வெ.சா. – குறிப்பு

“உண்மை ஏன் அதிரடியாக இருக்க வேண்டும்? அதிரடியாகத்தான் ஒரு சமூகத்தின் மேல் அது விழுகிறதென்றால் அது எப்படிப்பட்ட சமூகம்? நாம், தமிழர் இது பற்றி யோசிக்க வேண்டும்” என்றும், “தமிழனின் வீட்டு ஜன்னல் காலம் காலமாக திறந்துதான் இருந்தது. தமிழனைத் தட்டி எழுப்பியவர்கள்தான் அவன் வீட்டுக் கதவையும் ஜன்னலையும் “வெ.சா. – குறிப்பு”

குடிமக்களும் ஆட்சியாளர்களும் – 2

இன்றுவரை இடது சாரிகளில் Parti socialisteம், வலதுசாரிகளில் Les Républicains கட்சியும் (இதற்குமுன்பாக RPR என்றும் UMP என்றும் பெயர் வைத்திருந்தவர்கள்) மாறி மாறி ஆட்சியிலிருந்து வருகிறார்கள். கம்யூனிஸ்டுகள் செல்வாக்கிழந்து நாட்கள் பல ஆகின்றன. ஒரு சில நகராட்சிகளைக் கைப்பற்றுவதோடு அவர்கள் திருப்தி அடையவேண்டியிருக்கிறது. அவ்வப்போது சில ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொழிற்சங்கங்கள் தற்போதைக்கு ஆறுதல் தருபவையாக உள்ளன. கடந்த காலத்தில் சோஷலிஸ்டுகளின் தலமையின் கீழ் அமைச்சராக முடிந்ததெல்லாம் இனி நாஸ்டால்ஜியாவாக அசைபோடமட்டுமே கம்யூனிஸ்டுகளுக்கு உதவும்.

வெங்கட் சாமிநாதன் – முழுமையின் தொடக்கம்

சாமிநாதனின் அழகியலில் ஒரு அறிவியலுக்கான கறார் தன்மை இருந்தபடியே உள்ளது. அபிநவ குப்தரின் தொடர்ச்சி என்று கொள்ளலாம் – அல்லது தொல்காப்பியரின். இந்திய மரபில் அழகியல் கோட்பாட்டாளர்கள் எப்போதுமே அழகியலுக்கான ஒரு பொதுமைத்தளத்தை தேடியிருக்கிறார்கள். மேற்கத்திய விமர்சகர்கள் அதை மெல்ல மெதுவாக எட்டினார்கள். அதற்குள் நாம் விக்டோரிய மதிப்பீடுகளுடன் கலை ஆன்மிகம் பக்தி ஒழுக்க விதிகள் எல்லாவற்றையும் இணைத்த ஒரு bastardized நிலைக்கு வந்துவிட்டோம்.

கொடுக்கும் கலை

இருபது வருடங்களுக்குப் பின் இவருடைய கிளினிக்குக்கு ஒரு ஆலோசனைக்காக சென்றிருந்தேன். அவருக்கு வயதாகியிருக்கும்; அவரது சந்ததியினர் யாராவது இருப்பார்கள் என்ற எண்ணத்துடன் உள்ளே சென்றால், சாட்சாத் அவரே வழக்கம்போல் அதே நாற்காலியில் உட்கார்ந்து வரவேற்கிறார். இன்று அவர் வயது 73. “நீங்கள் முன்பே என்னிடம் பலவருடங்கள் முன்பு வந்தீர்கள் போலிருக்கிறதே….” என்று கேட்கும் அளவு ஞாபக சக்தி. எப்படி இவரால் இந்த வயதிலும் இப்படி எப்போதும் ஒரு புத்துணர்வுடன் வேலை செய்ய முடிகிறது? அவர் சொன்னார்: “ இரண்டு வருடம் முன்பு கிட்னியில் கான்சர் இருப்பது எனக்குத் தெரிய வந்தது.

