இந்த நூற்றாண்டின் அமெரிக்கப் பெண்கள் பலரும் நன்கு படித்து ஆண்களுக்கு நிகராக நல்ல பதவியிலும், பொறுப்பிலும் இருக்கிறார்கள். அரசியல், கல்வி, கலை, விளையாட்டுத்துறை, மருத்துவம், நீதித்துறை , விண்வெளி ஆராய்ச்சி, பொறியியல், விவசாயம் என்று அனைத்துத்துறையிலும் பெண்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தாலும் கூட கடந்த நூற்றாண்டுகளின் நாலாம் தரத்திலிருந்து இரண்டாம் தரத்திற்குத்தான் உயர்ந்திருக்கிறார்களோ என எண்ணிடக்கூடிய வகையில்தான் நிதர்சனங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய பல சட்டங்கள் இன்றும் ஆண்களுக்குச் சாதகமாகவே இருந்து வருவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
Category: இதழ்-156
பசுங்குடில் பயன்பாடும், கொய்மலர் வளர்ப்பும், வர்த்தகமும் – ஓர் அறிமுகம்
எண்பதுகளில் கொய்மலர் வர்த்தகத்தின் தலைநாடான ஹாலந்திலிருந்து நிபுணர் குழு ஒன்று வந்து இந்தியாவெங்கும் சுற்றி ஆய்வு செய்து பசுங்குடிலில் கொய்மலர் வளர்ப்பதற்கான சாதகமான தட்பவெப்ப சூழல் எங்கு நிலவுகிறது என்று அறிக்கை ஒன்றை அரசுக்கு தாக்கல் செய்தது (ஆய்வில் விமான போக்குவரத்து வசதிகளும் கணக்கில் கொள்ளப்பட்டன). அதில் குறிப்பிடப்பட்ட இரு இடங்கள் – 1. பெங்களூர் சுற்றுப்புறம் (ஓசூர் வரை) 2. புனே சுற்றியுள்ள இடங்கள் (தலேகான் வரை).
உச்சைசிரவஸும் குரங்கும்
சென்னையின் ஆட்டோ ஒட்டுனர்கள் இருந்தார்கள். ’இந்த இடத்திற்கு வர முடியாது’ என்பார்கள். ‘இங்கே போக வேண்டுமென்றால் டபுள் ரேட்’ என மிரட்டுவார்கள். அவர்களில் சில சந்தேகாஸ்தபமான, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். ஓலா முளைத்தது. செல்பேசியில் அவர்களை பார்க்கலாம். எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியலாம். ஓலா ஓட்டுனர்களுக்கு, நீங்கள் சாவுகிராக்கியா, நல்ல கிராக்கியா என்பதை அறிய முடியும். இது குழப்பவாத குரங்குகளின் செய்கை.
ஃப்ரீட்ரிஷ் நீட்சா, இரும்புக்கரங்கொண்ட மாவீரன்
அடிமைமுறை பற்றிய நீட்சாவின் கருத்துகள் கொடுமையானவை என்பது ஒரு புறம் இருக்கையில், இனத்தூய்மை வாதம் குறித்து அவர் கொண்டிருந்த கருத்துகளும், ஜனநாயகம் உருவாகக் காரணிகள் என உடற்கூறுகளின் அடிப்படையில் அவர் முன்வைக்கும் கருத்துகளும் (ஆள்வோராக இருக்கும் “வெற்றி பெற்ற ஆரிய இனத்தின்” விழுமியங்களை வென்ற அடிமைகளின் விழுமியங்களாக- கருநிறம் கொண்ட, அதிலும் குறிப்பாகக் கருநிற முடிகொண்ட மனிதர்களின் வெற்றியாக- ஜனநாயகத்தை அவர் பார்க்கிறார்) அருவருப்பான கருத்தாக்கங்கள்.
