என் ப்ரிய வெ.சா…

நான் பழக நேர்ந்த ஆளுமைகளில் படு ரசனையான, குறும்பான ஆசாமிகள் ஒருவர் வெ.சா. அந்தக் கால தில்லி தமிழ் இலக்கிய உலகைக் குறித்து சுவாரசியமாகப் பல விஷயங்கள் சொல்லுவார். குறிப்பாக, தி.ஜானகிராமனைக் குறித்துப் பேசுவதென்றால் பேசும் அவருக்கும் கேட்கும் எனக்கும் அதிவிருப்பம். அவரும், தி.ஜாவும் இன்னபிற நண்பர்களும் காருக்குறிச்சி அருணாசலம், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் இசைத்தட்டுகளின் பின்னணியில் உற்சாகபானத்துடன் பேசியபடி களைகட்டும் கச்சேரிகளைப் பலமுறை வெ.சாவின் வார்த்தைகளில் என் கண் முன்னாலேயே கண்டிருக்கிறேன்…..புத்தகங்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த உற்சாகம் கடைசிவரை குறையவேயில்லை. அதேபோல அவருக்குப் பிடித்த முக்கியமான புத்தகங்களைக் குறித்துத் தவறாமல் எழுதிவிடவும் செய்வார். அத்தனை வயதுக்கு மேல் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் அடிக்கக் கற்றுக்கொண்டு அதிலும் ஒரு மென்பொருளில் பிரச்சினை வந்தால் அதை நீக்கி இன்னொரு மென்பொருளைப் பயன்படுத்தி எழுதுவதுவரை கற்றுக்கொண்டார். அவர் வயதில் என்னால் அத்தனை புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் ஆர்வம் இருந்தால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்றே எண்ணிக்கொள்வேன்…..எப்போதுமே உற்சாகமாகப் பேசும் வெ.சாவின் குரலில் தளர்ச்சியை ஒரு சிலமுறைதான் கேட்டிருக்கிறேன். அதில் ஒன்று கவிஞர் ராஜமார்த்தாண்டன் மறைவின்போது. ‘எனக்குப் பிடிச்சவங்கள்லாம் இப்படி ஒவ்வொருத்தரா போய்ட்டே இருக்காங்க’ என்று ஆற்றாமையோடு சொன்னார். …எத்தனையோ எழுத்தாளர்களின் படைப்புகளை மிகக் கறாராக விமர்சித்திருக்கிறார். ஆனால் அவர்களில் பெரும்பாலாரானோடு தனிப்பட்ட முறையில் அவருக்கு நல்ல நட்பு இருந்திருக்கிறது. வாழ்நாள் பூராவும் சண்டை போட்டுக்கொண்டிருந்தாலும் பெரியவர் தி.க.சி அவரைச் சந்திக்க விரும்புகிறார் என்று சுகா மூலம் தெரியவந்ததும் அவரைத் தன் இயலாத உடல்நிலையிலும் இரண்டு வருடங்களுக்கு முன் திருநெல்வேலிக்கே நேரில் சென்று சந்தித்துப் பேசிவிட்டுவந்துவிட்டார். நாஞ்சில்நாடன், பாவண்ணன், பாரதிமணி பாட்டையா என யாரோடு நான் பேச நேரும்போது எங்கள் உரையாடலில் பெரும்பாலும் இடம்பெற்றவர் வெ.சாதான். அதிலும் நாஞ்சில்நாடன் அவர்கள், வெ.சா மீது வைத்திருக்கும் பெருமதிப்பை நான் மிக நன்றாக அறிவேன். நாஞ்சிலுடன் நான் அவர் படைப்புகள், பயணங்களைக் குறித்துப் பேசியதைக் காட்டிலும் வெ.சா குறித்து பேசியதுதான் அதிகம்.

ரெகோ

[ரெகோ] யோசனையாக அரியணையின் மேல் கை வைத்து நின்றான். பின் மெல்லத் திரும்பி நடந்து அந்த மெல்லிய இரும்புத் திரையை விலக்கிக் கொண்டு அரண்மனைக்குள் சென்றான். அவனுக்கு யோசிக்க அவகாசமும் தனிமையும் தேவையாக இருந்தது.
வெளியே வந்தவனை மனைவி முறைத்தாள். வெகு நேரமாகக் கதவைத் தட்டியபடியே இருப்பதாகவும் அவன் கதவைத் திறக்காமல் எரிச்சல் மூட்டியதாகவும் சொல்லி முகத்தை சுருக்கினாள். அவன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். தலை குனிந்திருந்தது. பின் அவன் கையில் ஒரு வயர் கூடையைத் திணித்து ஒரு தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் கொஞ்சமும் அவள் அம்மாவுக்கு கால் விரலிடுக்குகளில் அரிப்பிருப்பதால் சைபாலும் வாங்கி வரச் சொல்லிப் பணித்தாள்.