கலைவெளியில் ஒரு தாரகை: வெ.சாவுக்கான இடம்

தமிழின் செவ்விலக்கிய மரபைக் குறித்து வெ.சா அறிந்திருக்கவில்லை, அதை முற்றிலுமாக அவர் புறக்கணித்தார் என்று கூறப் படுகிறது. இது உண்மையல்ல. அகநானூறு முதலான சங்கப் பாடல்களின் அழகியலையும் காதா சப்தசதி என்ற பிராகிருத மொழியின் பழம்பாடல் தொகுப்பையும் ஒப்பிட்டு வெ.சா எழுதியிருக்கிறார். சுவடிகளை மீட்டெடுத்த உ.வே.சாமிநாதையரின் பணியை உயர்வாகவே மதிப்பீடு செய்திருக்கிறார். தமிழின் இரண்டாயிரம் ஆண்டுக்கால மரபிலக்கியம் முழுவதையும் எந்தக் கலாபூர்வமான அளவீடும், ஆழமான நோக்கும் இன்றி சகட்டுமேனிக்குப் புகழ்ந்து தள்ளும் போலித் தனத்தைத் தான் அவர் கண்டித்தார்.

இலவச மின்னூல் வெளியீடு- அறிவிப்பு

அணுகுண்டு என்றவுடன், நமது ஊடகங்கள் எப்படியோ ஐன்ஸ்டீனையும் இத்துடன் இணைத்து கதை கட்டி வெற்றி கண்டுள்ளது. ஒருவர் என்னிடம், “ஐன்ஸ்டீன் மிகவும் மோசமானவர். இவர்தான் அணுகுண்டைக் கண்டுபிடித்து விஞ்ஞானத்தையே குட்டிசுவராக்கினார்” என்று சொன்னவரை, ஐன்ஸ்டீனைப் பற்றிச் சரியாகப் புரிய வைக்க, போதும் என்றாகிவிட்டது. இத்தனைக்கும் அவர் கணக்கர். விஞ்ஞானம் என்றால் ஓட்டம் பிடிப்பவர். இப்படி குற்றச்சாட்டை அடுக்காவிட்டாலும் அணு விஞ்ஞானம் பற்றிய பொதுப் புரிதல் மோசமாகவே இன்றும் உள்ளது

வெ.சா என்ற வெங்கட் சாமிநாதன் –எனது நினைவுகள்

தமிழ் கலாசாரச் சூழலில் நெடுங்காலமாக ஆட்சி செய்து வந்த திராவிட, மார்க்ஸீயக் கலாசாரம் இரண்டையும் எதிர்த்துக் கட்டுரைகள் எழுதி வந்தார். 70-களில்தான் அவர் ‘உள்வட்டம், வெளிவட்டம்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். ‘பிரக்ஞை’, ‘கசடதபற’ போன்ற பத்திரிகைகளில் அவர் எழுதிய அக்காலத்திய கட்டுரைகளில் இந்த உள்வட்டம்- வெளிவட்டத் தியரியின் தாக்கம் இருந்தது. ….அவரது உள்வட்ட-வெளிவட்டத் தியரியை நான் ஏற்கவில்லை. க.நா.சு என்ற க.நா.சுப்ரமணியத்தைப் போலவோ, சி.சு.செல்லப்பாவைப் போலவோ வெங்கட் சாமிநாதன் இலக்கிய விமர்சகரல்ல. வெங்கட் சாமிநாதன் ஒரு கலாசார விமர்சகர். ‘பாலையும் வாழையும்’ என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு இதைத்தான் வலியுறுத்துகிறது. வெ.சா.விடம் ஒரு உணர்ச்சி வசப்பட்ட, புளகாங்கித மயமான தன்மை அவரது கட்டுரைகளில் தொடர்ந்து துருத்திக் கொண்டிருக்கின்றன.

