பைனரி ஆப்ஷன் எனும் ஒரு புதைகுழி

உலகம் முழுக்க பண பரிவர்த்தனைகள் அதாவது ஒவ்வொரு நாடும், நாட்டு மக்களும் இன்னொரு நாட்டின் கரன்சியினை ஏதோ ஒரு காரணத்திற்கு வாங்குகிறார்கள் அல்லது விற்கிறார்கள். அதை வாங்கும்போதும், விற்கும்போதும் என்ன விலைக்கு போகும் என்பதை தீர்மானிப்பது கடைசியாய் இருக்கும் இரு எண்கள். எடுத்துக்காட்டாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என்பது பேச்சு வழக்கில் நாம் சொல்வது. அதனை பண பரிவர்த்தனையின்போது 65.12864 என்றோ 64.98765 என்றோ இருக்கும். இந்த கடைசி இரு எண்கள் லட்சணக்கணக்கான டாலர்கள் பரிவர்த்தனையின்போது பெரும் வித்தியாசத்தை உண்டாக்கும். இந்த கடைசி இரு எண்களை மட்டும் வைத்து கிட்டத்தட்ட சூதாடுதலே…

வாசகர் மறுவினை

எராலியின் வரலாற்று ஆய்வுகளைப்பற்றிய அறிமுகக்கட்டுரை படிப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. ஒரு புனைகதைக்குரிய வேகத்துடன் கச்சிதமான சொற்சித்திரங்களுடன் எழுதியிருக்கும் சுரேஷுக்கு வாழ்த்துகளும் நன்றியும் சொல்லவேண்டும். புத்தரில் தொடங்கி தென்னிந்தியச் சித்திரங்கள் வரையிலான வரலாற்றுத் திருப்பங்களையும் சாதனைகளையும் வீழ்ச்சிகளையும் சுட்டிக் காட்டியபடி நீண்டு செல்கிறது. வணிக உறவுகளாலும் சாதனைகளாலும் உச்சத்துக்குச் சென்று வளர்ச்சியைத் தொட்ட இந்தியாவின் எழுச்சி, ரோம் பேரரசின் வீழ்ச்சியை அடுத்து தேங்கிவிட்ட அம்சம் இதுவரை யாராலும் சொல்லப்படாத ஒன்று. மீண்டும் விவசாய சமூகமாக மாறி மெல்ல மெல்ல வளர்ச்சி பெறும் போக்கில் துரதிருஷ்டவசமாக அடுத்தடுத்து …

கோபியர் கொஞ்சும் சல்லாபன்

தாழ்மையும் பணிவுமே அனைவருக்கும் முக்கியமான பெருங்குணம் என உணர்த்த கிருஷ்ணன் செய்த விளையாட்டு இது என்பர் பெரியோர். கிருஷ்ணன் காளியன்தலைமீது நடனமாடி அவனை அடக்கியதும், கழுதை உருவில் வந்த அசுரனைக்கொன்றதும் இந்தப்பெண்கள் எல்லாம் கண்டும் கேட்டும் நடந்த நிகழ்வுகள்தாம். அவன் அசகாயசூரன் என்பதில் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் நிலைக்கு இறங்கிவந்து அவன் ஆடியும்பாடியும் விளையாடிக்களித்ததால், அவனிடம் அளவுக்குமீறி உரிமை எடுத்துக்கொண்டு என்னவேண்டுமாயினும் செய்யலாம் என எண்ணிவிட்டார்கள். அதனால்தான் அவர்களுக்குக் கிருஷ்ணன் ஒருபாடம் கற்பிக்க முயன்றான்

ஒரு கணிதையின் கதை

இந்த மாதிரி தானியங்கி பேச்சு இயந்திரம் எழுதுவது என்பது ப்ளாகருக்கோ, வோர்ட்ப்ரெஸ் தளத்திற்கோ சென்று வலைப்பதிவு கணக்குத் துவங்குவது போல் ரொம்பவே எளிதானது. வலைப்பதிவை எழுத ஆரம்பிப்பது எப்போதுமே சுளுவான வேலைதான். ஆனால், அதைத் தொடந்து நிர்வகிப்பது, நல்ல தலைப்புகளாகத் தேர்ந்தெடுத்து, அந்தத் தலைப்புகளில் செறிவான கருத்துகளைக் கோர்வையாகக் கொடுப்பது, கொடுக்கும் கருத்துகளால் ஃபாத்வாக்கள் வராமல் பார்த்துக் கொள்ளுதல் போன்றவை கஷ்டமான வேலை.

