை ஒலிபரப்பும் தொடர்ந்து செயல்படும். சென்னை, தில்லி வானொலி நிலையங்கள், டி.ஆர்.எம் சேவைக்கெனவே குறிப்பிட்ட அலைவரிசைகளை வைத்திருக்கின்றன. இவை தவிர 23 வானொலி நிலையங்களில் டி.ஆர்.எம் சேவை, சோதனைக் கட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.

தகவல் விஞ்ஞானம் – ஒரு அறிமுகம்

மனித சமூகம் தோன்றியது முதல் 1990 –வரை உருவாக்கிய டேடாவைக் காட்டிலும், இரு மடங்கு 1990-களில் மட்டுமே மனித நடவடிக்கைகள் உருவாக்கியது. அதாவது பத்தாண்டுகளில், இரு மடங்கான டேடா, இன்று 5 ஆண்டுகளில் இரு மடங்கு என்று மாறி, கூடிய விரைவில் இரண்டு ஆண்டுகளில் இரு மடங்காகும் வாய்ப்புள்ளது. வழக்கமான, கணினித் துறைப் பாட்டுத்தானே இது, இதிலென்ன புதுசு என்று தோன்றலாம். திடீரென்று உருவாகிய டேடா சுனாமியை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் கேள்வி. இந்தப் பிரச்னையைக் கையாள்வதில் நிபுணர்கள் டேடா விஞ்ஞானிகள். உடனே பத்து நாள் தாடியுடன், சோதனைக் குழாயில் நீல நிற திரவத்துடன் இவர்கள் நடமாடுபவர்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம். நம்மைப் போல, வழக்கமாக தினமும் சவரம் செய்து கொண்டு, ஜீன்ஸ் அணிந்த ஆசாமிகள் இவர்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால், இவர்களின் பங்களிப்பு , மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது. அதாவது, ஏராளமான டேடாவிலிருந்து, ஒரு வியாபாரத்திற்கோ, அல்லது விஞ்ஞான ஆராய்ச்சிக்கோ பயனுள்ள விஷயத்தைக் கண்டெடுப்பது.

சவுதி அரேபியாவின் ஏற்றுமதி

கீழ்க்கண்ட காரணங்களினால் சவூதி அரேபியாவில் சதுரங்க ஆட்டத்திற்கு தடை. 1. சதுரங்க ராணி பர்கா போட்டு முகத்தை மறைத்துக் கொள்வதில்லை என்பதால். 2. சதுரங்க ராணி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதால். 3. ராஜாவை விட ராணிக்கு அதிக முக்கியத்துவம் என்பதால். 4. ஆணின் துணையின்றி தன்னந்தனியாக சென்று எதிரியை வீழ்த்தமுடியும் என்பதால். 5. ராஜாவிற்கு ஒரே ஒரு ராணிதான் இருக்கிறார் என்பதால்!

மகரந்தம்

சிதார் மேதை ரவிஷங்கரின் மற்றொரு ஆபரா வெளியீடு அடுத்த வருடம் லெஸ்டர் நகரில் அரங்கேற்றமாகும் எனும் விவரத்தைக் குறிப்பிடும் இந்தக் கட்டுரை அவரது முதல் ஆபரா நிகழ்வு 2012 ஆம் வருடம் ராயல் ஃபெஸ்டிவல் ஹால் என்று வழங்கப்படும் லண்டனின் இடதுகரை வளாகத்தில் நிகழ்ந்ததைக் குறிப்பிடத் தவறியிருக்கிறது. அந்த நிகழ்வை நாம் சொல்வனத்திலும் கட்டுரையாக வெளியிட்டோம்.

