இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, 1950- களின் நடுவில் கல்வியே தம் விடுதலைக்கான திறவுகோல் என்பதை வலுவாய் உணர்ந்து கொண்ட ஓரு தலைமுறையின் எழுச்சிதான் அன்று பல பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாகக் காரணமாக இருந்தது. ஆனால், இன்று அதே கல்வி அமைப்புச் சீரழிந்து, கல்வி வள்ளல்கள் வசூல் தந்தைகளாக மாறி, கல்வி நிலையங்கள் கொள்ளையடிக்கிற வணிகக் கூடரங்களாக மாறிவிட்ட நிலையில், கல்வியின் மேன்மையைப் பற்றி ஓரு காலத்தில் சிந்தித்துச் செயலாற்றியவர்கள் இருந்தார்கள் என்கிறது இந்த நாவல்.
Category: இதழ்-152
இரு கவிதைகள்
துளி நீரைத் தண்முகிலாக்கித்
தருக்களால் தாங்கி மழையாக்கும் !
மூளி யிலாமுது நிலத்தைப்
பசுமை கூட்டி இளமையாக்கும் !
கானல் காலங்கள்
தொடர்ந்து நாலு நாள் தூங்கல. டாக்டர் தூக்க மாத்திரை கொடுத்தார். ஏதோ பயந்து இருக்கானு மந்திருசுண்டு வந்து கயறு கட்டிப்பர்தோம். கொஞ்ச நாள் நன்னா இருப்பா; கொஞ்ச நாள் மறுபடி மனசுல வெறுப்பு, பயம், எதிர்மறை எண்ணங்கள். ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னால எல்லாம் யாருக்கும் மன நோய் பத்தி அவ்ளோ விழிப்புணர்வு இல்ல. அலை அலையா மனசுல எழும்பற எண்ணங்களுக்கு அவளால பூட்டு போட முடியல. நிறைய மனநல மருத்துவர்களை பார்த்தாச்சு. மருந்தோட அளவு மாறினால் தூக்கம் தான். அளவு குறைஞ்சா அழுகை.
ஆழம்
கிணற்றில் இறங்கச் சொல்லி அப்பாதான் பழக்கப்படுத்தியது,சின்னக் கிணறில் ஒரு நாள் குளிக்கத் தண்ணி மொள்ளும் போது வாளி அறுந்து விட்டது அப்போது எனக்கு ஒரு பத்து பன்னிரண்டு வயசு இருக்கும் அருகில் இருந்த மற்ற வாளியில் என்னை அமரச் சொல்லி பயந்த என்னிடம் சத்ரபதி சிவாஜி புலி நகம் அணிந்து தப்பி வந்த கதையச் சொல்லி உள்ளே இறக்கியது.
நான் பயத்தில் வாளியில் அமர்ந்து கொண்டு கயிறையும் பிடித்து கொண்டேன். அமர்ந்து இருந்த வாளி கிணற்றில் கிடந்த வாளி அருகே சென்றதும் யானை தும்பிக்கையை நீட்டி வாங்குவது போல் வாளியை ஏந்திக் கொண்டு ஏற்றம் போல் மேலே வந்தேன் சிரித்துக்கொண்டு.
வினைத்திட்பம் + மனத்திட்பம் = லெப்ரான் ஜேம்ஸ்
எல்லோரும் கல்லூரி முடித்த பிறகுதான் என்.பி.ஏ. அணிகளுக்கு ஆடப் போவார்கள். ஆனால், பள்ளிக்கூடத்தில் இருந்து நேரடியாக, வெறும் 19 வயதில் அதிரடியாக க்ளீவ்லாந்து கவாலியர் அணிக்கு லெப்ரான் ஜேம்ஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்தான் ரட்சகர், நமக்குக் கோப்பையைத் தரப் போகும் நாயகர் என்று க்ளீவ்லாந்துக்காரர்கள் உறுதியாக நம்புகிறார்கள். லெப்ரான் ஜேம்ஸும் ஏழாண்டுகளாக க்ளீவ்லாந்து கவாலியர்களுக்காக ஆடிப் பார்த்தார். மற்ற அணிகளின் பணவீச்சுக்கு முன்னால், இவரின் திறமை எடுபடவில்லை. என்னதான் அர்ஜுனன் போல் உயிரைக் கொடுத்து ஆடினாலும், பக்கபலமாக பீமன் தேவை. ரதசாரதியாக கிருஷ்ணர் தேவை. நேரம் பார்த்து நாள் குறிக்க சகாதேவன் வேண்டும். தலைமைப் பொறுப்பெடுத்து வழிகாட்ட தர்மர் வேண்டும்.