நானறிந்த வெ.சா

இதழ் வெளியீடு தேதியை கன்ஃபர்ம் செய்துகொண்டு அதற்கு இரண்டு நாட்கள் முன்பு கட்டுரைப்பகுதியை அனுப்புவார். அனுப்பும்போது மறக்காமல் ஒரு வரி இருக்கும். ‘சொன்ன தேதிக்கு முன்பே அனுப்பி விட்டேன். அதை பாராட்டி இரண்டு வார்த்தைகள் சொன்னால் தப்பில்லை’. சொன்ன தேதிக்கு இதழ் வெளிவரவில்லை என்றாலும் கோபப்படுவார். ’யாருடைய கட்டுரைக்கும் காத்திருக்கக் கூடாது. இதழ் வெளியீடு தேதி முடிவு செய்து விட்டால் வெளியிட்டு விடவேண்டும்’ என்பார். படைப்புகள் பற்றி வாசகர்களிடமிருந்து கருத்துப் பரிமாற்றம் இல்லை என்பது அவருடைய குறை. நமது வாசக சூழலே இன்று இப்படித்தான் இருக்கிறது என அங்கலாய்ப்பார். அவர்களுக்கு சொந்தக் கருத்தே இல்லையா. அல்லது சொல்லத்தயக்கமா அல்லது எதற்கு எதையாவது சொல்லி வம்பில் மாட்டிக் கொள்வது என்கிற நினைப்பா எனப் புரியவில்லை என்பார்.

அறிதல் – நெடுங்கவிதை

ஒரு கிளையில் நான்கு முட்டைகள் பொரியும் காக்கையின் கூடு
கூட்டுக்கான சுள்ளிகள் எதுவும்
கட்டப்பட்ட மரத்திலிருந்து உடைக்கப்பட்டது இல்லை
ஒரு கிளைக்கும் மற்றொரு கிளைக்குமான இடைவெளியையும்
கிளையின் தூரத்தையும், கிளையின் திசையையும்
கிளைகள் உயர்ந்து, தாழ்ந்து, வளைந்து செல்வதையும்
தீர்மானிப்பவை வேர்கள் என்றால்,
வேருக்கு அந்த வித்து எங்கிருந்து வந்ததோ
பாழடைந்த சுவரில் மோதி வளராமல்
பாதியிலேயே முடமாக நிற்கும் அந்தக் கிளையின் மீதம்

எல் நீன்யோ – தொடரும் பருவநிலை மாற்றங்கள்

தென்மேற்குப் பருவமழையளவைக் குறைத்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எல் நீன்யோ, வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்த வரை அதற்கு நேரெதிரான விளைவையே ஏற்படுத்தி வந்துள்ளது. எல் நீன்யோ நிகழ்வு நடைபெறும் நேரங்களில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்திற்கு அதிகமாகவே பெய்து வந்திருக்கிறது. இம்முறையும் அதே போல், அதிக அளவு மழைப்பொழிவே இருக்கும் என்பது வானிலையாளர்களின் கணிப்பு. மேலும் இரு முக்கிய காரணிகளான ஐஓடியும் MJOவும் இம்முறை சாதகமாக இருப்பதால், மழையளவு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வழக்கமாக அக்டோபர் மத்தியில், ஐப்பசி முதல் வாரத்தில் துவங்கவேண்டிய வடகிழக்குப் பருவமழை இவ்வருடம் தாமதமாக, அக்டோபர் 28ம் தேதி துவங்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சிரியாவும் இன்ன பிறவும்…

ஏராளமான முஸ்லிம்கள் மிச்சிகன், மின்னியாபொலிஸ் போன்ற பகுதிகளில் பெருமளவிற்குக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது வலதுசாரி அமெரிக்கர்களை எரிச்சலில் தள்ளியிருக்கிறது… உலகில் வஹாபிய சுன்னி இஸ்லாமியத் தீவிரவாதம் பரவக் காரணமாயிருக்கிற சவூதி அரேபியா பிற இஸ்லாமிய பிரிவுகளைச் சேர்ந்த ஷியா, அல்லாவைட் போன்றவர்கள் வாழும் இராக்கிய, இரானிய, குர்து, சிரிய நாடுகள் மீது பயங்கரவாதத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்கா அதனைத் தடுக்க முயலாமல் அவர்களுக்கு மறைமுகமாக உதவுகிறது என்னும் குற்றச் சாட்டிற்கு அமெரிக்கா இன்றுவரை பதிலளிக்கவில்லை. மானுடகுலம் இதுவரை கண்டிராத குரூரத்துடன் நடந்து கொள்ளும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ரஷ்ய தாக்குதல்களால் சிதறடிக்கப்படுகையில் அதனை ஆதரிக்காமல் எரிந்து விழும்…

