அழிக்க வந்த போலி காருண்யம்

தென் இந்தியா முழுக்கசுற்றி வந்திருக்கிறேன். இந்திய மாட்டினத்திலேயே கர்நாடக ஹள்ளி கலைகள் போல அழகும் கம்பீரமும், ராஜாம்சமும் பொருந்திய காளைகளை நான் பார்த்ததில்லை. காங்குராஜ், கென்வாரி, சாகிவால், ஒங்கோல், நகோரி போன்ற இந்திய மண்ணுக்கே உரிய காளைகளோடு ஒப்பிட்டே இதை முன் வைக்கிறேன். புலிக்கு ஆனைமலையிலும் சத்தியமங்கலத்திலும் சரணாலயம் ஏற்படுத்தி விட்டாரகள். அழிந்து வரும் இந்த அபூர்வ காளை இனங்களுக்கு விளங்கு நேய ஆர்வலர்கள் மாற்று ஏற்பாடேனும் செய்து வைத்திருக்கிறார்களா? சாத்தியம்தானா? புலி, சிறுத்தை, செந்நாய்களுடன் இந்த பசுவினம் வாழ்ந்து விடுமா? காட்டை விட்டுப் பிரிந்து 3000 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதனை நம்பி மேய்ச்சல் செய்கின்ற இனமாக சங்க காலத்திற்கு முன்பிருந்தே ஆகி விட்டது. கர்நாடகத் துளு மக்களின் பாரம்பரிய சேற்று காளை விரட்டான ‘கம்பளா’ என்ற எருமை விளையாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கிறது நீதிமன்றம். விவசாய தமிழ் மனங்களின் தொப்புள்கொடி உறவிலிருந்து பிரிக்கிற சட்டம் வருமானால் வீட்டு விலங்கான இந்த இனங்கள் அழிவது உறுதி. மாடுகள் துள்ளிக் குதித்து ஓடவில்லை என்றால் மூக்கடைப்பு வந்து அவதிப்படும்.
பிரசித்தி பெற்ற ஸ்பெயின் காளை சண்டையல்ல, கணத்தில் குத்தி வீழ்த்துவதற்கு. தோற்றாலும் வென்றாலும் மாடுகள் வீட்டிற்கு வந்ததும் குளிக்க வைத்து தாடையை அணைத்துக் கொஞ்சுவர். அலுப்பு அகல ஒற்றைச் சாக்கை மடித்துப் போட்டு முதுகு தேய்த்து விடுவர். அவர்களுக்கு மாடு ஒரு பிள்ளை. நீங்கள் கி.ரா.வின் ‘குடும்பத்தில் ஒரு நபர்’ கதையை …

எட்டாண்டு ஒபாமா ஆட்சி – ரிப்போர்ட் கார்டு

அடுத்த தேர்தலும் வாசற் கதவை தட்ட, மீண்டும் ஒரு முறை அவரே ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட, அவர் மேல் கொண்டிருந்த நம்பிக்கையில் மக்கள் அவரையே தேர்ந்தெடுத்தனர். அமெரிக்காவில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் இன்சூரன்ஸ் கொள்ளையர்களிடமிருந்து எளியவரை காக்க அவர் கொண்டு வந்த திட்டத்தை தீவிரமாக எதிர்த்த எதிர்க்கட்சி அதை செயலாக்க விடாமல் அவரை எதிர்த்துக் கொண்டே இருந்தது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி பல மில்லியன் டாலர் செலவழித்து ஒபாமாகேர் வந்து விட்டது. இன்றும் அதனுடைய பயன்கள் எப்படி சாமானியர்களுக்கு உதவப் போகிறது என்று தெரியவில்லை. இன்சூரன்ஸ் கம்பெனிகளும் மருத்துவர்களும் ஒபாமாகேரில் நாட்டமில்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

