மணி பத்மம் – ஆபிரகாம் எராலி

இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, இந்த மேற்கத்திய நாகரிகங்களுடன் இந்தியாவுக்கு இருந்த வணிக உறவுகள் இந்தியாவில் கொண்டு குவித்த செல்வ வளம். வர்த்தகம் உலகமயமாகும் போக்குக்கு இன்றும் இந்தியாவில் எதிர்ப்புகள் இருக்கின்றன. அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அன்றைய அறியப்பட்ட உலகத்துடன் இந்தியா தொடர்ந்து வணிக உறவுகள் கொண்டிருந்ததால்தான் இந்தியாவில் எல்லா துறைகளிலும் ஒரு மலர்ச்சி ஏற்பட்டது என்றும், அது கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருந்தது என்றும் ஒரு முடிவுக்கு எராலி வருவது வியப்புக்குரிய செயல். ஆனால் அதில் பிழை இல்லை என்றே தோன்றுமளவுக்கு அவர் அதை தர்க்க ரீதியாக நிறுவுகிறார்.

கருவிகளின் இணையம் – விவசாய உலகம் – பகுதி 15

காமிரா மூலம் முழு பண்ணையையும் சென்டிமீட்டர் விடாமல் படம் பிடிப்பதுடன், மண்ணில் உள்ள பல வகை ரசாயன அளவுகளையும் விமானத்தில் உள்ள உணர்விகள் அளந்து விடுகின்றன. இந்த தரவுகள் கணினிக்கு அல்லது மேக வழங்கிகளுக்கு மாற்றி, அங்குள்ள நிரல்கள் நம் உடலுக்கு ரத்த பரிசோதனை போல அனைத்தையும் உடனே சொல்லி விடுகிறது. இதன் உதவியுடன், எந்தப் பகுதியில் எந்த பயிர், அல்லது, எந்தப் பகுதிக்கு அதிக உரம் தேவை என்பது போன்ற முக்கிய முடிவுகளை விவசாயி எடுக்கலாம். பூச்சிகள் வரும் முன்பு, அவை அரிக்கப்போகும் பயிரில் முட்டையிடும். மேலே சொன்ன கையளவு விமானங்கள், இவ்வகை முட்டைகள் எங்கு பண்ணையில் எத்தனை உள்ளன என்று கூட சொல்லிவிடும். கண்ணுக்கு தெரியாத முட்டைகளைக் கூட துல்லியமாக படமெடுத்து செய்தியாக விவசாயிக்கு காட்டும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

பாரத நாடு

ராணுவக் குறியீட்டுப்படி அந்த இடத்தின் பெயர் BF332. அது ஒரு ரயில்வே ஸ்டேஷன் அல்ல. அங்கே பிளாட்ஃபாரமும் இல்லை, டிக்கெட் கௌண்டரும் இல்லை. திடீரென்று ஒரு நாள் அங்கே ரயில் தண்டவாளத்தை ஒட்டி பளபளக்கும் முள்வேலி போடப்பட்டது. அவ்வளவுதான். ஒரேயொரு ஸ்பெஷல் ரயில் மட்டும் என்றாவது ஒரு நாள் காலையில் அங்கு வந்து நிற்கும். என்றைக்கு நிற்கும் என்பது எங்களுக்கு மட்டும்தான் முன்னதாகத் தெரியும். நாங்கள் என்றால் பிகாரி சமையல்காரனைச் சேர்த்து நாங்கள் ஐந்து பேர். ரயில் நிற்பதில்லை, அப்படியும் அந்த இடத்துக்கு ஒரு பெயர் கிடைத்து விட்டது. – ‘அண்டா ஹால்ட்.’ … அருகிலிருந்த இரண்டு குன்றுகளுக்கு நடுவில் மகதோ இனத்தவர் வாழ்ந்து வந்த கிராமம் ஒன்று இருந்தது.