கருவிகளின் இணையம் – பொதுப் போக்குவரத்துத் துறை

ஒரு ரயிலின் எஞ்சினோ அல்லது ஒரு லாரியோ, ஒவ்வொரு மைலுக்கும் பல வகை சூழ்நிலைகளைக் கடக்கிறது. இன்று, இத்தகைய சூழ்நிலைகளின் தரவு நம்மிடம் இல்லை. ஏதாவது ஒரு பாகம் வேலை செய்யாமல் நின்றாலே, என்னவாயிற்று என்று பார்க்கிறோம். இதனால், வருமுன் காக்காமல், பல நாட்கள் பழுது வேலையில் வாகனங்கள் பயனின்றிப் போகின்றன. டிஜிட்டல் உணர்விகள், ஒவ்வொரு மைலுக்கும் 10 மெகாபைட் வரை தரவுகளை (data) ஒரு மேகக் கணினி வழங்கிக்கு (cloud data server) கொடுத்த வண்ணம் இருக்கும், என்று கணிக்கப் பட்டுள்ளது உதாரணத்திற்கு, லாரியின் டயர்களில் டிஜிட்டல் வால்வுகள் சாலையின் தரத்திற்கேற்ப…

அமெரிக்க தகவல் நிலையத்திற்கு

இந்த ஃபாஸிஸ்ட் முத்தண்ணா ‘ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம்’ என்று கோஷங்கள் இடுவதிலிருந்து அதன் வாய் ஓய்வதில்லை. கடந்த நாற்பது வருட கால என் பொதுவாழ்வில் என் சுதந்திரத்தையும் என் நேர்மையையும், என் வழியில் மிகுந்த ஆக்ரோஷத்துடனேயே பாதுகாத்து வந்துள்ளேன். “உன்னுடைய நேர்மையையும் , சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டினால், உன் எழுத்தோடு சம்பந்தப்படாத ஒரு வேலையை, இரவு நடன விடுதியில் பியானோ வாசிப்பது போன்ற ஒரு வேலையைச் செய்” என்று சொன்னது உங்கள் நாட்டவன் ஓர் அமெரிக்கன், வில்லியம் ஃபாக்னர். கடந்த நாற்பது வருடங்களாக இது போன்ற ஒரு காரியத்தைத்தான் நான் செய்து வந்திருக்கிறேன்.

மறந்துவிட்டீர்களா?

வெ.சா ரொறொன்ரோ பல்கலைக்கழக அரங்கில் இயல் விருது ஏற்புரையில் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒரு ஞானியிடமிருந்து மட்டுமே அப்படியான வார்த்தைகள் வெளிவரும். நாற்பது வருடங்களுக்கு முன்னர் அவருடைய அலுவலகம் அவருக்கு நாடு நாடாக சுற்றி பணியாற்றும் ஒரு வாய்ப்பை கொடுத்தது. ஆனால் அந்த வாய்ப்பின் பெறுமதி தெரியாத ஒருவர் கொடுத்த நிர்ப்பந்தத்தால் அந்த வேலையை அவர் இழக்க நேரிட்டது. ஆகவே அவருக்கு ஏமாற்றங்களும் இழப்புகளும் பழகிப்போனவை. அவற்றை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தது. அவர் வாழ்க்கையில் ஒன்றையும் பெரிதாக எதிர்பார்க்காமலிருக்கப் பழகிக்கொண்டவர். அவர் யாருக்கும் பணியாமல் உண்மையை எழுதினார். அது அவருக்கு இயல் விருதை பெற்றுத் தந்திருக்கிறது.