கலைமகள் நடனம் காண…

அஜி: ஹெர்சாக் ஆவணப் படத்தில் ஒரு சித்திரம் வருகிறது. ஹெர்சாக் முப்பது ஆயிரம் வருடம் கொண்ட குகை ஓவியங்களை குறித்து படம் செய்திருக்கிறார். அதில் ஒரு ஓவியம் குதிரை முகம் கொண்ட நிர்வாணப் பெண். இன்று இவற்றை வைத்துக் கொண்டு மனிதத் தன்னிலை குறித்து ஆராய ஒருவர் நுழைந்தால், இன்று அவருக்கு உலகில் மிச்சமிருக்கும் ஒரே ஒரு புகலிடம் இந்து மதம் மட்டுமே. அந்த எல்லையில் சக்கரைப் பொங்கல் இது எதையும் மாற்றி வைக்குமே தவிர அழிய விடாது. மாறாக பகுத்தறிவும் , இறைவார்த்தையும் ஊடுருவிய இடம் எல்லாம் அழிவு மட்டுமே மிஞ்சுகிறது. நமது வேர்களை இழந்து விட்டால், மீண்டும் நாம் மந்தைகள் ஆவதன்றி வேறு வழி இல்லை.

இந்திய கலை திருவிழா – 2016

டெல்லியில் நிறைய ஓவியக் கண்காட்சிகளும் கலைவிழாக்களும் நடக்கின்றன. வரைபட சந்தைக்கும் ஓவிய விழாவிற்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள் என்ன என்று சற்றே வியந்துவிட்டு, ஜனவரி 14 முதல் 17 வரை நடந்த கொண்டாட்டத்தில் பிடித்த படங்களை இங்கே பகிர்ந்திருக்கிறார்கள். கீழே ராக்கீ ராய் ஓவியம்.

பதாகை சிறப்பிதழ்

ஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.

ஷியாவா? ஸுன்னியா??

ஸுன்னி இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியாய் இருக்கும் நாடுகளில் ஷியாக்கள் எப்போதும் வறுமைக்கோட்டில் இருப்பார்கள். அவர்கள் மீது வன்முறை ஏவிவிடப்படும். அவர்களை கொலை செய்தலை அரசே நியாயப்படுத்தும். இறைவன் ஒருவனே என்பதை ஏற்றுக் கொண்டுள்ளோம், அதே போல இமாம் ஹுசைனும், இமாம் அலியும் போல முகமது நபிக்கு பின்னர் வந்த 12 இமாம்களை வணங்குவதும் எங்கள் உரிமை, அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது ஷியாப்பிரிவு இஸ்லாமியர்களின் வாதம். அதற்காக உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம் என்பதே ஷியாக்களின் நிலைப்பாடு. ஏக இறைவனை ஒத்துக்கொள்ளும் ஷியாக்கள் பிற இமாம்களை அல்லாவை வணங்குவது போல…

கிருஷ்ணனுக்குப் பன்னிரு நாமங்கள்

அன்னை யசோதைக்கும் தன் செல்லக்குழந்தை கிருஷ்ணனின் காதுகளில் துளையிட்டு, மற்றச் சிறுவர்களைப்போல் அழகழகான காதணிகளை அணிவித்துப் பார்க்க ஆசை இராதா? பெரியாழ்வாரின் திருவாய்மொழியாக நாம் இங்கு காணப்போவது வெகுசுவாரசியமான இந்த நிகழ்ச்சியைத்தான்! யசோதையின் ஒருதலைக்கூற்றாகப் (monologue) பாசுரங்களாக்கி இந்தக் காதுகுத்தும் நிகழ்ச்சியைக் கதைப்போக்கில் அளித்துள்ள அழகும் நயமும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிடுகின்றன. இதில் இன்னும் ஒரு அழகான விஷயம் என்னவென்றால் திருமாலடியார்கள் உயர்வாகக்கருதும் கிருஷ்ணனின் பன்னிரு திருநாமங்களைக் கொண்டு இப்பாடல்களை அமைத்துள்ளதுதான்!

