இன்றைய காலகட்டத்தில் நோய்க் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆன்டிபயாடிக் உட்கொண்டாலும் உங்கள் உடம்பை சாதாரணமாக்க முடிவதில்லை. நுண்ணியிரிகள் அவற்றை எளிமையாக எதிர்கொண்டு, தாக்குப்பிடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டன. நோய் எதிர்ப்புத் திறன் இல்லாமல் வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த மாதிரி சமயத்தில்தான் மக்கள் தாவரத்தொடர்பியில் விஞ்ஞானியைக் குறித்த இந்தக் கட்டுரை வெளியாகிறது. இவர் இயற்கையை நாடுகிறார். பழங்கால வைத்திய முறைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்கிறார். வெறும் வேதியியல் கொண்டு, இரசாயனவியல் கலவைகளைக் கண்டுபிடிப்பதை விட தொன்றுதொட்ட பழக்கங்களை வைத்து நோய்களை குணமாக்கும் வைத்தியத்தை விளக்குகிறார்
Category: இதழ்-157
குளக்கரை
அறுபதுகளிலும், எழுபதுகளிலும் பாஸ்பேட் வளம் மிக்க நிலமாக இருந்த காலங்களில் அத்தீவின் மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள். அது காலியான பின் நௌரூ தன் வருமானத்திற்காக வரி ஏய்ப்பதற்கும், ஹவாலா பணம் மோசடி செய்வதற்கும் ஒரு இடமாக தன்னை மாற்றிக் கொண்டது. இப்போது ஆஸ்திரேலியா, அவர்களுக்கு கொடுக்கப்படும் உதவித் தொகைக்காக தன்னுடைய அகதி சிறைச்சாலையை நௌரூவில் கட்டமைத்து அவர்களைக் கொண்டே நடத்துகிறது. அவுஸ்த்ரேலியாவில் தஞ்சம் புகுவதற்காக படகுகளில் வரும் அகதிகளையும், விசா இருந்தும் குற்றங்களுக்காக நாட்டில் இருந்து வெளியேற்றப்பட காத்திருப்பவர்களையும் தன் நாட்டு சிறைகளில், தன் சட்டத்தின் மேற்பார்வையில் வைக்காமல் நௌரூவின் சிறைக்குள் அனுப்பி விடுகிறது. அந்த சிறை மதில்களுக்குள் நடக்கும் கொடுமை…
என் பெயரும் கிருஷ்ணன்
“ இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிண்டு வந்து நிப்பா என் பொண்ணுன்னு நான் நினைக்கலை. எனக்கு வியாக்கியானமாகச் சொல்ல வார்த்தை வரலை. இவளுக்குக் கீழே ஒரு தம்பி ஒரு தங்கை இருக்கா. நான் ராமர் கோவில் பட்டர். தெனம் நாலுபேருக்குப் பதில் சொல்றா மாதிரி பண்ணிடாதீங்கோ. இது சரிப்பட்டு வராது. நான் யாரையும் துணைக்கு அழைச்சிண்டு பஞ்சாயத்து பண்ண வரலை. எங்களுக்கு யாரையும் எதிர்க்கும் திராணி இல்லை. எதுக்கெடுத்தாலும் பயம் தயக்கம் உள்ளவா நாங்க. உங்களை அந்தத் தாயாரா நினைச்சிண்டு கேக்கறேன் என் பொண்ணு ஸ்வேதாவிற்கு எங்க மனுஷாளுக்கு நடுவிலேயே மாப்பிள்ளை பார்த்துக்கறேன். விட்டுடுங்கோ “ என்று என் அம்மாவின் கால்களில் பணிய இருந்தவரை அம்மாதான் பதறிப்போய்த் தடுத்து நிறுத்தினாள்.
சமூகவியல்
மற்றவர்கள் எதை எல்லாம் ஒளித்தனரோ, அவற்றை ஜூன் கொடுத்தாள்; அவள் வாய் விட்டுச் சிரித்தாள், தன் பயங்களைப் பற்றிப் பேசினாள். எல்லெனுக்கு நினைவிருந்த நாட்களில் சிறப்பானது ஒன்று, அன்று ஜூன் அடுக்கத் தக்கனவாக உருவமைக்கப்பட்ட உலோக நாற்காலி ஒன்றில் அருள் வாக்கு கூறும் பெண் ஒருத்தியைப் போல உட்கார்ந்திருந்தாள், அவளுடைய ஒளி ஊடுருவும் கண்ணிமைகளின் பின்னே பார்வை இல்லாத கண்பாவைகள் தாவி அலைந்தன. ‘என்னால் நம்பவே முடியவில்லை, நான் கர்ப்பமாகி இருக்கிறேன் என்பதை,’ என்றாள் அவள். ‘என்னை நான் பார்த்ததே இல்லை என்பதால் இப்படி இருக்கும் போலிருக்கிறது.’