செத்தும் கொடுக்க வைக்கும் சீரிய தொழில்நுட்பம்

ஒரு நாளைக்கு முன்னூறு எரியூட்டுதல்கள் நிகழும் வாரணாசியில் வேண்டிய அளவுக்கு தீவிர எரியூட்டு நிலையங்கள் இல்லாததாலும், ஒரு உடல் எரிய ஏழு எட்டு மணி நேரம் ஆவதாலும், அவசரமாக உடலங்கள் கங்கையில் இழுத்துவிடப்படுகின்றன.
உடல் எரியும் நிலைகளை சற்று நிதானமாகப் பார்ப்போம். உடலில் வெளிப்புறப்பாகங்கள், சில உள்ளுறுப்புகள் 700 டிகிரி செண்டிகிரேடில் எரிந்துவிடுகின்றன.ஆனால், சில பகுதிகள், நீர் , கொழுப்பு நிறைந்தவை எரிய அதிக வெப்பம் தேவை. அவை பகுதி வெந்து, நச்சுப் பொருட்களை 700 டிகிரியில் வெளியிடுகின்றன.எனவே, இருமடங்கு வெப்பநிலையில் உடல் எரிக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இது, கட்டைகளால் எரிக்கப்படும் முறையில் அதிக வெப்பநிலை ,எரிபொருட்களால் பல படிகளில் ஏற்படுத்தப்பட்டுவிடுகிறது. எனவேதான், திறந்தநிலை எரியூட்டுநிலையங்களில் உடல்களின் எரிதல் முழுமையாகிறது. மின்எரியூட்டகங்கள் முதலில் சற்றே தோல்வியடைந்தது இந்த வெப்பநிலைத் தகறாரில்தான்.

கவிதைகள்: த.அரவிந்தன், சார்லஸ் புகோவ்ஸ்கி

ஓங்கிய ஓர் தீச்சுடர்
பூங்காவில் முதியவர்கள் சதுரங்கம் ஆடுகையில்
ஓர் சுடர், ஓர் நற்சுடர்
வெயிலில்
பூங்காவில் முதியவர்கள் சதுரங்கம் ஆடுகையில்.

குளக்கரை

உத்தரப் பிரதேசத்தில் பத்து ஆண்டுகளாக முன்னூறு பொறியாளர்கள் அரசு அலுவலகத்துக்குப் போய் மேஜையைத் தூசி தட்டி வைத்து விட்டு, சும்மா நாற்காலியில் அமர்ந்து விட்டு வீட்டுக்குப் போகிறார்கள். ஒரு மாதம், ஒரு வருடம் இல்லை, பத்து வருடங்கள். சும்மாக் கூட இல்லை, இவர்களின் சங்கம் அரசுக்குப் பத்து வருடங்களாக விண்ணப்பம் கொடுத்து வந்திருக்கிறது. இவர்களுக்கு ஏதாவது வேலை கொடுங்கள் என்று. அரசோ, உயரதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ ஏதாவது காது கொடுத்துக் கேட்டார்களா என்றால்…

தீர்வுகள் விரல் சொடுக்கில் கிடைக்காது…

மொத்தத்தில், ஒரு குழந்தையை நீங்கள் எப்படி கையாளுகிறீர்களோ அந்தத் தாக்கம்தான் அந்தக் குழந்தையின் சுபாவமாக இருக்கும். மனித சமுதாயம் உருவாவதில் பெற்றோர்களின் பங்கு சாமான்யமானதல்ல. பரிட்சை நேரங்களில் தோல்வியைத் தாங்காமல் விபரீத எல்லைகளுக்குப் போகும் சில இளைஞர்களை ஆரோக்கியமான திசையில் திருப்புவது பெற்றோர்கள் கடமை.
நம் ஏமாற்றத்தின் பாரத்தையும் குழந்தைகள் மீது காட்ட வேண்டுமா என்ன?

