ரஸ்கான் குறித்து எழுதப் படும் சில ஆங்கிலப் பதிவுகளில் அவரை ஒரு சூஃபி என்பதாக சித்தரிக்கிறார்கள் (ஹிந்தியில் அவ்வாறு எழுதினால் அது நகைப்புக்குரியதாகக் கருதப் படும்). இதைவிடவும் மோசமாக, கிருஷ்ணபக்தி என்பது சூஃபியிசத்தின் ஒரு பிரிவு என்று தொனிக்கும் வகையில் Krishnite Sufi என்று அடைமொழி வேறு கொடுக்கப் படுகிறது. இது மகா கொடுமை. பக்த சிரோமணியான ரஸ்கான் கோஸ்வாமி விட்டலதாஸரிடம் வைணவ தீட்சை பெற்றவர். அவரது ஆன்மீக வாழ்வு முழு முற்றாகவே வல்லப சம்பிரதாயத்தின் கிருஷ்ணபக்தி மரபுக்குள் வருவது. அதில் சூஃபியிசத்தின் நிழல் கூடக் கிடையாது.
Category: இதழ்-149
உங்களைப் போல் கணினியை யோசிக்க வைப்பது எப்படி?
நிஜ உலகில் தற்சார்பற்ற உண்மை இருக்கிறது; அதற்கு மாற்றாக, எதிர்ப்பதமாக – உங்களுக்கு மட்டுமேயான உண்மைகளும் இருக்கிறது. உதாரணத்தில் இதைப் பார்ப்போம். தமிழில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது தற்சார்பற்ற உண்மை. உலகிலேயே அதிசிறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜா மட்டும்தான் என்பது எனக்கு மட்டுமே தோன்றும் நிதர்சனமான உண்மை. தோனி இன்றும் நன்றாக, ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது புறவய அணுகுமுறை.
ராணுவ மற்றும் பாதுகாப்பு உலகம்
சாதாரணர்கள் இன்று பயன்படுத்தும் விடியோ காமிராக்கள், ராணுவ பயன்பாடுகளின் பாக்கியாகும். ராணுவப் பயன்பாடுகள் பெரும்பாலும் மிகவும் சக்தி வாய்ந்த விடியோ காமிராக்கள் (பின் லாடெனைக் கண்காணித்த வகை) மற்றும் அகச்சிவப்பு காமிராக்கள் (infrared cameras). மேலும், பலவகை உணர்விகளை ராணுவப் போர் விமானங்கள், மற்றும் ஊர்த்திகள் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளன. தானியங்கி பறக்கும் ஊர்த்திகளில் பெரும்பாலானவை கண்காணிப்பு வகையைச் சேரும். இவற்றில் சக்தி வாய்ந்த காமிராக்கள், படம் பிடித்து ஒரு கட்டுப்பாட்டு மையத்திற்கு டிஜிட்டல் தரவுகளாக அனுப்பிய வண்ணம் பறக்கும். இவற்றைத் தவிர, பூமிக்கு மேலே பறக்கும் ராணுவ செயற்கைக் கோள்கள்…
மகரந்தம்
சித்திர நாவல் என்பதே ழானர்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அவற்றுள்ளும் இலக்கியம் என்ற பெரும் ஆற்றில் கலக்கக் கூடிய திராணி உள்ள நாவல்கள் சில உண்டு. பெருமளவும் நாயக வழிபாட்டை மையமாகக் கொண்ட அதிபுனைவு நாவல்களாகவே இருக்கிறன. ( தோர், ஸ்பைடர்மான், ஃபாண்டாஸ்டிக் ஃபோர், அவெஞ்சர்ஸ் இத்தியாதி நாவல்கள் இவை). இவை தவிர சமீபத்துப் பத்தாண்டுகளில் வேறு வகை சித்திர நாவல்கள் வரத் துவங்கி உள்ளன. இவற்றில் சில வாழ்க்கைக் குறிப்பு நாவலகள், சில வரலாற்று நாவல்கள்- வரலாறு என்றால் கத்தி, குதிரை, படையெடுப்பு, வீரசாகசங்கள் என்றில்லை. ஒரு நாவல் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் விட்கென்ஷ்டைனும் பிரிட்டிஷ் சிந்தனை மரபில் ஒரு காலகட்டத்தில் எப்படி பரஸ்பரம் கருத்துப் பகிர்ந்து கொண்டார்கள், வைட் ஹெட் எனும் தத்துவாளரும், ரஸ்ஸலும் எப்படி இணைந்து சில புத்தகங்கள் எழுதினார்கள் என்பன போன்ற சிந்தனை வளர்ச்சி வரலாறை மையமாகக் கொண்ட புத்தகம்.
