ஏழு குறுங்கதைகள்

மொத்தக் கதையும் இறுதியில் முட்டி நின்று திரும்பி அலைபோல துவங்கிய இடத்திற்குச் சென்று மீண்டும் கதையை வேறு கோணத்தில் என்ன நடந்திருக்கச் சாத்தியம் என்பதான கேள்விகளை (எ.கா. பிரயாணம் – அசோகமித்திரன்) வாசகனுக்குள் ஏற்படுத்துவதே சிறுகதை எனில் சில வரிகளில் அது நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது. சொல்லப் போனால் கதையின் கவிதைக் கணங்களே சிறுகதையாக பரிணமிக்கிறதோ என்று தோன்றுகிறது.

வட்டம்

“எளவு அந்தூருக்கு எவம் போவான்?” என்றார் சலிப்புடன். “லே, அவன் இருக்கற ஊர்ல, அக்கினி நட்சத்திரத்துலயும் இழுத்து மூடி கிடக்க வேண்டியிருக்கு. நமக்கு குளிர்காலம்னா பனியன் போடணும், கோடை வந்திச்சின்னா, அதக் கழட்டணும், இதுதான் உடுப்பு. அங்க்கிட்டு, எல்லாம் போட்டுட்டு ஒரு மாசம் இருந்தேன், இருப்பு கொள்ளல. வந்துட்டேன். கடை சும்மா அடைச்சு கிடந்துச்சின்னா, எலி வந்துரும் பாத்துக்க.” .. .. .. “இப்படி கடை கிடக்கறதுக்கு, எலி தின்னா என்னா அண்ணாச்சி ? இனிமே என்ன சம்பாரிக்க வேண்டியிருக்கு? இப்பத்தான் பெங்களூர் வந்துட்டாம்லா? பையன் கிட்ட இரிங்க.” .. .. .. அண்ணாச்சி அருகில் வருமாறு சைகை செய்தார் “ ஏலா” என்றார் அன்பாக.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்: புதிய பயிற்சியாளர் – புதிய பாதை

ஐந்து வருடங்கள் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்தின் ஜான் ரைட் அறிமுகப்படுத்திய buddy system என்று அழைக்கப்பட்ட, ஒரு பௌலர்- ஒரு பேட்ஸ்மன் என ஜோடி, ஜோடியாகப் பந்துவீச்சு, பேட்டிங் எனப் பயிற்சி செய்தலை கும்ப்ளே மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளார். அதே சமயம், நெட்-பயிற்சியை உன்னிப்பாகக் கவனித்து இந்திய வீரர்களுடன் அவர்களது பேட்டிங் செய்யும் முறை, பௌலிங் ஆக்‌ஷன் போன்றவைகளில் ஏதேனும் குறை தெரிந்தால், மாற்றம் தேவைப்பட்டால் அதுபற்றி அவர்களுடன ஒன்றுக்கு ஒன்றாய் பேசி, கவனத்தைக் கொணர்கிறார். தேவையான மாற்றங்கள் செய்து மீண்டும் அவர்களை முறையே பௌலிங் அல்லது பேட்டிங் செய்யவைத்துக் கூர்ந்து கவனிக்கிறார்.

கருவிகளின் இணையம் – சமுதாய நோக்கும், போக்குகளும்

பாதுகாப்பு குறித்து சமூகம் கொண்டிருக்கும் சற்றும் பொறுப்பற்ற நோக்கு இன்றைய கருவி இணைய முயற்சிகளை அதிகம் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது .. .. .. இன்றைய புதிய திறன்பேசி (smartphone) மாடல்கள் நுகர்வோர் பயன்பாட்டை மட்டுமே அதிகம் மையமாக்குகின்றன. .. .. .. இதன் தொடர்சியாக, இன்றைய கருவி இணைய முயற்சிகளும், பாதுகாப்பு விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டன. .. .. .. IPv6 தொழில்நுட்பம் பல கோடி கோடிக் கருவிகளை இணையத்துடன் இணைக்கும் திறன் படைத்தது என்று தொழில்நுட்பப் பகுதியில் பார்த்தோம். அப்படி இணைத்த இணையத்தின் கதி பற்றி ஏதாவது எங்காவது சொல்லப் பட்டதா? மூச்!