வெ.சா – இறுக்கங்களும் நெகிழ்வுகளும் கலந்த ஒரு நினைவுப் பயணம்

ஒரு சிலர் ஒரு சில சலுகைகளை அவருக்கு வழங்கி அவருக்கு அஞ்சலி செலுத்தியிருப்பதை பார்க்க நேரும்போது ஒரு மனிதன் எப்படி எல்லாம் தன்னுடைய நல்லதொரு பக்கத்தை வெளிக்காட்டாமல் இத்தனை ஆண்டுகள் இத்தனை பேருடன் பழகியிருக்க முடியும் என்ற ஆச்சரியம் என்னை மிகவும் படுத்தி எடுக்கிறது. இன்று தமிழ் படைப்புலகில், கலை இலக்கியப் பரப்பில் வெ.சா. காட்டிய தரிசனங்கள்தான் புதுப்புது ரூபங்கள் எடுத்து நமக்கு பெருமை அளித்து வருகிறது. தெருக்கூத்துக்கு சிம்மாசனம் வழங்கி சிறப்பளித்தவர் வெ.சா. அவர் நடேச தம்பிரான் டெல்லியில் மேடையேற்றிய கர்ணமோட்சத்தை பற்றி எழுதிய பிறகுதான் நவீன நாடகக்காரர்களின் கவனம் தெருக்கூத்தின் பக்கம் திரும்பியது. நவீன நாடகம் பற்றி, ஓவியங்கள் பற்றி, கவிதைகள் பற்றி, இசை பற்றி, புதினங்கள் பற்றி, சிறுகதைகள் பற்றி சாமிநாதனின் கருத்துக்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் சற்று நிதானித்து பொருட்படுத்தக் கூடியதாக இருந்தன. பல மாற்றங்களுக்கும் அவை அடி கோலின என்பதை யாராலும் மறுக்க முடியாது. வெ.சா.வின் கருத்துக்கள் மியூசியத்தில் வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறியவர்கள் கூட அவர் தங்களுடைய படைப்புக்கள் பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறார் என்பதை அறிய துடித்துக் கொண்டிருந்ததை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.

வாதங்களும் விவாதங்களும்: வெசா ஏற்புரை

வெங்கட் சாமிநாதன் நவீன தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். 1950 களில் “எழுத்து” இதழ் மூலமாக தமிழ் கலை-இலக்கியச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்த வெ.சா. அவர்களின் அறுபதாண்டு கால எழுத்துக்களை இன்று திரும்பிப் பார்க்கும்போது, தமிழ் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழல் மீதான அவரது செயற்பாட்டுக் களம் “வாதங்களும் விவாதங்களும்: வெசா ஏற்புரை”

வெங்கட்  சாமிநாதன்: விமர்சன படைப்பாளி

தமிழனின் கலாச்சார வறுமையை சுட்டிக்காட்டுமுகமாக அதிரடியான விமர்சனங்களையும் செய்தார். தமிழர்களிடம் கலையில்லை எல்லாமே தொழில் திறன் தான் என்றார். தனித்துவமிக்க பார்வை வெளிப்படாததால் சிற்பம், ஓவியம, கட்டடம் போன்றவற்றில் கலை உருவாகவில்லை என்றார். இது ஒப்புக் கொளக் கூடியதல்ல. கூட்டு முயற்சி கலைக்கு எதிரானதல்ல. இசை, நடனம் ,நாடகம், சினிமா, கட்டடம் போன்றவை ஒரு தலைமைக்கு கீழ் செயல்படுபவை….அதே சமயம் கலைத்திறமைக்கும் தொழில் திறனுக்கும் அவர் கொடுத்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருந்தது. சூழ்ச்சிக்காரனான தச்சன் செய்கிற நாற்காலி நேர்த்தியாக இருக்கும். அங்கே தொழில் திறன் இருந்தால் போதும் ஆனால் ஒரு வன்புணர்வில் இடுபடுபவன் ராமாயணத்தின் சிறப்பை ஓத முடியாது. அவன் சத்திய தரிசனம் அற்றவனாக இருக்கும் பட்சத்தில் அது சிறக்காது என்று எடுத்துக் கூறினார்.

வெ.சாமிநாதன் : நெருங்கி விலகிய ஆளுமை

வெ.சாமிநாதனிடமும் தமிழ்ச் சிற்றிதழ் மரபினரிடம் காணப்படும் முக்கியமான குறைபாடு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தொல்காப்பியம் தொடங்கி வைத்த கவிதையியல் மரபு ஒன்று இருப்பதை இவர்கள் அறிந்திருக்கவே இல்லை. அவர்கள் நவீனக்கவிதையியல் என்று பேசுவதுகூட நவீனக்கவிதையியல் மரபல்ல. சமஸ்க்ருதக் கவிதையியல் மரபு தான். அதனை ஆங்கிலத்தில் வாசித்திருப்பதாலும், சம்ஸ்க்ருதக் கலைச்சொற்களுக்கீடான ஐரோப்பியக் கவிதையியல் கலைச்சொற்களைப் பயன்படுத்த முடிகிறதென்பதாலும் அதுவே நவீனத்திறனாய்வுக்கான சொற்களஞ்சியங்களாக நினைக்கின்றனர். ஆனால் தமிழ்ச் செவ்வியல் கவிமரபையும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான கதை தழுவிய நெடுநிலைத்தொடர் செய்யுளையும் உருவாக்கிய …