கல்லூரிகளில் வேலை வாய்ப்பு எனும் மாயக் கோமாளித்தனம்
Internship எனும் யுக்தியை இதனினும் கேடுகெட்ட ஒரு ஏமாற்று வேலையாகவேக் கருதுகிறேன். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அவர்கள் சேரும் பெரும்பாலான தொழிற்கூடங்களில் பயிற்சியளிப்பதற்கான கட்டமைப்பு இல்லாததனால் எந்த ஒரு தொழில் சார்ந்த அறிவுருத்தலும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. மாறாக, அவர்களின் அன்றாட பணிகளில் ஏதேனும் ஒரு சிறு முக்கியமற்ற பகுதியை மாணவர்களிடம் கொடுத்துவிட்டு தத்தமது காரியங்களில் இயங்குவதே மாணவர்களின் மூலம் அறியப்படுகிறது. இதனினும் கொடுமை, இதிலும் பணம் பறிக்கப் படுகிறது. பல நிறுவனங்கள் ஆங்காங்கே (பல நகரங்களிலும், நகரின் பல பகுதிகளிலும்) குளிர்சாதன வசதியோடும், ஆடம்பரமான உட்புற வடிவமைப்போடும், சில-பல கணினிகளோடும், மிகவும் சாமார்த்தியமாக கவர்த்திழுக்கக்கூடிய பேச்சுத் திறம் வாய்ந்த முகவர்களோடும் பயிற்சி மையங்கள் என்னும் பெயரில் செயல்படுகின்றன. இவைகள் தொற்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்குமிடையே இடைத்தரகர்களாகவும், தனிப்பட்ட முறையிலும் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவிக்க செயல்படுகின்றன.
சம்பாஷணை
“பாருங்க. நேத்திக்கி காலைல என் வீட்டுக்காரர் ஆஃபிஸ் போகிற வழீலெ ஒரு நியூஸ்பேப்பர் வாங்கறத்துக்கு தாமசிச்சார். அவர் எப்போதுமே டைம்ஸ்தான் வாங்குவார், அதையும் ஒரே கடைலதான் வாங்குவார், என்னன்னா நேத்திக்கி அந்தக் கடைக்காரர்கிட்டெ என் வீட்டுக்காரருக்குக் கொடுக்க டைம்ஸ் ஒரு பேப்பர் கூட இல்லை, மாலைல வீட்டுக்குத் திரும்பினப்புறம் ராத்திரிச் சாப்பாட்டுல மீன் தீய்ஞ்சு போயிருக்கு, இனிப்பு வகையறால இனிப்பு அதிகமுன்னார், அப்புறமா அங்கெயும் இங்கெயும் உக்காந்துகிட்டு சாயந்தரம் பூராவும் தனக்குத் தானே பேசிக்கிட்டிருந்தார்.”
வெங் கனல் கதுவியது ஒப்பன
காரணம் மிக எளியதுதான். செம்மை நிறம் கொண்ட பாத சுவடுகள் செம்மாணிக்க நிறமுடைய பாறைகளில் தெரியாது. அதே சமயம், பச்சை நிறமுள்ள பாறைகளில் நன்கு தெரிகின்றன. பச்சை பாறைகளில் சிவப்பு பாதச் சுவடுகள்! கவரும் அடர் வர்ணக்கலவைகள்…இடை இடையே இருக்கும் மாணிக்கப் பாறைகளில் மறைந்தும் பின் வரும் பச்சைப் பாறைகளில் தொடர்ந்தும்!
தோல்விக்கு மருந்து: எண் 76
அன்பார்ந்த எழுத்தாளர்களே.