சதுரம்
சில ஆண்டுகளுக்கு முன்பு, எண்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களைப் பற்றி, அட்டம், சப்தம், அறுமுகம், பஞ்சம் என நான்கு கட்டுரைகள் எழுதினேன். ‘தமிழினி’ மாத இதழ் அவற்றை வெளியிட்டது. விஜயா பதிப்பக வெளியீடான ‘சிதம்பரம்’ எனும் கட்டுரைத் தொகுப்பில் அவற்றைக் காணலாம். அந்தக் கட்டுரைகளின் தொடர்ச்சிதான் ‘சதுரம்’ எனும் இந்தக் கட்டுரையும்.
இந்தக் கட்டுரைகள் சொல் தேடல், தகவல் தேடல் அன்றி வேறல்ல. கோட்பாட்டுச் சிக்கல்கள், சம்பவ முரண்கள் என்று எதுவுமே இங்கு காணக் கிடைக்காது. இவற்றுள் எதுவும் ஆய்வுகளோ, கண்டு பிடிப்புகளோ அல்ல. பெரும்பாலும் பேரகராதி, நிகண்டுகள் என்பனவற்றுக்குக் கடமைப்பட்டுள்ளேன்.
மா.அரங்கநாதனின் "சித்தி"
சுத்த சைவமே சிவம் எனக்கொள், ஆடலும் ஆடுபவனும் வேறல்ல (கடவுளும் கந்தசாமிப்பிள்ளை) என சைவத்தின் முக்கியமான தத்துவம் செய்யும் செயலும், செய்பவனும் ஒன்றாக ஆகிவிடும் தருணம். கதையில் கருப்பனும் அப்படியே ஓட்டமாகவே இருக்கிறான். இடம் பொருள் தெரியாது ஓட்டத்தின் விதிகளைப் பற்றிய அக்கறையற்று ஓடுகிறான். அவனுக்கானப் பெயர், அவன் புழங்கும் ஊர் எதையும் ஆசிரியர் குறிப்பிடுவதில்லை. அவன் ஒரு செயலாக மட்டுமே இருக்கிறான்.
கல்லறையின் மீதொரு தேசம் – 1
”ஹைதர்”, விஷால் பரத்வாஜின் ஒரு முக்கியமான திரைப்படம். கஷ்மீரிகளின் தனி வாழ்வில், அரசியல் ஊடும் பாவுமாகப் பின்னிச் செல்வதை உணர்வுப் பூர்வமாகச் சொல்லும் திரைப்படம். காதலியின் சகோதரன், சண்டையில் கொஞ்சமும் எதிர்பாராத முறையில், காதலனின் கரங்களால் கோரமாகக் கொல்லப் பட, காதலியின் மனம் பேதலித்துவிடுகிறது. அவள் திண்ணையில் அமர்ந்து, காலமும், இடமும் மறந்து, மனதை உலுக்கும் சோகப் பாடலொன்றைப் பாடத் துவங்குகிறாள். பலநாட்கள் மனத்தை அதிரச் செய்த காட்சி அது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அக்காட்சியை, நேரில் காண்பேன் எனக் கனவும் கண்டதில்லை.
அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்
தன் சின்னக்குழந்தையை வாசனைத்தைலத்தைப் பூசி, நறுமணப்பொடியால் தேய்த்து நீராட்டினாள் யசோதை; அவனுடைய பசியால் குழைந்த வயிறுநிரம்பப் பாலையும் ஊட்டிவிட்டுத் தொட்டிலில் கண்வளர்த்தினாள்; குடத்தை எடுத்துக்கொண்டாள்; பக்கத்து மனைப்பெண்டிருடன் யமுனைநதியில் போய் நீராடிவரலாம் என்று சென்றுவிட்டாள். வெகுநேரம் ஒன்றும் ஆகவில்லை; அவள் திரும்பிவந்து பார்த்தபோது, பாரம் மிகுந்த வண்டி ஒன்றினை முறியுமாறு- சகடாசுரனை- கால்களால் உதைத்துக் கொன்றிருக்கிறான் இக்குழந்தை. இதென்ன, சின்னக்குழந்தை செய்யக்கூடிய செயலா? விக்கித்து நிற்கிறாள் யசோதை. அக்கம்பக்கத்தவர்களின் வியப்பொலிகளும், மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தோய்ந்த கூக்குரல்களும் அவள் உள்ளத்தில் எழுச்சியையும், இனமறியாத பயத்தையும் எழுப்பிவிட, ‘அட! இவன் தெய்வாம்சம் பொருந்தியவன்,’ என்று புளகாங்கிதம் கொண்ட நினைப்பினூடேயும், ‘நல்லவேளை! குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லையே!’ எனும் தாய்ப்பாசம்தான் தலைதூக்குகின்றது. ‘என் கண்ணா! தெய்வமே!’ என உடனடியாகக் குழந்தையை -தன் நெஞ்சில் வைத்துக் காப்பாற்றுவதுபோல- வாரியணைத்துக்கொண்டு விசும்பச் செய்கிறது!
ஒரு சுவர் குட்டிச்சுவரானது
தூண்களுக்கு இருபக்கத்திலும்; துணையாக வீட்டடின் கௌரவத்தை பாதுகாக்கும் மதில்கள்., அந்த மதிலுக்கு; வயது முப்பதுக்கு மேல் இருக்கும். அதன் அகலம் மட்டும் சுமார் ஆறு அங்குலம.; உயரம் ஆறடி. கருங் கற்களால் அத்திவாரமிடப்பட்டுக் கட்டப்பட்டது அந்த மதில். ஒரு கோட்டையின் அரண் போல் ஒரு காலத்தில் தோற்றமளித்தது. சாதாரணமான தற்போதைய சுவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதற்கு தான் உயர்ந்தவன், பெலமானவன், முதிர்ந்தவன் , அகண்ட மனம் உள்ளவன் , அனுபவசாலி என்ற பெருமைகள் வேறு. அதோடு கூட கேட் முதலியார் வீட்டிற்குப் பாதுகாப்பு கொடுக்கும் கம்பீரம் கூட அதன் அமைப்பில் தெரிந்தது. அவ்வளவு உயரத்துக்கு மதிலை முருகேசம்பிள்ளை கட்டுவதற்கு அவரது வயது வந்த அழகான மகள்களும் ஒரு காரணம். களுசரைப் பெடியன்கள் தன் இரு பெண்களை பார்த்து கண் அடிக்கக் கூடாது என்பதும் அக் காரணங்களில்; ஒன்றாக இருந்திருக்கலாம்.