ஹெமிங்வேயின் ‘பாலத்தில் ஒரு கிழவன் ’
தனது சொந்த ஊரின் பெயரை தன் வாயால் சொன்னது அவருக்குள் சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த புன்னகைக்கும் அதுவே காரணம். “என்னிடம் சில விலங்குகள் இருந்தன. அவற்றைப் பராமரித்து வந்தேன்.” என்று விளக்கினார். என்ன சொல்ல வருகிறார் என விளங்காமல், “அப்படியோ” என்று மேலும் அவர் சொல்லப் போவதை கவனிக்கத் தொடங்கினேன். “ஆமாம். என் விலங்குகளைக் கவனித்துக்கொண்டு அங்கேயே இருந்தேன். சான் கார்லோஸ் நகரத்தை விட்டு வெளியேறிய கடைசி ஆள் நான்தான்.” அவரின் அழுக்கு படிந்த கருப்பு ஆடைகளையும் புழுதி படிந்த முகத்தையும் மூக்கு கண்ணாடியையும் மீண்டும் ஒருமுறை நோட்டம் விட்டேன். ஆடு மேய்ப்பவராகவோ பண்ணை வைத்திருந்தவர் போலவோ தெரியவில்லை. “என்ன விலங்குகள் அவை?” என கேட்டேன். “வித விதமான விலங்குகள்,” ஆற்றாமையில் தலையசைத்தார்.
கல்லறையின் மீதொரு தேசம் – 2
இந்தப் படுகொலை துவங்கிய முதல் ஆறு வாரங்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இது நாஜிக்கள் யூதர்களைக் கொன்று குவித்ததை விட ஆறு மடங்கு அதிக வேகம். ஏன் இந்த வேகம்? ஹூட்டு அடிப்படை வாத ரவாண்டா அரசுப் படைகள் (Rawanda Government Forces (RGF)) – பால் ககாமேயின் ரவாண்டா தேச பக்த சக்தியை (Rwanda Patriotic Forces (RPF)) அஞ்சின என்பது ஒரு காரணம். முழுமையான போர்க்களத்தில் ககாமேயின் படைகளை எதிர்த்து வெல்லும் என்னும் நம்பிக்கை RGF தளபதிகளுக்கு இல்லை. எனவே, ககாமே கைப்பற்றும் முன், முடிந்த வரை டூட்ஸிகளைக் கொல்வோம் என்பது ரவாண்டா ராணுவத்தின் நிலையாக இருந்தது. RGF இன் இந்த போர்த் தந்திரத்தை, பால் ககாமே தமக்கு மிகச் சாதகமாக உபயோகித்துக் கொண்டார். RGF டூட்ஸிகளைக் கொல்வதில் மும்முரமாக இருக்க, பால் ககாமே, ரவாண்டாவைக் கைப்பற்றுவதில் மும்முரமாக இருந்தார்.
பிரிட்டனின் முடிவு – யாருக்கு வெற்றி?
இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடரவேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்த பிரதமர் டேவிட் காமரன்தான், பிரிட்டன் வெளியேறுவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் என்பது ஒரு நகைமுரண். பிரிட்டனின் பிரதான கட்சிகளுக்கு மாற்றாக வளர்ந்து வந்த வலதுசாரிகளான யூகேஐபி (UK Independence Party) கட்சி உள்ளூர் தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்து வந்தது. யூகேஐபி, பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்த கட்சி. இது ஒருபுறமிருக்க 2013ல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், பிரிட்டன் பொதுத்தேர்தலில் காமரனின் கன்சர்வேட்டிவ் கட்சியை விட, தொழிற்கட்சிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தன. நிலைமை இப்படியே தொடர்ந்தால், தமது கட்சி தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று உணர்ந்த டேவிட் காமரன், ஒரு அதிரடித் திட்டத்தை அறிவித்தார்.
கவிதைகள் இரண்டு
ஆறடிக் குழிக்குள் அடங்கப் போகிறாய் என்று அச்சமூட்டியவர்கள்
ஆன்மாவின் நெடும் பயணம் பற்றிய அறிவற்றவர்கள்
எல்லையற்று விரிந்தோடும் வாழ்தலின் வெளி
மேலே நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வானம்
பயணம் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது.
அமெரிக்கா – 200 வருட குடியேற்ற சித்திரம் ( 1820 – இன்று வரை)
உலகின் வரலாற்றில் மக்கள் தாம் பிறந்த நிலப்பரப்புகளை விட்டு விட்டுப் பல விதங்களில் பிற நிலப்பரப்புகளுக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் பெயர்தலில் அனேக நிலங்களிலிருந்து மக்கள் ஒரு நிலத்துக்குக் குடியேறியது என்பது சிறிதாவது வினோதமானது. இப்படிப்பட்ட குடிபெயர்தல் அமெரிக்காவிற்கு நேர்ந்தது. அமெரிக்கா எனும்போது யு.எஸ் என்று அறியப்படும் “அமெரிக்கா – 200 வருட குடியேற்ற சித்திரம் ( 1820 – இன்று வரை)”
சுற்றுசூழல் புகைப்பட விருது – 2016
(“மனிதனால் ஏற்பட்ட செயற்கை பேரிடர் பாதிப்பு” – இந்திய செய்தி நிறுபர் குமார் ஷந்த், சென்னை கடற்கரையோரம் எடுத்த படம்) அட்கின்ஸ் CIWEN சுற்றிசூழல் விருதுகள் 2016 – தேர்ந்தெடுக்கப்பட்ட பிற புகைப்படங்கள் இங்கே
குளக்கரை
அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் சிரியாவிலிருந்து வந்திருந்தாலும், அவர்களுள் ஆப்கானியரும், ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தோறும் உண்டு. இதில் உண்மையான அகதிகள் யார், பொருளாதார நிலையில் தங்களை உயர்த்திக்கொள்ள வேலை வாய்ப்புத் தேடிவந்தவர் யார் என்று தீர்மானிப்பது ஒரு பிரச்சனை. ஆப்கானிஸ்தான் அமைதி நிலவும் நாடு என்று ஐ.யூ தீர்மானித்துவிட்டதால் அங்கிருந்து வருபவர்களை அகதிகளாகக் கருத மறுக்கிறது. எனவே அவர்கள் வேலை வாய்ப்புத் தேடி வந்தவர்களாகவே கருதப்பட்டு, திரும்பச் செல்லுமாறு வற்புறுத்தப்படுகிறார்கள்.
கம்பனும் சேல்ஸ் மீட்டிங்கும்
குழுக்கள் சிந்தித்து முடிவெடுப்பது வேறு, குழுமச்சிந்தனை முடிவெடுப்பது வேறு. முன்னதில், தனிமனிதர்கள் ஒரே நிகழ்வை வேறு கோணங்களில் சிந்தித்து, தருக்கத்து, நடைமுறைக்கு இணங்கி முடிவெடுக்கும் திட்டம் அடித்தளமாக இருக்கிறது. இரண்டாவது, முன்னதன் மயக்கத்தில் வரும் போலி முடிவுகள். குழுக்களில் மக்கள் உரையாடியிருப்பார்கள். ஆனால், ஒரே கருத்திற்கு முன்முடிவுடனே ஒத்துப் போயிருப்பார்கள். தனியே கேட்டால் ’சொல்லணும்னு நினைச்சேன்.. சரி, எதுக்கு வம்புன்னு விட்டுட்டேன்,’ என்பார்கள். “
கோவர்த்தனமென்னும் கொற்றக்குடை
‘தேனினும் இனிய சொற்களால் நீ உன் தந்தையிடம் கூறினாய்: “இந்திரன்தான் இதற்குக் காரணம் என்பது உண்மையல்ல; அனைத்தும் விதிவசமே! மழைபெய்வதும் மனிதர்களின் அதிர்ஷ்டத்தினால்தான். காட்டுமரங்கள் தங்கள் வளர்ச்சிக்காக இந்திரனைப் பூசை செய்கின்றனவா என்ன?” என்று கேட்டாய். “மாடுகள் ஆயர்களான நமது செல்வம். அவற்றை நன்கு பராமரிக்க வேண்டும். ஆனால் இந்த கோவர்த்தனமலையல்லவா அவைகளுக்கு நல்ல புல்லையும் நீரையும் அளிக்கிறது? பூமியில் வாழும் நல்ல புனிதமான மனிதர்களே பூசைக்கு உகந்தவர்கள்; இந்திரன் போன்ற தேவர்களல்ல,” என்றாய் நீ கிருஷ்ணா!
விம்பிள்டனை எதிர்நோக்கி
இன்று தர வரிசையின் முதல் பத்தில் இருப்பவர்களில், 25 வயதுக்குக் கீழே இருப்பவர் ஒரே ஒருவர்தான். முதல் ஐந்து வீரர்கள் அனைவரும் 28 வயதைக் கடந்தவர்கள். மூன்றாம் இடத்தில் இருக்கும் பெடரருக்கு வயது 34.. ப்யான் போர்க் 11 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வென்று ஓய்வு பெற்றபோது அவருக்கு வயது 26 தான் என்பதைப் பார்க்கும்போது இன்று டென்னிஸ் எவ்வளவு தூரம் வயதானவர்களின் விளையாட்டாகிவிட்டது என்பது தெரியும். அதனாலேயே அதன் பிரபல்யமும் சற்று குறைந்து விட்டிருக்கிறது என்றும் தோன்றுகிறது. 16 வயதில், விம்ப்ள்டனும் 19 வயதில் அமெர்க்க ஒபனும், தன் 20 வயதிற்குள் மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று விட்ட பெக்கர், சாம்பிராஸ், போர்க் போன்ற இளம் வீரர்கள் இன்று எங்கே?
கருவிகளின் இணையம் – பாதுகாப்புப் பிரச்னைகள்: பகுதி- 20
தரவு நஷ்டப் பாதுகாப்பு (data loss prevention) – எந்த ஒரு கருவி இணைய அமைப்பும், புதிய உணர்விகள் சேர்த்த வண்ணம் இருக்கும் என்று நம்பலாம். புதிய உணர்விகளைச் சேர்த்தவுடன், பழைய கருவிகள் அனுப்பும் தரவுகள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கருவி அனுப்பும் தரவும், இன்ன கருவி அனுப்பியது என்று சரியாகச் சொல்லும் வழி இருப்பது அவசியம்
தரவுத் திரள்வுப் பாதுகாப்பு (data aggregation security) – கருவி இணைய உலகில் மிகவும் முக்கியமான பாதுகாப்பு விஷயம் இது.
மகரந்தம்
இங்கு ஐஸிஸி என்பது இண்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட். இது அனேகமாக யூரோப்பியரால் நடத்தப்படும் ஒரு அமைப்பு. இதற்கு இனிமேல் உலகளவில் ஆமோதிப்பு கிட்டாது என்பதை இந்த உகாண்டாவின் அதிபர் தெளிவாகச் சுட்டுகிறார். ஆஃப்ரிக்கர்கள் ஒரு வழியாக யூரோப்பியர்களின் கைப்பிடியில் நசுங்குவதிலிருந்து விடுபடத் துவங்கி இருக்கிறார்கள். இந்தியாவின் இங்கிலிஷ் பேசும் பெரும் மத்திய வர்க்கம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடும் என்று கேட்க வேண்டி இருக்கிறது.
லாங்ஸ்டன் ஹ்யூஸ்- மூன்று கவிதைகள்
எல்லோரும் சொல்வதைக் கேட்டுப் புளித்துப் போனது,
நாளை மற்றுமொரு நாளே
நான் இறக்கும் போது எனக்குச் சுதந்திரம் தேவையில்லை
நாளைய ரொட்டியை நினைத்து என்னால் வாழமுடியாது.
சுதந்திரம்
என்பது ஆழமான விதை
டி—20 கிரிக்கெட்: இந்தியா–ஜிம்பாப்வே தொடர், 2016
இரு அணிகளும் ஆளுக்கொன்றாக வென்றிருந்ததால் தொடர் வெற்றிக்கான மூன்றாவது போட்டி ரசிகர்களிடையே உற்சாகத்தைக் கிளப்பியிருந்தது. இந்த முறை ஜிம்பாப்வே டாஸ் வென்று இந்தியாவை உள்ளே இறக்கியது. துவக்க வீரர் மந்தீப் சிங் மலிவாக வெளியேற கே.எல்.ராகுல் அருமையாக ஆரம்பித்தார். ஆனால் வேகப்பந்து வீச்சாளர் மட்சிவாவின் வெளியே சீறிய ஒரு பந்தை க்ராஸ்-பேட் செய்ய முயன்று தமது ஸ்டம்ப்பின் மீதே திருப்பிவிட்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு பெவிலியன் திரும்பினார். வந்ததும் வராததுமாய் இல்லாத ரன்னுக்காகக் குடுகுடுவென ஓடிய மனிஷ் பாண்டே நேரடித் த்ரோவில் ரன் அவுட்.