வேற்றுலகக் கொண்டாட்டம்

வருடாவருடம் அர்ஜெண்டினாவில் வேற்றுகிரக வாசிகளுக்கான திருவிழா எடுக்கிறார்கள். கெப்பிலா டெல் மாண்டே என்னும் இடத்தில் கொர்டொபா (Capilla del Monte, Cordoba) என்னும் நகரத்தில் முப்பதாண்டுகள் முன்பு பறக்கும் தட்டு வந்ததைப் பார்த்தவர்கள் தொடங்கி வைத்த வைபவம். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அறிவியல் கருத்துப் பரிமாற்றமாகவும் ஆன்மிக விழாவாகவும் “வேற்றுலகக் கொண்டாட்டம்”

போரும் அமைதியும்

புகழ் பெற்ற கதாபாத்திரங்களை தற்காலத்திற்கேற்ப மறு ஆக்கம் செய்வது ஒரு சுவாரசியமான விஷயம். உதாரணத்திற்கு கிங்காங் – 1933லிருந்து இதுவரை ஏழு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 2017 மற்றும் 2020 களில் இன்னும் இரு திரைப்படங்கள் வெளிவர இருப்பதாக விக்கி சொல்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் – சமீபத்தில் பிபிஸியில் வெளிவந்த “போரும் அமைதியும்”

மூன்றாம் அண்ணனின் இரண்டாம் மகன் மட்டும் இதில் விதிவிலக்கு. ஊருக்கு சென்று திரும்பி வருகையில் வழியில் கிடந்த செத்தப் பாம்பை பார்த்துவிட்டு அண்ணி “பாம்பு, பாம்பு” என்று அலறியபடி கக்கத்தில் இருந்த இவனைத் தூக்கிக்கொண்டு ஓட, அன்று இரவு”ஆம்பூ” என்று அலறி எழுந்து அண்ணியைக் கட்டிக்கொண்டிருக்கிறான். என்னத்தான் நான் அவர்களின் முதல் வார்த்தைகளை உடனிருந்து கேட்காவிட்டாலும், அக்குழந்தைகள் முதன்முதலாக என்னிடம் பேசிய வார்த்தைகள் இரசமானவை. அவை ஞானிகளின் பேச்சுகளைப்போல் மறக்க இயலாதவை.

கோவிந்தன் குழல்வாராய் அக்காக்காய்!

குழந்தைகளுக்கு நாயும், காக்கையும், நிலாவும் தான் முதல் தோழர்கள்; அன்னையால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்கள்; வேண்டியபொழுதெல்லாம் அவள் இவர்களை விளித்து, குழந்தையுடன் விளையாடவோ, அல்லது, அவனை மகிழ்விக்கவோ வேண்டுவாள். இவற்றுள் அண்டிப்பிழைக்கும் காக்கை குழந்தையின் வளர்ச்சியில் பெரும் இடம் வகிக்கிறது! குழந்தையின் கையிலுள்ள தின்பண்டத்தில் பங்குகோரியும், அவன் உண்ணாமல் மீந்த உணவை ஏற்றுக்கொள்ளவும் தயாராகக் காத்துக்கொண்டிருப்பது காக்கை. நாயும் இதில் சேர்த்திதான்! அதன் இந்தத் திருட்டுத்தனங்களைப் பொருட்படுத்தாது, குழந்தையும் காக்கையைத் தன் விளையாட்டுத் தோழனாக ஏற்றுக்கொண்டுவிடுவதால், இப்போது தாய் குழந்தைக்குத் தலைவாரிவிடக் காக்கையைக் கூப்பிடுகிறாள்!

ஆனந்தக் கோலங்கள் – நம்மவரின் அற்புத கணிதப் பயணங்கள்

நம் வாழ்வில் நம்மோடுள்ள பெண்கள் மூலம் நம்மில் பெரும்பாலானோர் கற்றுக் கொள்ளும் செவ்விய வடிவ கோலங்களில் ஒவ்வொரு கோலத்துக்கும் இத்தனை வரிசை, வரிசைக்கு இத்தனை புள்ளி என்று ஒரு ஒழுங்கு உண்டு. இவற்றைக் கொஞ்சம் சிரமப்பட்டுதான் கற்றுக் கொள்ள வேண்டும், கற்றுக் கொண்டதை நினைவில் வைத்துக் கொள்வதும் கஷ்டம்- இதற்கென்றே கோலப்புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் வரிசைப்படுத்தப்படாத, ஒழுங்கற்ற வகையில் (random) அமைக்கப்பட்ட புள்ளிகளைக் கொண்டும் மிகவும் சிக்கலான கோலங்கள் வரைய முடியும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? ஒரு கிரிக்கெட் மைதானத்தை நிரப்பும் அளவுக்கு ஏராளமான புள்ளிகள்,..