எங்களுக்கு ஒரு பெரியப்பா இருந்தார்
பெரியப்பா என்றால் அப்பாவின் சித்தப்பா பையன். அவர் நாங்கள் வசித்த நகரத்திலிருந்து 10,15 மைல் தூரத்தில் இருந்த ஒரு சின்னக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியராக இருந்தார். அனேகமாக, எல்லா வாரங்களிலும் சனிக்கிழமையோ ஞாயிற்றுக்கிழமையோ எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் எத்தனை முறை வந்தாலும், எத்தனை அடிக்கடி வந்தாலும் அவரது வருகை எங்களுக்கெல்லாம் ஒரு உல்லாசத்தையும், விடுதலை உணர்ச்சியையும், சொல்லவொண்ணா சந்தோஷத்தையும் ஒவ்வொரு முறையும் அளித்தது. இத்தனைக்கும் அவர் எங்களுக்கு ஒரு ஆரஞ்சு மிட்டாய் கூட வாங்கி வந்தது கிடையாது. அவருடைய பொருளாதார நிலை அப்படி. ஆனால் அது ஒரு பொருட்டாகவே தோன்றியதில்லை. அவர் எங்களுக்குச் சமமாக ஒரு சிறுவர் உலகத்தில் எப்பொழுதும் இருந்ததுதான் எங்களுக்கு அவர் மேல் இருந்த ப்ரியத்துக்கு காரணம் என்று தோன்றுகிறது.
மூன்று துறவிகள்
‘’ஒருவர் குள்ளமாக முதுகு வளைந்து இருப்பார்; ஒரு மதகுருவுக்குரிய அங்கியை அணிந்திருக்கும் அவர் மிக மிக வயதானவர்;அவருக்கு நிச்சயம் நூறு வயதுக்கு மேல் இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.வெண்மையான அவரது தாடியில் கூட இலேசான பச்சை நிறம் படர ஆரம்பித்து விட்டது,அவ்வளவு வயதானவர் அவர்;ஆனால் எப்போதும் ஒரு புன்முறுவலுடனேயே அவர் இருப்பார்; அவரது முகம் அப்போதுதான் சொர்க்கத்திலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்த தேவதையின் முகம் போன்ற பிரகாசத்துடன் இருக்கும்.இரண்டாமவர் உயரமானவர்;அவரும் கூட வயதானவர்தான்.அவர் குடியானவனைப் போன்ற கிழிசலான ஆடைகளை உடுத்தியிருப்பார்.அகலமான அவரது தாடி பழுப்புக்கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.அவர் நல்ல வலுவானவர்.நான் அவருக்கு உதவி செய்ய வருவதற்குள் ஏதோ ஒரு பாத்திரத்தை நிமிர்த்துவதைப் போலத் தனியாகவே என் படகை நிமிர்த்தி வைத்து விட்டார் அவர்.அவரும் கூட அன்பானவர்;கலகலப்பானவர். மூன்றாமவர் உயரமானவர்;பனியைப் போன்ற வெண்மையான அவரது தாடி அவரது முழங்கால் வரை நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும்.உரம் படைத்த அவரது கண்ணிமைகள் சற்றே முன் துருத்தியபடி தொங்கிக் கொண்டிருக்கும்.;தன் கழுத்தைச் சுற்றித் தொங்க விட்டிருக்கும் ஒரு பாயைத் தவிர வேறு எதையும் அவர் அணிவதில்லை’’
இர.மணிமேகலை, கு.அழகர்சாமி கவிதைகள்
‘கட்டத்துக்குள் அடி’ என்பார்
டீச்சர்.
குழந்தை
மறுபடியும் கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே
மீன் நகர்ந்திருக்கும் நீந்தியென்று.
தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
கட்சி மாநாட்டுக்குச் சென்று திரும்பும் பரமசிவம் பிள்ளை. தனது இரண்டாவது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு வந்து நிற்கும் சுந்தரம். விரதச் சாப்பாட்டுக்காக மகள்கள் வீட்டுக்குச் சென்று சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு சாப்பிடாமலேயே திரும்பிவந்து பழைய சோற்றை சாப்பிட உட்காரும் சின்னத்தம்பியா பிள்ளை.
யாரிந்த ட்ரம்ப்? ஏனிந்த கொலைவெறி!!!