ஹாங்காங் தமிழ் வகுப்பு- வானொலி நிகழ்ச்சி

கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், மேலும் நாவல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். அரசியல்வாதி, திரையிசைக் கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் , பத்திரிகையாசிரியர் என்று பல் முகங்களுடன் விளங்கினார். அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் ஆகியவை கண்ணதாசன் எழுதிய முக்கியமான புத்தகங்கள். அவரது பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தவண்ணமிருக்கின்றன. அவற்றுள் ஒன்று …

பொன்முட்டை

இரண்டு முறை அதே தெருவில்  வீட்டைத் தேடி தவறவிட்டாகிவிட்டது. செல்போனில் அழைத்தால் “ பச்சை பெயிண்ட் அடிச்ச கேட் சார்.. சின்னதா இருக்கும். இப்ப தெருக்கோடியில குப்பை லாரி தெரியுதா? அதுலேர்ந்து நாலாவது வீடு” நான் தெருக்கோடியில் திரும்பவதற்குள் குப்பை லாரி போய்விட்டிருந்தது. மீண்டும் “பச்சை கேட்” என “பொன்முட்டை”

எண்ணங்கள் சிந்தனைகள் – எதிர்வினைக்கான பதில்கள்

மனம் ஒரு தனித்த இருப்பு அல்ல. அது மூளையின் இயக்கம். மூளை ‘செல்’களின் (நியூரான்களின்) தொகுப்பை மூளையின் இருப்பு எனலாம். அவை தொடரந்து வேதிவினை அல்லது வேதிவினையின் விளைவான மின்இயக்கத்தால் இயங்குகிறது. அந்த இயக்கம், அதாவது ஒரு நியூரானின் வேதி இயக்கம் அடுத்த நியூரான்களை தூண்டுவதால் அங்கும் நிகழும் வேதிஇயக்கம் இவற்றின் தொடர் சங்கிலியை மனம் என்று கூறலாம். கணினியின் ப்ராஸஸர் வேலை செய்வது மின் இயக்கத்தை அதிவேகத்தில் அடுத்தடுத்த bits எனப்படும் நினைவுக் கண்ணிகளுக்குச் செலுத்துவதுதானே. அங்கு செல்வது என்ன? மென்பொருளால் வழிப்படுத்தப்பட்ட மின் இயக்கம்தானே? மின்இயக்கமாக மாறிய மெனபொருள்தானே?

இல்லங்களில் கருவிகள்

சின்னக் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், பெற்றோர்கள், இதைப் பெரும்பாலும் ஒரு அவசியமானத் தேவை என்று நினைக்கிறார்கள். மகப்பேறு விடுமுறை அதிகம் இல்லாமல் தவிக்கும் தாய்மார்கள், பிஞ்சுக் குழந்தைகளை வீட்டில் செவிலித் தாயிடம் (babysitter) விட்டுச் செல்லும் பொழுது, குழந்தையின் நலம் பற்றி அறிய விடியோ மிகவும் உதவுகிறது. இந்த விடியோ காமிராக்கள் ஒவ்வொரு நிமிட நிகழ்வுகளையும் பதிவு செய்வதால், வீட்டுத் திருட்டு முயற்சிகளைத் தடுக்க உதவுகிறது. ஆனால், சமீப காலமாக, சில இணைய விஷமிகள், (internet hackers) தலைகீழாக, இணையம் மூலம், வீட்டில் நடப்பதைக் கண்காணிப்பது, இந்த முறைகளின் பாதுகாப்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. வளரும் இந்தக் கருவி இணைய முயற்சிகளில், பெரிதும் அடிபடுவது, பாதுகாப்பின்மையற்ற வீட்டுக் கருவிகள்.