சேவாக் ⊕ முல்தானின் சுல்தான்

சிறந்த மட்டையாளராக ஆவதற்கு இள வயதிலிருந்தே பயிற்சியாளர்கள் மட்டையாளர்களை. V யில் ஆடச் சொல்லுவது வழக்கம். இந்த V என்பது,மட்டையாளரின் காலடியில் தொடங்கி, மிட் ஆன், மற்றும் மிட் ஆப்.என்ற நிலைகளுக்கு இரு கோடுகள் போட்டால் வருவது. பந்தை இந்த V க்குள் மட்டுமே செலுத்தி ஆட முயற்சிக்கும் போது பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஆட்டமிழக்கும் வாய்ப்புகள் குறையும் என்பதே அதன் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் தனிச் சிறப்புவாய்ந்த சேவக் போன்ற மட்டையாளர்களுக்கு இது பொருந்தாது. அப்படிச் சொல்லும்போது இதையும் சொல்ல வேண்டும்; சேவாக்கிற்கும் ஒரு V உண்டு…

வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்

This entry is part 34 of 45 in the series நூறு நூல்கள்

சில விமர்சகர்கள் போல வெ.சா. எந்த காலத்திலும் தனது கருத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை என்பது அவரை இறுகிய சட்டகத்துக்குள் அடைக்கும் முயற்சி. மரபார்ந்த அணுமுறையில் சென்றதால் தனது இறுதி காலத்தில் இந்துத்துவத் தரப்பை முன்வைப்பவராக சிலரால் அடையாளம் காணப்படுகிறார். இது ஒரு குறுக்கல்வாதமாகத் தோன்றுகிறது. தனது காலத்தில் வெ.சா. அடையாளப்படுத்திய விழுமியங்களைத் தொடர்ந்து கவனிக்கும்போது இது எத்தனை மேலோட்டமானப் பார்வை என்பது தெளிவாகிறது. தெருக்கூத்து மற்றும் பாவைக்கூத்தின் மாற்றங்களின் கலை அனுபவம் ஐரோப்பிய நவீனத்துவ பாணியில் தொடங்கி பார்ஸி நாடகக் கூறுகளை ஒத்திருப்பதை அவதானித்து ஒரு மரபுத் தொடர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார்

பண்பாட்டு விமர்சனம்: வெ.சா.வை சாக்காக வைத்து சில சிந்தனைகள்

இங்கே சமூக விமர்சனம் என்பது சாதி விமர்சனம் என்ற அளவிலேயே குறுகிப் போனதுதான். சாதி விமர்சனம் என்பது அந்தந்த சாதியைச் சார்ந்த அறிவுஜீவிகளாலேயே செய்யப்படும்போது அதன் நம்பகத்தன்மை அதிகமாகும். உண்மையில் வெ.சா. ‘வசனம்’ எழுதிய ‘அக்கிரகாரத்தில் கழுதை’ சம்ஸ்காராவை விட வீச்சு அதிகம் கொண்டது. ஆனால் நாடகமா, திரைக்கதை வசனமா, புனைகதையா என்ற உருவத்தெளிவு இல்லாததாலும், வெ.சா.வுக்கே அப்படைப்புக் குறித்துப் பெருமிதம் இல்லாமலிருந்ததாலும் அது வெகுமக்கள் தளத்திற்கு போய்ச்சேரவில்லை. பெரியாரின் தத்துவவெளி சிறிதாக இருந்தாலும் அவரது தீவிரமான பிரச்சாரம் மூலமும், விசுவாசமான தொண்டர்கள் மூலமும் மக்களை வேகமாகச் சென்றடைந்தார் என்பதை கவனிக்க வேண்டும். இதில் இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன. மொழி இங்கே அரசியல்வாதிகளின் கைப்பாவையாக இருக்கிறது. இரண்டாவது பொதுவெளி அறிவுஜீவிகளுக்கும், கல்விப்புல அறிவு ஜீவிகளுக்கும் இடையே காணப்படும் மிகப்பெரிய இடைவெளி.