தேசிய கல்விக் கொள்கை – 2016
சுதந்திர இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்கான மூன்றாவதாக அமைக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை ஏப்ரல்-30, 2016 -ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் அளித்திருக்கிறது. இதன் அடிப்படையில் அமைச்சகம் அதன் கல்விக் கொள்கையை வெளியிட வேண்டும். அதன் முன்பாக, வரைவுக் கொள்கையை வெளியிட்டு பொதுமக்களிடமும் ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறது. விருப்பமும், உபயோகமான பரிந்துரைகளும் இருந்தால் ஆகஸ்ட்-16 ம் தேதிக்கு முன் அளிக்கலாம்… இக்குழுவின் அறிக்கையின் இரண்டாவது அத்தியாத்தின்படி, குழு அமைப்பதற்கு முன்பாகவே மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மேலே கூறப்பட்ட பிரமிடின் முதல் ஆறு நிலைகளிலும் ஆலோசனைகளைப் பெற்று தொகுக்கும் பணியை முடித்திருக்கிறது. இந்தத் தொகுக்கப்பட்ட ஆவணங்களிலிருந்துப் பெறப்பட்டத் தகவல்களை…
குளக்கரை
தென் சீன கடல் பகுதிகளில் தான் கோரும் உரிமை செல்லுபடியாகாது என ஹேக் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்து சீனா பல கோணங்களில் எதிர்வினை ஆற்றி வருகிறது. ஒருபுறம் எப்போதும் போல அந்த தீர்ப்பைக் குறித்த வலைதளங்களை முடக்கியது. அடுத்ததாக அந்த தீர்ப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால எதுவும் மாறப் போவதில்லை என்றும் அறிக்கை விட்டது. பிறகு தென் சீன கடலின் செயற்கை தீவுகளின் கட்டுமானத்தை துரிதப்படுத்தி அதை பிரகடனப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக தன்னுடைய பொருளாதார, வர்த்தக குடையின் கீழ் உள்ள நாடுகள் இந்த தீர்ப்பை ஒட்டி எதிர்ப்புக் குரல் எழுப்பாதவாறு பல நடவடிக்கைகளை எடுக்கிறது.
Auto-da-Fé (1931/35) : புனைவெழுத்தே தருமச் செயலாய்
இருவருக்கும் இடையில் உருவாகும் தகவல் தொடர்புப் பிழைகள் தாளவியலா இருண்ட நகைச்சுவையாக வெடிக்கின்றன. பக்கம் பக்கமாக இருவரது நனவோடைகளும் விரிகின்றன, பரஸ்பர வெறுப்பும் சந்தேகங்களுமாய். தெரீஸ் அவனது சொத்துக்களின் சொற்பத்தை நம்ப மறுக்கிறாள்; விடாமல் அவனைத் தன் பேரில் உயிலெழுதச் சொல்லி நச்சரிக்கிறாள். கீய்ன் தனது நூல்களுக்காக அஞ்சுகிறான், அவற்றை அவளிடமிருந்து காப்பாற்ற திட்டங்கள் போடுகிறான், நூல்களின் படைத்தலைவனாகப் பொறுப்பேற்று அவற்றை போருக்குத் தயார் செய்கிறான். நூல்களின் புத்தர் மவுனம் சாதிக்கிறார், ஜெர்மானிய தத்துவவியலாளர்கள் அடிபணிய மறுக்கின்றனர், ஃபிரென்சு சிந்தனையாளர்கள் எள்ளி நகையாடுவதோடு ஆங்கிலேயர்கள் இருக்கும் புத்தக அலமாரிக்கு அனுப்புகின்றனர், ஆங்கிலேயர்கள் நல்ல யதார்த்தமான புத்திமதி சொன்னாலும்…
பொறியியல் போதனையாளருடன் ஒரு உரையாடல்
சார்ந்திருப்பதிலிருந்து விடுதலை பெற்று சுயமாகச் செயல்பட முனையும்போது துவக்கத்தில் பல குறைபாடுகள் எழும். ஜப்பானியரின் உதாரணம் ஒன்றையோ, தாய்வானியரின் அனுபவங்களையோ, ஏன் சீனர்களின் அனுபவங்களையோ கூட நாம் எடுத்து நோக்கலாம். அந்த நாட்டு உற்பத்தித் துறைகளின் விளை பொருட்கள் முதல் பத்து ஆண்டுகள், ஏன் பதினைந்தாண்டுகள் வரையிலும் கூட மேலைப் பொருட்களோடு ஒப்பிட்டால் கீழ்த்தரமானவையாகவும், மலினமான தொழில் திறன் உள்ளனவாகவும் தெரிய வந்திருந்தன. மேற்கு நாடுகளுக்குத் தொடர்ந்து பொருட்களைக் கொடுக்கத் துவங்கிய போது அவர்கள் மேற்கின் அளவைகளைத் தம் பொருட்கள் ஈடுகொடுத்து நிற்க வேண்டும் என்ற அவதிக்கு உட்பட்ட போது தர மேம்படுதல் அவசியமாயிற்று. ஜப்பானியர் மேற்கின் உற்பத்தித் தொழில் நுட்பங்களைத் தம் சமூகக் குழுவினரின் பழக்க வழக்கங்களோடும், பண்பாட்டுத் தேர்வுகளோடும் பொருத்தி…
டமன்யாரா, ஸெரெங்கெட்டி, ங்கொரொங்கோரோ
ஆருஷா தாண்டியதும் சாலையோரத்தில் காஃபித் தோட்டங்கள் பயணத்தினூடே வந்தன. ஆஃப்பிரிக்க காஃபி நல்ல தரமான காஃபி. (எத்தியோப்பியக் காஃபிதான் உலகின் சிறந்த காஃபி எனச் சொல்லுகிறார்கள்.. கொலம்பியர்கள் மறுப்பார்கள்). இன்னும் சற்றுத் தாண்டியதும், சாலையோரம் மாடு மேய்க்கும் மஸாய் மாறா என்னும் மக்கள் தென்பட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கறுப்பு சிவப்பு நிறக்கட்டங்களில் பெரும் போர்வைகள் போன்ற ஆடைகள் அணிந்திருந்தார்கள். கையில் கூர்மையான ஆயுதங்கள், அல்லது குறைந்த பட்சம் கோல்கள். இவர்கள் மாடு மேய்க்கும் யாதவர்கள்.. ஆனால், நம்மூர் பிஹாரி யாதவர்களுக்கும், தமிழ் நாட்டுக் கோனார்களுக்கும் இவர்களுக்கும் ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. இம்மாடுகள் பால், மற்றும் இறைச்சிக்கும் உபயோகப்படுத்தப் படுவதுதான்.