குளக்கரை

உலக புரட்சி இயக்கம் எனும் கனவை விதைத்து உருவாகிய அமைப்புகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளை ஆராய்கிறது. பெரும் புரட்சிகள் அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் அழிவுப் பாதைக்குக் கொண்டு சேர்க்கும் என்பதை உணர்ந்தாலும் விட்டில் பூச்சிகளாக புரட்சி இயக்கங்களுக்கு உண்டான மயக்கங்கள் இன்றளவும் சாத்தியம் ஆகின்றன. இதை தோற்ற மயக்கம் எனச் சொல்வதா அல்லது நமது தலைவிதி எனக்கொள்வதா? ஆனாலும், அழிவுக்குச் செல்லும் பாதை எப்படி தேன் தடவிய வார்த்தைகளாலும் மாய்மாலங்களாலும் போடப்பட்டிருக்கிறது என்பதைப் படிக்கும்போது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்ளும் சித்திரம் படிகிறது

ஹிலரி Vs ட்ரம்ப், விவாதங்களின் அரசியல் , ஒரு பார்வை

இது போன்ற விவாதங்களில் முதலில் கவனிக்கப்படும் அம்சம் போட்டியாளர்கள் தங்களை எப்படி வெளிக்காட்டிக் கொள்கின்றனர் அவர்களின் உடல்மொழி எத்தகையது என்பதுதான். இந்த சுற்றில் நிச்சயமாக ஹிலரிதான் வெற்றியாளர். ஆரம்பம் முதல் இறுதிவரை அமைதியான தன்னம்பிக்கை கூடிய புன்னகையுடன் கேள்விகளை, தாக்குதல்களை எதிர்கொண்டார். தன்னுடைய பதில்களை தெளிவாகவும், அதே நேரத்தில் சரியான சந்தர்ப்பங்களில் ட்ரம்ப்பை மட்டம் தட்டுவதிலும் வெற்றிகண்டார். மாறாக ட்ரம்ப் ஆரம்பம் முதலே கடுகடுப்பு முகத்துடனும், பதட்டம் நிறைந்த குரலுடனும் இருந்தார். எதிராளியை பேசவிடாமல் இடைமறித்து பேசியதை யாருமே ரசிக்கவில்லை. இந்தப் போக்கினை ட்ரம்ப் அடுத்த இரண்டு விவாதங்களில் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கின்றனர்.

நண்டுச் சுவடுகள்

சதுப்புக் குட்டைகளில் நண்டுகள் குடித்தனம் இருக்க, அவற்றைத் தின்ன கொக்குகளின் கிரீச்சலான சண்டைகள்.
“இந்த கொக்குகள் கடலுக்கு நன்றி சொல்லுமா?”
“புரியல.”
“சதுப்புக் குட்டைகளை இந்தக் கடல் உருவாக்கிருக்கு. அப்படி உருவான அதில நண்டுக உருவாகி, இந்த கொக்குகளுக்கு சாப்பாடாக மாறுது. இந்த சதுப்பு குட்டைகளால்தானே கொக்குகளுக்கு சாப்பாடு கெடைக்குது.”

குழந்தைகளோடு ஒரு புகைப்படம், நீர்ம உருண்டை

ஒரு குழந்தை ஒரு திசையை நோக்கியிருக்கும்.
அதைச் சரி செய்வதற்குள் இன்னொரு குழந்தை இன்னொரு திசையை நோக்கிய படி இருக்கும்.

விடிவு

‘ ட்ரிங்ஸ் பண்ணீங்களாடா..’
‘ இல்ல சார்.. உங்களுக்கு தெரியாதா… நாங்க குடிக்க மாட்டோம் சார்’
‘ டேய்..டேய்.. தெரியுண்டா.. இருந்தாலும் ஆபீஸ்ல கேட்டாங்க…’
மீண்டும் ரூமிற்கு வந்தபோது மொபைலில் மாமா அழைத்தார்…
ரெண்டு பேரும் ரெண்டு வண்டில போனீங்களாடா
ஆமாம்.. வறப்போ மூணுபேர் இருந்தோம். அதனால ரெண்டு வண்டில வந்தோம்
அந்த ஊரில் பஸ்ஸெல்லாம் கிடையாதா..
சும்மா..பைக்ல போயிட்டு வரலாம்னு..
‘இப்ப சும்மாவே போயிருச்சு பாத்தியா.. பைக்ல சுத்தாதீங்கன்னா கேக்குறீங்களா.. அதுலதான் உங்களுக்கெல்லாம் ஒரு மஜா…’
‘……’
‘அப்புறம் என்னாச்சு’