குதிரை வட்டம்

சற்றுநேரம் மின்னல்கள் நதிப்பரப்பில் சிறுபிள்ளைகள் போல ஒன்றையொன்று துரத்திப் பிடிப்பதைப் பார்த்தவாறு நாங்கள் நின்றிருந்தோம்.கடைசியில் ஒரு பெரிய சட்டாம்பி மின்னல் வந்து எல்லாரையும் விரட்டியடித்தது அதன்பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்ட ஒரு விளையாட்டரங்கம் போல வானம் அமைதியுற்றது.மழை சொட்டித் தீர்ந்தது.சிறிய ஓடைகளின் கொலுசுச் சப்தம் கேட்க ஆரம்பித்தது.சோடியம் வேபர் விளக்கு திடுமென்று ”இனி நான் பணி நோக்கட்டே ?”என்பது போல எரிந்தது

எழுச்சியூட்டும் நம்பிக்கை

இளைஞர் சமுதாயம் தீய வழிகளில் செல்லாமல் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க இப்படிப்பட்ட வடிகால்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பல குடும்பங்களில் விளையாட்டு, இசை, கைவேலை என்று சிறு வயது முதலே ஓய்வு நேரப் பழக்கங்களாகப் பழக்கப் படுத்திவிடுவார்கள். இன்னும் சில குடும்பங்களில் கலையார்வங்களை வளர்ப்பார்கள். ஆண் பெண் பேதங்கள் இல்லாமல் பலவிதக்கலைகளிலும், விளையாட்டிலும் ஆர்வங்கள் பலவிதங்களில் வளர்க்கப்படும். இவையெல்லாமே இளம் வயது ஆர்வங்களுக்கு ஒரு வடிகால் வகுக்கும் வழிமுறைகள்தாம்.

பரிவே ஆதார சுருதியாக வாழ்ந்து மறைந்த சார்வாகன் பற்றி

இந்திய தத்துவம், பண்பாட்டு வரலாறு ஆகியவை குறித்த அவரது ஆழ்ந்த அறிவு இந்திய எதார்த்தத்தின் பல தள இயக்கத்தை எளிதாகக் கைப்பற்றி படைப்புலகக் கருப்பொருளாக அமைக்க உதவியிருந்தது. இதனால் அவரது புனைவுகளில் அவை புராணத் தன்மை கொண்டதாக அமைந்தன, ஆனால் தொன்ம குணம் கொண்டு அமையவில்லை. அவருடைய வாழ்வு நெடுக இருந்த பரிணாமத் தன்மை கொண்ட தேடலை எந்த சக்தி உந்தியது என்று பார்க்க முயன்றோமானால், அது அவருடைய விசாலமான பரிவுணர்வாகத்தான் இருக்க முடியும் என்று தெரிய வரும்.

மீட்டர் போட்ட ஆட்டோக் கணிமை

அமேசானின் தரவுமையத்தில் ஏதேனும் பெரிய பிரச்னை வந்து அவர்களின் அனைத்துத் துணுக்குகளும் படுத்துவிட்டால்? இது நடப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்றாலும் ஒருசில முறை இது நடந்திருக்கிறதுதான். அப்போது உங்கள் நிறுவனத்தில் எத்தனை அசகாய சூரர்கள் இருந்தாலும் அவர்களால் ஆணிகள் ஏதும் பிடுங்க இயலாது. அமேசான் இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வரையில் நீங்கள் தலைசொறிந்து கிடக்கவேண்டியதுதான். அவ்வாறு நடக்கும்போது அவர்கள் எவ்வளவு நேரம் உங்கள் துணுக்கு செயல்படவில்லையோ…

அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா

இந்தப் புத்தகத்தின் வாசகரைக் குறித்து, கீழ்க்கண்ட அவதானிப்பை முன்வைக்கிறார்கள்: ‘உங்கள் கொள்கை தாராளமயமானது; அதே சமயம் எக்கச்சக்கமாக இல்லாமல், கட்டுப்பெட்டியாகவும் இல்லாமல், மிகமிகச் சரியாக எவ்வளவு வேண்டுமோ… அவ்வளவுக்கு அவ்வளவு தாராள சிந்தை கொண்டவர் நீங்கள். பெரும்பாலான விஷயங்களில் உங்கள் கொள்கைக்கு இடதுசாரியாக இருப்பவர்களை வெகுளிகளாகவும், அரசியல் சரிநிலைக்காக நிலைப்பாடு எடுப்பவர்களாகவும், எதார்த்தத்தை உணராதவர்களாகவும் கருதுவீர்கள். உங்கள் கொள்கைக்கு வலதுசாரியாக இருப்பவர்களை சுயநலக்காரர்களாகவும், மற்றவர்களுக்கான அக்கறை அற்றவர்களாகவும், இந்த உலகத்தைச் சூழ்ந்திருக்கும் இன்னல்களைப் பற்றி புரிதல் அற்றவர்களாகவும் மதிப்பிடுவீர்கள்.’