கருவிகளின் இணையம்: பொது மருத்துவம்

கருவிகளின் இணையம், நோயாளிகளுக்கும், அவர்களைக் கவனிக்கும் மருத்துவத் துறையினருக்கும் பயன்படும் ஒரு விஷயம். இத்துடன், பயண வசதிகள் குறைந்த பகுதிகளுக்கு, இவ்வகைத் தொழில்நுட்பங்கள் மிகவும் பயன்படும். தூரம் என்பது இணையத்திற்கு ஒரு பொருட்டே இல்லை. மிகப் பெரிய மருத்துவரிடம் சிகிச்சை பெற்று பல நூறு மைல்களுக்கு அப்பால் வாழும் நோயாளிகளுக்கு வீட்டிலிருந்தபடி சிகிச்சைக்கடுத்த மீட்சியைப் (post procedure recovery) பெறலாம்.

பிரான்சு: குடிமக்களும் ஆட்சியாளர்களும்

பிரான்சு நாட்டில் வாக்குரிமை வரலாறு பதினெட்டாம் நூற்றாண்டில், சரியாகச்சொன்னால் பிரெஞ்சுபுரட்சிக்குப் பிறகு, மக்களுக்கு வாய்த்தது. பிரெஞ்சுப் புரட்சியை வழி நடத்தியவர்கள் பூர்ஷுவாக்கள் (Bourgeoise) Bourg என்றால் நகரம் (உதாரணம் -Strasbourg) ஆக நகரவாசிகள் என சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். எனவே 1789ல் ஆரம்பத்தில் குறைந்த பட்ச வரித்தொகையை செலுத்தியவர்களுக்கே வாக்குரிமை எனச்சொல்லப்பட்டது. வாக்குரிமையின் ஆரம்பகாலத்தில் எல்லா நாடுகளுமே இதையே கடைப்பிடித்திருக்கின்றன. தவிர வாக்களிக்கும் வயது 30 ஆகவும் ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற நிலமையும் இருந்தன.

எல்லைக் கோட்டைத் தாண்டி- இந்திய வெளியுறவு செயல்பாடு

90களில் இருந்து ஏற்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி. பாகிஸ்தான் தேங்கிச் செல்கையில் ஒப்பீட்டில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்கிற்கு மேலாக வளர்ந்தது. இந்தியா என்னும் சந்தையை அமெரிக்க மற்றும் பிற மேலை நாடுகளால் இழக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது, தீவிரவாதம் குறித்த அமெரிக்க, மேலை நாடுகளின் புத்தியில் ஏற்பட்ட மாற்றம். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் சோவியத்தை வெல்ல உதவிய பாகிஸ்தான் என்ற நிலையிலிருந்து தன்னைத் தாக்கிய தீவிரவாதிகளை வளரவிட்ட பாகிஸ்தான் என்று அமெரிக்கா காண ஆரம்பித்தது. ஆஃப்கனிஸ்தானில் தீவிரவாதத்திற்கான போரை ஆரம்பித்துவிட்டு இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத்தைப் பாரமுகமாக இருக்க அமெரிக்காவிற்குச் சாத்தியமில்லை. தாலிபானுக்கு எதிரான அமெரிக்கப் போரிற்கு பாகிஸ்தான் தன்னை இன்றியமையாததாக ஆக்கிக் கொண்டாலும், இந்தியாவிற்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. இந்த இரண்டு காரணிகள் மூலம் இந்தியா 2000களில் பாகிஸ்தான் உருவாக்கி வைத்திருந்த பல அனுகூலங்களை உடைத்து மீண்டும் சமநிலையில் தன்னை உலக அரங்கில் மாற்றிக் கொண்டது.

குடிமைப் பங்காளர்கள் (Civil partnership)

ஓரிடத்தில் ஒரு ஆணும் பெண்ணும், இணைந்து வாழ்ந்து வந்தால், அதை அந்தப் பகுதியில் இருப்பவர்கள் அவர்கள் இணை என நம்பும் வண்ணம் வாழ்ந்து வந்தால், அப்படி வாழ்ந்து வந்தது தொடர்ந்து சிலகாலமாவது இருந்திருந்தால், அவர்கள் தம்பதியராகவே பார்க்கப்படுவார்கள். அவர்களில் பிரிவு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு, அதாவது அண்டி வாழ்ந்து வந்தவருக்கு மற்றவர் சட்டப்படி பதில் சொல்லியே ஆகவேண்டும். அந்த நபர்கள் ஏற்கனவே திருமணம் ஆனவராக இருந்திருந்தால் கூட என சட்டம் சொல்கிறது.(சட்டமானது பலமணத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால், ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு உதவ முயல்கிறது.)

