கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – தளர்நடை நடவானோ!

“தேவர்கள் தொழுது வணங்கும் உனது திருவடியால் இரண்டடிவைத்து மூவுலகங்களையும் இருள்நீங்குமாறு செய்வித்து அளந்தாயே! அந்த அடிகளால் மேலும் பஞ்சபாண்டவர்களுக்காக துரியோதனாதிகளிடம் தூதுசென்றாயே! பின்பு நரசிங்கமாகிப் பகைவனை அழித்தனையே! இது என்ன மாயமோ! வியப்பினை உண்டுபண்ணுகின்றதே!”

What a wonderful world

நகரச் சதுக்கத்தைத் தாண்டியபின் மறுபடியும் சைக்கிளில் ஏறி நகர தேவாலயத்தை ஒட்டிய பெரும் கற்கள் பாவித்த தெருக்களில் சற்று வேகமாக மிதித்தோம்.
இரு புறங்களிலும் உயர உயர நூற்றாண்டுகள் தாண்டிய சுவர்களுக்கும் நடுவில் தெருவே குறுகிய கால்வாயாகத் தோன்றியது. எதிரில் இன்னொரு சைக்கிள் வந்தால் கூட உரசும் அபாயக் கால்வாய். ஐரோப்பிய முடுக்கு என்ற வார்த்தை இந்த ஊருக்கு மாறி வந்த போதே தோன்றி இருக்கிறது. அன்று போலவே இன்றும் சிரிப்பு வந்து விட்டது.
தெரு முடிவில் திரும்பி இன்னொரு சற்றே பெரிய கால்வாயில் கலந்தோம்.

கருவிகளின் இணையம் – கருவி இணையத் தொழில்நுட்பம் – பகுதி 9

ஒரு வேடிக்கையான விஷயம், ஐ-ஃபோன் வெளி வந்தவுடன், வழக்கம் போல பல்லாயிரம் ஜோசியங்களைப் பலரும் எழுதித் தள்ளினார்கள். ஆனால், எவருமே, ஒரு உணர்விகளின் ஒரு புது யுகம் என்று சொல்லவில்லை. 2007 –க்கு பிறகு, உணர்விகளின் தேவை பலநூறு மடங்குகள் அதிகரித்து, இன்று இணையக் கருவிகளின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியதற்கு முக்கிய காரணம், ஐஃபோன் மற்றும் திறன்பேசிகள்.

குளக்கரை

கட்டுரையாசிரியர் சுட்டுவதைப் பார்த்தால் அமெரிக்க ராணுவமுமே இன்று ஒரு முச்சந்தியில் நின்று எப்படி முன் செல்வது என்ற தவிப்பில் இருப்பது புலனாகிறது. தொடர்ந்து ஆயுதங்களை மேம்படுத்தும் தொழில் நுட்பத் திறனால்தான் அமெரிக்க ராணுவம் இன்னும் உலகில் முன்னணி ராணுவமாக இருக்கிறது. அதன் வீரர்கள் படிப்படியாக ஆயுதங்களுடைய உதவியாளர்களாக மாறிவருகிறார்கள். இப்படி ஆயுதங்கள் பெரும் எட்டு முன்னே எடுத்து வைக்க அவற்றிற்குத் தேவையாக இருப்பது என்ன, அந்த வகைக் கனிமங்கள் எப்படி பெருமளவு சீனாவின் கைப்பிடியில் உள்ள சுரங்கங்களில்தான் கிட்டும், அப்படிச் சீனாவுக்கு அமெரிக்க ராணுவத் தொழில் நுட்பத்தை அடகு வைப்பது அமெரிக்க ராணுவத்தை செல்லாக் காசாக்கி விடும் என்று புலம்புகிறார் இந்த அமெரிக்க ராணுவத் தொழில் நுட்பத் துறையில் ஆய்வு செய்பவர்.