ஆட்டிஸம் (மதி இறுக்கம்)

இது ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபேட் கருவிக்கான விளம்பரம். எனினும், அதைக் குறித்து ஆர்ப்பரிக்காமல், மதியிறுக்கம் குறித்தும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழில் நுட்பம் எவ்வாறு உதவும் என்பதை சுட்டுகிறது. டிலன் என்பவரால் சாதாரண மனிதரைப் போல் பேச முடியவில்லை. அதனால், அவருடைய எண்ணங்கள் வெளிப்படாமல் அவருக்குள்ளேயே அடங்கிவிடாமல் இருக்க, “ஆட்டிஸம் (மதி இறுக்கம்)”

செ குவாரா + ரோலிங் ஸ்டோன்ஸ்

கியூபப் புரட்சியாளர்கள் ‘செ’ என்று செல்லமாக அழைத்த செ குவாரா என்னும் அரசியல்வாதியையும், த ரோலிங் ஸ்டோன்ஸ் (The Rolling Stones) ஆங்கில ராக் இசைக்குழுவின் சின்னமான உதடுகளையும் ஒருங்கிணைத்த பதாகையைத் தாங்கி கச்சேரிக் கொண்டாட்டத்தில் திளைத்த கியூபா நாட்டின் தலைநகரமான ஹவானா நகரவாசிகளை இங்கே காணலாம்:

கலாம் விளைவு: ‘நான் ப்ராஜெக்ட் செய்ய போறேன்’

பிரிட்டிஷ் கல்வி இந்தியாவில் இரண்டு உத்தேசங்களைக் கொண்டிருந்தது: ஒன்று: ஐரோப்பியா மானுட பண்பாட்டுக்கு வழங்கும் அருட்கொடைகளை குறித்து இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு: இந்தியர்களிலிருந்து நல்ல குமாஸ்தாத்தனமான கூலிகளை உருவாக்குவது. இதில் இந்தியர்கள் தங்கள் அறிவை புத்தாக்கத்துடன் செலவிடக் கூடிய ஒரே துறையாக இருந்தது சட்டத்துறைதான். அன்றைய இந்தியாவின் அனைத்து அறிவாளிகளும் சொல்லி வைத்தது போல பாரிஸ்டர் படிப்பும் சட்டபடிப்பும் படிக்க போனது அந்த காரணத்தால்தான் இருக்க வேண்டும்.

ஜெனரலும் அந்தச் சிறிய டவுனும்

அந்தச் சிறிய டவுனில் அவர் பிரபலமானவர். எல்லாச் செய்திகளையும் உடனடியாகப் பரப்புபவர்.கடையில் இருந்த போதும் டவுனில் நடக்கும் எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.எந்தச் செய்தியாக இருந்தாலும் அவருக்கு உடனடியாகத் தெரிந்து விடும்.ஜனங்கள் தமக்குத் தெரிந்ததை மற்றவர்களிடம் சொல்லும் போது “ நாவிதர் சொல்வது போல ” என்றே ஆரம்பிப்பார்கள். எந்தச் செய்திக்கும் நாடகம் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுப்பது அவர் வழக்கம். ஏதாவது முக்கியமான விஷயம் அவருக்குத் தெரிந்து விட்டால் அதைத் தன் கடையில் இருந்து கொண்டு சொல்ல மாட்டார். கடையை விட்டு வெளியே வந்து குறுக்குச் சந்துகளில் எல்லாக் கடைகளும் இருக்கும் இடத்திற்கு வந்து நின்று கொண்டு அதைச் சொல்வார்.