ஜார்ஜ்புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் தீவிரவாத அச்சுறுத்தல்கள், ஆப்கானிஸ்தான், ஈராக்கில் அமெரிக்கப்படைகளின் போர் நடவடிக்கைகள், இரட்டை கோபுரத்தாக்குதல், விமான நிலயங்களில் திடீர்திடீரென ரெட் அலர்ட், வீண்வதந்திகளினால் பதற்றம் என மக்களிடைய ஒருவித அச்ச உணர்வு மேலோங்கியே இருந்தது. போதாதகுறைக்கு பொருளாதார பின்னடைவுகள், வேலையில்லா திண்டாட்டம்,கேட்ரினா புயலினால் ஏற்பட்ட சேதங்கள் என எல்லாம் சேர்ந்துகொள்ள, மக்கள் புதிய தலைமையை, நம்பிக்கையை எதிர்பார்த்தனர்.
பாம்பு வேட்டை
பழக்கமில்லாத வெய்யிலும் எதையும் கவனிக்காத மனிதர்களும் அவனுக்கு மிக அன்னியமாக இருந்தன. யாருக்கும் நகரத்தின் தெருப்பெயர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனக் கண்டடைந்தவுடன் தெரு முனையில் இருந்த பெயர்ப் பலகைகளைக் கொண்டு அவனே தேடி அடையாரில் இருந்த ஒரு சின்னக் கடைக்கு வந்தான். தட்டச்சு செய்து கொடுக்கும் கடைமுதலாளி சிங்காரம் அண்ணன் அவன் நினைத்ததைவிட அந்த நகரத்திற்குப் பொருத்தமில்லாமல் வேட்டியிலும் பனியனிலும் முறுக்கிய வெள்ளை மீசையுடன் பார்க்க ஒரு விவசாயி போல நின்றிருந்தார். அப்பாவின் பால்ய நண்பர். இருவரும் சந்தேகமாக ஒருவரை ஒருவர் பார்ப்பதுபோல உணர்ந்தான். அவன் அளித்த கடிதத்தைப் பார்த்தது அவர் அடைந்தது மகிழ்ச்சியா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் முகமே அப்படித்தான் எனப் பின்னாளில் புரிந்தது.
பாலை நிலத்து நினைவலைகள்
அண்மையில் “உரிய ஆவணங்களின்றி வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் இனி அந்தந்த நாடுகளில் இருக்கும் தூதரகங்களை அனுகினால் அவர்களுக்குத் தேவையான ஆவணங்கள் விரைந்து வழங்கப்படும்” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் தெரிவித்த செய்தியொன்றினைப் படித்தேன். அந்தச் செய்தி உண்மையானதாக இருப்பின் சந்தேகமில்லாமல் சுஷ்மாஜி ஒரு தேவதையேதான். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இதனைவிடவும் ஒரு இனிய சேதி இருக்க முடியாது என்பேன்.
மாநில மின்வாரியங்களின் சுமை
2015-ம் வருடம் செப்டம்பர் மாத கணக்குப் படி 4.5 லட்சம் கோடிகள் கடன் சுமையை இந்த நிறுவனங்கள் மொத்தமாக வைத்துள்ளன. இதில் 70%, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களின் மின்வாரியங்களால் சுமக்கப்படுகின்றன. வாக்கு வங்கி மின்சார அரசியல், அரசியல் சார்புள்ள நிர்வாகங்கள், திறமையற்ற நிர்வாகிகள் போன்ற காரணிகளே இத்தகைய சுமைக்கு காரணிகளாக இருக்க முடியும்.
நியூட்ரினோ
நம் சூரியனிலிருந்து கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் பூமியை வந்தடைகின்றன. சூரியனில் ஏற்படும் அணுக்கரு வினைகள் ஆற்றலை உமிழ்கின்றன. வெய்யோனின் ஆழத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள்– அதாவது புரோட்டான்கள்- இணைந்து ஹீலியம் அணுக்கருவை உண்டாக்குகின்றன. இந்த வினையில் உள்ள நிறை வித்தியாசம் ஆற்றலாக வெளிப்படுகிறது. மேலும் இந்த வினையில் எலக்ட்ரானின் எதிர்துகளான இரு பாசிட்ரான் துகள்களும் மற்றும் இரு நியூட்ரினோ துகள்களும் வெளிப்படுகின்றன.