வ.உ.சி.யின் திருக்குறள் பற்று

“சில தினங்களுக்கு முன்பு கோயம்பத்தூர் சென்ட்ரல் ஜெயிலில் இருக்கும் ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையை அவருடைய மனைவி, மக்களும் அவரது ஆப்தராகிய ஸ்ரீ வள்ளி நாயக சாமியாரும் வேறொரு நண்பரும் பார்வையிடச் சென்றார்கள். அந்த சந்திப்பில் நடந்த சம்பாஷணையினிடையே ஸ்ரீ சிதம்பரம் பிள்ளையவர்களின் வாக்கிலிருந்துதித்த சில வசனங்கள்…….தமிழர்களெல்லாம் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும், என்னைப் பெற்ற தந்தையேயாயினும் யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை” .. .. .. 1910-ஆம் ஆண்டு கோவைச் சிறையில் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் வ.உ.சி. கூறிய இக்கூற்று வ.உ.சி. திருக்குறள் மீது கொண்டிருந்த மதிப்பை உணர்த்துகிறது.

திசைகாட்டி

“கவிதையும் எண்ணங்களும்” கட்டுரையில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. அவரது காலத்தில் கவிதைகளுக்கு ஒரு சீற்றமும் பிரச்சார தொனியும் தேவையாக இருந்தன. காலத்தின் தேவையாக தானும் அப்படி எழுத நேர்ந்தமை பற்றி சொல்கிறார். நேருவின் அறைகூவல் காலத்தில் எழுதிய கட்டுரையில் “பயிரைத் தின்னும் பகையை வீரப்படை கொண்டு மாய்த்திடுவோம்“ எனும் கவிதையைக் குறிப்பிட்டிருக்கிறார். அது அந்தக் காலத்தின் தேவை. இத்தகைய கவிதைகள் இன்று பொருத்தப்பாடு இல்லாமல் போயிருப்பவை. இன்றைக்கு அப்படியான அழுத்தங்கள் இல்லாமல் இருப்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

தச்சன்

அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கும் பெருந்திரளான கூட்டம். சீடர்கள். பேதுரு சீமோன் போன்ற உரிமையான நண்பர்கள். அவன் நிமித்தம் எல்லாப் பழியையும் ஏற்று கருணையினால் நிறைந்த அன்னை. .. .. .. ஆனாலும், அவனுக்கென எவருமில்லை. அவன் மனம் தனித்தே நிற்கிறது. எங்கோ ஓர் வெறுமை. எனக்கென என் மனதுடன் உரையாட ஓர் அன்பு நெஞ்சமில்லை. எல்லோருக்கும் நான் ரபி, குரு, ஞானத் தந்தை…என்னுடன் முகமுகமாய் அளவளாவ நண்பனே என்று அழைக்க எவருண்டு ? .. .. .. அவன் குனிந்து அவளைப் பார்க்கிறான். .. .. .. யாரிடமும் ஒன்றாத அவன் தனிமை அவளின் கருணை நிறை அன்பில் கரைகிறது. உடைக்கப்படும் புனிதங்கள். கட்டளைகள் மீறப்படுகின்றன. அவள் உன்மத்தமாகிறாள்…

தோள்வலி வீரமே பாடிப்பற!

பெரியாழ்வார் தமது நான்காம் பத்தில், குழந்தைகளுக்குப் பெயர்வைப்பது சம்பந்தமான ஒரு கருத்தினை வெளியிடுகிறார். .. .. .. ‘காசுக்கும் துணிக்கும் ஆசைப்பட்டு கண்டகண்ட பொருளற்ற பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைக்காதீர்கள். கேசவன் எனும் அந்த இறைவனின் பெயரை இடுங்கள். .. .. .. ‘அழிகின்ற மனிதனுக்கு, சிவந்த கண்களையுடைய திருமாலின் என்றுமே அழியாத பெயரான ஸ்ரீதரன் எனும் பெயரை இட்டு மகிழுங்கள். .. .. .. ‘மண்ணாகப் போகும் மனிதனுக்கு கருமுகில் வண்ணனின் நாமத்தை வைத்து அழைத்தால் நல்லது,’ எனவெல்லாம் கூறுகிறார்.