அ.முத்துலிங்கம்: "மஹராஜாவின் ரயில் வண்டி"

“கவிதை என்பதை அனுபவங்களில் இருந்து பழக்கத்தின் பாசியை அகற்றும் ஒரு செயல் என்று சொல்வார்கள். முதன் முறையாக ஒன்றை அனுபவிக்கும் போது நமது அகம் அதை முழுவதும் உள்வாங்கிக் கொள்கிறது. பின் வரும் ஒவ்வொரு அனுபவத்திலும் நமக்கும் அதற்கும் நடுவில் ஞாபத்தின் திரை விழுகிறது. அதை விலக்கி மீண்டும் அந்த அனுபவத்தைப் புதிதாக அடைவது இயல்வதில்லை. ஆனால் முதன்முறை அடைந்த அந்த அனுபவத்தின் பரவசம் மனதில் தங்கி விடுகிறது”

குளக்கரை

இது பற்றி இந்திய முற்போக்குகள் ஏதும் போராட்டம் நடத்துவார்களா என்று நாம் வேடிக்கை பார்க்கலாம். வேலைக்குப் போகாமல் டீ குடித்து அரட்டை அடித்து வெட்டியாக உலவ இன்னொரு வாய்ப்பு என்று அவர்களுக்குத் தோன்றாமலா இருக்கும், தோன்றி இருக்கும். ஆனால் இதைச் செய்வதோ அவர்களின் அபிமான மதமான அமைதி மார்க்கம். எனவே இதை எப்படித் திரித்து இந்துக்களின் சதி, இந்துத்துவாக்களின் ஃபாசிஸம் ஒழிக, இந்தியா உடைக, பாகிஸ்தான் ஜிந்தாபாத், காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுவி, மோடியைக் கைது செய் என்ற அவர்களது என்றென்றைக்குமான கோஷங்களோடு இந்த நிதி திரட்டலே யூத, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி, ஆர் எஸ் எஸ்தான் இதன் ஆணி வேர் என்றும் போஸ்டர்கள் எழுதலாமா என்றும் யோசிப்பார்களாக இருக்கும்.

ஞான. வித்யா, ப. ஆனந்த் கவிதைகள்

நிழல் நகர்ந்து
எல்லைகள் மாறுவது அறியாமல்..
இருள் மெல்லக் கவிய
அவரவர் பார்வையில் நிழல் மறைந்த நேரம்
ஆட்டம் அர்த்தமற்றதென புரிந்தது…

தூஷன் மகவேவ் எனும் மனோவசியக்காரன்

உழைக்கும் வர்க்கம், வர்க்க பேதம், அரசு நிர்வாக அமைப்பின் அதிகாரப் படிநிலை ஆகிய கருத்துருவாக்கங்களின் பின்புலத்தில், பல்கேரிய எல்லைப் பகுதியில் யூகாஸ்லேவியாவில் உள்ள போர் (Bor) என்ற தொலைதூர மலைப்பிரதேசத்தை இந்தத் திரைப்படம் களமாய்க் கொள்கிறது. திரைப்படத்தில் இடம்பெறும் வழிகாட்டியின் குரலில் அரசுபிரசாரத்துக்கே உரிய போற்றுதல்கள் (“தாமிரம், வெள்ளி மற்றும் தங்க உற்பத்தியில் உலக அளவில் முதன்மை நிலை வகிக்கும் மையங்களில் ஒன்று”) அடிப்படை வசதிகளற்ற, சாம்பல் பூச்சு கொண்ட பின்னணியில் படம் பிடிக்கப்பட்டிருகின்றன.

காட்சிப் பிழை

“ சே!சே! பயப் படாதே! பயப்படாதே!! அப்பிடி எதுவும் மறக்காது! இதோ இப்ப தெரிஞ்சுடும்! ரிலாக்ஃஸ் ரிலாக்ஃஸ்!!” தனக்குத்தானே சொல்லிக் கொண்டு பயத்தைப் புறந்தள்ள முயன்றான்.
சாலையின் இடது புறம் கரும் பச்சையில் ராக்ஷ்ச வளர்த்தியில் நெற் பயிர்கள் ,நெடும்தூரம் வரை.

கடந்தகாலத்தின் எதிர்காலத்தவர்

2100-ஆம் ஆண்டில் மீண்டும் முதன்முதலாக செயற்கைக் கோளை ஏவினோம். 2105-இல் நிலவுக்கும் அதன்பிறகு பிறகிரகங்களுக்குமாக ஆய்வுக்கோள்களை வெற்றிகரமாக அனுப்பி ஆராய்ந்தோம். பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையேதான் அந்த ஏவுதல்கள் நிகழ்த்தப்பெற்றன. புவியளவுப் பேரிடர் நடந்தபோது அதன் தாக்கம், மிக மிக மிக குறைவான அளவில் என்றாலும், மற்ற கிரகங்களிலும் முக்கியமாக சந்திரனில் தாக்கத்தடயங்கள் காணப்பெறலாம் என்ற கணிப்பு இயற்பியலாளர்களிடம் இருந்தது.