உங்களுக்கு நான் எண் 76 ஐக் கொடுக்கிறேன். எதையும் 76 தடவைகளாவது முயன்று பார்க்காதவரை கைவிடாமல் இருக்க உங்களை ஊக்குவிக்கிறேன், அது வேலைக்கு விண்ணப்பிப்பதானாலும் சரி, ஒரு படைப்பைத் திருத்தி எழுதுவதானாலும் சரி அல்லது வெளியே அனுப்பி வைப்பதானாலும் சரி. தன்னை இழந்தும், சலியாத உறுதியோடும் எழுதுங்கள் என்று ஊக்கம் கொடுக்கிறேன்.
கென்யா – குறுங்குறிப்புகள்
ஒரு கிராமத்தில் குறைந்தது மூன்று சர்ச்சுகள்); அடுத்து முஸ்லிம்கள் – சிறுபான்மை (பெரும்பாலும் ‘மொம்பாசா’ போன்ற கடற்கறை நகரங்களில்). … பழமைவாதம்தான் – ஒரு சில குறுங்குழுக்களில் மட்டும்தான்; அலோபதி மருந்துகளுக்கும், மருத்துவர்களுக்கும் அலர்ஜியாவது(!), கிறித்தவத்தின் ஒரு குறுங்குழுவான “mukurino”க்கள்; மற்றுமொரு குழுவான் “ஜெகோவா விட்னஸ்” மற்றும் சில “ஏழாம் நாள்” குழுக்கள், வாரத்தின் முதல் நாள் ஞாயிறு என்கின்றன; ஏழாம் நாள் ஓய்வு என்பதால் சனிக்கிழமைகளில் எந்த வேலையும் செய்வதில்லை; அவர்களின் சர்ச்சுகளின் பிரார்த்தனைக் கூட்டங்கள், சனிகளில் தான்.
காற்று சுத்திகரிக்கும் கோபுரம்
அந்தக் கோபுரம் ஏதோ கோயில்களில் கர்மாக்கள் தொலைகிற கதையாய் உள்ளே வரும் காற்றை மாயத்தால் புனிதப்படுத்துவதில்லை. சிறுவயதில் சீப்பை பரபரவென்று துணியில் தேய்த்து சிறு காகிதத் துகள்களை ஈர்ப்பதை வைத்து விளையாடியிருப்போம் அல்லவா. முன்பு வந்துகொண்டிருந்த பிக்சர் ட்யூப் கொண்ட தொலைக்காட்சி அணைக்கப்பட்டதும் அதனருகில் போய் கைகளைக் காட்டி கையில் இருக்கும் முடிகள் குத்திட்டு நிற்பதை அனுபவித்திருப்போம். அந்தத் திரையை கூர்ந்து கவனித்தால் அதன்மேல் ஒரு மெல்லிய தூசுப் படலம் இருக்கும். இதெல்லாம் static electricity என்னும் நிலைமின்னியலின் விளையாட்டு. நேர் மற்றும் எதிர் மின்னேற்றம் செய்கிற விளையாட்டு. அதே நிலைமின்னியல்தான் இங்கு காற்றை சுத்திகரிக்கப் பயன்படுகிறது.
எனக்கும் ஒரு கனவிருந்தது- வெர்கீஸ் குரியனின் சுயவரலாற்றுப் புத்தகம் பற்றி
நம்மாட்கள் என்றில்லை, வெளிநாட்டவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் வாங்குவாங்கென்று வாங்கித்தான் அனுப்புகிறார். இந்தியா பால்தூள் ஏற்றுமதியை ஆரம்பித்ததும் நியூஸிலாந்து உயராணையர் இவரது அறைக்கு வந்து ‘எங்கள் மார்க்கெட்டில் கை வைக்கும் வேலை வேண்டாம்’ என்று எச்சரிக்க, குரியன் கடுப்பாகி ஆனால் பெண் என்பதால் சற்று மென்மையாக ‘இவ்வுலக மார்க்கெட் உங்கள் தனிப்பட்டசொத்து என்பதை நானறியவில்லை. நன்றி போய்வாருங்கள்’ என்று கதவைக்காட்டியிருக்கிறார். அவரோ மீண்டும்மீண்டும் அதையே பேசி மேலும் எரிச்சலூட்ட, குரியன் ‘இந்தியர்கள் ஒன்றுசேர்ந்து காறியுமிழ்ந்தால் நியூஸிலாந்து மூழ்கிவிடும் ஜாக்கிரதை’ என்று பொரிந்துள்ளார்.