உலக சினிமா: அன் ஷியான் ஆண்டலூ-வின் கல்வீச்சுப் பார்வை

அன் ஷியான் பற்றிப் பேசுவதானால் இன்று அழியாப் புகழ்பெற்றுவிட்ட கண்ணைக் கீறும் காட்சியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்தக் காட்சி ஒரு பெண்ணின் முகத்தில் துவங்குகிறது. அவளது இடப்புறம் ஓர் ஆடவனின் உருவம் தோள் வரை தெரிகிறது (அந்த உருவம் இப்போது ஒரு டை அணிந்திருக்கிறது). அது தன் இடக்கை பெருவிரலையும் சுட்டு விரலையும் கொண்டு பெண்ணின் கண்களை அகல விரிக்கையில் வலக்கரம் திரையின் கீழ்பாதியில் ஒரு சவரக்கத்தியோடு நுழைகிறது. அந்தக் கத்தி பெண்ணின் கண்ணைக் குறுக்கே கிழிக்க வருகிறது. (இந்தக் காட்சி ஸெர்கி ஐஸன்ஷ்டைனின் (Sergei Eisenstein) Battleship Potemkin படத்தில் துப்பாக்கியின் முனைக்கத்தியால் ஒரு பெண்ணின் கண் சிதைக்கப்படும் நாடகீயத் தருணத்தை நினைவுறுத்துகிறது).

மனிதமையக் கருத்தாக்கமும் சுற்றுச்சூழல் கேடும்

கடற்படை ராணுவத்தினர்களின் ( குறிப்பாக நீர்மூழ்கி கப்பல்களில் ) ரோந்து கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஒலி அடிப்படையில் இயங்கும் சோனார் எதிரொலிக்கருவிகளின் அதிர்வெண் அலைவரிசை திமிலங்களின் மூளையில் பல குழப்பங்களையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என்பது ஒரு முக்கிய காரணம். … எல்லாவற்றும் மேலாக, மனிதர்களைப்போல் விலங்குகளூக்கும் குறிப்பாக கடல்வாழ் உயிரினங்களூக்கும் தற்கொலை எண்ணம் வருவதுண்டு. கூட்டுத்தற்கொலையாகவும் இருக்கலாம். தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. ஆனால் ஒன்று சொல்லமுடியும், கடல்வாழ் உயிரினங்களின் இருப்பிடத்தை மாசுப்படுத்தி, நாசம் பண்ணினால், உயிரினங்களும் வேறு வழியின்றி கவுரமாக தன் முடிவை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.

யஸிதி இனப்பெண்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உரை

ஐ எஸ் ஸின் கொடூரம் ஏதோ வாய்ப்பு கிட்டியதால் நடந்த ஒரு நிகழ்வல்ல. . ஐ எஸ் ஸை சேர்ந்தவர்கள் இவ்வாறான கொடூரங்களை அரங்கேற்ற முன் திட்டமிட்டே வந்திருந்தனர். கற்பழிப்புகள், கட்டாயமாகச் சிறுவர்களைத் தம் படையில் சேர்த்தல், அவர்கள் கைப்பற்றிய புனித்தலங்களை தரைமட்டமாக்கி அழித்தல், குறிப்பாக யாஸிதி பெண்களையும், சிறுமிகளையும் கற்பழிப்பு மூலம் சிதைத்து அழித்து அவர்கள் ஒருபோதும் சாதாரணமான, இயல்பான வாழ்வுக்குத் திரும்ப முடியாமல் ஆக்குவது ஆகிய வன்முறைச் செயல்கள் மூலம் யாஸிதி இனமக்களின் அடையாளத்தைச் சுத்தமாக ஒழிப்பதே அவர்கள் திட்டம்.

உற்பத்தி மற்றும் தயாரித்தல் உலகம்

யூரோப்பில், இந்தத் தொழில்நுட்பத்தை, Industry 4.0 என்று அழைக்கிறார்கள். இவர்களது (குறிப்பாக, ஜெர்மானியர்கள்) பார்வையில், RFID தாங்கிய கருவிகள் தொகுப்பு மற்றும், தொடர் செயலாக்கத் தொழில்களை தலைகீழாக மாற்றும் சக்தி கொண்டது. தேவைக்கேற்ப, என்ன பொருட்களைத் தயாரிப்பது என்று மனிதர் முடிவெடுக்க வேண்டாம். பொருட்களே முடிவெடுக்கும். இன்று ஒரு குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில், ஒரு ஷிஃப்டில் ஒரு வகை பானம்தான் தயாரிக்க முடியும். இத்தகைய முன்னேற்றம் வந்தால், சந்தையின் தேவைக்கேற்ப திரும்ப வரும் பாட்டில்கள், அருந்தப்பட்ட பானத்தை நிரப்பிவிடலாம்! அதுவும் நொடிக்குள்.