ஏன் மேகக் கணினியம் & எப்படி மேகத்திரளில் பிணையலாம்?

மேகக்கணிமையின் பயனர்களை நுகர்வோர்கள், வணிகப்பயனர்கள் என்று பிரிக்கலாம் என முன்பே சொல்லியிருந்தேன். இப்பகுதியில் இவ்விருவகைப் பயனர்கள் மேகக்கணிமையை நோக்கி எவ்வாறு நகர்வது என்று கொஞ்சம் பார்க்கலாம். ’நகர்வது’ என்றால்? …மேகக்கணிமையைப் பாவிப்பதென்பது, தெரிந்த ஒரு விஷயத்திலிருந்து தெரியாத ஒன்றுக்குப் போவதுபோலத்தான். அதனாலேயே, இந்த மாற்றம் குறிப்பிடத்தகுந்த ஒரு செயல்பாடாகிறது. இம்மாற்றத்தையே நகர்வு என்று குறிப்பிடுகிறேன்.

கல்வி மற்றும் ஆராய்ச்சி உலகம்: கருவிகளின் இணையம்

கல்வித் துறையில் கருவிகளின் ஆட்சி ஏராளமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது சரியான யூகம் இல்லை. தொழில்நுட்பப் புரட்சிக்கு அடிப்படைக் காரணமான கல்வித்துறையில் அதிகம் தொழில்நுட்பத் தாக்கம் இல்லாதது ஒரு வினோதமான விஷயம். இன்றும் உலகெங்கும் கல்வி வழங்கும் முறை 100 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போலவே தான் உள்ளது. மேற்குலகு பள்ளிகளில், மற்றும், பலகலைக் கழகங்களில், இன்றுள்ள மிகப் பெரிய போதனை மாறுதல்கள்…

ஆடி அடங்கும் எல் நீன்யோ

கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக உலக வானிலையையும், அதன் மூலம் பல நாடுகளின் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைத்த எல்-நீன்யோவின் தாக்கம் ஒருவழியாகக் குறைந்து கொண்டு வருகிறது. பெரும்பாலான வானிலையாளர்களின் கருத்துப்படி, இவ் வருட மத்தியில், அதாவது இந்திய வருடக்கணக்கில் ஆடி மாதம், அது சமநிலைக்குத் திரும்பக்கூடும் என்று தெரிகிறது.
இதற்குச் சான்றாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டுவது பின்வரும் காரணிகளைத்தான்…
ந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போனது, வடகிழக்குப் பருவமழை சக்கைப்போடு போட்டு, சென்னை வரலாறு காணாத வெள்ளத்தைச் சந்தித்தது. இதுபோல உலகத்தில் பல பகுதிகளில் அதீத மழைப்பொழிவு, மற்ற சில பகுதிகளில் வறட்சி என்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது எல்-நீன்யோ. இந்தோனேசியா, தாய்லாந்து, வியாட்னாம், பிலிப்பைன்ஸ், அமெரிக்க பசிபிக் தீவுகள் ஆகிய இடங்களில் வறண்ட வானிலையை உருவாக்கியது…
ஏற்கனவே உயர்ந்து வரும் உலக வெப்பநிலையோடு எல் நீன்யோவின் விளைவுகளும் சேர்ந்துகொண்டதால், கடந்த ஒரு வருடங்களாக பல மாதங்கள் சராசரியை விட அதிக…

வெய்யோன் வரை

வெண் முரசு மீது இதுவரை அதன் வடிவம், உள்ளடக்கம் ஆகியவற்றைப் பற்றி பேசும் விமரிசனப்பூர்வமான மதிப்பீடுகள் (critical review ) வரவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. முதல் நூலான முதற் கனல் ஓரளவு இத்தகைய கவனம் பெற்றது. ஆனால் அடுத்தடுத்த நூல்கள் இன்னமும் நல்ல விமர்சனங்களை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பதாகவே படுகிறது. இந்திராபார்த்தசாரதி,நாஞ்சில் நாடன், மற்றும் பி.ஏ கிருஷ்ணன் ஆகியோர், முதற் கனல் குறித்து கருத்து கூறியிருக்கிறார்கள். மற்ற புத்தகங்கள் குறித்து ஏதும் கூறியதாகத் தெரியவில்லை.