மகரந்தம்
இது அறிவுலகத்தை நோக்கிய விமர்சனம். தற்போது இணையத்திலும் தமிழ் இலக்கிய கலை பண்பாட்டு சூழலிலும் புழங்கும் பெரும்பான்மையான சிந்தனையாளர்கள் படிக்க வேண்டிய சிறு கட்டுரை. விமர்சனமாக எடுத்துக்கொள்ளும் சிந்தனையாளர்கள் மறுப்புத் தெரிவிக்கலாம். அப்படி தெரிவிக்கும் தோறும் இந்த கட்டுரைக்கு வலு சேர்க்கும்படியாக அமைந்துவிடும் என்பதுதான் நிதர்சனம்.
இருமை
அட்டம், சப்தம், அறுமுகம், பஞ்சம், சதுரம், மும்மை எனும் எண்கள் பற்றிய கட்டுரைத் தொடரின் ஏழாவது கட்டுரை இதுவென்பதால், இருமை என்ற சொல்லை இரண்டு என்ற பொருளில் இங்கு ஆள்கிறேனேயன்றி, அருமைக்கு எதிர்ப்பதமாகவோ, இருண்மை எனும் பொருளிலோ நான் ஆளவில்லை. இருமை எனும் சொல்லுக்கு பெருமை, கருமை என்றும் பொருள் இருப்பது உண்மைதான். சீவக சிந்தாமணி, பதுமையார் இலம்பகப் பாடல் ஒன்றில் ‘இரு மலர்க் குவளை உன் கண்’ என்கிறது. இங்கு இரு எனில் கருமை. கருமை நிறமுடைய குவளை மலரின் நிறத்தை உண்ட கண் என்பது பொருள். இன்னொரு பொருள், குவளை மலரின் நிறத்தை உண்ட இரு கண்கள் என்பது.
லு ஷாடலியெ கோட்பாடு
அகத்தியர் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் சீர்காழியாரின் குரலில் ‘உலகம் சமநிலை பெறவேண்டும். உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்’ என்னும் அழகான பாடல் வரும். அந்தப் பாடல் படத்தில் வரும் இடம் நமக்குத் தெரியும்தானே. கயிலையில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடக்கையில் எல்லாரும் வடபகுதிக்குப் போய்விட வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்கிறது. அந்தச் சமநிலையை மீட்க அகத்தியரை, நானே பொதியை மலைக்கு ஹனிமூன் வருகையில் காட்சி தருகிறேன் எனத் தாஜா செய்து அனுப்பி வைக்கிறார். அவரும் பொதியைக்கு வந்து சமநிலையை மீட்கிறார். ஆக ஒரு சமநிலையில் ஒரு மாற்றம் உருவாகும்போது, அந்தச் சமநிலையானது, மாற்றத்தை எதிர்த்து நகர்கிறது, தன் சமநிலைத்தன்மையை மீட்டெடுக்க முயல்கிறது. இதைத்தான் வேதியியலில் லு ஷாடலியெ கொள்கை என்கிறார்கள்.
கிரிக்கெட்: மனதை வசீகரித்த மாயாஜாலம்
அப்போது, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா என்கிற பத்திரிக்கை வந்தது. ஸூப்பர் சைஸ் வாரப்பத்திரிக்கை. கிரிக்கெட் பத்திகளுக்காக லைப்ரரிகளுக்குப்போய் அதைத் தேடிப் படிப்பேன். கிரிக்கெட் சீசனில், ஸ்போர்ட்ஸ்வர்ல்ட் (Sportsworld), ஸ்போர்ட்ஸ்டார் ஆகிய வார இதழ்களை வாங்கிப் படிப்பது வழக்கம். இதுவரை பேரை மட்டுமே கேட்டிருந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான, பட்டோடி, வாடேகர், சோல்கர், விஸ்வநாத், கவாஸ்கர், துராணி, இஞ்ஜினீயர், சந்திரசேகர் ஆகியோரின் ஆக்ஷன் படங்களை பார்த்ததும் ஏதோ தேவலோகத்து மனிதர்களை தரிசித்த பரவசம் மனசில் பாய்ந்ததை மறக்கமுடியுமா? ‘பாடப் புஸ்தகத்தப் படிக்காம, கண்ட கண்ட புஸ்தகங்களை எல்லாம் வாங்கிப் படிக்கிறான் பாருங்கோ!` -அப்பாவிடம் அம்மாவின் கோழிச்சொல்லல் கிரிக்கெட் ஆர்வத்துக்கு அவ்வப்போது பக்கவாத்தியமாய் அமைந்தது.