பிளவுப் பள்ளத்தாக்கு
மெல்ல மெல்ல வாகனம் மேடேறியது. வெறும் செம்மண் பூமி, மெல்ல அடர்ந்த வனமாகத் துவங்கியது. ஒரு 9:30 மணி வாக்கில் ங்கொரொங்கோரோ க்ரேட்டர் வாயில் தென்பட்டது. அங்கே வாகனத்தை நிறுத்தி, மேலே செல்ல அனுமதிச் சீட்டு வாங்கி வந்தார் ஜெர்ரி. இறங்கி, அந்த அலுவலகத்தைப் பார்வையிட்டோம். மலையேற்றம் துவங்கியது. இடது புறத்தில் ஆழமான பள்ளத் தாக்கு, அதை மூடிய பெரும் மரங்கள் என காட்சி அற்புதம் நம் மேற்குத் தொடர்ச்சி மலைகளை நினைவுபடுத்தியது. பனிமனிதனில், ஜெயமோகன் உருவாக்கிய, பனிமனிதர்கள் வசிக்கும் காடு போல என நினைத்துக் கொண்டேன்.
யுகசந்தியில் இந்தியா
இந்திய மக்கள், தற்போதைய அரசாங்கம் அதிவேக வளர்ச்சியை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும்போது பொறுமை குறைவாக இருப்பது வழக்கம்தான். அதேவேளையில், எதிர்கட்சிகளும், ஊடகங்களும் இணைந்து குறுகிய காலத்திலேயே மிக அதிக திசைதிருப்பல்களை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றன. தற்போதைய அரசும் அதன் பெரும்பான்மையான சமூக மற்றும் பராம்பரியப் பெருமையும் கொண்ட தலைவர்களும், இந்தியா உலகுக்கே முன்னோடியாக, வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். காலனியாதிக்கத்துக்கு முன்பிருந்த இந்தியாவின் நெடிய பாரம்பரியம் அச்சிந்தனையை உறுதியாக்குகிறது. இந்தியா அத்தகைய ஒரு நிலையை அடைய வழிகாட்டியாக மாற, இந்தியா பெறும் மாற்றத்தைக் கண்டாகவேண்டும். எத்துறையை எடுத்தாலும், பொருளாதாரம் முதல் சமூக வளர்ச்சி வரை இந்தியா ஒரு யுகசந்தியில் நிற்கிறது.
வனங்களில் ஒரு தேடல் …
நான் இங்கு வந்த புதிதில் ஒரு முறை நைரோபி நேஷனல் பார்க் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒரு சிறு பாறையில் ஒரு சிறிய பறவை ஒன்றைப் பார்த்தேன். மீன் கொத்திப் பறவை என்று ஞாபகம். அதை காரில் உட்கார்ந்து கொண்டே ஃபோகஸ் செய்ய முயற்சித்தேன். அது அசைந்து கொண்டே இருந்ததால் ஃபோகஸ் பண்ண முடியவில்லை. வருவது வரட்டும் என்று காரை விட்டு இறங்கி மிகவும் மெதுவாக என்னுடைய ட்ரைபாடை செட் பண்ணினேன். என்னுடைய நேரம், அது என்னுடைய கார் இருந்த இடத்தில் இருந்து முன்னே சென்று கொண்டே இருந்தது. ஒரு இடத்தில் அது கொஞ்ச நேரம் உட்கார்ந்தது போல் இருந்தது. மறுபடியும் ஃபோகஸ் செய்ய ஆரம்பித்தேன். அப்போது லேசாக உஸ் உஸ் என்று ஒரு சப்தம் கேட்டது. முதலில் நான் அதைக் கண்டு கொள்ளவில்லை. நான் தொழிலே கண்ணாயிரம் என்றிருக்க மறுபடியும் உஸ் உஸ் என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டது . பாம்பு ஏதேனும் அருகில் வந்து விட்டதோ என்று ஒரு நிமிடம் பயந்து போய் திரும்பினேன்.
பாராலிம்பிக் வீரர்கள்
மனித உடலின் சாத்தியங்கள்தான் எத்தனை, எத்தனை? உடல் குறைகள் ஆர்வமும் ஊக்கமும் நிறைந்து ததும்பும் உள்ளத்தை அடக்கிவிட முடியாது என்பதற்கு ரியோவில் நடந்த பாராஒலிம்ப்க்ஸ் ஓர் உதாரணம். செயற்கை காலுடன் எத்தனை வேகமாக ஓடுகிறார், ஒற்றைக் கை இல்லாமல் கடுமையான நீச்சல் போட்டி, ஒற்றைக்காலால் உயரம் தாண்டுகிறார். சக்கர “பாராலிம்பிக் வீரர்கள்”
சிநேகிதம்
ஒன்றும் சொல்வதற்கில்லை ஊரில் நிலவரம்.