விவசாயிகளும், நபாப்களும்

1980களின் மத்தியில் இருந்த வருவாய் நிர்வாகப் பணிக்குழுவின் மையக் கோட்பாடுகள் 1800களில் முறையாக்கப்பட்டவையே. அதேபோல, 1970களில் இருந்த கிராமங்களுக்கான நிர்வாகக் கட்டுப்பாடுகளின் அடிப்படை 1810ல் உருப் பெற்று விட்டது. கடைசியாக, நிலங்களைத் தனியார் உடமையாக ஆக்குவது பட்டாக்கள் வழியே நடத்தப்படலாம் என்று ’நவீன’காலக் கருத்தானது 1800களில்தான் நடைமுறைக்கு வந்தது. அதே சமயம், நாம் அடுத்துவருகிற பகுதிகளில் பார்க்கப் போகிறபடி, பண்டைய சமூக அரசியல் அமைப்புகளில், கோட்பாடுகளில், செயல்பாடுகளில் பெரும்பாலானவை 1800கள் வரை கூடப் பிழைத்திருந்தன. உதாரணமாக, “ஜாதி”, “நாட்டார்” நிர்வாக அமைப்பு, தர்மகர்த்தர்கள், அதிகாரம் குறித்த கோட்பாடுகள்…

வஞ்சினங்களின் காலம்

வேட்டைச்சமூகம் ஆரம்பகாலத்தில் பசியைத் தணிக்கும் உணவுக்காக வேட்டையாடியது. பிறகு தற்காப்புக்காக வேட்டையாடியது. அதையடுத்து, வேட்டைப்பொருளுக்கு சமூகத்தில் ஒரு விலை உள்ளது என்று தெரிந்துகொண்டதும் வணிகத்துக்காகவும் வேட்டையாடியது. வேட்டையில் சாகசமும் வஞ்சினமும் இருமுனைகள். மனிதன்மீது விலங்கும் விலங்கின்மீது மனிதனும் கொள்ளும் வஞ்சினம் ஒருவகை. மனிதகுலமே ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் வஞ்சினம் வேறொரு வகை. வஞ்சினம் என்பது ஒரு கோணத்தில் அணையாத நெருப்பு.

பெயர் தெரியாப் பறவையின் கூடு

காலையில் எழுந்ததும் கூடத்தின் ஜன்னலுக்கு வந்து அந்த மரத்தையும் அதில் உள்ள பறவையின் கூட்டையும் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது தினேஷ் குமாருக்கு. மனைவியின் கேலியையும் மீறி அதை ரசிப்பது அவனுக்கு பிடித்திருந்தது. மஞ்சள் நிறம் கொண்ட‌ சின்ன அலகால் வாய்திறந்து தன் தாயின் அலகிலிருந்து வரும் உணவிற்காக மூடிய கண்களோடு நம்பிக்கையோடு அந்த‌ மூன்று குஞ்சுகள் காத்திருக்கின்றன. மரகுச்சிபோன்ற கால்களுடைய‌ தாய் அருகே வந்ததும் மூன்று குஞ்சுகளும் மேலும் அகலதிறந்த அலகுகளுடன் நாக்குகள் துடிக்க பல விசித்திர ஒலிக‌ளை எழுப்ப ஆரம்பிக்கும். இரண்டாவது தளத்தில் இருந்த கருப்பு கண்ணாடி ஜன்னல்கள் மறைத்த‌ அவன் வீட்டிலிருந்து அந்த கூட்டை அவைகளுக்கு தெரியாமல் அவன் காணமுடிந்தது நாளுக்கு நாள் குஞ்சுகள் வளர்வதை காண்பது பெரும் பாக்கியமாக நினைத்தான். ஒருவயது மகனுடன் அமர்ந்துவிடுவான்.