சென்ற வருடத்தில் மட்டும் ஆறரைக் கோடி அகதிகள்
ஐ.நா. அறிக்கையின் படி சென்ற வருடம் மட்டும், 65.3 மில்லியன் பேர்கள் தங்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டிருக்கிறார்கள் இது இங்கிலாந்து நாட்டின் மக்கள் தொகைக்கு சமமாகும். ஃபிரான்ஸில் ஒரு குண்டு வெடித்தால், உலக ஊடகங்கள் அனைத்தும் அதை பதிவாக்கி விவரிக்கிறது. ஆனால், ஃபிரான்ஸ் நாட்டின் ஜனத்தொகைக்கு சமமானவர்கள் தங்களின் “சென்ற வருடத்தில் மட்டும் ஆறரைக் கோடி அகதிகள்”
ஒளி – ஒரு குறுஞ்சித்திரம்: கலைச்சொல் அகரமுதலி
ஒளி- ஒரு குறுஞ்சித்திரம் என்ற கட்டுரைக்கான கலைச் சொல் அகர முதலி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கையாளப்பட்டுள்ள சில கலைச்சொற்களின் மிகச் சுருக்கமான அகரமுதலி இங்கு வழங்கப்படுகிறது. இந்தக் கலைச்சொற்கள் வலிந்து திணிக்கப்படவில்லை; இவை கையாளப்பட்டதன் நோக்கம் மொழித்தூய்மையோ, மொழிக்களஞ்சியத்தைச் செறிவாக்குவதோ, ஏன், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பேசுவதற்குரிய இருபத்தொன்றாம் நூற்றாண்டுத் தமிழை உருவாக்குவதோ அல்ல.
முப்பாலுக்கு அப்பால்
பின்னால் கொல்லையில் காவேரி ஒடுகிற சல சல சத்தம், தோட்டத்து மரங்களில், கிளைகளும் இலைகளும் உரசுகிற சத்தம், சிள் வண்டுகளின் ரீங்கார சத்தம், எங்கோ தெருவில் போகிற வண்டி மாடுகளின் கழுத்து மணிகளின் சத்தம், கூடை அடைய தாமதமான ஒற்றைப் பறவையின் சத்தம், தூரத்து மெயின் ரோடில் லாரி போகிற சத்தம், ஆசிரம இரும்பு கேட்டில் கட்டியிருக்கிற தகரம் காற்றில் ஆடும் சத்தம், சமையலறையில் பாத்திரங்களின் ஜலதரங்க சத்தம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டிருக்கையில் இப்பிடியே இருந்து விட்டால் என்ன என்று தோன்றியது.
ஒரு பணிவான அப்பா
எழுத்தாளர்கள் எப்படி எழுதத் துவங்குகிறார்கள்? அவர்களின் முதல் நாவல் எவ்வாறு உருவானது? பாரிஸ் ரிவ்யூ பல நாவலாசிரியர்களை பேட்டி கண்டிருக்கிறது. அகில் ஷர்மாவின் அனுபவத்தை இங்கே பார்க்கலாம்:
அம்பையின் சிறுகதை-"அம்மா ஒரு கொலை செய்தாள்"
இக்கதையில் நாம் அறிந்த அம்மா, அப்பெண் எதிர்பார்ப்பது போல ராணி போல அவளது பருவமடைந்த செய்தியை எதிர்கொள்வாள் என்றோ பெண்ணுக்கு ஒரே ஆதரவாக இருப்பாள் என்றோ நாம் நினைப்பதுக்கு மாறாக, “அவள் என்னடீ அவசரம்?” எனத் திட்டுகிறாள்….மெல்லுணர்வுகளைத் தாங்கி இருப்பவர்கள் கூட அதை நெருப்பில் அவிசாகப் போடும் நேரமும் உண்டு. … இதன் தீவிரத்தை உணர்ந்தாலும் நாமும் இப்படிப்பட்ட கொலையில் பங்கு கொள்பவர்களே”. … தன்ராஜ் அசந்துவிட்டார்.