'கோக்' அல்லது C17H21NO4 

உடைந்த சோவியத் யூனியலிருந்து பணத்திற்கு பதில் ஆயுதங்ளை போதை மருந்துக் குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன…..இதில் கிடைக்கும் பணம் எப்படி போதைத் தயாரிப்பாளர்களை சேர்கிறது? வங்கிகள் வழியேதான் அதிகம் பணம் பரிமாறப்படுகிறது. முக்கியமாக கரீபியன் வங்கிகள். அங்கு போலி தனியார் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அவைகள் வழியே பணம் வைப்புத் தொகையாக வைக்கப்படுகிறது. பின் அங்கிருந்து சட்டப்பூர்வமான வழியில் பினாமிகளுக்கு வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு போதைத் தயாரிப்பாளர்கள் கைகளில் சேர்கிறது…..இன்னும் ஒருபடி மேலே சென்றால், 2008-ல் நிகழ்ந்தப் பொருளாதார வீழ்ச்சியில் வங்கிகள் திவாலாகாமல் காத்தவை போதை மருந்து கடத்துபவர்களின் மில்லியன்கள் வங்கிகளில் இருந்ததனால் என அதிர்ச்சி தரும் தகவலை ஐநா போதை மற்றும் குற்றப் பிரிவு அலுவலகம் தெரிவிக்கிறது.

மாமதீ! மகிழ்ந்தோடி வா!

பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் நூல்களில் ஏழாம் பருவமான அம்புலிப்பருவத்தில் இத்தகைய உபாயங்களால் அம்புலியை அழைப்பது அழகுறப் பாடப்பட்டது. பெரியாழ்வார் பாசுரங்களிலும் இந்த உபாயங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. இவை இலக்கிய இன்பத்தை, அதன் சுவையை மேலும் இனிதாக்குகின்றன……

உலக இலக்கியத்தின் 2015 ஆம் வருடத்து நோபெல் பரிசு பற்றி

இவர் அளிப்பது உண்மையிலேயே ஒரு உணர்ச்சி ஊறியெழும் உலகம், எனவே இவர் தன் பல புத்தகங்களில் அளிக்கும் வரலாற்று நிகழ்வுகள், உதாரணமாக செர்னோபில் பேரழிவு, ஆஃப்கனிஸ்தானில் சோவியத் யூனியனின் போர், ஆகியன எல்லாம் சோவியத் மற்றும் சோவியத்துக்குப் பின் வந்த காலத்துத் தனி நபர்களைத்தான் ஆழ நோக்குகின்றன. இவர் சிறு குழந்தைகளோடும், பெண்களோடும், ஆண்களோடும் ஆயிரக்கணக்கில் பேட்டிகளை எடுத்திருக்கிறார். நமக்கு அதிகம் தெரிய வராத மனிதத் துயரங்களின் வரலாற்றை அளிக்கிறார். .. அதே நேரம் இவர் நமக்கு உணர்ச்சிகளின் வரலாற்றையும், ஆன்மாவின் வரலாற்றையும் கொடுக்கிறார்

மகரந்தம்

ஒரு புத்தகம் ஜாரெட் டயமண்டின் புத்தகத் தலைப்பு போலவே ஒலிக்கிறது. ரோபாட்கள், கிருமிகள், வெட்டுநர்கள், ட்ரோன்கள் என்று இவை எல்லாமே மேற்கிற்குச் சாவு மணி அடிக்க உலகெங்கும் புற்றீசலாகப் புறப்பட்டிருக்கிற பயங்கரவாதிகள், குற்றக் கும்பல்கள் ஆகியோர் பயன்படுத்தக் கூடிய கருவிகளாக மாறி விட்டன, இவற்றை மேற்கால் இனி கட்டுப்படுத்த முடியாததால் விளைவுகள் படு நாசமாக இருக்கப் போகின்றன என்று பெஞ்சமின் விட்ஸும், காப்ரெயெலா ப்ளுமும் ஒரு புத்தகம் எழுதுகிறார்கள்.