மரமும் இசையும்

மரக்கட்டையின் ஒரு பகுதியை டிரௌபெக் (Traubeck) எடுத்துக் கொள்கிறார். அந்த மரத்துண்டின் பல்வேறு வண்ண மாறுபாடுகளையும் அடர்த்தி மாற்றங்களையும் ஒளிச்சிதறல்களாக மாற்றிக் கொள்கிறார். அடர் பழுப்புக்கு ஒரு தரவு. சாம்பல் நிறத்திற்கு இன்னொரு தரவு. வெளியில் காணப்படும் மெல்லிய பட்டைக்கு ஒரு ஒலித்துண்டு. நடுவே கல்லாகிக் கிடக்கும் வடப்பகுதிக்கு “மரமும் இசையும்”

'இந்திய அறிதல் முறைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு

வெளியிட்டவர் – ரவிஷங்கர் உரை
பெற்றுக்கொண்டவர் – முனைவர் உத்ரா துரைராஜன் (இயற்பியல் துறை முதல்வர், DGV கல்லூரி) உரை
பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்) உரை
சாந்தினிதேவி ராமசாமி ஏற்புரை
அரவிந்தன் நீலகண்டன் ஏற்புரை

இந்திரா பார்த்தசாரதியின் "ஒரு கப் காப்பி"

இக்கதையில் ஊரை ஏமாற்றிப் பிழைப்பவனுக்கும், சூழ்நிலை காரணமாக பித்ருகளின் ஸ்தானத்தை ஏற்பவனுக்கும் உள்ள அற வித்தியாசங்கள் என்று ஒரு கேள்வி வருகிறது, இல்லை? நாயகனின் அற ஸ்தானம் உயர்ந்தது என்று அவனின் உள்மனம் வாதிடுகிறது. ஆனால் கதை படிப்பவர்கள் மனதில் ஒரு சோம்பேறி கட்டும் சப்பு கதையாகவே அது படுகிறது. கிட்டதட்ட ஐம்பது வயது வரை எதுவும் செய்யாமல், அம்மாவின் மறைவுக்கு பின் வேறு வழியில்லாமல் செய்யும் வேலை, எனவே…

மகரந்தம்

கிட்டத்தட்ட 270 மில்லியன் தொழிலாளர்கள் மூலம் தங்கள் வர்த்தக பலத்தை உலகுக்குக் காட்டிய சீனா இன்று அதே மக்களுக்கு வீடு அளிக்கப் பலவித வழிகளைக் கைகொண்டு வருகிறது. கடந்த இருபது வருடங்களாக 270 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த கிராமங்களை விட்டுவிட்டு சீனாவின் நகரப்பகுதிகளுக்கு குடிபெயர்ந்திருந்தனர். இதுகாறும் சீனாவின் தொழில்வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்தவர்கள் இவர்கள் தான். ஆனால், கடந்த சில மாதங்களாக சீனா பொருளாதார ரீதியில் தேக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் இம்மக்கள் வீடு வாங்குவதும், வாங்கிய கடனை அடைக்கும் சக்தியும் குறைந்திருப்பதாக சீனா கவலை தெரிவித்துள்ளது.

ஶ்ரீவித்யா: துயர விழிகளின் தேவதை

இந்த திரைப்படத்தில், மற்றப் படங்களில் சாத்தியமில்லாத பல தனித்துவமான காட்சிகளில் ஶ்ரீவித்யா மிக அழகிய அபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அலுவலகத்தில் வேண்டுமென்றே வேணுவை உற்றுப் பார்த்துவிட்டு… பிறகு வேணு அவரைப் பார்க்கும்போது ஒரு கேலிச்சிரிப்புடன் குனிந்துகொள்ளும் ஶ்ரீவித்யாவின் பார்வை… காபி அருந்த அழைத்துச் செல்லும்போது, வேணுவை பார்த்து உருவாகும் கேலிச்சிரிப்பை கைவிரலால் மூடி அடக்கியபடி பார்க்கும் பார்வை…… என்று படம் முழுவதும் விழிகளின் விழா.