மகரந்தம்

சில தினங்கள் முன்பு ஒரு சீன பல்கலையாளரைப் பார்க்க நேர்ந்தது. அவர் இந்திய மொழிகளுக்கும், சீன மொழிக்குமிடையே ஒரு பாலத்தைக் கட்ட முயல்கிறார். சில பத்தாண்டுகளாக இந்தி மொழியைக் கற்று, சீனாவில் அதைப் போதித்து வரும் இந்தப் பேராசிரியர் தற்போது சீன மொழிக்கு பல இந்திய மொழிகளில் இருந்து மொழி பெயர்ப்பு மூலம் இலக்கியப் படைப்புகளைக் கொண்டு சேர்க்கும் ஒரு திட்டத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். அவர் அடிக்கடி தெரிவித்த ஒன்று- சீனாவில் நிறைய முயற்சிகள் அரசுடைய கட்டுப்பாட்டில் இருப்பவை. தன்னை அழித்துக் கொள்ளுதல் என்பதில் சீனர்களுக்கு நிறைய பயிற்சி உண்டு என்பது தெரிந்தது. அதே நேரம் அவர்கள் கூழையாகவும் இல்லை. நிமிர்ந்த நோக்குடன்…

அவர்களுக்கிடையே

அப்போது அந்தச் சந்தில் ஒரு பெண் தன் பைக்கோடு போனாள். தாத்தா காறித் துப்பினார். அது வண்டியின் கேரியரில் பட்டது. இந்த மாதிரி துல்லியமாக துப்புவதில் தேர்ந்தவர்.
சாப்பாடு முடிந்தது.சிறுவன் தலையில் குல்லா அணிந்து கொண்டு ஓடினான். ஓடிய வேகத்தில் பாட்டியின் கால்களை மிதித்து விட்டான். “நீ குருடா? “ பாட்டி கோபத்தில் கத்தினாள்.
“செத்து ஒழி ” தாத்தாவும் கத்தினார்.
அதற்குள் சிறுவன் சிட்டாய்ப் பறந்து விட்டான்.பள்ளிக் கூடம் மிகவும் அருகில்தான்.

மந்திரமாவது….

இனி பேசி பிரயோஜனமில்லை. அமைதியாக இருக்க ஆரம்பித்தான். வண்டி மெதுவாக ஊர்ந்து செல்ல தொடங்கியது. வாந்தி வருவது போல நாறியது. தார் நெடி. முகத்தை சுளித்துக் கொண்டான். ரயிலடிலிருந்த மெயின் ரோட்டின் நடுவே இருந்த குழியை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ரொம்ப நாளாகவே அது அப்பிடியே தான் இருக்கிறது. இப்போதாவது மாற்றுகிறார்களே என நினத்துக் கொண்டான். அவர் மேலும் ஏதோ கேட்டு கொண்டிருந்தார். முகத்தை திருப்பி வெளியே பார்த்தான். இப்போது எதுவும் பேச வேண்டாம் என சங்கல்பம் செய்து கொண்டான். மனம் அலை பாய்ந்தது. தட்டு தடுமாறி எண்ணப் பள்ளத்தாக்குகளின் இடுக்குகளில் மாட்டிச் சிந்திச் சிதறியது. சத்தமில்லாமல் மனதிலேயே எண்ணிக் கொண்டான்.