மாற்றங்களின் திருப்புமுனையில்…

எஸ். பொன்னுத்துரை மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கு வந்திருந்தபோது, தற்செயலாக நானும் சென்னையிலிருந்தேன். செல்லப்பா வீட்டில் அவர் முன்னிலையில் நான் பொன்னுத்துரையும் விவாதித்துக் கொண்டிருந்தோம். இரண்டு விஷயங்கள்: ஒன்று இலங்கையில் தமிழர் போராட்டம்; மற்றது பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த டேபிள் ஃபான். அது art-ஆ அல்லது craft-ஆ என்று எங்களுக்குள் பட்டிமன்றம். எங்களுக்குள் முதல் படிவமைப்பு art. பின்னர் அது லஷக்கணக்கில் தயாரிக்கப்பட்டது craft என்றேன் நான். எஸ். பொ. என்ன சொன்னார் என்பது என் நினைவில் இல்லை. ஒரு கட்டத்தில் செல்லப்பா “போதுமே, நீங்கள் இரண்டு பேரும் பேசியது. இனி இலக்கியம் பேசலாம் கொஞ்சம்” என்று கடிந்து கொண்டார். எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால்…

மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்

மார்க்ஸின் சித்தாந்தம் ஒரு காலக் கட்ட வளர்ச்சியின் சிறைக்குள் அகப்பட்ட ஒன்று. இது மாக்ஸுக்கு மாத்திரம் நிகழும் துரதிருஷ்டம் அல்ல. மனித சமுதாய வளர்ச்சியில், அறிவு விஸ்தாரத்தில், விஞ்ஞானப் பெருக்கத்தில், எந்த சித்தாந்தத்திற்கும் ஏற்படும் நிகழ்வு, இது. மார்க்ஸின் சித்தாந்தம் மனித சமுதாயத்தின் ஒரு துணுக்கில் ஒரு காலகட்டத்தில், ஒரு புறவாழ்வு அம்சத்தின் ஆராய்வில் பெற்ற சில முடிவுகளை விஸ்தரித்துப் பெற்ற பிரபஞ்ச நிர்ணய அமைப்பு. அதன் பிறப்பிடமான பொருளாதாரத்திலேயே அதன் முடிவுகள் செலாவணி அழிந்தது, குறையாகாது. அதுவே, அதன் நிறையும் ஆகும். அதிலேயே அதன் லட்சிய பூர்த்தியும் ஆகும். ஒரு நோக்கில், எந்நிகழ்ச்சிகள், அநீதி முறைகள், மார்க்ஸின் பொருளாதார சமுதாய நோக்குக்குக் காரணமாகவிருந்தனவோ, அம்முறைகளும் நிகழ்வுகளும் அழியக் காரணம், மார்க்ஸின் சித்தாந்தப் பிறப்புதான்.

வெங்கட் சாமிநாதனின் கருத்துலகம்

இக்காலங்களில் இவர் நம் வாழ்வின் அநேக முகங்களை – இலக்கியம், மரபு, புலமை, சிந்தனை, தத்துவம், சிற்பம், சங்கீதம், ஓவியம் ஆகிய அனைத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். மேம்போக்கான மாறுதல்களுக்கு முன் வைத்த எளிய திருத்தல் யோசனைகள் அல்ல இவை. நம் வாழ்வின் அடித்தளம் பற்றிய நம் எண்ணங்கள் இவரால் புரட்டித் தள்ளப்பட்டிருக்கின்றன. எவற்றைச் செல்வங்கள் என மதித்து, உலகில் எங்கும் காணக்கிடைக்காத ஒரு கலாச்சார வாழ்வின் அவகாசிகள் நாம் என புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருந்தோமோ அவற்றைப் போலிக் கனவென, வாதங்களையும் நிரூபணங்களையும் முன்வைத்து தாட்சண்யமின்றித் தாக்கியவர் இவர். சரி, இக்கருத்துகளை நம் தமிழ்ச் சமூகம் எப்படி எதிர்கொண்டது? கனவுகள், மாய்மாலங்கள், போலி லட்சியங்கள், போலி மதிப்பீடுகள், பழமைக் கிரீடங்கள், தனி இனம் என்ற மார்தட்டல்கள் எல்லாம் தாக்கப்பட்டபோது, தமிழின் பல்வேறு துறையைச் சார்ந்த காவல் நாயகர்கள்…