தேனீக்கள், கணிதம், பரிணாமம்- ஒரு கணித-உயிரியலாளருடன் உரையாடல்

பொதுவாக உயிரியல் அமைவுகளை அளவைக்கு உட்படுத்தும் போது நாம் எளிதாக வேதியியலையோ அல்லது இயற்பியலையோ பயன்படுத்த முடிகிறது. மருத்துவத்தில் நமக்கு தேவையான ஒரு தீர்வு, பொறியியல் தொழில்நுட்பத்திலிருந்து கிடைக்கக் கூடும். நம் மாணவர்களை மிகவும் ஆரம்பத்திலிருந்தே சிலவிஷயங்களில் தெளிவுடையவர்களாக்குவது நல்லது. வெவ்வேறு புலங்களிடையே இருக்கும் எல்லைக் கோடுகள் உண்மையில் நாம் உருவாக்கியவைதான். நமக்கு சுவாரசியமான நம்மைச் சுற்றி நம்மை ஈர்க்கும் விஷயங்களை அறிந்திட அவற்றை விளங்கிக் கொள்ள நாம் முயற்சி செய்வதே நமக்கு முக்கியமானது. இதை நாம் உணர்த்த வேண்டும்.

அதைப் போக விடு

திரள் நினைவு (Collective Memory) எனும் கருத்து குறித்து அதிக அளவு சிந்தனைகளைத் தரும் ரீஃப், அக்கருத்திற்குப் பெரும் அழுத்தத்தையும் வைக்கிறார். .. .. .. திரள் நினைவு என்பது “நிகழ்காலத்து வெளிச்சத்தில் பழங்காலத்தை புணரமைத்தல்”, அத்துடன் “சமூகங்களும் தேசங்கள் முழுமையும் அவற்றின் அடையாளத்தை வார்ப்படம் செய்வதற்கான வழியாகவும் இருக்கிறது”. .. .. .. ரீஃப் அடித்துச் சொல்கிறார், “வரலாற்றை நினைவுகொள்வதின் சாராம்சமாக இருப்பது, வரலாற்றுத் துல்லியத்தைவிட, அடையாளப்படுத்துதல் மற்றும் மனோபாவ நெருக்கமே எனும்போது வரலாற்று நுணுக்கங்கள் மற்றும் ஆழம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை”.

மகரந்தம்

மில்டன் தன் 90வயதுக்கு அப்புறமும் படங்கள் எடுத்து வந்திருக்கிறார். இவருடைய முக்கிய கவனம் ’உழைப்பாளி மக்கள்’ மீதுதான் இருந்தது. தன் கருது பொருளானவர்களை ரோகோவின் ‘மறக்கப்பட்டவர்கள்’ என்று அழைத்தாராம். ரோகோவின் எடுத்த பல நூறு படங்கள் மிகக் கச்சிதமாக ஒளியூட்டப்பட்டு, தொழிலாளர்களை அவர்களின் முழு கண்ணியத்தோடும், தொழிலில் அவர்களுக்கிருந்த ஈடுபாட்டைப் பிரதிபலிக்கும் விதமாகவும், எந்தச் சூழலில் அவர்கள் உலக மக்களின் நலனுக்குத் தம் அளிப்பைக் கொடுத்தனரோ அந்தச் சூழலையும் உள்ளிழுப்பதாகவும் அமைந்த படங்கள் என்று இன்று ஒளிப்பட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ரூபம் பிரதிரூபம் மற்றும் பாவனை

இதனைப் பாடியது ஒரு புலவராகத் தானே இருக்கவேண்டும்? ஆனால் பாடியவர் காவற்பெண்டிர் என்று குறிப்பு கூறுகிறது. காவற்பெண்டிர் என்பது பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் பெண் என்பதால் செவிலித்தாய் என்று ஆகிறது. ஆனால் பிரதிபேதமாக காதல்பெண்டிர் என்றும் பெயர் குறிப்பிடப் படுகிறது. காவற்பெண்டிரும், காதற்பெண்டிரும் வேறு வேறு ஆவர். இருவர் தொழிலும் வேறாகும். ஆனால் இந்தக் கூற்றுகள் பெற்ற தாய்க்கு பதிலாக அமைந்துள்ளன. பெற்றதாய் கூற வேண்டியதை, செவிலி கூற முடியுமா? எல்லாவற்றையும் கூற முடியுமா? அதுவும் தன் வயிற்றைக் காட்டி?