நிலவும்
சங்கடமான அமைதியைக் குலைக்க ஓர் அலறல் போதும்.
பிணம் தூக்கிப் போன பின்
காலாவதியாகிவிட்டதா டெஸ்ட் கிரிக்கெட்?
அக்டோபரில் வரவிருக்கும் ஐசிசி மீட்டிங்கில், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான உலக சேம்பியன்ஷிப் பற்றிப் பிரஸ்தாபிக்கப்படும் எனத் தெரிகிறது. அதாவது, ஐசிசி தரவரிசைப்படி, உலகின் முதல் இரண்டு இடங்களில் உள்ள டெஸ்ட் அணிகள் சேம்பியன்ஷிப்பிற்காக, ஒரு நடுநிலை மைதானத்தில் (neutral ground) மோதவேண்டும்; இந்த சேம்பியன்ஷிப் போட்டி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படவேண்டும் என ஒரு திட்டம் வலம் வந்துகொண்டிருக்கிறது. இப்போது இருப்பதைப்போலவே இரு நாடுகளுக்கிடையே நடத்தப்படும் டெஸ்ட் தொடர்பற்றிய தேதிகள், ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளே பேசித் தீர்மானித்துக்கொள்ளலாம் எனப் பொதுவான கருத்து நிலவுகிறது. அதாவது, இரு தரப்பு டெஸ்ட் மற்றும் பிறவகைக் கிரிக்கெட் தொடர் விஷயத்தில் ஐசிசி மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஐசிசி உறுப்பினர்-நாடுகள், டெஸ்ட் கிரிக்கெட்டை புதுப்பிக்க, மேலும் புதிய யோசனைகளை சொல்லக்கூடும்.
ஆட்பிடியன்
அமேசான் காடுகளில் வாழும் ஊர்வன ஜந்துக்களையும் நீர் மற்றும் நிலம் என இரண்டிலும் இயங்கவல்ல உயிரினங்களையும் அவதானிக்க மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மார்க் கொவன் (Mark Cowan) சென்றிருக்கிறார். அங்கேதான் இந்தக் காட்சியைக் காண்கிறார். முதலையின் தலை முழுக்க பட்டாம்பூச்சிகள் அமர்ந்திருக்கின்றன. முதலையின் முகத்தின் மேல் இருக்கும் உப்பை உண்பதற்காக “ஆட்பிடியன்”
திதர்கஞ்ச் சாமரம் சுமக்கும் பெண் சிலை
“அந்த நாளையப் பெண்சிற்பம் அமைக்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்தச்சிலையின் அமைப்பும் உள்ளது. ‘யட்சி’ அல்லது ‘யட்சினி’ என்று குறிப்பிடப்படும் இச்சிலையின் எழில் காண்போர் கிளர்ச்சியுறும் விதமாக உள்ளது. பெருத்த மார்பகங்களும், குறுகிச் சிறுத்த இடையும், அகன்ற இடைப் பகுதியும் தொடைகளும் கொண்ட சிலையின் கழுத்தில் சாமுத்திரிகா இலக்கணம் என்று பெண் உடல் அமைப்பை அந்நாட்களில் கூறிய விததிற்கேற்ப நீள வாட்டமாக மூன்று கோடுகளும், (griva trivali) வயிற்றில் மூன்று சதை மடிப்புகளும் (Katyavali) அமைந்துள்ளன. சிலை நிமிர்ந்து நிற்காமல் சிறிது முன்புறம் சாய்ந்த விதமாக இருப்பது பணிவைக்காட்டுவதாக உள்ளது. உதட்டுச் சுழிப்பில் மெல்லிய புன்னகையின் சாயல் உற்று நோக்கினால் மட்டுமே புலப்படுகிறது. சிலையின் வலதுகால் சற்றே முன்னால் மடங்கியுள்ளது. சாமரத்தை உறுதியாகப் பற்றியிருக்கும் கைவிரல்கள் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன…