ஆரம்ப மடிக் கணினி நாட்களில், இவை அலுவலக மற்றும் இணையத்துடன் தொடர்பில்லாமல் இருந்தன. இவை இணையத்துடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியவுடன், மடிக்கணினியோ, மேஜைக் கணினியோ, எதுவாக இருந்தாலும், இணைய விஷமிகளால், கடத்தப்படும்/தாக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. வெறும் கடவுச் சொல் சமாச்சாரங்கள் உதவாமல் போகவே, எல்லா தொடர்புகளையும் மறைகுறியாக்க முறைகள் மூலம்பாதுகாக்க வேண்டி வந்தது. அடுத்தபடியாக, செல்பேசி, திறன்பேசி போன்ற கருவிகள், இந்தப் பிரச்னையை மேலும் கடினமாக்கின. எளிதில் திருடக் கூடிய விஷயம் இக்கருவிகள். விஷமிகள் கையில் சிக்கினால், பல, மிகவும் அந்தரங்க விஷயங்கள் விஷமியின் கையில் எளிதில் சிக்க, வாய்ப்புகள் உள்ளன.
Category: இதழ்-151
ஒளி ஒரு குறுஞ்சரித்திரம்- பாகம் 2
ஒளி ஒரு மின்காந்த அலை எனில், அது ஏதோ ஒரு ஊடகத்தின் வழியே பரவ வேண்டும் என்று அன்றிருந்த அறிவியலாளர்கள் கருதினார்கள். இந்த எதிர்பார்ப்பு இயல்பான ஒன்றே. இதையடுத்து, ஈதரைக் கண்டறியும் தேடல் துவங்கிற்று. ஈதர் விண்வெளி எங்கும் நிறைந்த, கோள்களும் உடுக்களும் அதனூடே விரையும்போதும் அசையாது நின்ற ஒன்று. ஆல்பஹ்ட் மிஹெல்ஸன் (Albert Michelson:1852-1931) மற்றும் எட்வர்ட் மோர்லி (Edward Morley:1838-1923) இயற்பியலின் மிகப் புகழ்பெற்ற எதிர்மறை சோதனை முடிவுகளை வெளியிட்டபோதுதான் இந்தத் தேடல் முடிவுக்கு வந்தது- அவர்களது ஆய்வுகள் ஈதர் என்ற ஒன்றில்லை என்று உறுதி செய்தன. பூமி ஈதர் எனும் ஊடகத்தில் நகர்வதாக வைத்துக் கொண்டால் பூமிக்கு வெளியே ஒளி பரவும் வேகமும், ஈதரில் நகர்ந்து கொண்டிருக்கும் பூமியில் ஒளி பரவும் வேகமும் வேறுபட வேண்டும். ஆனால் சோதனை முடிவுகள் அவ்வாறு இல்லை என்பதை நிறுவின. எது நகர்கிறதோ இல்லையோ, ஒளியின் வேகம் மாறுவதில்லை. 1905ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஷ்டைன் (1879-1955) முன்வைத்த சார்பியல் சிறப்புக் கோட்பாடு ஈதரின் இருப்பை முழுமையாக நிராகரித்தது. பூரண வெற்றிடத்தில் ஒளி பரவும் என்பதை நிறுவிற்று.
மெய்நிகர்சனம் (VR)
அதற்கடுத்த பதினைந்து வருடங்கள் இத்தொழில்நுட்பத்தின் அற்புத கால கட்டங்கள். அதீத சக்தி கொண்ட கணிணிகள், கைக்கடக்கமாக ஆனால் சக்திவாய்ந்த கைபேசிகள், ஏகமாகசெறிவூட்டப்பட்ட க்ராபிக்ஸ், முப்பரிமாணத் தொழில்நுட்பம், கேமராக்கள் என்று எல்லாம் ஒரே சமயத்தில் கைகூடி வர, சகாய விலையில் இப்போது சிட்டுக்குருவி லேகியம் விற்பதுபோல் ஆளாளுக்கு VR கண்ணாடிகளைச் சந்தையில் இறக்கத் தொடங்கிவிட்டார்கள். நிஜமாகவே அட்டையைப் பயன்படுத்தி சல்லிசாக கூகுள் கார்ட்போர்ட் கிடைக்கிறது. ஸாம்ஸங்கின்VR கண்ணாடி ஆறாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கிறது. … ஆக்குலஸ் (Oculus Rift) என்றமெய்நிகர்சனக் கண்ணாடிக் கருவியை உருவாக்கி சமீபத்தில் சந்தையில் விட்டிருக்கிறார் மார்க். இன்றைய தேதிக்கு சந்தையில் இருப்பதில் அதி நவீனமானது ஆக்குலஸ் ரிஃப்ட்.
மயில் குன்றம்
ஊரில் ரெண்டு கோஷ்டி உண்டு. அந்தப் பகுதி எம் எல் ஏ இதே ஊர்க்காரர் தான். தேரடி தெரு. எப்பவும் வாசலில் நாலு வண்டியாவது அங்கே நிற்கும். அவர் சொல்லும் ஏவல்களை எடுத்துச் செய்ய. குத்து வெட்டு அடிதடி ரகளை. கேட்டால் மாவீரர்கள் என்பார்கள். அடுத்தவன் செல்வன். கொஞ்சம் ஆஸ்திதி பூஸ்திதி உண்டு. பிதுரார்ஜிதம். மாடுகள் வைத்திருக்கிறான். கடவுள் எதிர்ப்பு கொள்கைக்காரன். முன்னோர் சொத்து வேணும். அவர் சொல் வேணாம்… பேச உற்சாகமா இருக்கிறதா இல்லியா? கோவில் உண்டியல்ல போடற பணத்தை எதாவது ஏழை பாழைகளுக்கு உதவி செய்யுங்கள், என்று மேடையேறி சத்தமாய்ப் பேசுவான். சிலருக்கு சாமி வந்தாப் போல ஆவேசமாய் எடுப்பு எடுத்தால்தான் பேசினாப் போல இருக்கிறது. நான் தமிழன்னு சொல்லவே ஆவேசப் பட வேண்டிய அவசியம் என்னவோ? பெரிய லோட்டாவில் காபி கேட்கிற ரகம். இவனுக்கும் சமூகப் பணி என்று சொல்லி பேர் வாங்க கொள்ளை ஆசை. நீங்க எல்லாம் முட்டாள்கள், என்று சொல்லி புகழ் பெற ஆரம்பித்த பின், தேர்தல், வாக்கு என்று போணியாகுமா? என்றாலும் மனுசன் என்றால் ஆசை இல்லாமல் எப்படி?
இரு பள்ளிகள்
கணபதி பிள்ளை சொல்வார்: “ஒரு ஸ்தாபனம் எப்படி நடக்கணும்ணு தீர்மானிக்கிறது அது அமைஞ்சிருக்கிற மண். அந்த மண்ணுக்கு தன் மேலே நடக்கிற விஷயம் மேல நம்பிக்கை இருக்கணும். மண்ணோட நம்பிக்கைக்கு பாத்திரமா மனுஷன் நடந்துக்கணும். திருவள்ளுவர் நிலமென்னும் நல்லாள்னு சொல்றார். மண்ணோட ராசிக்கு அப்புறம் தான் மனுஷனோட ராசி. நாம வானத்தை அண்ணாந்து பார்த்தே பழகிட்டோம். கடவுள் அங்க தான் இருக்கார்ன்னு முடிவு பண்ணிட்ட மாதிரி. விதையை விருட்சமாக்குற கடவுள் ஏன் மண்ணுக்குள்ள இருக்கக்கூடாது.” … மக்கள்ட்டயிருந்து வந்த வருமானத்தை மக்களுக்கே கோயிலா குளமா சத்திரமா திருப்பிக் கொடுத்தான். அப்பப்ப மறந்துடறோம்னாலும் இன்னைக்கும் அவனை நினைச்சுப் பாக்கறோம்”
புத்தக அறிமுகம்: முருகவேளின் ‘முகிலினி’
மூவரின் குடும்பங்களின் மூன்று தலைமுறைக் கதையும், அவர்களோடு இணையும் இன்னும் சிலரது கதையுமே இந்நாவல். இந்த மூன்று பாத்திரங்களையுமே , தமிழகத்தின் முக்கியமான வகை மாதிரிகளாகத் தேர்ந்தெடுத்துப் படைத்திருக்கிறார் ஆசிரியர். மாறிவரும் காலத்தை சரியாகக் கணித்து விவசாயத்திலிருந்து, தொழிற்சாலைக்கு மாறும், காங்கிரஸ் மீது பற்று கொண்ட தேசிய முதலாளி ஆகும் கஸ்தூரிசாமி, திராவிட இயக்கச் சிந்தனைகளின் மீது பற்று கொண்டு, தமிழ்ப் பற்றும் கலை இலக்கிய ஆர்வமும் கொண்ட ஒரு லட்சியவாதியான ராஜு, தொழிற்சங்க நடவடிக்கைகளினால் ஈரக்கப்பட்டு, தொழிற்சங்கத்தின் கட்டுப்பாடு மிக்க வீரரான இடது சாரிப் பார்வைகொண்ட ஆரான் … இந்த மூன்று இயக்கங்களும் தான் தமிழ்நாட்டின் தலைவிதியை சுதந்திரத்துக்கு பின் தீர்மானித்தன எனும்வகையில் …
கருப்புச் சுவர்கள்
லிட்டில் பட்டனுக்கு அவர் பதிலில் திருப்தி இல்லை.”ஜியோ மாமா தன் அறைக்குப் பெயிண்ட் அடிப்பதில் உங்களுக்கு கோபமா?அவர் நல்ல மனிதர். வேடிக்கையானவர். ஒருமுறை என்னை அவர் அறைக்குக் கூப்பிட்டார். மேஜையிலிருந்து சில கார்டுகளை எடுத்தார். மாலையில் வரும் செய்தித்தாளை விட அவை அளவில் பெரியதாக இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். என்னால் எல்லா நிறங்களையும் பார்க்க முடியும் என்று அவர் கார்டுகளை மாற்றி மாற்றி என் கண்ணருகே வைத்தார்.பிறகு என்னிடம் ’உனக்கு இது பிடித்திருக்கிறதா இல்லையா? இது குளிர்ச்சியாக இருக்கிறதா அல்லது உஷ்ணமாக இருக்கிறதா? ஈரமா அல்லது காய்ந்ததா? வாசனையா அல்லது நாற்றமா? இதைப் பார்த்ததும் உனக்குத் தூக்கம் வருகிறதா? அல்லது வெளியே போய் விளையாட ஆசை வருகிறதா? இதைப் பார்த்து என்ன நினைக்கிறாய்? அல்லது எதையும் நினைக்கவில்லையா? இதைப் பார்த்து பயமா அல்லது அமைதியா? இது தாகத்தை ஏற்படுத்துகிறதா இல்லையா? உனக்கு இதைப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா? என்று வரிசையாகக் கேட்டார் . நான் சொன்ன எல்லா பதில்களையும் எழுதிக் கொண்டார். பாருங்கள்! அவர் எவ்வளவு வேடிக்கையானவர்! நீங்கள் என்னை நம்பவில்லையென்றால் அவர் அறைக்குப் போய் நீங்களே போய்ப் பாருங்கள் ! என்று நீண்டதாக நினைத்தபடி தனக்குள் சொல்லிக் கொண்டான்.
திருப்பாவையின் மறைபொருள்
பாசுரங்களுக்கு மேல்பூச்சான பொருளை நோக்கினால் பெண்களை எழுப்புவதுபோல் தோன்றினாலும், மறைமுகமான ஆழ்ந்த பொருளை நுணுகிப் பார்த்தால் ஒவ்வோர் ஆழ்வாரையும் எழுப்பி அவர்களின் அருள் வேண்டுவதை நாம் உணரலாம்.
இமயத்துக்கு அருகேவரை ஒரு இனிய பயணம்
வழியெல்லாம் பெருமலைகள் ஆபத்தான பள்ளத்தாக்குகள் என்பதால் வெயிற்காலங்களில் வரும் சுற்றுலாப்பயணிகளிடமிருந்து தப்பித்து நிற்கின்றது முன்சியாரி. ஊரை நெருங்கும்போதே தெரிந்துவிடுகிறது, இது உத்தராகண்டிலிருந்தும் தனித்து நிற்கும் பிரதேசம் என்று.
செயற்கை நுண்ணறிவு (AI)
நாம் செயற்கை நுண்ணறிவு என்பதை சரியாகத் தான் அணுகிக் கொண்டிருக்கிறோமா என்று அடிப்படைகளையே அசைத்துப் பார்க்கின்ற எதிர்த் தரப்புக் கருதுகோள் உள்ளது. மனிதனின் மூளை ஒரு கணினியைப் போன்றது என்று எங்காவது யாராவது சொல்லக் கேட்டிருப்பீர்கள். இது உண்மையான கூற்றுத்தானா என்பதே ஒரு சாரார் எழுப்பும் கேள்வி. கணினியானது, அறிந்து கொள்ளும் அனைத்தையும் தகவல்களாக (“பைட்டுகளாக”) மாற்றிச் சேமித்து, தேவைப்படும் போது அணுகி வெளிக்கொணர்கிறது. ஆனால், நமது மூளை, இப்படித் தகவல்களைச் சேமித்து வைப்பதில்லை, அது அறிந்து கொள்ளும் செய்திகளுக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்கிறது என்பது மாற்றுத் தரப்பு. நாம் கேட்ட ஒரு கதையை நாம் வேறொருவரிடம் மீளச் சொல்லும் போது ஒவ்வொரு முறையும் சிற்சில தகவல்கள் மாறூவது, இன்னும் இது போன்ற சில சோதனைகளைக் கொண்டு இப்படிக் கருதுகிறார்கள்.
மெய்நீட்சி (AR): இல்லை, ஆனால் இருக்கு
நீங்கள் வாசிக்கும் செய்தித்தாளில், இந்தியப் பிரதமர் பாராளுமன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு பற்றிய கட்டுரை வந்திருக்கிறது என்றால், அந்தக் கட்டுரைக்கு ஒரு QR குறியீடு இருக்கும். அதன் திசையில் உங்கள் நுண்ணறிப்பேசியை காட்டினால் பிரதமரின் சொற்பொழிவு பற்றிய விவாதங்களையோ, அல்லது சொற்பொழிவின் காணொளிக் காட்சியையோ பார்க்கலாம். … மெய்நீட்சி பொதுமக்களிடம் பிரபலம் அடைந்தது தொலைக்காட்சியில் தான். உதாரணமாக கிரிக்கெட் ஒளிபரப்பில் ஹாக்-ஐ (hawkeye) என்றொரு தொழில்நுட்பம் உண்டு. பேட்ஸ்மேனின் காலில் பட்ட பந்து ஸ்டம்ப்பை அடித்திருக்குமா என்று கணிக்க உதவும் தொழில்நுட்பம். பந்து காலில் படும் காட்சியை வைத்துக்கொண்டு, பந்தின் போக்கு (trajectory) எப்படி இருந்திருக்கக்கூடும் என்று வரைபடம் இட்டுக்காட்டும். அந்த வரைபடத்தின் மூலம் பேட்ஸ்மேன் ‘அவுட்’ அல்லது ‘அவுட் இல்லை’ என்று அம்பயர் தீர்ப்பளிப்பார்.
நிறப்பிரிகை
உண்மையில் அது வரையில் அந்தப் பெண்ணோ, என் வகுப்பில் வேறு யாருமோ என்ன ஜாதி என்ற கேள்வி ஒரு போதும் என் மனதில் வந்ததேயில்லை. ஜாதிகள் பல உண்டு என்பது தெரியும். ஒவ்வொருவரும் பேசுகிற மொழிக் கொச்சையும், சாப்பிடுகிற சாப்பாட்டின் ருசியும், பழக்க வழக்கங்களும் வேறு வேறு என்று தெரிந்ததே தவிர, அதனால் மனிதர்களை வேறு வேறு மாதிரி நடத்த வேண்டும் என்றோ, நினைக்கவேண்டும் என்றோ தோன்றியதேயில்லை.
‘அது’கள்
செல்பேசித் திரையில் அரும்பிய தகவலைப் பார்த்துச் சிரித்தாள் ஆஷா. ஓர் இனம் புரியாத சந்தோஷம். ’அது’ அனுப்பிய மின்னஞ்சல். “லட்சுமி, ஸ்டார்ட் ஆயிடு.” என்று ரஜினி காரிடம் பேசிப் பார்த்திருக்கிறோம். கார் நம்மிடம் திருப்பிப் பேசும் காலம் வந்து விட்டது. மிகச் சமீபத்தில் வாங்கிய அவளுடைய கார். அவ்வப்போது தன் நிலவரம் குறித்து மின்னஞ்சலோ, குறுஞ்செய்தியோ அனுப்புகிறது. டயரில் காற்று குறைந்தால் ஆஷாவுக்கும், தலை போகிற பிரச்சனையாயிருந்தால் நேரடியாக சர்வீஸ் டீலருக்கும் தகவல் அனுப்பி விடுகிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை கம்ப்யூட்டர் என்றால் இயந்திர மனிதன் என்றே…
முகமது அலி
இன்றைக்கு ‘கதம்பத் தற்காப்புக் கலை’களில் (Mixed Martial Art) வீரர்கள் வீசத் துடிக்கும் நங்கூரக் குத்தின் (Anchor punch) பிதாமகன் முகமது அலி. கிட்டத்தட்ட தலையில் கொட்டுவது போன்ற பாவனையில் நேராக வீசப்படும் குத்து. முதன்முதலில் இந்தக் குத்தினை முகமது அலியிடமிருந்து தாடையில் வாங்கி வீழ்ந்தவர் சன்னி லிஸ்டன். ஆண்டு 1965. எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதான தோற்றத்தை உண்டாக்கி எதிரியை அழைத்து, எதிரி தாக்குவதற்கு வந்தவுடன் அதிவேகமாக எதிரியைத் தாக்கி வீழ்த்தும் வியூகம் இது. இந்த வீச்சில் முகமது அலி, அவரேகூட தனது குத்து இத்தனை வேகத்தில் வீசப்பட்டிருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை, காரணம், தான் குத்தினை வலக்கரத்தால் வீசிய பின் தனது எதிராளி …
அவதானத்தின் அறிவியலை அறிய வேண்டாமா?
ஒரு காலகட்டத்தில் ஊருக்கு ஊர் சதாவதானிகளும் சோடசாவதானிகளும் இருந்த நிலை துரதிர்ஷ்டவசமாக மாறி, இவர்கள் ஒரு அரிய மானுட வர்க்கமாகி விட்டார்கள். இந்த அவதானக் கலைகளை பயில எவ்விதமான பயிற்சிகள் … ஒருவர் அஷ்டாவதானமோ தசாவதானமோ செய்யும் போது அவரது மூளை நியூரானிய இயக்கங்கள் செயல்படும் விதம் இவ்வித நவீன கருவிகளால் அறியப்பட்டால் மானுட மனதின் அதி ஆழ செயல்பாடுகள் குறித்த ஒரு சித்திரம் நமக்கு உருவாகலாம். அவதான நிகழ்வுகளின் போது ஏன் தொடர் இறைநாம உச்சரிப்பு ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது? ஒருவித மாற்று பிரக்ஞை தளத்திற்கு (altered state of consciousness) அவதானியை அழைத்து செல்லவா? அதன் மூலம் அவரது நுண்ணறிவுத் திறன்கள் அதிகரிக்கின்றனவா? அப்படி இருக்கலாம் என கருதத்தக்க ஒரு கருத்தை செய்குத்தம்பி பாவலரே சொல்லியிருக்கிறார்: “அவதானத்திற்கென்று மேடை ஏறிவிட்டால் ஒரு தனி உணர்வு உடலை எழுப்பும்; உள்ளத்தை மலரச்செய்யும்; அறிவை ஒளிரச் செய்யும்.; பிறகே என் வாயினின்றும் சொற்கள் வெளிவரும். அவ்வாற்றல் எங்கிருந்து வருகிறது என்று சொல்ல இயலாது.” … இவ்வாறு பன்மை நுண்ணறிவு மேலோங்கிய ஒரு மாற்றுப் பிரக்ஞை தளத்துக்கு செல்லும் அறிவியல் ஒன்று நம் கல்வி மரபில் பரவலாக இருந்திருக்கிறதா? அதன் நிகழ் கலை வெளிப்பாடுதான் அவதான நிகழ்ச்சியா?
குளக்கரை
அறிவியல் பூர்வ முறைகளை கையாளாமல், விலங்குகளைக் கொன்று குவிக்க இந்திய அரசாங்கம் அனுமதி தந்துவிட்டது என்கிறது இந்தக் கட்டுரை. குறிப்பிட்ட வனவிலங்கானது என் பயிரை பாதிக்கிறது என விவசாயிகள் சொன்னதாகச் சொல்லி, அந்த வனவிலங்கை “பயிர் அழிப்பான்” என்று மாநில அரசு பட்டியல் இட்டு விடுகிறதாம். இந்த பட்டியலுக்குள் வந்த வனவிலங்குகளைக் கொல்வது சட்டப்படி தவறு இல்லையாம். இப்படிப் பட்டியலிடப்பட்ட வனவிலங்குகள் இந்தியாவில் மட்டுமே காணப்படும் நீல்கை மான், காட்டுப் பன்றி, மற்றும் ரூஸஸ் குரங்கு வகைகள். இந்த பிராணிகளின் எண்ணிக்கையையோ, இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் ஏற்பாடும் சூழல் பாதிப்புகளையோ அரசு கண்டுகொள்ளவில்லை என்கின்றனர் பிராணிகள் நல அமைப்பினர்.
செழிப்பை நல்கிய குரூரக் கப்பல்கள்- மணிலா காலியன்கள்
பெர்க்லி வரலாற்றாசிரியர் ஜான் டீவ்ரைஸ், 580 லிருந்து 1795 வரையான காலத்தில் இரண்டு மில்லியன் ஐரோப்பியர்கள் கடல் வாணிபத்தில் ஈடுபட்டார்கள் என்று கணக்கிட்டுகிறார். அவர்களில் 920,412 பேர் உயிர்தப்பி இருக்கிறார்கள். ஐம்பத்துநான்கு சதவிகிதம் கடற்சமாதிதான். டீவ்ரைஸ், ஒவ்வொரு 4.7 டன் பொருட்கள் ஐரோப்பா சேர ஒரு மனித உயிரை பலிகொடுத்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். கூடவே, சென்ற ஒவ்வொரு நாட்டிலும், பல்வேறு வியாதிகளை ஐரோப்பியர்கள் பரப்பி இருக்கிறார்கள், கடும் வன்முறைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். அதனால் ‘கண்டுபிடிக்கப்பட்ட’ வேற்றுநாட்டவர்கள் அடைந்த துயரம் கப்பல் பயணங்களை விட கொடூரமானவை. இந்தத் கொடூரங்களும், பெரும் துன்பங்களும், மாலுமிகளின் உயிர்களுமே நாமிருக்கும் இன்றை உலகத்தைச் செதுக்கியவை.
மகரந்தம்
கிளவுட்ஸ் ஆஃப் சில்ஸ் மரியா (Clouds of Sils Maria) என்னும் படமும் ஸ்விட்சர்லாந்தில் படமாகிறது. தில்வாலே துல்ஹானியா லெ ஜாயேங்கே (Dilwale Dulhania Le Jayenge – DDLJ)வும் ஸ்விஸ்ஸில் படமாகிறது. எந்தப் படத்திற்கு பனிச்சறுக்கு மலையின் உச்சியில் ஆளுயுர பிரும்மாண்ட கட் அவுட் வைத்திருக்கிறார்கள்? விடையை மேலே பார்த்திருப்பீர்கள். இருநூறு படங்களுக்கு மேல் இங்கே படமாகியிருக்கின்றன. ஏன்? காஷ்மீர் பிரச்சினை காரணமா அல்லது வெள்ளைத் தோல் கொண்டவர் நமக்கு சிப்பந்தியாக அடிபணிவது காரணமா என்னும் கேள்விகளை இந்தக் கட்டுரை எழுப்புகிறது. உள்ளூர் சிம்லாவில் படப்பிடிப்பை வைத்தால், கால்ஷீட்டை மட்டும் கொடுத்துவிட்டு டிமிக்கி தருபவர்களை மலைப் பிரதேசங்களுக்குக் கொண்டு சென்றால், நாயகன் / நாயகி காணாமல் போகும் தொல்லையில்லாமல் …
பவளவாய் முறுவல் காண்போம்
நாரயணீயத்தை இயற்றிய நாராயண பட்டத்ரி, உபநிடதங்களே கோபகன்னிகைகளின் வடிவில் கிருஷ்ணனைச் சூழ்ந்து நிற்கின்றன எனக்கூறுகிறார். ‘அக்ரே பச்யாமி,’ எனத்துவங்கும் நாரயணீயத்தின் கடைசி தசகம். … குழந்தைகள் பாலப்பருவத்திலிருந்து யௌவனப்பருவத்தில் அடியெடுத்து வைக்கும்போது அலாதிஅழகு படைத்தவர்களாகக் காணப்படுவர். குழந்தை கிருஷ்ணனும் அதற்கு விதிவிலக்கில்லை! இந்தப்புதிய எழில் தோற்றத்தை ‘ஆர்த்ர யௌவனவனம்’- புதியதான இளமை எழில் எனப்போற்றுகிறார். ‘அது மன்மதனை வெல்லக்கூடிய அழகுடையது; மேகக்கூட்டங்களின் தொகுப்பு போன்றது; பிருந்தாவனப் பெண்களிடத்தில் அன்புபூண்டு விளங்குவது; ஆபரணங்களை அணிந்து புன்முறுவல்கொண்ட தாமரைபோன்ற முகத்தையுடையது; கோவைப்பழம்போன்ற உதட்டை உடையது; அதனை நான் வணங்குகிறேன்,’ என்கிறார்.
விட்டுச் செல்வோர்
லீலா ஒரு பெண் மீமனுஷி (Übermensch). பொய்க் கடவுளரைப் பொறுக்க மாட்டாதவள். அந்த நகரில் சௌக்கியமான வாழ்க்கையை ஆபத்தில்லாத முறையில் பெறுவதை உறுதி செய்ய உதவும் கருத்தியலாக அது இருந்த போதும், ஃபாசிஸத்தை விலக்குகிறாள்- சிறுமியாக இருந்த போது, மார்ச்செல்லோ ஸோலாராவின் கழுத்தில் கத்தியைப் பதிக்கிறாள், அவனோ நகரில் அனைவரும் அடிபணியும் ஃபாசிஸ்டுகளின் மகனாக இருக்கிறான். தன் ஒரே அரசியல் உரையைத் துவக்குகையில் உழைக்கும் வர்க்கம் என்பது பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கிண்டலோடு துவங்கும் அவள் கம்யூனிசத்தையும் ஒதுக்குகிறாள், இவளை மிக்க மதிப்போடு பார்க்கிறார்கள் என்ற போதும் அதன் சார்பாளர்களை ஏளனமாகப் பார்க்கிறாள். புத்தித் தெளிவு கொடுப்பதற்கு வழி என்று கல்வியைப் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் கருத்தையும் ஒதுக்குகிறாள்- எலீனாவின் ஆசிரியரிடம் இவள் சொல்வது இது: “உங்களைப் போலப் பேராசிரியர்கள் கல்வியை இத்தனை தூரம் வலியுறுத்துவது ஏனென்றால், அதன் மூலம்தான் நீங்கள் பிழைப்பு நடத்துகிறீர்கள், ஆனால் படிப்பதால் ஒரு பயனும் இல்லை, அது ஒருத்தரை மேம்படுத்துவது கூடக் கிடையாது- இன்னும் சொன்னால் அது ஒருவரை கெடுமதியாளனாகத்தான் ஆக்குகிறது.” கடைசியாக தீவிர பெண்ணியத்தையும் ஏற்கவில்லை, ஏனெனில் அது மறுதலிக்கும் பல விஷயங்களில் நெருக்கக் குடும்பமும் இருக்கிறது. காதலனான நீனோ சார்ரடோர்ரெக்காக எலீனா தன் கணவனையும், குழந்தைகளையும் விட்டு நீங்க முடிவெடுக்கும்போது லீலா வெடிக்கிறாள். லீலாவைப் பொறுத்தவரை இது விடுதலை இல்லை, முட்டாள்தனம்:
பிரக்ஞையை அளவிடுதல்
வெகுஜன தளத்தில் அறிவியல் போக்குகளை அறிமுகப்படுத்துவதில் மிஷியோ காகு பிரபலமானவர். பிரக்ஞையை குறித்து அவரது ஒளித்துண்டு இங்கே. Michio Kaku: Consciousness Quantified
விலங்குகளின் தருணங்கள்
விலங்குகளின் தருணங்களை அழகாக காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் இவை. ட்ரோன்களை குறித்து விவாதங்கள அறியாத கழுகு அதை கையாளும் அந்தப் புகைப்படம்!