சுட்டுக் குறிப்புக்கு அப்பால்

வாழ்வது என்பது ஒரு மகிழ்ச்சியின் மீது இன்னொன்றாக அடுக்கப்படுவது இல்லையே. அது போகப் போக வலிகள் குறையும் எனும் நம்பிக்கை மட்டுமே, சீட்டுக் கட்டு விளையாடுவதைப் போல ஒரு நம்பிக்கையை இன்னொரு நம்பிக்கை மீது போட்டு விளையாடப்படுவது. ஆட்டத்தில் ஒரு எதிர்பாராத திருப்பமாக, ராஜாக்களும், ராணிகளும் அவ்வப்போது கைக்கெட்டுவது போல, அன்பான செய்கைகளும், கருணை பாலிப்புகளும் கிட்டுமென்ற விருப்பத்தோடு ஆடப்படுவது. நாமே அந்தச் சீட்டுகளை வைத்திருக்கிறோமோ இல்லையோ: அவை எப்படியுமே முன்னே விழத்தான் செய்யும். மென்மை என்பது அதில் நுழைவது இல்லை, எப்போதாவது சிதிலமடைந்ததாகக் கிட்டலாம்.

ஒளி – இப்போதும் இனியும்

நாம் உண்மையாகவே புரட்சிகரமான மாற்றத்தைக் கணிப்பதானால் எதிர்கால கணினிகள் ஈரிணை ஒளிக்கணினிகள் (binary optical computer) என்று சொல்லப்பட மாட்டாது. அவை க்வாண்டம் கணினிகளாகவே (Quantum computers) செயலாற்றும். .. .. .. மீபொருட்களில் வேறொரு சுவாரசியமான துறை, ஒளிப் போர்வைகள் (optical cloaks). ஹாரி பாட்டர் தன்னை மறைத்துக் கொள்ள போர்த்துக் கொள்ளும் போர்வை நினைவுக்கு வரலாம். ஒரு பொருளின் மீது விழும் ஒளி சிதறும்போதுதான் நாம் அப்பொருளைப் பார்க்க முடிகிறது. .. .. .. கடலில் உள்ள மீன்கள் சில, கடல் நீருக்கு இணையான ஒளித்திரிபு எண் கொண்டிருப்பதால் பார்வைக்குப் புலப்படாமல் நீந்துகின்றன.

குளக்கரை

இது குழந்தைகளின் வார்த்தைத் திறனையும் பாதிக்கிறது. வளமையான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை, தன் 4 வயதிற்குள் 45 மில்லியன் வார்தைகளைக் கற்றுக்கொள்கிறது. ஆனால், வறுமைக் குடும்பத்தைச் சேர்ந்த அதே வயதுக் குழந்தை 13 மில்லியன் வார்த்தைகளை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது.

நிழல்களிடையில் மணக்கும் தாழை மடல்

கவிஞர் ஞானக் கூத்தன் சென்ற வாரம் காலமானார். . . 50 ஆண்டு காலத்துக்கும் மேல் தமிழில் கவிதைகளும், இலக்கிய விமர்சனமும் எழுதி வந்த ஞானக் கூத்தன் தமிழ் இலக்கியத்தை உறுதியான நவீனப் பாதைக்கு அழைத்து வந்த சில இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவர். . . 60களில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய தமிழ்க் கவிதை … சமகாலத்தை சமகால மதிப்பீடுகளுடன் பார்க்கத் துவங்கிய நிலை, புத்தித் தெளிவு ஏற்படக் காரணமானவர்களில் ஞானக் கூத்தன் ஓர் அசாதாரணமான சக்தி. . . அவரது கவிதைகளையே பலரும் சிலாகித்துக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். ஒரு விமர்சகராக ஞானக் கூத்தன் அறியப்படவில்லை என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட சிலரின் வட்டத்தைத் தாண்டி அவர் இந்த வகையில் அறியப்படாததற்குக் காரணங்கள் என்னவென்று புலப்படவில்லை. பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில் எழுதியது ஒரு காரணமாகாது. ஏனெனில், அவருடைய கவிதைகளே பெருமளவும் சில நூறு பேருக்கு மேல் படித்திராத சிறு பத்திரிகைகளில் வந்தவைதான். ஆனால், அவற்றின் தாக்கம் அன்றாடச் செய்தித்தாளில் இவர் மறைவுக்கு ஒரு தலையங்கம் எழுதுமளவு விரிந்திருக்கிறது என்று தெரிகிறபோது நமக்கு வியப்புதான் எழ வேண்டும். ஆனால், எல்லா செய்தித்தாள்களிலும் தலையங்கங்கள் வரவில்லை என்பதையும் கவனிக்கலாம்.