அகதி

மழை பெய்த சொத சொத தரை. அந்த மண் தரையில் உறக்கம். அவரின் ஓராண்டு வயதே ஆன மகள் ஈரத்தில் கிடக்கிறாள். கிரேக்கத்தில் நுழைந்த நாளில் இருந்தே அடைமழை. அந்தக் காட்சியை உலகெங்கும் ஒளிபரப்ப ஆளில்லாமல் இயக்கப்படும் தூரயியங்கிகள் அவர்களின் தலைக்கு மேல் பறந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் “அகதி”

அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய்!

யசோதையின் கூற்றாகத் திருவெள்ளறையில் உறையும் பிரானைப்பாடுகிறார் பெரியாழ்வார். ‘சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளறை,’ என்றும், ‘மதிள்திரு வெள்ளறை’ என்றும், ‘முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை,’ என்றும் அவ்வூரைப் புகழ்கிறார். …“காடுகளிலிருந்து நாவல்பழங்களைக் கொண்டுவந்து விற்ற ஒருபெண்ணிடம் அவ்வளைகளைக் கொடுத்து அவற்றிற்குப் பதிலாக நாவல்பழங்களை வாங்கித்தின்கிறான். நான் அந்தப்பெண் கையில் என் மகளின் வளைகளைப் பார்த்து, ஏனடா கிருஷ்ணா என் மகளின் வளையைக்கொடுத்தாய் எனக்கேட்டால்…

அரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்

கிராமங்கள் தோறும், கண் சிகிச்சை முகாம்கள் அமைத்து, இந்த தொழில் மாதிரியின் நுகர்வோரான ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களின் கண் திறன் பரிசோதிக்கப் பட்டு, அறுவை சிகிச்சை தேவைப் படும் நோயாளிகள் பிரிக்கப் பட்டு, இலவசமாக, அரவிந்த மருத்துமனைக்கு, ஒப்பந்தப் பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள். கிட்டத் தட்ட ஒரு நாளைக்கு 900-1000 அறுவைச் சிகிச்சைகள் நடத்தப் படுகின்றன. ஒரு வருடத்துக்கு கிட்டத் தட்ட 3 லட்சம் அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள்.
 
இதன் மிக முக்கியப் பயன் – மிகக் குறைந்த செலவு. அமெரிக்காவில் 1700 டாலர் செலவு பிடிக்கும் இந்த அறுவை சிகிச்சைக்கு (1.15 லட்சம் ரூபாய்), இந்தியாவில் தனியார் மருத்துவமனையில் 25 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும் இந்தச் சிகிச்சைக்கு, அரவிந்த் செலவழிக்கும் தொகை 30 டாலர்கள் (2000 ரூபாய்) மட்டுமே. அதுவும், பணம் செலுத்தும் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு, ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வளவு குறைவான செலவிலும், இலவசத்திலும் சிகிச்சை அளித்த பின்பும் அரவிந்த குழுமம் லாபகரமாக இயங்குகிறது என்பது உலக அதிசயங்களுள் ஒன்றுதான். இவ்வளவு குறைந்த செலவு எனில், தரம் குறைந்த சிகிச்சையோ?

நிலையாட்டம்

கண்ணும் காலும் கையும் ஒத்திசைந்து விளையாடவேண்டிய ஆட்டம். ஏனோ அந்த ஒத்திசைவு என்னில் கூடவே இல்லை. கண்ணும் காலும் ஒத்திசைந்தால் கைகள் சரியான கோணத்தில் இருக்காது. இல்லையென்றால் கால்கள் செட்டரை நோக்கி திரும்பி இருக்காது அல்லது கண்கள் கடைசி வரை பந்தைத் தொடராது. ஒவ்வொரு முறையும் பிரயத்தனப்பட்டு சரி செய்ய முயற்சிக்க ஆட்டம் என்னைவிட்டு விலகிச் சென்று கொண்டே இருந்தது. புத்தியால் ஈடுபடாமல் உடலை ஆட்டத்துக்கு ஒப்புக்கொடுத்திருந்தால் ஆட்டம் வந்திருக்குமோ என்னவோ?