சவூதி அரேபியாவில் பெண்கள் நிலை – முன்னேற்றமா?

முத்தவாக்கள் ( Mutaween – Religious Police) தான் பெரும்பாலான நேரங்களில், பொது இடங்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மதச் சட்டங்கள் என்ற பெயரில் “பாதுகாவலர் சட்டத்தை” மனதில் கொண்டு பல இன்னல்களையும் தண்டனைகளையும் வழங்கக் காரணமானவர்கள். இவர்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட , மதச் சட்ட முறைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா எனக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்யும் அதிகாரமும் சில வருடங்கள் முன்வரை அடிக்கும் உரிமையையும் கொண்டிருந்தவர்கள். அவர்களைப் பார்த்தவுடனே எளிதாக அடையாளம் காண இயலும். பெரிய அண்ணனின் சட்டையயும், கடைசித்தம்பியின் பேண்டையும் மாட்டிக்கொண்டால் ஒருவர் எப்படி இருப்பார்? அப்படித்தான் அவர்களின் ஆடையும், ட்ரிம் செய்யப்படாத தாடியும் இருக்கும்.

துறைவன்: முக்குவர் வாழ்வும் வரலாறும்

ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரையில் கரிய மொஸாம்பிக் மக்களை கண்டிருந்த போர்த்துகீசியர் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரைக்கு வந்தபோது அம்மக்களின் நிற ஒற்றுமையை முன்னிறுத்தி அவர்களையும் முக்குவா என்றே அழைக்கின்றனர் என்ற தகவலில் இருந்து விரிந்து செல்வது இதன் விவாத இழை. மாப்ள என்ற புதிய கேரள முஸ்லீம் சாதியின் தோற்றம் போன்ற தென்மேற்கு கடற்கரையோர வாழ்வின் இனவரைவியல் தகவல்களும் இந்நூலில் உண்டு. ….விஷமுள்ள நாகத்தை நல்லபாம்பு என்று அழைப்பது போல இருப்பதிலேயே வலிமையான கடல் மிருகத்தை நெய்தல் நிலத்தவர் நல்லமீன் என அழைப்பதும் ஆச்சரியமூட்டுவது.

நூலகத்தில் ஒரு தளபதி

விசாரணைக் குழுவின் மாலை நேர அறிக்கையில் பரிசீலிக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. ஆனால் இப்போது அந்த எண்ணிக்கையில் இவை நல்லவை இவை கெட்டவை என்ற பாகுபாட்டுக் கணக்குகள் இருக்கவில்லை. பெடீனாவின் முத்திரை ஒய்வெடுத்துக்கொண்டிருந்தது. சில சமயம் தன் துணையதிகாரியின் வேலையை சரி செய்யும் போது “இந்தக் கதையில் தவறேதும் இல்லை என்று எப்படி முடிவெடுத்தீர்கள்? இது படைவீரர்களை அதிகாரிகளைவிட சிறந்தவர்களாகக் காட்டுகிறது ! இந்த ஆசிரியருக்கு அதிகாரக் கட்டமைப்பின் மேல் மரியாதை இல்லை” என்று …

நெஞ்சில் குடியிருக்கும் காந்தி – மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’

தான் மிகவும் நம்பியவர்கள் தன்னை திட்டமிட்டு ஏமாற்றுவது காந்திக்கு மிகவும் வேதனையளிப்பதை நேரிடையாகவே பார்த்த அனுபவத்தைக் குறிப்பிடுகிறார் மிலி. தெரியாமல் செய்யப்பட்டது எனச் சொல்லப்படும் பொய்க்காரணத்தை ஒருபோதும் காந்தி ஏற்றுக்கொள்வதில்லை. தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் காந்தியின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததாலேயே, அவர் அடைந்த ஏமாற்றங்களும் அதிக அளவில் இருக்கின்றன என்பது மிலியின் கருத்து. ஆனால் காந்திக்கு அக்கருத்தை ஏற்றுக்கொள்வதில் மிகவும் தயக்கம் இருக்கிறது. ஒருமுறை தான் ஏமாற்றப்பட்டதை வேதனையுடன் காந்தி விவரித்த சமயத்தில் அவரை அமைதிப்படுத்தும் விதமாக ‘ஒருவேளை அவள் தெரியாமல் அதைச் செய்திருக்கலாம்’ என்று மிலி சொன்னபோது அதை ஒரு பேச்சுக்காகக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் காந்தி. ஒரு தீங்கை தெரிந்தே செய்பவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தான் செய்யும் செயல் தவறென்றே தெரியாமல் தீங்கு செய்பவர் நல்லவராக மாற வாய்ப்பே இல்லை. ஒருவருக்கு நல்லது கெட்டது தெரியவில்லை என்றால், நன்மையையும் தீமையையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை என்றால், அவருக்கு தனக்குள் இருக்கும் கடவுளைத் தெரியவில்லை என்று பொருளாகிவிடும். அப்படிப்பட்டவர்களுக்கும் மேய்ச்சல் நில விலங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று தொடர்ந்து சொல்கிறார் காந்தி.