மகரந்தம்

முதலியத்தின் முடியரசனான மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸின் தொண்டு நிறுவனம் வழியாக செயல்பட்டுவருவது செய்தியல்ல. பல்லாண்டுகளாக அவரது பில் கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம் எயிட்ஸ் ஆராய்ச்சி முதல் ஆப்ரிக்க குழந்தை நலன் வரை பல காரியங்களுக்குக்காகப் பணம் கொடுக்கிறார்கள். ஆனால், இப்போது முதலியம் மட்டுமே உலகப்பிரச்சனைகளுக்கு முற்றானத் தேர்வாக இருக்க முடியாது எனும் முடிவுக்கு பில் கேட்ஸ் வந்திருப்பதாகத் தெரிகிறது. தனியார் மையம் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகவைத்திருக்கும் கெடுபிடியான இடம் எனும் தெளிவுக்குப் பிறரும் வரலாமோ?

ஆயர்கள் போரேறே! ஆடுக செங்கீரை!

பிள்ளைத்தமிழ் என விளங்கும் சிற்றிலக்கியத்தில் செங்கீரைப் பருவம் அருமையான பத்துப் பாடல்களைக் கொண்டு விளங்கும். சென்ற நூற்றாண்டில் திருமேனிக் கவிராயர் என்ற புலவரால் எழுதப்பெற்ற மகர நெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் எனும் நூலானது சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்து விளங்குகின்றது. அதிலிருந்து ஒரு செங்கீரைப் பருவப் பாடலைக் காண்போமே! இந்தப் பிள்ளைத்தமிழ் நூலானது திருப்பேரை எனும் ஊரில் விளங்கும் திருமால் மீது பாடப்பட்டது…

வெங்கட் சாமிநாதன் மறைவைத் தொடர்ந்து – திலீப்குமாருடன் ஓர் உரையாடல்

1990களில் நாம் ஒரு திருப்புமுனையை எதிர்கொண்டோம். சமூக, அரசியல் தளத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் இலக்கியத்திலும் எதிரொலித்தன. வெங்கட் சாமிநாதன் கலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்தவர். ஆனால், இலக்கியம் சமூகப் பிரக்ஞையும் அரசியல் விழிப்பும் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது. ஒரு புத்தகத்தைப் பற்றி வெங்கட் சாமிநாதன் என்ன எழுதியிருக்கிறார் என்று கேட்கும் நிலை மாறி, அவர் எழுதினால் நல்லது, எழுதாவிட்டால் ஒன்றும் மோசமில்லை என்ற நிலை உருவானது. அதுவரை சிறுபத்திரிக்கைச் சூழலில் இயங்கி வந்த வெங்கட் சாமிநாதன் முழுமையாக புறக்கணிக்கப்பட்டார்.

ஜஸ்டின் இஸ் ஜஸ்ட் ரெடி

2015 நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர் பிரதமர் வேட்பாளாராக முன்மொழியப்பட்டபோது லிபரல் கட்சிக்கு அரசியல் அரங்கில் மூன்றாவது இடமே இருந்தது. ஹார்ப்பரின் கன்சர்வேட்டிவ் ஆட்சி நடந்த கடந்த பத்தாண்டுகளில், NDP பிரதான எதிர்க்கட்சியாக வளர்ந்து இருந்தது. லிபரல் கட்சி பல ஊழல் புகார்களில் சிக்கி மூன்றாமிடத்தில் தடவிக்கொண்டிருந்தது. மாற்றுக்கட்சிக்காரர்களும் சரி, பொதுமக்களும் லிபரல் கட்சியையோ, ஜஸ்டினையோ பெரிதாக கண்டுகொள்ளவில்லை.