தந்தையும் மகளும் போல் – இலக்கிய உறவு

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும் என்னும் என்னுடைய ஆய்வு நூல் மருதா பதிப்பக வெளியீடாகச் சென்னையில் 2005 இல் வெளிவந்திருந்தது. அவர் அந்த நூலைப் படித்துத் திண்ணையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பியும் இருந்தார். அக்கட்டுரையில் என்னைப் பற்றியும், என்னுடைய நூலின் தேவை பற்றியும், என்னுடைய துணிவையும் பாராட்டியிருந்தார். அப்படியெல்லாம் எளிதில் வெ.சா. பாராட்டிவிட மாட்டார். தகுதியான படைப்புக்கள் அவருடைய கண்களிலிருந்து தப்பியதே இல்லை.

ஃபிரைட் ரைஸ்

“போன மாசம் அவன் ஃபிரேண்ட் ஆத்துக்கு விளையாட போனும்னு கொண்டு போய் விட்டுட்டு வந்தேளே, அன்னைக்கு அவா ஆத்துல திடீர்னு ஏதோ சைனீஸ் ஹோட்டலுக்கு போயிருக்கா. இவன் இருந்தான்னு இவனையும் கூட்டீண்டு போயிருக்கா. அவால்லாம் கார்ல போறாளேன்னு இவனும் ஆசப்பட்டு போயிருக்கான். அங்க போயி இவனுக்கும் சாப்ட வாங்கித் தந்திருக்கா..”

தமிழர்  பயன்பாட்டிற்கு செயலிகள் உருவாக்குவது

பெரும்பாலான கணினி செயலிகள் (programs) ஆங்கிலம் பேசும் சந்தையில் விற்பனைக்காக உருவாக்கப்பட்டதால் மற்ற மொழிகளின் (தமிழ் உட்பட) கலை நயங்களை உட்கொள்ளாமல் செயல்படுகின்றன. இதனால் நாம் இந்த செயலிகளை ஒரு மாற்றான்-தாய் மனப்பாங்குடன் பயன்படுத்துகிறோம். உதரணத்துக்கு Facebook (முகநூல்) தளத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் வருமாறு பயன்படுத்துங்களேன். இவை ஒரு செயற்கையான ஒரு மொழிபெயர்ப்பின் இடைமுகத்தையும் எதிர்நோக்கையும் அளிக்கின்றன.

நம் நலன்…..நம்மைச் சேர்ந்தவர் நலன்…..சமூக நலன்….

பேரிடர் என்பது சொல்லி வைத்து வருவதில்லை. இயற்கையோ அல்லது மனித வெறுப்பில் உருவான தீவிரவாதத் தாக்குதலோ, எதிர்பாராமல்தான் நம்மைத் தாக்குகிறது. கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். நமக்கு ஐந்து நிமிடம் தரப்படுகிறது. அதற்குள் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளி வர வேண்டும். அதன் பின்னர் உங்கள் வீடு உங்கள் எதிரேயே தரைமட்டமாக்கப்படும். இது வேண்டும் அது வேண்டும் என்று வீடு நிறைய காலங்காலமாக சேர்த்துவைத்துள்ளவற்றில் எதை விடுவது?

தேவதச்சனின் கலைக்கூடம்

ஏற்கனவே புழக்கத்திலிருந்த கவியுருவின் போதாமையை நிரப்பும் தேவையின் பொருட்டு தோன்றி, வளர்ந்ததே நவீனக்கவிதை. ஆகவேதான் நாடகீயமான தருணங்களின் களஞ்சியமாக விளங்கும் மையக்கருவோ, நீண்டு விரிந்து துயரமான முடிவை நோக்கிச்செல்லும் கதையோ நவீனக்கவிதைக்கு கருப்பொருளாவதில்லை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பரவலாக அறியப்பட்ட, விக்டோரியன்/ ஷேக்ஸ்பியரியன் அழகியலை மீறிச்செல்லும் நோக்கத்தின் தோன்றிய பாணியின் வீச்சே நவீனக்கவிதைகளின் அழகியலை தீர்மானிக்கும் விசை.