தடம் பதித்த சிற்றிதழ்கள்

கடந்த காலம்போல அல்லாமல் இன்றைக்குச் சில சிற்றிதழ்கள் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகள் , வெகுசன இதழ்களுக்குப் போட்டியாக சினிமா, அரசியலை விவாத்திற்கு எடுத்துக்கொள்வது போன்றவற்றைக்கொண்டு சிற்றிதழ்களைக் காப்பாற்ற முடிகிறது பிறகு நல்லி சின்னசாமி செட்டியார் போன்ற பரோபகாரிகளின் உதவியுங்க்கூட இன்றைய சிற்றிதழ்களைப் பொருளாதார நெருக்கடியில்லாமல் பார்த்துக்கொள்கிறது. இந்தகைய சமார்த்தியம் போதாத, எந்தவித் திட்டமிடலும் இல்லாத சிற்றிதழ்கள் வீட்சியைத் தவிர்ப்பது கடினம். சாமர்த்தியமுள்ள இதழ்கள்கூட விற்பனையில் மேற்குலுடன் ஒப்பிடுகிறபோது சந்தோஷப்படும் நிலையிலில்லை. இவ்வாறான தமிழ்ச்சூழலில் ஒரு சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதும் பெரும் சிரமம்தான்.

27 வயதான அமெரிக்கக் குடும்பம்

ஒரு திரைப்படத்தையோ தொலைக்காட்சி தொடரையோ பார்க்கும்போது வெறும் மேம்போக்கான ரசிகனாக மட்டும் இல்லாமல், அதன் படைப்பு நுணுக்கங்களை தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. இது ஏதோ நானும் படமெடுக்கிறேன் என்று எதிர்காலத்தில் நான் கிளம்புவதற்கான முன்னேற்பாடல்ல. ஆக்கத்தின் பின்னால் உள்ள செயல்முறைகளை நன்கு புரிந்துகொள்வது, ஒரு கல்வி ஆய்வு (academic analysis) பின்புலத்துடன் நிகழ்ச்சிகளை நான் ஆழ்ந்து அனுபவிக்க உதவும் என்ற என் எண்ணம்தான் இதற்கு காரணம். என் பொறியாளன் வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது இத்தகைய ஞானம் ஏதாவது தேவையற்ற புத்தகங்கள் எழுத உதவுமோ என்னமோ. அந்த நல்ல தொடர்கள் வரிசையில் சேர வேண்டிய ஆனால் மிகவும் வேறுவகையான புனைவு இருபத்தேழு வருடங்களாக அமெரிக்காவின் Fox தொலைக்காட்சி சேனலில் வந்து கொண்டிருக்கும் …
பெரியவர்கள் இது ஏதோ குழந்தைகளுக்கான டாம் & ஜெர்ரி போன்ற கார்ட்டூன் ஷோ என்று அலட்சியமாக ஒதுக்கி விடுவார்கள். 1988-1991களில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் “நான் இது வரை பார்த்ததிலேயே மிகவும் முட்டாள்தனமான ஷோ அது” என்று சொல்லி தனது அறியாமையை உலகுக்கு தெரிவித்தது இந்த அலட்சியத்தின் உச்சம். ஆனால் சிம்சன் தொடரோ அத்தகைய விமர்சனங்களை ஓரங்கட்டிவிட்டு புஷ் தம்பதிகளையே ஒரு எபிசோடில் கலாய்த்துவிட்டு இன்றும் உற்சாகமாய் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

மேகக் கணிமை (Cloud Computing) – 4

உள்கட்டமைப்புச் சேவையில் உங்களது கணிமை வளங்கள்மேல் உங்களுக்கு முழுச் சுதந்தரம் உண்டு. உங்களுக்குத் தேவையான மென்பொருட்கள், செயலிகளை உங்கள் விருப்பத்திற்கேற்ப நிறுவிக்கொள்ளலாம். இச்சுதந்தரத்தின் விலை, பொறுப்பு. இச்செயலிகள் ஏதேனும் மக்கர் செய்தால் நீங்கள்தான் களத்தில் இறங்கவேண்டும். அதேபோல், மென்பொருட்களின் புதிய பதிப்பு வரும்போதோ அல்லது ஏதேனும் பாதுகாப்புப் பிரச்னைகள் வரும்போதோ அதை நீங்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். நல்ல ஐடி ஆட்கள் உங்களிடம் இருப்பது மிகவும் அவசியம்.

மகரந்தம்: கோஹினூர் வைரம்; சீனப் பொருளாதாரம்

வழக்கின் நோக்கம், இங்கிலாந்தின் அரசை கோஹினூர் வைரத்தை பாகிஸ்தானுக்குத் திருப்பிக் கொடுக்கச் செய்வதுதான். கோஹினூர் வைரத்துக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அந்த வாதங்கள் பொருட்படுத்தத் தக்கனவாக இராது- நம் பார்வையில். ஏனெனில், அதை சீக்கிய அரசர் ரஞ்சித் சிங்கிடமிருந்துதான் பிரிட்டிஷார் எடுத்துச் சென்றனர். ஆனால் இதே வைரத்துக்கு ஆஃப்கானிஸ்தானும் உரிமை கொண்டாடுகிறது. அது எப்படிஎன்றால், நாதிர்ஷா என்னும் ஈரானிய ஆக்கிரமிப்பாளன் அதை இந்தியாவிலிருந்து பறித்துச் சென்றான், பிறகு நாதிர் ஷாவின் ஆட்சி வீழ்ந்த பின்னர், ஆஃப்கன் அரசர் ஒருவர் அதை பர்சியர்களிடமிருந்து பறித்தார். அவர் ஆட்சி வீழ்ந்த போது…

குளக்கரை:சவுதி நிதி, அரபு விதி, டெட்ராய்ட்டின் அதோகதி

இந்திய அறிவு ஜீவிகளைக் கேளுங்கள், அவர்கள் எல்லாரும் இந்து மதத்தையும், இந்துக்களையும்தான் உடனே ஃபாசிஸ சக்திகள் என்று முத்திரை குத்துவார்கள். அந்த மதத்தின் எதுவும் காட்டுமிராண்டித்தனம். ஆனால் ஐஸிஸ் போன்ற அமைதி மார்க்கத்தினரின் வழி அதி அற்புத முற்போக்கு என்று சொல்வதில் அவர்களுக்குச் சிறிதும் தயக்கமே இராது. ஜவஹர்லால் நேரு பல்கலையின் அதி புத்திசாலி மாணவர் குழுக்களைப் பாருங்கள். எப்படி இந்தியாவை உடைத்து, காஷ்மீரைப் பாகிஸ்தானிடம் கொடுத்து, இந்தியாவுக்குள் சீனாவின் ஆட்சியை (மாவோயிச ஆட்சி) வரவேற்று உலக அமைதிக்கு வழியை நாளையே காணத் துடித்துப் போராட்டம் எல்லாம் நடத்துகிறார்கள். அதல்லவா தீர்க்க தரிசனம்.

லண்டனில் இலக்கிய உரையாடல்கள் – புதுமைப்பித்தனின் “செல்லம்மாள்”

வானத்திலே தறிகெட்டுச் சிதறிக் கிடந்த நட்சத்திரங்களில் திரிசங்கு கிரகமண்டலம் அவர் கண்ணில் பட்டது. அவருக்கு வான சாஸ்திரம்ம் தெரியாது. சங்கு மண்டலத்தின் கால், தூரத்தில் தெரிந்த கறுப்பு ஊசிக்க் கோபுரத்தில் மாட்டிக் கொண்டு அஸ்தமிக்கேவா உதயமாகேவா முடியாமல் தவித்தது. — சங்கு மண்டலம் crux எனப்படும் நட்சத்திரக்கூட்டம். நமது புராணத்தில் அது திரிசங்கு சொர்க்கம் – அங்கும் போக முடியாமல் இங்கும் வரமுடியாமல் நடக்கும் ஊசலாட்டத்தைக் குறிக்கிறது. இங்கு செல்லம்மாளின் மனநிலை அப்படிப்பட்டது தான். அவளது சமூக மனம் கணவன் வேலைக்குச் அனுப்ப நினைக்கிறது, உடல் வியாதியும் மனமும் தனிமையை உணர்ந்து தவிக்கிறது“